என் மலர்
நீங்கள் தேடியது "அமைச்சர் மூர்த்தி"
- அரசு வழிகாட்டுதல்படி மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் சீறும் சிறப்புமாக நடைபெற உள்ளது.
- ஜல்லிக்கட்டு போட்டியில் சிறப்பு பரிசாக கார், பைக் மற்றும் டிராக்டர் வழங்கப்பட உள்ளது.
அலங்காநல்லூர்:
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் நடைபெறும். குறிப்பாக மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு பிரசித்தி பெற்றது.
இந்த ஆண்டு அவனியாபுரத்தில் வருகிற 15-ந்தேதியும், பாலமேட்டில் 16-ந்தேதியும், அலங்காநல்லூரில் 17-ந் தேதியும் நடக்கிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது.
கடந்த 5-ந்தேதி அவனியாபுரம் ஜல்லிக்கட்டுக்கான அடிக்கல் நடப்பட்டது. இன்று பாலமேடு, அலங்காநல்லூரில் அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
அலங்காநல்லூர் வாடிவாசல் அருகே உள்ள முத்தாலம்மன் கோவில் முன்பாக முகூர்த்தகால் நடும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, வெங்கடேசன் எம்.எல்.ஏ. மற்றும் அரசு அலுவலர்கள், விழாக் குழுவினர், கிராம பொதுமக்கள் முன்னிலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்து முகூர்த்தக்கால் நடப்பட்டது.
இதேபோன்று பாலமேடு மஞ்சமலை ஆற்றுத்திடல் வாடிவாசலில் முகூர்த்தக் கால் விழா அமைச்சர் பி. மூர்த்தி தலைமையில் நடை பெற்றது.
விழாவின்போது அமைச்சர் பி.மூர்த்தி நிருபர்களிடம் கூறியதாவது:-
அரசு வழிகாட்டுதல்படி மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் சீறும் சிறப்புமாக நடைபெற உள்ளது. சென்ற ஆண்டை போலவே இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் அனைத்து காளைகளுக்கும் பரிசு பொருட்கள் வழங்கப்படுகிறது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று தொடங்கி வைக்க உள்ளார். பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.
அரசின் வழிகாட்டுதல் படி அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு உட்பட்டு மாவட்ட நிர்வாகத்தின் ஆலோசனைப்படி ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்பட்ட தகுதியான ஜல்லிக்கட்டு காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்பார்கள். ஜல்லிக்கட்டில் சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் மாடுபிடி வீரர்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்து பங்கேற்கலாம்.
காளைகளுக்கும் தற்போது மருத்துவ பரிசோதனை தொடங்கி நடைபெற்று வருகிறது. தகுதி பெறும் காளைகள் இந்த ஜல்லிக்கட்டில் பங்கேற்கலாம். ஜல்லிக்கட்டு போட்டியில் சிறப்பு பரிசாக கார், பைக் மற்றும் டிராக்டர் வழங்கப்பட உள்ளது. பரிசு பொருட்கள் அனைத்தும் விளம்பரதாரர்கள் மற்றும் நன்கொடையாளர்கள் மூலம் பெறப்பட்டு வழக்கம் போலவே சிறப்பான பரிசுகள் வழங்கப்பட உள்ளது என்றார்.
- இந்த ஆண்டு வருகிற பொங்கல் அன்று (15-ந்தேதி) அவனியாபுரம் ஜல்லிட்டு நடைபெற உள்ளது.
- ஜல்லிக்கட்டு நடக்கும் பகுதியை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
அவனியாபுரம்:
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் தமிழகம் முழுவதும் நடத்தப்படும். குறிப்பாக மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு பிரசித்தி பெற்றது.
இந்த ஆண்டு வருகிற பொங்கல் அன்று (15-ந்தேதி) அவனியாபுரம் ஜல்லிட்டு நடைபெற உள்ளது.
அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது தொடர்பாக கிராம கமிட்டிக்கும், தென்கால் பாசன விவசாய சங்கத்திற்கும் இடையே கடும் போட்டி இருந்தது. இதனால் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை மாவட்ட நிர்வாகமே கடந்த சில ஆண்டுகளாக நடத்தி வருகிறது.
அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இன்று ஜல்லிக்கட்டு போட்டிக்கான முகூர்த்தக்கால் நடும் விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்டு முகூர்த்தக்கால் நட்டார். தொடர்ந்து ஜல்லிக்கட்டு நடக்கும் பகுதியை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
அப்போது அங்கு வந்த ஜல்லிக்கட்டு கிராம கமிட்டியினர் அமைச்சர் மூர்த்தியை முற்றுகையிட்டு அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை தாங்களே எடுத்து நடத்த அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
மேலும் அவர்கள் அமைச்சரிடம் இது தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அமைச்சர் உயர் அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் அமைச்சர் மூர்த்தி நிருபர்களிடம் கூறுகையில், மதுரைக்கு சிறப்பு சேர்க்கின்ற வகையிலே 3 ஜல்லிக்கட்டு போட்டிகளும் மிகச் சிறப்பாக நடைபெறும். இந்த ஜல்லிக்கட்டு போட்டியை காண தமிழக முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோர் வருகை தர உள்ளனர். எப்போதும் போல் 3 ஜல்லிக்கட்டிலும் மாடுபிடி வீரர்கள், சிறந்த காளைகளுக்கு கார், டிராக்டர் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்படும். எந்தவித பாகுபாடும் இன்றி இந்த 3 ஜல்லிக்கட்டு போட்டிகளும் நடைபெறும் என்றார்.
- வைகை அணையிலிருந்து அமைச்சர் மூர்த்தி தண்ணீர் திறந்து வைத்தார்.
- மதுரை, சிவகங்கை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள 1 லட்சத்து 5 ஆயிரத்து 2 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
பெரியாறு பாசனப் பகுதியில் உள்ள ஒருபோக பாசனப் பரப்பாகிய 85 ஆயிரத்து 563 ஏக்கர் நிலங்களுக்கும் மற்றும் திருமங்கலம் பிரதானக் கால்வாயின் கீழ் உள்ள ஒரு போக பாசனப் பரப்பாகிய 19 ஆயிரத்து 439 ஏக்கர் நிலங்களுக்கும் ஆக மொத்தம் சேர்த்து 1 லட்சத்து 5 ஆயிரத்து 2 ஏக்கர் நிலங்களுக்கும் வினாடிக்கு 1,130 கன அடி வீதம் 45 நாட்களுக்கு முழுமையாகவும், 75 நாட்களுக்கு முறை வைத்தும் மொத்தம் 120 நாட்களுக்கு 8 ஆயிரத்து 493 மில்லியன் கன அடி தண்ணீரை இன்று முதல் வைகை அணையிலிருந்து திறந்துவிடுவதற்கு அரசு ஆணையிட்டு உள்ளது.
இதனால் மதுரை, சிவகங்கை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள 1 லட்சத்து 5 ஆயிரத்து 2 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருந்தது.
தமிழ்நாடு அரசின் உத்தரவுப்படி, வைகை அணையில் இருந்து ஒரு போக பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட ஒரு போக பாசனத்திற்காக வைகை அணையிலிருந்து அமைச்சர் மூர்த்தி தண்ணீர் திறந்து வைத்தார்.
- விஜய் சுற்றுப்பயணத்தில் கூட்டம் கூடியது தொடர்பான செய்தியாளர்கள் கேள்விக்கு அமைச்சர் மூர்த்தி பதில்.
- 2011-ல் நடிகர் வடிவேலுவை பார்க்க காடு, கரை என மக்கள் கூட்டம் வந்தது.
திருச்சியில் பரப்புரை மேற்கொண்ட தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அரியலூரில் பிரச்சார வாகனத்தில் நின்று தனது பரப்புரையை தொடங்கினார்.
தனது சுற்றுப்பயணத்திற்காக அரியலூர் வந்த தவெக தலைவர் விஜய்க்கு தொண்டர்கள் மற்றும் பொது மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்நிலையில், விஜய் சுற்றுப்பயணத்தில் கூட்டம் கூடியது தொடர்பான செய்தியாளர்கள் கேள்விக்கு அமைச்சர் மூர்த்தி பதில் அளித்துள்ளார்.
அப்போது பேசிய அவர்," சிறையில் இருந்து வெளியே வந்த சசிகலாவை பார்க்க கூட கூட்டம் கூடியது என்றார்.
இதுகுறித்து மேலும் கூறிய அமைச்சர் மூர்த்தி,"கூட்டங்களை வைத்து அரசியல் பேசுவது சரியாகாது. 2011-ல் நடிகர் வடிவேலுவை பார்க்க காடு, கரை என மக்கள் கூட்டம் வந்தது" என்றார்.
