என் மலர்
நீங்கள் தேடியது "O Panneerselvam"
- மு.க.ஸ்டாலினுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
- மீண்டும் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்க வேண்டும்.
தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 73-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பிறந்தநாளையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, கருணாநிதி மற்றும் வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து கோபாலபுரத்தில் உள்ள இல்லத்திற்கு சென்று தாய் தயாளு அம்மாளிடம் ஆசி பெற்றார்.
பிறந்தநாளையொட்டி மு.க.ஸ்டாலினுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் அண்மையில் திமுகவில் இணைந்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "திராவிட மாடலின் நாயகர்களான தந்தை பெரியார் விதைத்த சமூகநீதி சிந்தனையையும், பேரறிஞர் அண்ணா வடிவமைத்த அரசியல் மரபையும், முத்தமிழறிஞர் கலைஞர் உருவாக்கிய திராவிடச் சித்தாந்தத்தையும் செயல்முறை ஆட்சியாக மாற்றி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேர்களை மேலும் வலுப்படுத்தி, மனிதநேய அரசியலை வழிகாட்டியாகக் கொண்டு மக்கள் நம்பிக்கையை வென்று வரும் கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாட்டின் முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எனது இதயம் கனிந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் நல்ல உடல் தேக ஆரோக்கியத்துடன், தளராத மனவலிமையுடனும் தொடர்ந்து மக்கள் சேவையில் முழுமையாக ஈடுபட்டு, தமிழ்நாட்டை முன்னேற்றத்தின் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்ல எல்லாம் வல்ல இறைவன் அருள் எப்போதும் துணையாக இருக்க பிரார்த்திக்கிறேன்.
வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் ஆதரவை பெருவெள்ளமாக திரட்டி, மாபெரும் வெற்றி பெற்று, மீண்டும் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்று சமத்துவம், வளர்ச்சி, மனிதநேயம் ஆகிய அடிப்படைகளில் மக்கள் நல ஆட்சியை மேலும் வலுப்படுத்தும் கழகத் தலைவர் மாண்புமிகு தளபதியார் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
- தாய் கழகம் என்று நினைத்துக்கொண்டு தி.மு.க.வில் தங்களை இணைத்துக்கொள்வது ஒரு தவறான முடிவாகத்தான் அமைந்துள்ளது.
- இந்த நிலைமைகளுக்கெல்லாம் காரணம் ஒன்றே ஒன்றுதான்.
சசிகலா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
தமிழக முன்னாள் முதலமைச்சரும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த முன்னோடியும், சட்டமன்ற உறுப்பினருமான ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் இந்த முடிவு மிகவும் துரதிருஷ்டவசமானது.
தமிழகத்திலிருந்து அகற்றப்படவேண்டிய ஒரு தீய சக்தியாக திமுக விளங்கும் நிலையில் தாய் கழகம் என்று நினைத்துக்கொண்டு தி.மு.க.வில் தங்களை இணைத்துக்கொள்வது ஒரு தவறான முடிவாகத்தான் அமைந்துள்ளது.
ஆனால் இந்த நிலைமைகளுக்கெல்லாம் காரணம் ஒன்றே ஒன்றுதான். அவர் வேறு யாருமில்லை. தான் மட்டும்தான் அ.தி.மு.க. என்று தம்பட்டம் அடித்துக்கொண்டு தனக்கு தானே தலைவராக அறிவித்துக் கொண்டவர்கள், தன்னை சுற்றியுள்ளவர்களையும் ஏமாற்றிக் கொண்டிருப்பவர்கள், தி.மு.க.வினரின் முழு கட்டுப்பாட்டில் இருந்து கொண்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் உள்ள அனைவரையும் வெளியேற்றி விட்டு புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் கொள்கைகளுக்கு விரோதமாக தொடர்ந்து செயல்பட்டுவரும் துரோகிகளின் அழிவுகாலம் நெருங்கிவிட்டது.
