என் மலர்
நீங்கள் தேடியது "Prince Andrew"
- ஆண்ட்ரூ மீதான வர்ஜீனியாவின் குற்றச்சாட்டுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
- வர்ஜீனியா இந்தாண்டு ஏப்ரல் மாதம் தற்கொலை செய்து கொண்டார்
அமெரிக்க கோடீஸ்வரர் ஜெஃப்ரி எப்ஸ்டீன் மற்றும் பிரிட்டன் ராணி எலிசபெத்தின் இரண்டாவது மகனும் இளவரசருமான ஆண்ட்ரூவும் மீது வர்ஜீனியா கியூஃப்ரே (41) என்ற பெண் பாலியல் வன்கொடுமை புகார் அளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தொழிலதிபர் ஜெஃப்ரி எப்ஸ்டீன் தன்னை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாகவும், பாலியல் அடிமையாகப் பயன்படுத்தியதாகவும், இளவரசர் ஆண்ட்ரூவும் 17 வயதில் தன்னை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாகவும் வர்ஜீனியா குற்றம் சாட்டினார்.
இளவரசர் ஆண்ட்ரூவுடன் உடலுறவு கொள்ள ஜெஃப்ரி எப்ஸ்டீன் தனக்கு 15,000 டாலர் கொடுத்ததாக வர்ஜீனியா வெளிப்படுத்திய ஆதாரங்கள் அடங்கிய நீதிமன்ற ஆவணங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. மேலும் பல சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றச்சாட்டும் ஜெஃப்ரி எப்ஸ்டீன் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
இந்த வழக்கில் 2008 இல் தண்டனை பெற்ற ஜெஃப்ரி எப்ஸ்டீன், 2019 இல் நியூயார்க் நகர சிறையில் தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில், பிரிட்டிஷ் இளவரசர் ஆண்ட்ரூ மீது பாலியல் புகார் அளித்த வர்ஜீனியா இந்தாண்டு ஏப்ரல் மாதம் தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளை தொடர்ந்து தொடர்ந்து தனது அரச பட்டங்களை துறப்பதாக பிரிட்டிஷ் இளவரசர் ஆண்ட்ரூ அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து இளவரசர் ஆண்ட்ரூ வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பொது வாழ்க்கையிலிருந்து விலகுவதற்கான எனது முடிவில் நான் உறுதியாக இருக்கிறேன்.
தற்பொழுது மன்னராட்சியின் ஒப்புதலுடன் எனது பட்டத்தையோ அல்லது எனக்கு வழங்கப்பட்ட கௌரவங்களையோ இனி நான் பயன்படுத்த மாட்டேன் என்று முடிவு செய்துள்ளேன். நான் முன்பு கூறியது போல், என் மீதான குற்றச்சாட்டுகளை நான் உறுதியாக மறுக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
- ராணி எலிசபெத் மரணம் அடைந்ததால் தற்போதைய மன்னர் சார்லசிடம் தொகைக்கு உரிய ஆவணம் கையெழுத்துக்கு வைக்கப்பட்டது.
- அரசின் செலவை குறைக்கும் நோக்கத்தில் இந்திய குருவுக்கு ரூ.32 லட்சத்தை வழங்க சார்லஸ் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.
இங்கிலாந்து மன்னர் சார்லசின் சகோதரர் இளவரசர் ஆன்ட்ரூ. 63 வயதான ஆன்ட்ரூவுக்கு இந்தியாவை சேர்ந்த குரு ஒருவர் பல வருடங்களாக சிகிச்சை அளித்து வந்தார்.
இதற்காக இந்திய குரு அடிக்கடி லண்டன் செல்வார். அவரை ஒரு விடுதியில் தங்க வைத்து ஆன்ட்ரூ ஒரு மாதம் சிகிச்சை பெறுவார். அப்போது அவருக்கு மசாஜ் உள்ளிட்ட உடல்நல சிகிச்சைகளை அளிப்பதுடன் போதனையும் செய்து வந்தார். இதற்கான தொகை ரூ.32 லட்சம் ஆகும்.