- எதிரிக்குக் கூட நாங்களோ முதலமைச்சரோ இடையூறு வேலைகளை பார்ப்பதில்லை.
- யாரோ சொல்லச் சொல்லி த.வெ.க.வினர் சொல்கிறார்கள்.
மதுரையில் அமைச்சர் மூர்த்தி நிருபர்களிடம் கூறியதாவது:-
புதிய பேருந்து நிலையத்தில் நாள் ஒன்றுக்கு 200-க்கும் மேற்பட்ட பேருந்துகள் வந்து செல்கின்றன. 25 வணிக வளாக கடைகள் அமைக்கப்பட்டு ரூ.4.90 கோடி மதிப்பீட்டில் இந்த பேருந்து நிலையம் அமைய பெற்றுள்ளது.
த.வெ.க. மாநாட்டுக்கு எந்த இடையூறும் ஏற்படுத்தவில்லை. எதிரிக்குக் கூட நாங்களோ முதலமைச்சரோ இடையூறு வேலைகளை பார்ப்பதில்லை. இந்த சில்லித்தனமான வேலைகளை எந்த காலத்திலும் தி.மு.க. ஒருபோதும் செய்யாது. ஷேர் கொடுக்கக் கூடாது, வாய்க்கால் தோண்டுவது, இடையூறு செய்வது போன்ற பணிகளை தி.மு.க. தொண்டன் ஒருவன் கூட செய்ய மாட்டான். உண்மைக்கு மாறான செய்தியை சொல்லுகிறார்கள். யாரோ சொல்லச் சொல்லி த.வெ.க.வினர் சொல்கிறார்கள். தி.மு.க. இதுபோன்ற இடையூறுகளை ஒருபோதும் செய்யாது.
இவ்வாறு அவர் கூறினார்.
- சென்னையை தவிர பிற மாவட்டங்களில் நடைபெறாத நிலையில் முதன்முதலாக மதுரையில் தி.மு.க. பொதுக்குழு நடைபெறுகிறது.
- இந்த ரோடு ஷோ வரலாறு காணாத வகையில் இருக்க வேண்டும்.
மதுரை:
மதுரை உத்தங்குடியில் தி.மு.க. வடக்கு, மாநகர், தெற்கு மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் அமைச்சர்கள் மூர்த்தி, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், கோ.தளபதி எம்.எல்.ஏ., சேடப்பட்டி மணிமாறன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் அமைச்சர் மூர்த்தி பேசுகையில், வருகிற ஜூன் 1-ந்தேதி வரலாறு காணாத வகையில், சென்னையை தவிர பிற மாவட்டங்களில் நடைபெறாத நிலையில் முதன்முதலாக மதுரையில் தி.மு.க. பொதுக்குழு நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள், அமைச்சர்கள், மாநிலம் முழுவதும் உள்ள மாவட்ட செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், ஒன்றிய செயலாளர்கள், பகுதி செயலாளர்கள், மாநில அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் என பலரும் கலந்து கொள்கின்றனர்.
அதற்கு முதல் நாளான மே 31-ந்தேதி தமிழக முதலமைச்சரின் மாபெரும் ரோடு ஷோ நடைபெறுகிறது. இந்த ரோடு ஷோ மதுரை விமான நிலையத்திலிருந்து பெருங்குடி, அவனியாபுரம், வில்லாபுரம், ஜெய்ஹிந்ரத் புரம், காளவாசல், குரு தியேட்டர், திருமலை நாயக்கர் சிலை வழியாக நடைபெற்று தி.மு.க.வுக்கு அரும்பாடுபட்ட மதுரையின் முதல் மேயர் முத்துவின் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
இந்த ரோடு ஷோ வரலாறு காணாத வகையில் இருக்க வேண்டும். அனைவரும் திரும்பி பார்க்கக் கூடிய மதுரையின் பத்து தொகுதியின் வெற்றிக்கு அடித்தளமாகவும், தேர்தல் வியூகமாகவும் இந்த ரோடு ஷோ அமையும் அளவிற்கு நமது தொண்டர்கள் அணி திரண்டு வர வேண்டும். தமிழகத்தின் தலைநகரம் சென்னையாக இருந்தாலும், அரசியலுக்கு தலைநகரம் மதுரை என்று சொல்லுகின்ற அளவிற்கு பல மாற்றங்களை நமது மதுரை கண்டு இருக்கிறது.
