என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சசிகலா"
- சென்னை ஐகோர்ட்டில் சசிகலா மேல்முறையீடு செய்தார்.
- அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.
சென்னை:
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா. அவர் உயிரோடு இருக்கும் வரை அ.தி.மு.க.வில் அசைக்க முடியாத சக்தியாக விளங்கினார்.
ஜெயலலிதா மறைவை தொடர்ந்து கட்சியின் பொதுச்செயலாளராக சசிகலாவும், துணை பொதுச்செயலாளராக டி.டி.வி.தினகரனும் தேர்வு செய்யப்பட்டனர். இதற்கான தீர்மானங்களும் இயற்றப்பட்டன.
இந்த நிலையில் சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்றதும் கட்சியில் காட்சிகள் மாறியது.
அ.தி.மு.க. பொதுக்குழு கூடி சசிகலா, தினகரன் ஆகியோரை அந்த பதவிகளில் இருந்தும், கட்சியில் இருந்தும் நீக்கியது. அதற்கு பதிலாக கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் தேர்வு செய்யப்பட்டார்கள்.
இதை எதிர்த்து தன்னை பொதுச்செயலாளர் பதவியில் இருந்தும் கட்சியில் இருந்தும் நீக்கியது செல்லாது என்று அறிவிக்க கோரி சென்னை உரிமையியல் கோர்ட்டில் சசிகலா வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கை நிராகரிக்க கோரி ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் மனுதாக்கல் செய்தனர்.
அந்த மனுவை ஏற்றுக்கொண்ட உரிமையியல் நீதிமன்றம் சசிகலாவின் வழக்கை நிராகரித்து உத்தரவிட்டது.
இதை எதிர்த்து சசிகலா சென்னை ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கை நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், என்.செந்தில்குமார் ஆகியோரை கொண்ட டிவிசன் பெஞ்ச் விசாரித்தது.
இந்த வழக்கு நிலுவையில் இருந்ததால் சசிகலா தான்தான் கட்சியின் பொதுச்செயலாளர் என்று கூறி வந்தார்.
இதற்கிடையில் அ.தி.மு.க.வில் ஏற்பட்ட ஒற்றை தலைமை பிரச்சனையில் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கும், ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கும் இடையே போட்டி ஏற்பட்டது.
இதில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக பொதுக்குழு மூலம் தேர்வு செய்யப்பட்டார். அதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் மேற்கொண்ட சட்ட போராட்டம் எதுவும் அவருக்கு கைகொடுக்கவில்லை. கட்சி முற்றிலும் எடப்பாடி பழனிசாமி தலைமையின் கீழ் வந்தது.
சசிகலாவின் மேல்முறையீட்டு வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நடந்து வந்தது. இறுதிக்கட்ட விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்கும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.
இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று நீதிபதிகள் தீர்ப்பை வழங்கினார்கள்.
அதில் சசிகலாவை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கியதும், கட்சியில் இருந்து நீக்கியதும் செல்லும் என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
- வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், என்.செந்தில்குமார் ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்சில் விசாரிக்கப்பட்டது.
- அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து கடந்த மாதம் உத்தரவிட்டனர்.
சென்னை:
ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு கட்சியின் பொதுச்செயலாளராக வி.கே.சசிகலாவும், துணைப் பொதுச்செயலாளராக டி.டி.வி.தினகரனும் அ.தி.மு.க. பொதுக்குழு மூலமாக இடைக்கால ஏற்பாடாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அதன்பிறகு சசிகலா, தினகரன் ஆகியோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக பழனிசாமியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
பொதுச்செயலாளர் பதவியில் இருந்தும், கட்சியில் இருந்தும் தன்னை நீக்கியது செல்லாது என அறிவிக்கக்கோரி வி.கே.சசிகலா சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
சசிகலா தொடர்ந்திருந்த அந்த வழக்கை நிராகரிக்கக்கோரி ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை ஏற்ற உரிமையியல் நீதிமன்றம், சசிகலாவின் வழக்கை நிராகரித்து உத்தரவிட்டது.
இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் சசிகலா மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், என்.செந்தில்குமார் ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்சில் விசாரிக்கப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து கடந்த மாதம் உத்தரவிட்டனர்.
இந்தநிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை நாளை மறுநாள் திங்கட்கிழமை காலை 10.30 மணிக்கு நீதிபதிகள் பிறப்பிக்கின்றனர்.
- தி.மு.க. தலைவர் வாய் கூசாமல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு விட்டதாக ஒரு பொய்யை சொல்லி மக்களின் காதில் பூ சுத்தப் பார்க்கிறார்.
- தி.மு.க.வினருக்கு தமிழக மக்களின் நலனைப் பற்றிய எந்தவித கவலையும் இல்லை.
சென்னை:
சென்னை வேளச்சேரியில் அ.தி.மு.க. 52-ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சசிகலா கலந்து கொண்டு பேசினார்.
தமிழக மக்களை காப்பாற்ற எம்.ஜி.ஆர். 51 ஆண்டுகளுக்கு முன்பு அண்ணா உருவம் பதித்த கொடியை தாங்கிய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை உருவாக்கினார்.
எம்.ஜி.ஆர். திரைப்படத்துறையில் இருந்து வந்ததால் மட்டுமே தலைவரானார் என்று நினைப்பது தவறு. அதே போன்று ஜெயலலிதாவும் திரைத்துறையிலிருந்து வந்தவர் என்றாலும், பல காலம் கட்சிப் பணிகளை மேற்கொண்டு, தமிழக மக்களின் உரிமைகளுக்காக போராடி, அவர்களுக்கு உறுதுணையாக நின்றதால் புரட்சித் தலைவி ஆனார். மேலும், ஆணாதிக்கம் நிறைந்த இந்த சமுதாயத்தில் பல்வேறு சோதனைகளை சந்தித்து அதில் வெற்றியும் கண்டு தமிழக முதல்வராக அரியணையில் அமர்ந்தார்.
தமிழக மக்களின் பேராதரவோடு ஆறுமுறை முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்ட ஜெயலலிதா எண்ணிலடங்கா மக்கள்நலத் திட்டங்களை கொடுத்து தமிழக மக்களின் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்தார். தனது இறுதி மூச்சு உள்ளவரை மக்களால் நான் மக்களுக்காகவே நான் என்று தமிழக மக்களின் நலனுக்காக தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தார்.
இதுபோன்று எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட இயக்கம், புரட்சித்தலைவி அம்மாவால் வளர்த்தெடுக்கப்பட்ட இயக்கம் இன்றைக்கு எதிர்க்கட்சியினர் எள்ளி நகையாடும் நிலையில் இருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது.
கடவுள் மீதும், உங்கள் திறமையின் மீதும் முழு நம்பிக்கை சூழ்ச்சிகளையெல்லாம் முறியடித்து வைத்தால் எதிரிகளின் வெற்றியை அடையமுடியும்.
தன்னம்பிக்கையோடு வாழ்பவர்களுக்கு என்றைக்கும் அழிவே கிடையாது.
தி.மு.க. தலைவர் வாய் கூசாமல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு விட்டதாக ஒரு பொய்யை சொல்லி மக்களின் காதில் பூ சுத்தப் பார்க்கிறார்.
தமிழகத்தில் இன்றைக்கு தி.மு.க. தலைமையிலான அரசைக் கண்டித்து அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள், விவசாயப் பெருங்குடி மக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் தங்களின் அடிப்படை தேவைகளுக்காகவும், உரிமைகளுக்காகவும் நாள்தோறும் போராட வேண்டிய அவலநிலைக்கு தள்ளப்பட்டு விட்டனர்.
