என் மலர்
நீங்கள் தேடியது "மன்னர் சார்லஸ்"
- கட்டுமான பணிகள் முடிந்த நிலையில் இதன் திறப்பு விழா கோலாகலமாக நடைபெற்றது.
- இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மன்னர் சார்லஸ் பணிமனை ஊழியர்களுடன் கலந்துரையாடினார்.
லண்டன்:
இங்கிலாந்தின் சவுத் வேல்ஸ் நகரில் சுமார் ரூ.1,100 கோடி மதிப்பில் ரெயில் பணிமனை கட்டும் பணி நடந்து வந்தது.
இதில் 36 புதிய டிராம் வண்டிகள் நிறுத்தப்பட்டு பராமரிக்கப்பட உள்ளது.
இதற்கிடையே, கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில் இதன் திறப்பு விழா கோலாகலமாக நடைபெற்றது.
இந்நிலையில், நிகழ்ச்சியில் பங்கேற்ற மன்னர் சார்லஸ் பணிமனை ஊழியர்களுடன் கலந்துரையாடினார்.
அதன்பின் யாரும் எதிர்பாரா வகையில் திடீரென அவரே அந்த டிராம் வண்டியை சிறிது தூரத்துக்கு ஓட்டிச் சென்றார்.
அதன்பிறகு டிராம் வண்டிக்குள் பொதுமக்களுடன் பயணித்தார். இச்சம்பவம் அங்கிருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தியது.
- கடந்த செப்டம்பர் 17 ஆம் தேதி பிரதமர் மோடி தனது 75வது பிறந்தநாளை கொண்டாடினார்.
- Ek Ped Maa Ke Naam' என்ற முன்முயற்சியின் கீழ் மன்னர் சார்லஸுக்கு "சோனோமா" மரக்கன்றை பரிசளித்திருந்தார்.
கடந்த செப்டம்பர் 17 ஆம் தேதி பிரதமர் மோடி தனது 75வது பிறந்தநாளை கொண்டாடினார்.
பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ், கடம்ப மரக்கன்றை பரிசாக அனுப்பி வைத்தார்.
கடந்த ஜூலை மாதம் பிரதமர் மோடி பிரிட்டனுக்குச் சென்றபோது, 'Ek Ped Maa Ke Naam' என்ற முன்முயற்சியின் கீழ் மன்னர் சார்லஸுக்கு "சோனோமா" மரக்கன்றை பரிசளித்திருந்தார். இதற்கு பதிலாக கடம்ப மரக்கன்றை மன்னர் சார்லஸ் அனுப்பி வைத்ததாக பிரிட்டன் தூதரகம் தெரிவித்தது.
காலநிலை மற்றும் தூய்மையான எரிசக்தி ஒத்துழைப்பு என்பது காமன்வெல்த் மற்றும் பிரிட்டன்-இந்தியா கூட்டாண்மையின் முக்கிய தூண்களில் ஒன்றாகும் என்றும் பிரிட்டன் தூதரகம் கூறியது.
இந்நிலையில் நேற்று, அந்த மரக்கன்றை பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லமான, ' 7 லோக் கல்யாண் மார்க்கில்' மோடி நட்டு வைத்தார்.
இது தொடர்பாக வெளியாகி உள்ள 40 வினாடிகள் கொண்ட வீடியோவில் பிரதமர் மோடி மரக்கன்றை நட்டு, தண்ணீர் பாய்ச்சும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Ek Ped Maa Ke Naam "ஒரே மரம் தாயின் பெயரால்" என்ற முன்முயற்சியின் நோக்கம், ஒரு மரத்தை ஒருவரின் தாயின் பெயரால், அடையாளபூர்வமாக நடுவது ஆகும்.
- ரஷிய அதிபர் புதின், அமெரிக்க அதிபர் டிரம்ப், இத்தாலி பிரதமர் மெலோனி உள்ளிட்ட பல உலக தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
- கடந்த ஜூலை மாதம் பிரதமர் மோடி பிரிட்டனுக்குச் சென்றபோது பரிசளித்தார்.
பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ், பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு கடம்ப மரக்கன்றை பரிசளித்துள்ளார்.
பிரிட்டன் தூதரகம் எக்ஸ் (X) வலைத்தளத்தில் பகிர்ந்த தகவலில். "பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு, மகாராஜா கடம்ப மரக்கன்றை இந்தியாவுக்கு அனுப்பி வைத்துள்ளார். பிரதமரின் 'Ek Ped Maa Ke Naam' என்ற முன்முயற்சியால் ஈர்க்கப்பட்ட இந்த செயல், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான இருவரின் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடந்த ஜூலை மாதம் பிரதமர் மோடி பிரிட்டனுக்குச் சென்றபோது, இதே முன்முயற்சியின் கீழ் மன்னர் சார்லஸுக்கு "சோனோமா" மரக்கன்றை பரிசளித்ததையும் தூதரகம் குறிப்பிட்டது.
"காலநிலை மற்றும் தூய்மையான எரிசக்தி ஒத்துழைப்பு என்பது காமன்வெல்த் மற்றும் பிரிட்டன்-இந்தியா கூட்டாண்மையின் முக்கிய தூண்களில் ஒன்றாகும்" என்றும் அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Ek Ped Maa Ke Naam "ஒரே மரம் தாயின் பெயரால்" என்ற முன்முயற்சியின் நோக்கம், ஒரு மரத்தை ஒருவரின் தாயின் பெயரால், அடையாளபூர்வமாக நடுவது ஆகும்.
பிரதமரின் பிறந்தநாளை முன்னிட்டு, ரஷிய அதிபர் புதின், அமெரிக்க அதிபர் டிரம்ப், இத்தாலிய பிரதமர் மெலோனி உள்ளிட்ட பல உலக தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
- இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி திரில் வெற்றி பெற்றது.
- வெற்றிக்காக ஜடேஜா இறுதி வரை போராடியது அனைவரது பாராட்டையும் பெற்றது.
லண்டன்:
இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி திரில் வெற்றி பெற்றது. ஜடேஜா வெற்றிக்காக இறுதி வரை போராடியது அனைவரது பாராட்டையும் பெற்றது.
இதற்கிடையே, இந்திய அணி வீரர்கள் மற்றும் இந்திய அணி வீராங்கனைகள் நேற்று இங்கிலாந்து மூன்றாம் மன்னர் சார்லசை, லண்டனில் உள்ள கிளாரன்ஸ் ஹவுசில் சந்தித்துப் பேசினர்.
பிரிட்டனுக்கான இந்திய தூதர் விக்ரம் துரைசாமி, இந்திய கிரிக்கெட் போர்டு துணைத் தலைவர் ராஜிவ் சுக்லா ஆகியோர் உடன் இருந்தனர்.
இந்நிலையில், இங்கிலாந்து மன்னருடனான சந்திப்பு குறித்து இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் கூறியதாவது:
மன்னர் சார்லசைச் சந்தித்தது வியப்பாக இருந்தது. எங்களிடம், 'கடைசி பேட்டரான சிராஜ் அவுட்டானது துரதிருஷ்டவசமானது. பந்து உருண்டு சென்று ஸ்டம்சை தகர்த்தது. உங்கள் உணர்வு எப்படி இருந்தது?' என கேட்டார்.
இதற்கு, 'லார்ட்ஸ் டெஸ்ட் முடிவு துரதிருஷ்டவசமானது. அடுத்த இரு போட்டியில் சிறப்பாக செயல்பட முடியும் என நம்புகிறோம்' என தெரிவித்தோம்.
மற்றபடி லார்ட்ஸ் டெஸ்ட் கடைசி 3 நாளில் ரசிகர்கள் ஆதரவு எங்களுக்கு அதிகமாக இருந்தது. இதுபோன்ற ரசிகர்கள் கிடைத்துள்ளது உண்மையில் எங்களது அதிர்ஷ்டம் தான். போட்டி 5-வது நாள் கடைசி வரை சென்று 22 ரன்னில் தோற்றாலும், உண்மையில் இங்கு கிரிக்கெட் வெற்றி பெற்றுள்ளது என தெரிவித்தார்.
