search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "British"

    • காவலர்களிடம் தகவல் தெரிவித்த பிறகே இவ்வாறு செய்தேன்.
    • காரில் வந்து பரிசு பெற்ற சம்பவம் சமூக பேசுபொருளாகி இருக்கிறது.

    பிரிட்டனில் நடைபெற்ற மாரத்தான் ஓட்டப் பந்தயத்தில் நண்பரின் காரை பயன்படுத்தியதை ஒப்புக்கொண்ட வீரருக்கு தடை விதிக்கப்பட்ட சம்பவம் அரங்கேறி இருக்கிறது. கடந்த ஏப்ரல் 7-ம் தேதி நடைபெற்ற 50 மைல் மாரத்தான் ஓட்டப் பந்தயத்தில் ஜோசியா சக்ரெவ்ஸ்கி கலந்து கொண்டு மூன்றாவது இடத்தை பிடித்தார்.

    இந்த நிலையில், பந்தயத்தின் போது அவர் தனது நண்பரின் காரில் சிறிது தூரம் கடந்து வந்ததை ஒப்புக் கொண்டுள்ளார். ஓட்டப்பந்தயத்தின் போது தனக்கு காயம் ஏற்பட்டதால், காவலர்களிடம் தகவல் தெரிவித்த பிறகே இவ்வாறு செய்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

    ஓட்டப்பந்தயத்தின் போது காரில் பயணித்து வெற்றி பெற்றதற்காக இவர் ஓட்டப் பந்தயங்களில் பங்கேற்க 12 மாதங்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. இதற்கான உத்தரவை பிரிட்டனை சேர்ந்த விளையாட்டு ஒழுங்குமுறை கூட்டமைப்பு பிறப்பித்து இருக்கிறது. ஓட்டப் பந்தயத்தின் போது காரில் வந்து பரிசு பெற்ற சம்பவம் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி இருக்கிறது. 

    தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ், கோஹினூர் வைரம் இங்கிலாந்து ராணியிடம் சென்றது எப்படி என்பது தொடர்பாக தொல்லியல் துறை தகவல் அளித்துள்ளது. #KohinoorDiamond #MaharajaLahore #British #ASI
    புதுடெல்லி:

    புகழ்பெற்ற கோஹினூர் வைரம், 14-ம் நூற்றாண்டில் தென்னிந்தியாவில் கண்டெடுக்கப்பட்டது. அது, 108 காரட் கொண்டது. அளவில் மிகப்பெரியது. எந்த நிறமும் இல்லாதது. அதன் மதிப்பு 20 கோடி டாலர் (ரூ.1,480 கோடி) என்று மதிப்பிடப்பட்டு உள்ளது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், அந்த வைரம், ஆங்கிலேயர்கள் கைக்கு சென்றது. தற்போது, இங்கிலாந்தில் உள்ள ஒரு அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டு உள்ளது. கோஹினூர் வைரத்துக்கு இந்தியா உள்ளிட்ட 4 நாடுகள் சொந்தம் கொண்டாடி வருகின்றன.

    இந்நிலையில், அந்த வைரம் இங்கிலாந்திடம் சென்றது எப்படி? என்று பிரதமர் அலுவலகம் தகவல் அளிக்க வேண்டும் என்று கேட்டு, தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ், பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ரோகித் சபர்வால் என்பவர் விண்ணப்பித்தார். அதற்கு இந்திய தொல்லியல் துறை பதில் அளித்துள்ளது.

    அதில், “டெல்லியில் உள்ள தேசிய ஆவண காப்பகத்தில் உள்ள ஆவணங்களின்படி, டல்ஹவுசி பிரபுவுக்கும், லாகூர் மகாராஜா துலீப் சிங்குக்கும் இடையே 1849-ம் ஆண்டு லாகூர் ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, இங்கிலாந்து ராணியிடம் மகாராஜா கோஹினூர் வைரத்தை ஒப்படைத்தார்” என்று கூறப்பட்டுள்ளது.

    பஞ்சாப்பை ஆண்ட மன்னரின் வாரிசுகள், கோஹினூர் வைரத்தை இங்கிலாந்து ராணிக்கு பரிசாக அளித்ததாக கடந்த 2016-ம் ஆண்டு மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்தது. ஆனால், அதற்கு முரணாக, தொல்லியல் துறை இந்த தகவலை அளித்துள்ளது.  #KohinoorDiamond #MaharajaLahore #British #ASI
    ×