தி.மு.க.வினருக்கு தமிழக மக்களின் நலனைப் பற்றிய எந்தவித கவலையும் இல்லை. மாறாக தி.மு.க.வினருக்கு இப்போது இருக்கும் ஒரே கவலை வரும் பாராளுமன்ற தேர்தலை எப்படி எதிர்கொள்வது, எதிர்கட்சியினர் யாரும் ஒன்றிணைந்து விடக்கூடாது. அதை எந்தெந்த வழிகளில் தடுக்கலாம் என்ற சிந்தனையிலேயே இருப்பதாகத்தான் தெரிய வருகிறது.
ஆனால் ஒன்றை மட்டும் இந்நேரத்தில் சொல்லிக் கொள்கிறேன். தி.மு.க.வினரின் பகல் கனவு என்றைக்கும் பலிக்காது. வரும் பாராளுமன்ற தேர்தலில் ஒருங்கிணைந்த அ.தி.மு.க. மாபெரும் வெற்றிபெறும். அதற்காக அனைத்து வேலைகளையும் செய்து கொண்டு இருக்கிறேன்.
ஜெயலலிதா சூளுரைத்தது போல் இந்த இயக்கம் இன்னும் நூற்றாண்டுகளை கடந்தும் தமிழக மக்களுக்காகவே இயங்கும் என்பதை இந்நன்னாளில் உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன். எனவே எதைப்பற்றியும் நீங்கள் கவலைப்படாதீர்கள்.
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் வழியில் பயணித்துக்கொண்டு இருக்கும் அனைவருக்கும் ஒளிமயமான எதிர்காலம் காத்துக்கொண்டு இருக்கிறது. மக்கள் பணிகளை தொடர்ந்து ஆற்றுங்கள்.
தமிழக மக்களின் வாழ்வு மலர, நம் இருபெரும் தலைவர்கள் காட்டிய அதே வழியில் தமிழகத்தில் பொற்கால ஆட்சியை அமைத்து காட்டுவோம் என்பதை இந்நேரத்தில் உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் நாளை காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் துலா லக்னத்தில் மகா சம்ப்ரோக்ஷண கும்பாபிஷேகம் நடக்கிறது.
- கும்பாபிஷேக விழாவுக்கான ஏற்பாடுகளை ஸ்ரீபெரும்புதூர் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மொளச்சூர் இரா.பெருமாள் செய்து வருகிறார்.
சென்னை:
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பள்ளமொளச்சூர் பகுதியில் உள்ள ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் துலா லக்னத்தில் மகா சம்ப்ரோக்ஷண கும்பாபிஷேகம் நடக்கிறது.
கும்பாபிஷேக விழாவுக்கு வி.கே. சசிகலா தலைமை தாங்குகிறார். ஸ்ரீனிவாச பெருமாள் ஆலய கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இன்று காலை 7 மணிக்கு மகா கும்பங்கள் யாகசாலை பிரவேசம், கும்ப ஸ்தாபனம் முதல்கால யாகசாலை சதுஸ்தான பூஜைகள், துவார பூஜை, கும்ப பூஜை, மண்டல பூஜை அக்னி பிரதிஷ்டை ஹோமங்கள், வேத ப்ரபந்தங்கள் சாற்றுமுறை ஆகிய சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
மாலை 4 மணிக்கு மூலஸ்தான உற்சவ விமான கலசங்களுக்கு 48 கலசதிருமஞ்சனம் நிகழ்ச்சியும், இரண்டாம் கால யாக சாலை சதுஸ்தான பூஜைகள் ஹோமங்கள், பூர்னாஹீதி வேத ப்ரபந்தங்கள் சாற்று முறை, சயனாதிவாசம் போன்ற பூஜைகளும் நடைபெறுகிறது. நாளை காலை 7 மணிக்கு விஷ்வரூப சேவை, கோபூஜை, 3 கால யாக சாலை சதுஸ்தான பூஜைகள், ஹோமங்கள், மகா பூர்ணாஹீதி, யாத்ராதானம், கிரக ப்ரீத்தி பூஜைகள் நடக்கிறது.
காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் துலாம் லக்னத்தில் ஸ்ரீனிவாச பெருமாள் விமானங்கள் மூல மூலமூர்த்திகளுக்கு மகாஸ்ம்ப்ரோஷன கும்பாபிஷேகம் திருவாராதனம் வேத ப்ரபதங்கள் சாற்று முறை ஆகியவை நடைபெறுகிறது.
கும்பாபிஷேக விழாவுக்கான ஏற்பாடுகளை ஸ்ரீபெரும்புதூர் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மொளச்சூர் இரா.பெருமாள் செய்து வருகிறார். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 10 ஆயிரம் பேருக்கு நாளை அன்னதானம் வழங்கப்படுகிறது. கும்பாபிஷேக விழாவுக்கு வரும் வி.கே.சசிகலாவை வரவேற்கும் வகையில் வழியெங்கும் வரவேற்பு பதாகைகள் வைக்கப்பட்டு உள்ளது. பள்ளமொளச்சூர் முழுவதும் வாழை மரங்கள், மாவிலை தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
- வழக்கின் விசாரணைக்கு நேரில் ஆஜராகாத சசிகலா மற்றும் இளவரசிக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
- வழக்கு விசாரணை அக்டோபர் 5-ம் தேதிக்கு ஒத்திவைப்பு.
பெங்களூரு:
சிறையில் சொகுசு வசதி பெறுவதற்காக ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்த வழக்கில் பெங்களூரு கோர்ட்டில் சசிகலா, இளவரசி விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதையடுத்து 2 பேருக்கும் பிரவாரண்ட் பிறப்பித்து வழக்கு விசாரணை வருகிற அக்டோபர் மாதம் 5-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தற்போது 3 பேரும் சிறைவாசம் முடிந்து விடுதலையாகி விட்டனர். பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் சசிகலா, இளவரசி அடைக்கப்பட்டு இருந்த போது அங்கு சொகுசு வசதி களை பெறுவதற்காக சிறை அதிகாரிகளுக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
அப்போது சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி.யாக இருந்த சத்திய நாராயணராவுக்கு இந்த பணம் கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக அப்போதைய சிறை துறை டி.ஐ.ஜியாக இருந்த ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா கொடுத்த புகாரின் பேரில் பெங்களூரு ஊழல் தடுப்பு படை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சிறை அதிகாரிகளான கிருஷ்ணகுமார், டாக்டர் அனிதா, சுரேஷ், கஜராஜ் மாகனூர், சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும் விசாரணையை முடித்து கோர்ட்டில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து ரூ.2 கோடி லஞ்ச வழக்கு தொடர்பான விசாரணை விதானசவுதா அருகே உள்ள லோக் ஆயுக்தா கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் 11-ந் தேதி நீதிபதி லட்சுமி நாராயணபட் உத்தரவிட்டு இருந்தாா்.
அதன்படி அன்று சசிகலா, இளவரசி, சிறை அதிகாரிகள் சுரேஷ், கஜராஜ் மாகனூர் நேரில் ஆஜரானார்கள். சிறை சூப்பிரண்டுகளான டாக்டர் அனிதாவும், கிருஷ்ணகுமாரும் தங்கள் மீதான விசாரணைக்கு ஐகோர்ட்டில் தடை வாங்கி இருந்ததால் ஆஜராகாமல் இருந்தனர்.
இந்த வழக்கின் விசாரணையை ஏப்ரல் 16-ந்தேதிக்கு ஒத்திவைப்பதாகவும், அன்றைய தினம் சசிகலா, இளவரசி உள்ளிட்டோர் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி லட்சுமி நாராயண பட் உத்தரவிட்டு இருந்தார். ஆனால் 16-ந்தேதி சசிகலா, இளவரசி விசாரணைக்கு ஆஜராகவில்லை. அவர்கள் சார்பில் வக்கீல்கள் கோர்ட்டுக்கு வந்திருந்தனர். சசிகலா, இளவரசி விசாரணைக்கு ஆஜராக முடியாததற்கான விளக்கம் அடங்கிய மனுவை நீதிபதியிடம் வழங்கினார்கள்.
இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து லோக் ஆயுக்தா கோர்ட்டில் நடைபெற்று பெற்று வருகிறது. ஆனால் சசிகலா, இளவரசி ஆகிய இருவரும் ஆஜராகமால் இருந்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று லோக் ஆயுக்தா கோர்ட்டில் வழக்கு விசாரணை நடைபெற்றது. இதில் சசிகலா மற்றும் இளவரசி தரப்பில் யாரும் நேரில் ஆஜராகாததால் இருவருக்கும் ஜாமீனில் வெளியே வராதபடி பிடிவாரண்டு பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும் இருவருக்காகவும் ஜாமீன் கையெழுத்திட்ட நபர்களுக்கும் நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அக்டோபர் 5-ந்தேதி இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
கர்நாடகா லோக் ஆயுக்தா கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்துள்ள நிலையில் சசிகலா, இளவரசி 2 பேரையும் கைது செய்ய கர்நாடக போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
- நீங்கள் இருக்கும் இடத்திற்கே நேரில் வந்து உங்களையெல்லாம் சந்திக்க இருக்கிறேன்.
- மண்ணை நேசிப்போம், மக்கள் நலப்பணிகளை தொடர்ந்து மேற்கொள்வோம்.
சென்னை:
சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
எனது பிறந்த நாளன்று, சென்னையில் உள்ள இல்லத்தில் என்னை நேரில் வந்து சந்திக்க விரும்புவதாக தொடர்ந்து கோரிக்கை வருவதை அறிந்து கொண்டேன். உங்களுடைய அன்புக்கு நான் என்றைக்குமே அடிமை உங்களுடைய அன்பும், ஆதரவும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் அளிக்கிறது.
நீங்கள் இருக்கும் இடத்திற்கே நேரில் வந்து உங்களையெல்லாம் சந்திக்க இருக்கிறேன். உங்களோடு நேரில் உரையாட இருக்கிறேன். ஆகையால், தற்சமயம் எனது பிறந்தநாளுக்காக, நீங்கள் சிரமப்பட்டு, பயணித்து எனது இல்லம் வருவதை தவிர்த்துவிட்டு, தாங்கள் இருக்கும் பகுதியிலேயே உங்கள் அருகில் இருக்கும் ஏழை-எளிய சாமானிய மக்களுக்கு உங்களால் இயன்ற அளவில் நீங்கள் செய்கின்ற உதவிகளே, நீங்கள் எனக்கு அளிக்கின்ற, சிறந்த பிறந்த நாள் பரிசாக, மனதார ஏற்றுக்கொள்கிறேன்.
இந்த மண் நம்மை போன்ற நல்லவர்களை உண்மையானவர்களை, உறுதியானவர்களை மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர்களை எதிர்பார்த்து தான் இன்றைக்கும் காத்துக் கொண்டு இருக்கிறது. ஆகவே மண்ணை நேசிப்போம், மக்கள் நலப்பணிகளை தொடர்ந்து மேற்கொள்வோம்.
இவ்வாறு அவர் கூறிஉள்ளார்.
- தமிழக மக்களை தி.மு.க.விடம் இருந்து காப்பாற்ற வேண்டும்.
- ஜெயலலிதா வழியில் பொற்கால ஆட்சியை அமைப்போம்.
அவினாசி:
ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக சசிகலா அரசியல் சுற்றுப்பயணம் செய்தார். திருப்பூர் மாவட்டத்தில் அவினாசியில் மக்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறிய தாவது:-
ஜெயலலிதா ஏழை எளிய மக்களுக்காகவே வாழ்ந்தவர். அவர் அம்மா மருந்தகம், அம்மா உணவகம், அம்மா சிமெண்ட், சூரியஒளி மின் விளக்குடன் பசுமை வீடுகள், பெண்களுக்கு இலவச ஆடு மாடுகள், கிரைண்டர், மின்விசிறி, மிக்சி, பெண்களுக்கு தாலிக்கு தங்கம் என எண்ணற்ற பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தியுள்ளார்.
