search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எம். சத்திரப்பட்டி ஜல்லிக்கட்டில் 10 ஆயிரம் பேர் அமரும் வகையில் கேலரி வசதி-அமைச்சர் மூர்த்தி
    X

    எம். சத்திரப்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டியை காண அமைக்கப்பட்டுள்ள கேலரி மற்றும் மேடை.

    எம். சத்திரப்பட்டி ஜல்லிக்கட்டில் 10 ஆயிரம் பேர் அமரும் வகையில் கேலரி வசதி-அமைச்சர் மூர்த்தி

    • எம்.சத்திரப்பட்டி ஜல்லிக்கட்டில் 10 ஆயிரம் பேர் அமரும் வகையில் கேலரி வசதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மூர்த்தி கூறினார்.
    • கார் முதல் பரிசு, புல்லட் பைக் 2-ம் பரிசு, ஹீரோ பைக் 3-ம் பரிசு என முறையே வழங்கப்படும்.

    மதுரை

    எம்.சத்திரப்பட்டியில் நடைபெறும் ஜல்லிக்கட்டு தொடர்பாக அமைச்சர் மூர்த்தி கூறியதாவது:-



    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதி சார்பாக எம்.சத்திரப்பட்டி கிராமத்தில் நாளை (30ந்தேதி) மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி நடக்கிறது.

    இந்த ஜல்லிக்கட்டில் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் 1000க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்க உள்ளன. காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கான பரிசோதனை என அரசு வழங்கியுள்ள அனைத்து வழிகாட்டு நடைமுறைகளும் முறையே கடைபிடிக்கப் படுகிறது.

    போட்டியில் வெற்றி பெறும் சிறந்த காளை, சிறந்த மாடுபிடி வீரர் என இரு பிரிவாக கார் முதல் பரிசு, புல்லட் பைக் 2-ம் பரிசு, ஹீரோ பைக் 3-ம் பரிசு என முறையே வழங்கப்படும். அதேபோல, சிறப்பாக விளையாடும் காளை மற்றும் மாடுபிடி வீரருக்கு 1கிராம் தங்க நாணயம், வண்ணத் தொலைக்காட்சி பெட்டி, சைக்கிள் உள்ளிட்ட சிறப்பு பரிசுகளும் வழங்கப்படும்.

    திருவிழா போல நடை பெறும் ஜல்லிக்கட்டு போட்டியை பொதுமக்கள் கண்டு களிக்க ஏதுவாக 10ஆயிரம் பேர் அமரும் வகையில் கேலரி அமைக்கப் பட்டுள்ளது.

    இந்த ஜல்லிக்கட்டு போட்டி எம். சத்திரப்பட்டி கிராமத்தில் நாளை (30-ந்தேதி) காலை தொடங்கி மாலை வரை நடைபெறும். பொதுமக்கள் அதிகளவில் வருகை தந்து இந்த ஜல்லிக் கட்டு போட்டியை கண்டு களித்திட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×