இந்நிலையில் வரும் சட்டமன்ற தேர்தலில் எனது தலைமையில் புரட்சித்தலைவரின் ரத்தத்தின் ரத்தங்களும், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழிவந்த சிங்கங்களும் எதிரிகளையும் துரோகிகளையும் வீழ்த்துவது உறுதி.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்தரநாத், எம்.எல்.ஏ. ஐயப்பன் உள்ளிட்டோர் தி.மு.க.வில் இணைந்தனர்.
- ஓ.பன்னீர்செல்வம் கடந்த தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் நின்று எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றவர்.
சென்னை அண்ணா அறிவாலயம் சென்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தன்னை தி.மு.க.வில் இணைத்துக்கொண்டார். அவருடன் அவரது மகன் ரவீந்தரநாத், எம்.எல்.ஏ. ஐயப்பன் உள்ளிட்டோர் தி.மு.க.வில் இணைந்தனர்.
இதை தொடர்ந்து அவர் தலைமை செயலகம் சென்று சட்டசபை செயலாளரிடம் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து கடிதம் வழங்கினார். இவருடன் ஐயப்பன் எம்.எல்.ஏ.வும் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் நின்று எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றவர்.
போடி தொகுதியின் எம்.எல்.ஏ.வாக உள்ள ஓ.பன்னீர்செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரது ஆதரவு எம்.எல்.ஏ.வுமான ஐயப்பனும் பதவியை ராஜினாமா செய்தார்.
- இனி மு.க.ஸ்டாலின் தான் எனது தலைவர்.
- தளபதி வாய்ப்பு கொடுத்தால் சட்டசபை தேர்தலில் உறுதியாக போட்டியிடுவேன்.
தி.மு.க.வில் இணைந்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை அறிவாலயத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* அரசியலில் அனைத்து மக்களையும் அரவணைக்கும் பண்பை கொண்டவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
* ஒரு அரசியல் இயக்கத்தை எப்படி நடத்த வேண்டும் என்ற இலக்கணத்தோடு தி.மு.க.வை வழி நடத்துகிறார் முதல்வர்.
* மீண்டும் தி.மு.க. ஆட்சி அமைய வேண்டும் என்ற எண்ணத்தில் தமிழ்நாட்டில் உள்ள பெண்கள் உள்ளனர்.
* எனக்கு எந்த அச்சுறுத்தலும், கட்டாயமும் இல்லை. நானே சுயமாக சிந்தித்து முடிவு எடுத்து தி.மு.க.வில் இணைந்துள்ளேன்.
* கடந்த காலத்தைப்பற்றி கவலையில்லை. இனி மு.க.ஸ்டாலின் தான் எனது தலைவர்.
* ஒரு தொண்டனாகவே தி.மு.க.வில் நான் இணைந்துள்ளேன்.
* கசப்பான நிகழ்வுகளுக்கு முடிவு கட்டவே தி.மு.க.வில் இணைந்துள்ளேன்.
* தளபதி வாய்ப்பு கொடுத்தால் சட்டசபை தேர்தலில் உறுதியாக போட்டியிடுவேன்.
* தளபதி எடுக்கும் முடிவுக்கு இனி நான் முழுமையாக கட்டுப்படுவேன்.
* தமிழ்நாட்டின் முதலமைச்சராக மீண்டும் மு.க.ஸ்டாலின் தான் வருவார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அ.தி.மு.க. பொதுச்செயலாளர் இ.பி.எஸ். சர்வாதிகாரி போல் நடந்து கொண்டிருக்கிறார்.
- அனைவரையும் அரவணைத்து செல்லும் பண்பு எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை.
தி.மு.க.வில் இணைந்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை அறிவாலயத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* அ.தி.மு.க. பொதுச்செயலாளர் இ.பி.எஸ். சர்வாதிகாரி போல் நடந்து கொண்டிருக்கிறார்.
* எடப்பாடி பழனிசாமி இனி ஆட்சிக்கே வந்துவிடக்கூடாது என்பதால் தி.மு.க.வில் இணைந்தேன்.
* அரசியலில் சர்வாதிகாரியாக ஆணவப்போக்குடன் நடக்கும் இ.பி.எஸ். இனி எந்த காலத்திலும் வெற்றி பெற முடியாது.