இதற்கு முன்பு மதுரை ஒத்தக்கடையில் நடைபெற்ற நமது கட்சியின் மாநாடு மாபெரும் திருப்புமுனை மாநாடாக அமைந்தது. அதேபோல் ஒரே நாளில் மேலூர் டங்ஸ்டன் வெற்றி மாநாடு அமைந்திருந்தது.
இவ்வாறு அவர் பேசினார்.
- மக்களின் தேவையறிந்து முதல்வர் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் என அமைச்சர் மூர்த்தி பேசினார்.
- வீடுதோறும் குடிநீர் வழங்குவதற்கான ஏற்பாடுகள் தற்போது தற்காலிகமாக தான்நடந்து உள்ளது.
மதுரை
மதுரை ஆனையூர் பகுதிக்கான குடிநீர் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
மதுரையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
இந்த திட்டம் 2006-ம் ஆண்டு தமிழக முதல்வராக கலைஞர் இருந்தபோது தொடங்கப்பட்டது. 2010-ம் ஆண்டு திட்டம் முடிவடைந்த நிலையில் சிறு, சிறு தவறுகளினால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
தற்போது தமிழக முதல்வராக மு.க. ஸ்டாலின் பதவி ஏற்று இத்திட்டத்தை தொடங்கி வைத்திருக்கிறார். மேலும் திட்டத்தின் மூலம் இப்பகுதியில் உள்ள மக்களுக்கு வீடுதோறும் குடிநீர் வழங்குவதற்கான ஏற்பாடுகள் தற்போது தற்காலிகமாக தான்நடந்து உள்ளது.
முழுமையாக இப்பகுதியில் பாதாள சாக்கடைகள் அமைக்கப்பட்ட பின்னர் நிரந்தரமாக மக்களுக்கு குடிநீர் வழங்கப்படும். மக்களின் தேவைகளை அறிந்து முதல்வர் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் அனீஷ் சேகர், சோழவந்தான் எம்.எல்.ஏ., வெங்கடேசன், மேயர் இந்திராணி, துணை மேயர் நாகராஜன், மாநகராட்சி ஆணையர் சிம்ரன் ஜித் சிங், மண்டல தலைவர் வாசுகி சசிகுமார், தி.மு.க. நிர்வாகிகள் மருது பாண்டி, சசிகுமார், செல்வகணபதி கணேஷ், ரோகிணி பொம்மதேவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி தமிழகத்தில் அனைத்து துறைகளும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
- மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
நாகர்கோவில்:
வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி இன்று குமரி மாவட்டம் வந்தார்.
அதன்பிறகு நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்டு பேசினார். பத்திரபதிவுத்துறை செயலாளர் ஜோதி நிர்மலாசாமி, கலெக்டர் அரவிந்த், பதிவுத்துறை தலைவர் சிவனருள், மாவட்ட பதிவாளர் பாலசுப்பிரமணியன், மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன், சப்-கலெக்டர் குணால் யாதவ், கோட்டாட்சியர் சேது ராமலிங்கம் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
பத்திரப்பதிவு துறையில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்வது தொடர்பாக கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. தொடர்ந்து அமைச்சர் மூர்த்தி நிருபர்களிடம் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி தமிழகத்தில் அனைத்து துறைகளும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறையை பொருத்தவரை 39 புதிய சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அந்த சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டதால் பத்திரப்பதிவுத்துறை வளர்ச்சி அடைந்துள்ளது.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வணிக வரித்துறையில் ரூ.21 ஆயிரத்து 500 கோடியும், பதிவு துறையில் ரூ.3 ஆயிரம் கோடியும் வருவாய் உயர்ந்து உள்ளது. நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மற்றும் குமரி மண்டலத்துக்குட்பட்ட பகுதிகளில் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது.
குமரி மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் பத்திரப்பதிவில் நடைமுறை சிக்கல்கள் உள்ளன. 3 அடி முதல் 4 அடியில் மட்டுமே பாதைகள் இருப்பதால் அந்த பகுதியில் உள்ள நிலங்களை பதிவு செய்வதில் சிக்கல்கள் உள்ளது. இது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டு உள்ளோம்.
மேலும் சம்பந்தப்பட்ட இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளோம். அந்த இடத்தின் அமைப்பு எந்த மாதிரியாக உள்ளது? என்பதை ஆய்வு செய்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வோம்.