அவரது தாயார் ராணி எலிசபெத் இதற்கு உரிய செலவை எந்தவித கேள்வியும் கேட்காமல் வழங்கி வந்தார். தற்போது ராணி எலிசபெத் மரணம் அடைந்ததால் தற்போதைய மன்னர் சார்லசிடம் இந்த தொகைக்கு உரிய ஆவணம் கையெழுத்துக்கு வைக்கப்பட்டது. ஆனால் அதில் கையெழுத்திட சார்லஸ் மறுத்து விட்டார். அத்துடன் இந்திய குருவுக்கு வழங்க வேண்டிய ரூ.32 லட்சத்தையும் அவர் வழங்கவில்லை. இதற்குரிய பணத்தை ஆன்ட்ரூவையே செலுத்துமாறு மன்னர் சார்லஸ் கூறி விட்டார்.
அரசின் செலவை குறைக்கும் நோக்கத்தில் இந்திய குருவுக்கு ரூ.32 லட்சத்தை வழங்க சார்லஸ் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் மகனும், இளவரசர்களில் ஒருவருமான பிரின்ஸ் ஆண்ட்ரூ மீது செக்ஸ் புகார் எழுந்துள்ளது. தற்போது 61 வயதான பிரின்ஸ் ஆண்ட்ரூ மீது கற்பழிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவர் மீது அமெரிக்க பெண் கற்பழிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார்.
அதாவது இவர் கடந்த 2001-ம் ஆண்டு அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு சென்றிருந்ததாகவும், அப்போது அவருக்கு ஜெப்ரி எப்ஸ்டின் என்பவர் தனது காதலியான விர்ஜீனியா ஜிப்ரே என்ற இளம்பெண்ணை அறிமுகப்படுத்தியதாகவும், அந்த சந்தர்ப்பத்தில் விர்ஜீனியாவுக்கு, இளவரசர் பிரின்ஸ் ஆண்ட்ரூ செக்ஸ் தொல்லை கொடுத்து கற்பழித்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் அந்த சமயத்தில் விர்ஜீனியாவுக்கு 17 வயது தான் ஆகியிருந்ததாக தெரிகிறது.
மைனர் பெண்ணான விர்ஜீனியாவை மிரட்டி பிரின்ஸ் ஆண்ட்ரூ பாலியல் உறவு கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தற்போது விர்ஜினீயாவுக்கு 37 வயது ஆகிறது. தனக்கு நேர்ந்த கொடுமை தொடர்பாக அவர் நியூயார்க் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதுதொடர்பான விசாரணை நேற்று முன்தினம் காணொலி காட்சி மூலம் நடந்தது.
10 நிமிடங்கள் மட்டுமே நடந்த இந்த விசாரணையில், வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொள்வதாக நீதிபதி லீவிஸ் ஏ.கப்லன் அறிவித்தார். மேலும் இவ்வழக்கின் விசாரணை அடுத்த ஆண்டு(2022) செப்டம்பர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை ஒரே கட்டமாக நடத்தி முடிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்படும் என்றும், விசாரணை தொடங்கும் நாள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்து இருக்கிறார்.
இதற்கிடையே விர்ஜீனியாவின் காதலர் ஜெப்ரி எப்ஸ்டீன் தற்கொலை செய்து கொண்டார். அவர் இளவரசர் மீதான செக்ஸ் புகாரில் தன்னிடமும் விசாரணை நடத்தக்கூடும் என்ற பயத்தில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஜெப்ரி எப்ஸ்டீனின் முன்னாள் காதலியும் இவ்வழக்கில் சாட்சியாக சேர்க்கப்பட்டு இருக்கிறார். இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்தின் மகன் மீது செக்ஸ் புகார் எழுந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.