* தென் மாவட்டத்தில் அ.தி.மு.க.வை இ.பி.எஸ். திட்டமிட்டு அழித்து வருகிறார்.
* தென் மாவட்டத்தில் இருந்து எந்த ஒரு தலைவரும் வந்துவிடக்கூடாது என்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருக்கிறார்.
* ஆணவப்போக்குடன் செயல்பட்டுக்கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்கிறார்.
* அனைவரையும் அரவணைத்து செல்லும் பண்பு எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழகத்தில் சிறப்பான ஆட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்து வருகிறார்.
- தமிழ்நாட்டில் மீண்டும் திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சி அமையும்.
தி.மு.க.வில் இணைந்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை அறிவாலயத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* தாய் கழகத்தின் மனமகிழ்ச்சியுடன் தி.மு.க.வில் இணைந்துள்ளேன்.
* தமிழகத்தில் சிறப்பான ஆட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்து வருகிறார்.
* அனைத்து மக்களும் பயன் பெறும் வகையிலான திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார்.
* தமிழ்நாட்டில் மீண்டும் திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சி அமையும்.
* அண்ணா, கலைஞர் வழியில் ஆட்சி செய்யும் தளபதி மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்துள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஜெயலலிதா கட்டளையை ஏற்று முதலமைச்சராக பொறுப்பேற்றேன்.
- முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. பல்வேறு சோதனைகளை சந்தித்து வருகிறது.
தேனி மாவட்டம் போடியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* ஜெயலலிதா கட்டளையை ஏற்று முதலமைச்சராக பொறுப்பேற்றேன்.
* 6 மாத கால முதலமைச்சராக இருந்த நான் ஜெயலலிதா கேட்டதும் பதவியை ஒப்படைத்தேன்.
* ஜெயலலிதா இல்லாதபோது நான் முதலமைச்சராக இருக்க விரும்பவில்லை.
* என்னை கட்டாயப்படுத்தி தான் முதலமைச்சராக அமர வைத்தனர்.
* 3-வது முறையாக கட்டாயத்தின் அடிப்படையில்தான் முதலமைச்சராக பொறுப்பேற்றேன்.
* முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. பல்வேறு சோதனைகளை சந்தித்து வருகிறது.
* அனைவரும் ஒற்றுமையுடன் இருந்தால் மட்டுமே சோதனைகளை எதிர்கொள்ள முடியும் என வலியுறுத்தி வந்தேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தீய சக்தி தி.மு.க. ஆட்சியை வீழ்த்தி என்டிஏ கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு வருவார்கள்.
- முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தொண்டர்கள் 99.9 சதவீதம் பேர் தற்போது ஒன்றாக இணைந்துள்ளோம்.
மதுரையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* சசிகலாவும், ஓ.பன்னீர்செல்வமும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வருவார்கள்.
* தீய சக்தி தி.மு.க. ஆட்சியை வீழ்த்தி என்டிஏ கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு வருவார்கள்.
* முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தொண்டர்கள் 99.9 சதவீதம் பேர் தற்போது ஒன்றாக இணைந்துள்ளோம்.
* தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் 40 தொகுதிகள் வரை கேட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- தி.மு.க. அமைச்சர்கள் பலர் மீது நிறைய வழக்கு உள்ளது.
- தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய அனைத்து நிதிகளையும் மத்திய அரசு வழங்குகிறது.
திருச்சி:
திருச்சியில் இன்று பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மார்ச் 11-ந்தேதி பிரதமர் நரேந்திர மோடி திருச்சிக்கு வருகை தர உள்ளார். அன்றைய தினம் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பிரசாரம் செய்கிறார். அதற்காக இடம் தேர்வு செய்ய உள்ளோம். இடம் தேர்வு செய்து கூட்டணி கட்சிகளிடம் ஆலோசித்து எந்த இடத்தில் பொதுக்கூட்டம் வைப்பது என்பது தொடர் பான இறுதி முடிவை அறிவிப்போம்.
