'இனி என்னால் அமைதியாக இருக்க முடியாது'... புதிய கட்சியை தொடங்கிய சசிகலா... கொடி அறிமுகம்!

ஜெயலலிதாவின் பிறந்தநாளான இன்று தனது புதிய அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ளார்.அவரது கட்சிக்கு "அம்மா அதிமுக" என்று பெயரிடப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
'இனி என்னால் அமைதியாக இருக்க முடியாது'... புதிய கட்சியை தொடங்கிய சசிகலா... கொடி அறிமுகம்!
Published on

முன்னாள் அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளர் வி. கே. சசிகலா, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளான இன்று தனது புதிய அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ளார்.  புதிய கட்சித் தொடங்கியுள்ள அவர், கட்சியின் பெயரை விரைவில் அறிவிப்பதாக தெரிவித்துள்ளார். அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா உருவப்படங்களுடன் கருப்பு, வெள்ளை, சிவப்பு வண்ணங்கள் அடங்கிய கட்சியின் கொடியை பசும்பொன்னில் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் அறிமுகப்படுத்தினார். 

அதிமுகவில் மீண்டும் இணைவதற்கு எடுத்த முயற்சிகள் பலன் அளிக்காத நிலையில், தனது ஆதரவாளர்களுடன் ஆலோசித்து இந்த முடிவை எடுத்துள்ளார். அவரது கட்சிக்கு "அம்மா அதிமுக" என்று பெயரிடப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் புதியக் கட்சியை தொடங்குகிறேன். 9 வருடங்கள் அமைதியாக இருந்ததுபோல இனி என்னால் அமைதியாக இருக்க முடியாது எனவும் பேசியுள்ளார். 

சசிகலாவின் இந்த வருகை, தமிழ்நாடு அரசியலில் குறிப்பாக அதிமுக வாக்கு வங்கியில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியா, கூட்டணியா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். 

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com