தி.மு.க., அரசு மக்களை ஏமாற்றுகிறது. சொத்து வரி, தண்ணீர் வரி, மின் கட்டணம், பத்திர பதிவு கட்டணம், சாலை வரி என அனைத்தும் உயர்ந்துள்ளது. இதை தி.மு.க., அரசு திரும்ப பெற வேண்டும். காவிரி நீரை கர்நாடக அரசிடம் இருந்து பெற்று தர வேண்டும். அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை கொண்டு வந்தது ஜெயலலிதாதான்.
தி.மு.க., அரசு வந்தால் சட்டம் ஒழுங்கு சரி இருக்காது. கள்ள சாராயம், கட்டப்பஞ்சாயத்து, கொலை, கொள்ளை மற்றும் சந்தன மரம் நிறைய கடத்துவதாக பல பேர் சொல்கிறார்கள். இதை அரசு கவனிக்க வேண்டும்.
தமிழக மக்களை தி.மு.க.விடம் இருந்து காப்பாற்ற வேண்டும். இதற்காக அ.தி.மு.க. ஒன்றுபட வேண்டும்.வலிமையோடு நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள வேண்டும். அ.தி.மு.க.. மக்களுக்காகவே இயங்கும் என்று சொன்ன ஜெயலலிதா வழியில் பொற்கால ஆட்சியை அமைப்போம். இவ்வாறு அவர் பேசினார்.
- காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது அமலாக்கத்துறை என்னை விசாரணைக்காக அழைத்து சென்றது.
- காவிரி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு முறையிட வேண்டும்.
கோவை:
ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக சசிகலா சுற்று ப்பயணம் மேற்கொண்டு தொண்டர்களை சந்தித்தார். பின்னர் நேற்று மாலை அவர் கோவை வழியாக விமானம் மூலம் சென்னை சென்றார்.
முன்னதாக கோவை விமான நிலையத்தில் சசிகலா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
கொங்கு மண்டல பகுதி மக்கள் நல்லவர்கள், அவர்கள் சரியான நேரத்தில், சரியான முடிவை எடுப்பார்கள். நான் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் மக்களை சந்திக்க உள்ளேன். அ.தி.மு.க.வில் ஜெயலலிதா இருந்த போது இருந்த நிலை இப்போது இல்லை. அனைவரையும் ஒன்று சேர்ப்பதுதான் எனது வேலை. பாராளுமன்ற தேர்தலுக்கள் அ.தி.மு.க.வை ஒருங்கிணைப்பேன். ஓ.பன்னீர்செல்வம் என்னை சந்திக்க வாய்ப்பு உள்ளது.
தி.மு.க. அரசு உரிமைத் தொகை வழங்குவதாக கூறி உள்ளது. நிதிநிலை சரியில்லாத நேரத்தில் எப்படி கொடுப்பார்கள். இது சாத்தியமில்லை.
காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது அமலாக்கத்துறை என்னை விசாரணைக்காக அழைத்து சென்றது. இரவு 11.30 மணிவரை என்னிடம் விசாரணை நடத்தினார்கள். இரவு 11.30 மணிக்கு என்னை கைது செய்ததாக கூறினார்கள். நானும் முழு ஒத்துழைப்பு அளித்தேன். எனவே, அமலாக்கத்துறை விசாரணைக்கு யாராக இருந்தாலும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். ஆனால் ஒரு அமைச்சரிடம் விசாரணை நடத்தியதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீண்ட விளக்கம் அளிக்கிறார்.
தி.மு.க அரசு மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணாமல், தனது கட்சியின் பிரச்சினையில் முனைப்பு காட்டி வருகிறது.
சட்டம்-ஒழுங்கு தமிழ்நாட்டில் சரியில்லை. உரிமம் இன்றி 24 மணிநேரமும் பார் செயல்படுகிறது. ஆனால் தக்காளி, வெங்காயம் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. அதனை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கவில்லை, விவசாயிகளுக்கு தனி பட்ஜெட் போட்ட அரசு, விவசாயிகளுக்கான நல்ல முடிவுகளை சரியாக எடுக்க வேண்டும்.
