என் மலர்
செய்திகள்

கானாவில் தொடரும் கனமழை - வெள்ளத்தில் சிக்கி 34 பேர் பரிதாப பலி
கானாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஏற்ப்ட்ட வெள்ளத்தில் சிக்கி 34 பேர் பலியாகியுள்ளனர் என மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர். #GhanaHeavyRains
அக்ரா:
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கானாவில் தற்போது கன மழை பெய்து வருகிறது. கானாவின் வடக்கு பகுதியில் மிகவும் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், அங்குள்ள ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அங்குள்ள அனைத்து அணைகளும் நிரம்பி வருகின்றன.
இந்நிலையில், கானாவில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் அங்குள்ள புர்கினா பாஸோ என்ற இடத்தில் உள்ள பாக்ரே அணை முழுவதும் நிரம்பியது. இதனால் அணையில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டது. இதைத்தொடர்ந்து, கரையோரம் வசித்த மக்கள் அணையில் இருந்து வெளியான வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.

இந்த வெள்ளத்தில் சிக்கி சுமார் 34 பேர் பலியாகியுள்ளனர். மேலும் சிலர் மாயமாகி உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கானாவில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால், 52 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர். #GhanaHeavyRains
Next Story