- ஒரு மாதத்திற்கும் மேல் சிகிச்சை பெற்ற போப் பிரான்சிஸ் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார்.
- இங்கிலாந்து மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமிலா தம்பதியினர் இத்தாலியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர்.
ரோம்:
கத்தோலிக்க திருச்சபை தலைவரான போப் பிரான்சிஸ் (88), மூச்சுக்குழாய் அழற்சி காரணமாக பிப்ரவரி 14-ம் தேதி ரோம் நகரில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நுரையீரல் தொற்று, சுவாச குழாய் பாதிப்பு என இரட்டை நிமோனியாவால் பாதிக்கப்பட்டதாக மருத்துவமனை தெரிவித்தது.
ஒரு மாதத்திற்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்த போப் பிரான்சிஸ் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வாடிகன் சர்ச் திரும்பினார். தற்போது அங்கு முழு ஓய்வு எடுத்து வருகிறார்.
இதற்கிடையே, இங்கிலாந்து மன்னர் சார்லஸ் மற்றும் ராணியார் தம்பதி இத்தாலியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், வாடிகனில் ஓய்வு எடுத்து வரும் போப் பிரான்சிசை இங்கிலாந்து மன்னர் சார்லஸ், அவரது மனைவி கமீலா சார்லஸ் ஆகியோர் இன்று திடீரென சந்தித்தனர். அப்போது அவரது உடல்நலம் பற்றி விசாரித்ததாகக் கூறப்படுகிறது.
- மதிய நேர சந்திப்புகள் ஒத்திவைக்கப்படுகின்றன.
- மருத்துவ ஆலோசனையின் பேரில் நிகழ்ச்சிகள் மாற்றியமைக்கப்படும்.
பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ் புற்றுநோய் சிகிச்சையின் பக்க விளைவுகளால் பாதிக்கப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து இன்று (வெள்ளிக்கிழமை) தனது சந்திப்புகளை அவர் ரத்து செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக பக்கிங்காம் அரண்மனை தெரிவித்து இருக்கிறது.
இது குறித்து வெளியாகி இருக்கும் அறிக்கையில், "இன்று காலை புற்றுநோய்க்கான திட்டமிடப்பட்ட, தொடர்ச்சியான மருத்துவ சிகிச்சையை தொடர்ந்து, மன்னருக்கு மருத்துவமனையில் சிறிது நேர கண்காணிப்பு தேவைப்படும் தற்காலிக பக்க விளைவுகள் ஏற்பட்டன. இன்றைய தினம் அவரது மதிய நேர சந்திப்புகள் ஒத்திவைக்கப்படுகின்றன," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பக்க விளைவுகள் ஏற்பட்டதை தொடர்ந்து 78 வயதான இங்கிலாந்து அரச தலைவர் கிளாரன்ஸ் ஹவுசில் உள்ள தனது வீட்டிற்கு திரும்பினார். மன்னர் வீட்டில் நல்ல நிலையில் இருப்பதாகவும், அங்கு அவர் மாநில ஆவணங்களில் பணிபுரிந்து வருவதாகவும், அழைப்புகளைச் செய்து கொண்டிருந்ததாகவும் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
மருத்துவ ஆலோசனையின் பேரில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இன்று (வெள்ளிக்கிழமை) நிகழ்ச்சிகள் மாற்றியமைக்கப்படும்.
- ராஜ குடும்பத்தை சேர்ந்த எவரும் தரையில் அமர்ந்ததில்லை.
- மன்னர் சார்லஸ், குருத்துவாரா பிரார்த்தனை கூடத்தில் தரையில் அமர்ந்தது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
லண்டன்:
இங்கிலாந்து நாட்டில் ஏராளமான சீக்கியர்கள் வசித்து வருகிறார்கள்.