காவிரி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு முறையிட வேண்டும். தி.மு.க.வுக்கு வாக்களித்ததால் மக்கள் கஷ்டத்தில் உள்ளனர். அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் தான் சரியாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஜெயலலிதா மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்து சிறப்பாக ஆட்சி செய்தார்.
- வருகின்ற பாராளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு தான் தி.மு.க.வின் நிலை என்ன என்பது தெரிய வரும்.
பவானி:
ஈரோடு, திருப்பூர் மாவட்டத்தில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்காக சசிகலா நேற்று ஈரோடு மாவட்டத்திற்கு வருகை தந்தார்.
பவானி அந்தியூர்-மேட்டூர் பிரிவு ரோட்டில் சசிகலாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் சசிகலா பிரச்சார வேனில் அமர்ந்தபடி பேசினார்.
எம்.ஜி.ஆர். அ.தி.மு.க. என்ற கட்சியை தொடங்கி ஆட்சி அமைத்து மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்தார். அதில் குறிப்பிடத்தக்கதாக சத்துணவு திட்டமாகும். அதன் பின்னர் ஜெயலலிதா மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்து சிறப்பாக ஆட்சி செய்தார்.
2 ஆண்டுகளை கடந்த தி.மு.க. அரசு மக்கள் நலத்திட்டங்களை நிறுத்தி விட்டு வருகிறது. மகளிருக்கு பஸ்சில் பயணம் செய்யும் போது இலவசம் எனக்கூறி விட்டு அதில் பயணிக்கும் உங்களை பார்த்து ஓசியில் பயணம் செய்கிறீர்களே என ஒரு அமைச்சர் பேசுகிறார்.
அதே போல் தேர்தல் வாக்குறுதியின் போது பெண்களுக்கு உரிமை தொகை ஆயிரம் வழங்கப்படும் என தெரிவித்து விட்டு தற்போது அந்த திட்டத்தில் பல்வேறு தடைகள் போடப்பட்டு உள்ளது.
மின்சார கட்டணம் உயர்வு காரணமாக தற்போது ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களில் பல்வேறு தொழிற்சாலைகள் மூடப்பட்டு தொழிலாளர்கள் வேலை இழந்து வரும் நிலையில் வெளிநாட்டில் இருந்து முதலீட்டாளர்களை கொண்டு வந்து தமிழ்நாட்டில் தொழில் தொடங்குகிறார்கள் என்பது எத்தனை சாத்தியம் என்பதை பொது மக்கள் நீங்கள் தான் நினைத்து பார்க்க வேண்டும்.
அதேபோல் வேளாண்மை துறைக்காக முதன் முதலில் தனியாக பட்ஜெட் போட்ட தி.மு.க. அரசு இன்று தக்காளி, வெங்காயம் போன்ற அத்தியாவசிய பொருள்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிவிட்டது.
வேளாண்மை துறை முன்கூட்டியே தயார் நிலையில் இதற்கான ஆலோசனை செய்திருந்தால் தக்காளி, வெங்காயம் விலையை கட்டுப்படுத்தி இருக்கலாம்.
வருகின்ற பாராளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு தான் தி.மு.க.வின் நிலை என்ன என்பது தெரிய வரும். அதுவரை தமிழக மக்களை தி.மு.க.வினரிடம் இருந்து காப்பாற்ற வேண்டும்.
தற்போது தமிழ்நாட்டில் வருவாய்த்துறையினர் மூலம் நிலத்தின் வழிகாட்டி மதிப்பு 33 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதாகவும், இதனால் பொதுமக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளர். அதேபோல் சாலை வரி 5 சதவீதம் உயர்த்த திட்டமிடப்பட்டு உள்ளதாக தெரிய வந்துள்ளதால் பொது மக்கள் மேலும் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
கர்நாடக அரசு தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய 200 டி.எம்சி. தண்ணீரை பெற்று தர தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.