'டெஸ்ட் பர்சேஸ்' என்ற பெயரில் வணிகர்களிடம் தமிழக அரசு எந்தவித கெடுபிடியும் காட்டவில்லை. வணிகர்களுக்கு பாதுகாவலனாக இந்த அரசு விளங்கி வருகிறது. நியாயமாக, நேர்மையாக வியாபாரம் செய்பவர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை.
மக்களிடம் வாங்கக்கூடிய வரி அரசுக்கு முறையாக செலுத்தப்பட வேண்டும் என்பது தான் இந்த அரசு மேற்கொள்ளும் நடவடிக்கையாகும். இதில் வணிகர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. 'டெஸ்ட் பர்சேஸ்' குறித்து வியாபாரிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகளை வணிக வரித்துறை மேற்கொண்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- மதுரை சூர்யா நகரில் 2 டிரான்ஸ்பார்மர்கள் புதிதாக நிறுவப்பட்டது.
- இதனை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்.
மதுரை
மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சூர்யாநகர் அருண்சிட்டி பகுதியில் மின் பகிர்மான கழகம் சார்பில் 100 கே.வி.ஏ. திறன் கொண்ட 2 புதிய மின்மாற்றிகள் நிறுவப்பட்டன.
இவற்றை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் பேசியதாவது:-
முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பொதுமக்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றி அவர்களது அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சூர்யா நகர் பகுதியில் உள்ள பொதுமக்கள் தேர்தல் நேரத்தின்போது இந்த பகுதியில் சீரான மின் விநியோகம், குடிநீர் விநியோகம், சாலை வசதி மற்றும் தெரு விளக்கு வசதி போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
அதன்படி தற்போது இந்த பகுதியில் உள்ள அருண் சிட்டியில் 2 புதிய மின்மாற்றி கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப் பட்டுள்ளது. இதன் மூலம் இந்த பகுதியில் உள்ள குடியிருப்புகளில் சீரான மின் விநியோகம் உறுதி செய்யப்படும்.
அதேபோல சுத்தமான குடிநீர் விநியோகிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதி களில் மாநகராட்சியின் மூலம் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கடந்த 10 ஆண்டு களில் இந்த பகுதிகளில் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்படவில்லை. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்பு பொதுமக்கள் அனைவருக்கும் அரசு நலத்திட்டங்கள் முழுமையாக சென்றடையும் வகையில் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி மண்டலத் தலைவர் வாசுகி சசிகுமார், கவுன்சிலர் ராதிகா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- எம்.சத்திரப்பட்டி ஜல்லிக்கட்டில் 10 ஆயிரம் பேர் அமரும் வகையில் கேலரி வசதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மூர்த்தி கூறினார்.
- கார் முதல் பரிசு, புல்லட் பைக் 2-ம் பரிசு, ஹீரோ பைக் 3-ம் பரிசு என முறையே வழங்கப்படும்.
மதுரை
எம்.சத்திரப்பட்டியில் நடைபெறும் ஜல்லிக்கட்டு தொடர்பாக அமைச்சர் மூர்த்தி கூறியதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதி சார்பாக எம்.சத்திரப்பட்டி கிராமத்தில் நாளை (30ந்தேதி) மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி நடக்கிறது.
இந்த ஜல்லிக்கட்டில் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் 1000க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்க உள்ளன. காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கான பரிசோதனை என அரசு வழங்கியுள்ள அனைத்து வழிகாட்டு நடைமுறைகளும் முறையே கடைபிடிக்கப் படுகிறது.
போட்டியில் வெற்றி பெறும் சிறந்த காளை, சிறந்த மாடுபிடி வீரர் என இரு பிரிவாக கார் முதல் பரிசு, புல்லட் பைக் 2-ம் பரிசு, ஹீரோ பைக் 3-ம் பரிசு என முறையே வழங்கப்படும். அதேபோல, சிறப்பாக விளையாடும் காளை மற்றும் மாடுபிடி வீரருக்கு 1கிராம் தங்க நாணயம், வண்ணத் தொலைக்காட்சி பெட்டி, சைக்கிள் உள்ளிட்ட சிறப்பு பரிசுகளும் வழங்கப்படும்.
திருவிழா போல நடை பெறும் ஜல்லிக்கட்டு போட்டியை பொதுமக்கள் கண்டு களிக்க ஏதுவாக 10ஆயிரம் பேர் அமரும் வகையில் கேலரி அமைக்கப் பட்டுள்ளது.