இங்கிலாந்து வாழ் சீக்கியர்கள், லண்டனை அடுத்த லூடனில் புதிதாக சீக்கிய குருத்துவாரா ஒன்றை கட்டினர். இதன் திறப்பு விழா சமீபத்தில் நடந்தது.
இதில் முக்கிய பிரமுகர்கள், அதிகாரிகள் மற்றும் சீக்கியர்கள் கலந்து கொண்டனர். மேலும் இந்த விழாவுக்கு இங்கிலாந்தின்புதிய மன்னர் சார்லசும் அழைக்கப்பட்டிருந்தார்.
சீக்கியர்களின் அழைப்பை ஏற்றுக்கொண்ட மன்னர் சார்லஸ், புதிய குருத்துவாராவுக்கு சென்றார். அங்கு நடந்த பிரார்த்தனையிலும் பங்கேற்றார். அப்போது குருத்துவாராவில் சீக்கியர்கள் கடைபிடிக்கும் மரபுபடி மன்னர் சார்லசும் தரையில் அமர்ந்தார். எல்லோரையும் போல அவரும் தரையில் அமர்ந்தபடி பிரார்த்தனையில் பங்கேற்றார்.
இங்கிலாந்து மன்னர் தரையில் அமர்ந்து பிரார்த்தனை செய்தது இங்கிலாந்து மக்களை பெரும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இது தொடர்பாக இங்கிலாந்தை சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, மறைந்த ராணி, சீக்கியர்கள் மீதும், அவர்களின் வழிபாட்டு தலங்கள் மீதும் மிகுந்த மரியாதை வைத்திருந்தார்.
ஆனால் ராஜ குடும்பத்தை சேர்ந்த எவரும் தரையில் அமர்ந்ததில்லை. இப்போது மன்னர் சார்லஸ், குருத்துவாரா பிரார்த்தனை கூடத்தில் தரையில் அமர்ந்தது வியப்பை ஏற்படுத்தி உள்ளது. இது வரலாற்று சிறப்பு மிக்கது என்றார்.
இங்கிலாந்து மன்னர் சார்லஸ், லூடன் குருத்துவாராவில் சுமார் ஒரு மணி நேரம் இருந்தார். பின்னர் அங்கிருந்த இசைக்கருவிகளையும் பார்வையிட்டார்.
சீக்கிய குழந்தைகளுடனும் அவர் உரையாடினார். குழந்தைகளிடம் இசை கருவிகளை இசைக்க கேட்டு அதனை ரசிக்கவும் செய்தார்.
- பிரதமர் மோடி இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லசுடன் போனில் பேசியதாக தகவல் வெளியானது.
- இந்தியாவின் ஜி20 பிரசிடென்சியின் முன்னுரிமைகள் குறித்து விவாதிக்கப்பட்டது
புதுடெல்லி:
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் மறைவுக்கு பின் வாரிசுப்படி அவரது மகனான சார்லஸ், இங்கிலாந்து மன்னராக பொறுப்பேற்றார்.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இங்கிலாந்து மன்னர் சார்லசுடன் தொலைபேசி வாயிலாக கலந்துரையாடினார்.
இந்தப் பேச்சின்போது இரு நாடுகளிடையே பரஸ்பரம் ஒத்துழைப்பு, நட்புறவு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் விவாதித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுதொடர்பாக, பிரதமர் மோடி வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், மன்னர் மூன்றாம் சார்லசுடன் பேசியது மகிழ்ச்சியாக இருந்தது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு, காலநிலை பின்னடைவு மற்றும் காமன்வெல்த் உள்ளிட்ட பரஸ்பர நலன்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்தியாவின் ஜி20 பிரசிடென்சியின் முன்னுரிமைகள் மற்றும் மிஷன் லைப்இன் சாத்தியக் கூறுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது என பதிவிட்டுள்ளார்.
- பொது இடத்தில் மன்னர் மீது முட்டை வீசப்பட்ட சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
- கைது செய்யப்பட்ட வாலிபர் மீது வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
வடக்கு இங்கிலாந்து பகுதியில் கடந்த ஆண்டு நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மன்னர் சார்லஸும், ராணி கமிலாவும் பங்கேற்றனர். அப்போது அங்கு கூடியிருந்த பொதுமக்களை நோக்கி மன்னரும், ராணியும் கையசைத்து உரையாடியபடி நடந்து சென்றனர். அப்போது, கூட்டத்தில் இருந்த வாலிபர் ஒருவர் மன்னர் சார்லஸை நோக்கி மூன்று முட்டைகளை வீசினார். அவை மன்னர் மீது விழவில்லை. தரையில் விழுந்து உடைந்தன. 'இந்த நாடு அடிமைகளால் உருவாக்கப்பட்டது. நீங்கள் மன்னர் அல்ல...' என்று அந்த நபர் கோஷமிட்டார். மன்னர் மீது முட்டை வீசப்பட்ட சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
மன்னர் மீது முட்டைகளை வீசிய ஹாரி மே (வயது 21) என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பாக வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. விசாரணையின்போது, அந்த வாலிபர் தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவருக்கு 100 பவுண்டுகள் அபராதம் மற்றும் வழக்கு செலவுக்காக 85 பவுண்டுகள் செலுத்தும்படி நிதிபதி உத்தரவிட்டார்.
ஒருவருடன் உங்களுக்கு என்ன கருத்து வேறுபாடு இருந்தாலும், அதைத் தீர்ப்பதற்கான வழி, இதுபோன்று பொருட்களை வீசுவது அல்ல என நீதிபதி கண்டித்தார்.
- இங்கிலாந்து புதிய மன்னராக 2-ம் எலிசபெத்தின் மகன் 3- ம் சார்லஸ் நியமிக்கபட்டு பொறுப்பேற்றுக் கொண்டார்.
- சுமார் 700 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிம்மாசனம் பயன்படுத்தப்படுகிறது.
லண்டன்:
இங்கிலாந்தில் நீண்ட காலமாக ராணியாக இருந்த 2- ம் எலிசபெத் கடந்த ஆண்டு தனது 93-வது வயதில் மரணம் அடைந்தார். இதையடுத்து இங்கிலாந்து புதிய மன்னராக 2-ம் எலிசபெத்தின் மகன் 3- ம் சார்லஸ் நியமிக்கபட்டு பொறுப்பேற்றுக் கொண்டார்.
புதிய மன்னர் சார்லஸ் முடி சூட்டு விழா வருகிற மே மாதம் 6- ந்தேதி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது. இந்த விழாவுக்கு சுமார் 700 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிம்மாசனம் பயன்படுத்தப்படுகிறது. தங்க முலாம் பூசப்பட்ட இந்த சிம்மாசனம் 1308-ம் ஆண்டு மன்னர்கள் முடி சூட்டு விழாவுக்காக தயார் செய்யப்பட்டது.
1399-ம் ஆண்டு மன்னர் ஹென்றி இந்த சிம்மாசனத்தில் அமர்ந்து முடிசூட்டி கொண்டார். அதன்பிறகு 18 மற்றும் 19-ம் நூற்றாண்டுகளில் இந்த சிம்மாசன நாற்காலி சேதம் அடைந்தது. பின்னர் இந்த சிம்மாசனத்தின் அடித்தளம் மாற்றி அமைக்கப்பட்டது. இதன் மூலையில் சிங்க உருவம் பொருத்தப்பட்டு உள்ளது. பல சிறப்புகளை பெற்ற சிம்மாசனத்தை புதுப்பிக்கும் பணிகள் தற்போது மேற் கொள்ளப்பட்டு வருகிறது.
மே மாதம் நடைபெறும் விழாவில் மன்னர் சார்லஸ் இதில் அமரவைக்கப்பட்டு முடி சூட்டப்படுவார். அப்போது அவரது தலையில் கிரீடம் வைக்கப்படும். இந்த விழாவால் லண்டன் பக்கிம்காம் அரண்மனைகளை கட்டத் தொடங்கி இருக்கிறது.