இந்த ஜல்லிக்கட்டு போட்டி எம். சத்திரப்பட்டி கிராமத்தில் நாளை (30-ந்தேதி) காலை தொடங்கி மாலை வரை நடைபெறும். பொதுமக்கள் அதிகளவில் வருகை தந்து இந்த ஜல்லிக் கட்டு போட்டியை கண்டு களித்திட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- 10 நாட்களில் ரூ.30 லட்சத்தில் பாலம் அமைக்கும் பணி தொடங்கியது. இதில் அமைச்சர் மூர்த்தி பங்கேற்றார்.
- மதுரை கிழக்கு யூனியன் தலைவர் மணிமேகலை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மதுரை
மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாங்குளம் அருகே உள்ள மீனாட்சிபுரம் கிராமத்தில் கிருஷ்ணாபுரம் பரம்பை கண்மாயின் உபரிநீர் செல்லும் ஓடையின் குறுக்கே நீர்வளத்துறை சார்பில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் புதிய சிறு பாலம் அமைக்கும் பணிகளை அமைச்சர் மூர்த்தி இன்று தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று 2 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளன. பொதுமக்கள் நலன் சார்ந்த இந்த 2 ஆண்டு சாதனை பயணத்தில் மக்கள் நலனுக்காக எண்ணற்ற நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக பொது மக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர், சாலை, தெருவிளக்கு வசதி போன்ற திட்டப்பணிகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருகிறது. மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் நலனை கருத்திற்கொண்டு பல்வேறு உட்கட்டமைப்பு வசதி மேம்பாட்டுப் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் கடந்த 25-ந் தேதி மாங்குளம் கிராம பகுதியில் சாலை மேம்பாட்டு பணிகளை தொடங்கி வைக்க வந்தபோது மாங்குளம் அருகே உள்ள மீனாட்சிபுரம் கிராமம் கிருஷ்ணாபுரம் மக்கள் தங்களது பகுதியில் மழைக்காலத்தில் மழைநீர் தேங்கி சாலையை கடக்க சிரமப்படுவதாக தெரிவித்தனர்.
மேலும் கிருஷ்ணாபுரம் பரம்பை கண்மாயின் உபரிநீர் செல்லும் ஓடையின் குறுக்கே சிறு பாலம் அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். அதன்படி அந்த பகுதியில் உடனடியாக சிறு பாலம் அமைக்கப்படும் என்று உறுதியளித்தேன்.
கிருஷ்ணாபுரம் பரம்பை கண்மாயின் உபரிநீர் செல்லும் ஓடையின் குறுக்கே சிறு பாலம் அமைக்கும் பணிகள் இன்று தொடங்கி வைக்கப்பட் டுள்ளன. சிறு பாலம் அமைக்கப்படும் என தெரிவித்த 10 நாட்களில் அதற்கு செயல் வடிவம் கொடுக்கும் வகையில் இந்த பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இதை விரைவாகவும், தரமாகவும் மேற்கொண்டு மழைக்காலம் தொடங்கும் முன்பு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் அனீஷ்சேகர், மதுரை கிழக்கு யூனியன் தலைவர் மணிமேகலை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- ஜல்லிக்கட்டு தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை வரவேற்கிறோம்.
- ஜல்லிக்கட்டு தீர்ப்பிற்கு முதல் காரணம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான்.
மதுரை:
மதுரை அருகே உள்ள சத்திரப்பட்டியில் தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனையை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்டு 2312 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2 கோடியே 8 லட்சத்து 36 ஆயிரத்து 923 மதிப்பிலான உதவி உபகரணங்களை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஜல்லிக்கட்டு தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை வரவேற்கிறோம். ஜல்லிக்கட்டு தொடர்பாக சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானத்தின் அடிப்படையில் தான் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
ஜல்லிக்கட்டு தீர்ப்பிற்கு முதல் காரணம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான். 2016-ம் ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்த பிரச்சினைகள் வந்த போது அதற்கு தீர்வு கண்டவர் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி.
இந்த வெற்றி தமிழர்களின் உணர்வுக்கும், பண்பாட்டு கலாச்சாரத்திற்கும் கிடைத்தது. இதற்கு காரணமாக இருந்த முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் அனீஸ் சேகர், கூடுதல் கலெக்டர் சரவணன், வெங்கடேசன் எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் கோ.தளபதி, பூமிநாதன், துணை மேயர் நாகராஜன், சேர்மன் வீரராகவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