- ராணி எலிசபெத் மரணம் அடைந்ததால் தற்போதைய மன்னர் சார்லசிடம் தொகைக்கு உரிய ஆவணம் கையெழுத்துக்கு வைக்கப்பட்டது.
- அரசின் செலவை குறைக்கும் நோக்கத்தில் இந்திய குருவுக்கு ரூ.32 லட்சத்தை வழங்க சார்லஸ் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.
இங்கிலாந்து மன்னர் சார்லசின் சகோதரர் இளவரசர் ஆன்ட்ரூ. 63 வயதான ஆன்ட்ரூவுக்கு இந்தியாவை சேர்ந்த குரு ஒருவர் பல வருடங்களாக சிகிச்சை அளித்து வந்தார்.
இதற்காக இந்திய குரு அடிக்கடி லண்டன் செல்வார். அவரை ஒரு விடுதியில் தங்க வைத்து ஆன்ட்ரூ ஒரு மாதம் சிகிச்சை பெறுவார். அப்போது அவருக்கு மசாஜ் உள்ளிட்ட உடல்நல சிகிச்சைகளை அளிப்பதுடன் போதனையும் செய்து வந்தார். இதற்கான தொகை ரூ.32 லட்சம் ஆகும்.
அவரது தாயார் ராணி எலிசபெத் இதற்கு உரிய செலவை எந்தவித கேள்வியும் கேட்காமல் வழங்கி வந்தார். தற்போது ராணி எலிசபெத் மரணம் அடைந்ததால் தற்போதைய மன்னர் சார்லசிடம் இந்த தொகைக்கு உரிய ஆவணம் கையெழுத்துக்கு வைக்கப்பட்டது. ஆனால் அதில் கையெழுத்திட சார்லஸ் மறுத்து விட்டார். அத்துடன் இந்திய குருவுக்கு வழங்க வேண்டிய ரூ.32 லட்சத்தையும் அவர் வழங்கவில்லை. இதற்குரிய பணத்தை ஆன்ட்ரூவையே செலுத்துமாறு மன்னர் சார்லஸ் கூறி விட்டார்.
அரசின் செலவை குறைக்கும் நோக்கத்தில் இந்திய குருவுக்கு ரூ.32 லட்சத்தை வழங்க சார்லஸ் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.
- பாரம்பரிய மரபுப்படி மன்னர் சார்லஸ் கையில் செங்கோல், தடி ஆகியவற்றை ஏந்தி அரியணையில் அமர்வார்.
- இங்கிலாந்தில் உள்ள பிரபல மதுபான ஆலையான விண்ட்சர்-ஈடன் ப்ரூவரி சார்பில் புதிய பீர் தயாரிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து நாட்டின் புதிய மன்னராக 3-ம் சார்லஸ் அரியணை ஏறிய நிலையில், அடுத்த மாதம் (மே ) 6-ந் தேதி மன்னர் சார்லசின் முடிசூட்டு விழா பிரமாண்டமாக நடைபெறும் என்று பக்கிங்காம் அரண்மனை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த விழாவின் போது பாரம்பரிய மரபுப்படி மன்னர் சார்லஸ் கையில் செங்கோல், தடி ஆகியவற்றை ஏந்தி அரியணையில் அமர்வார். விழாவில் உலகம் முழுவதும் இருந்து 2,000 முக்கிய பிரபலங்கள் பங்கேற்கிறார்கள். இந்த நிலையில் சார்லசின் முடிசூட்டு விழாவை கொண்டாடும் வகையில் இங்கிலாந்தில் உள்ள பிரபல மதுபான ஆலையான விண்ட்சர்-ஈடன் ப்ரூவரி சார்பில் புதிய பீர் தயாரிக்கப்பட்டுள்ளது. 'ரிட்டர்ன் ஆப் தி கிங்' என அழைக்கப்படும் இந்த புதிய பீர் மன்னர் சார்லசின் வாழ்நாள் சேவையை வெளிப்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதாக மதுபான ஆலையின் தலைவரும், இணைநிறுவனருமான வில்கால்வர்ட் கூறினார்.