200 இடங்களில் வெற்றி பெறுவோம் என தி.மு.க.வினர் கூறி வருவதாக சொல்கிறீர்கள். ஆனால் 200 இடங்களில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை மக்கள் தான் முடிவு செய்வார்கள். தி.மு.க. அரசு தேர்தல் வாக்குறுதிகளை எத்தனை சதவீதம் நிறைவேற்றி உள்ளோம் என்பதை அக்கட்சி தலைவர்கள் மாற்றி மாற்றி ஆளுக்கு ஒரு கருத்து கூறுகிறார்கள். ஆனால் அவர்கள் 90 சதவீத தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. ஏற்கனவே பொய்யான வாக்குறுதியை கொடுத்தது போல் மீண்டும் பொய்யான வாக்குறுதிகளை தி.மு.க. அரசு கொடுக்கத் தொடங்கியுள்ளது.
இப்போது எங்களுக்கு உள்ள கூட்டணி 2021-ம் ஆண்டே இருந்திருந்தால் நாங்கள் அப்போது 110 இடங்களில் வெற்றி பெற்று இருப்போம். வரும் தேர்தலில் நாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம். தி.மு.க. ஆட்சியில் 5 ஆண்டுகளும் சட்டம்-ஒழுங்கு சரியில்லை, கஞ்சா மிகுந்த மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.
கொங்கு பகுதிகளில் வயதானவர்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள். யாருக்கும் எந்த பாதுகாப்பும் இல்லை. 33 லாக்கப் மரணங்கள் நடந்துள்ளது. தமிழ்நாட்டில் நல்ல ஆட்சி நடைபெறவில்லை. பணப்பெட்டியை வாங்கிக் கொண்டுதான் தி.மு.க. கூட்டணியில் சேர்ந்து வருகிறார்கள். எங்கள் கூட்டணி வலுவாக உள்ளது. தி.மு.க. கூட்டணி வலுவிழந்து உள்ளது.
அ.தி.மு.க., தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் தான் மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்ற முடியும் என மக்கள் நம்புகிறார்கள். நாங்கள் 200 இடங்களில் நிச்சயம் வெற்றி பெறுவோம். ஓ.பி.எஸ். மீது மதிப்பு வைத்துள்ளோம். எந்த பக்கம் இருந்தால் அவருக்கு நல்லது என்பதை அவர் தான் முடிவு செய்ய வேண்டும்.
தி.மு.க. அமைச்சர்கள் பலர் மீது நிறைய வழக்கு உள்ளது. அமைச்சர் கே.என்.நேரு விவகாரம் தொடர்பாக நீதிமன்றம் கூறிய கருத்துக்குள் நாங்கள் செல்லவில்லை. தொகுதி பங்கீடு தொடர்பாக இதுவரை நாங்கள் பேச்சுவார்த்தையை தொடங்கவில்லை. பேச்சுவார்த்தை தொடங்கி கூட்டணி கட்சிகளுடன் பேசி இறுதி முடிவை எடுப்போம். தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய அனைத்து நிதிகளையும் மத்திய அரசு வழங்குகிறது. அனைத்து நிதிகளையும் பெற்றுக் கொண்டு நிதி கொடுக்கவில்லை தமிழக அரசு கூறுகிறது.
ஆண்டுதோறும் ஆயிரம் கோடி பேரிடருக்கான நிதி ஒதுக்கப்படுகிறது. கல்விக்கான நிதியும் ஒதுக்கப்பட்டு கொண்டு தான் உள்ளது. ஆதிதிராவிடர் நலத்துறைக்கு கொடுக்கும் நிதியை வேறு துறைக்கு தமிழக அரசு பயன்படுத்துகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர், மார்ச் 11-ந் தேதி பிரதமர் மோடி கலந்து கொள்ளும் பிரமாண்ட பொதுக் கூட்டத்திற்கான இடங்களை பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் ராஜேந்திரன், கூட்டணி கட்சி தலைவர்களுடன் சென்று பார்வையிட்டார்.
- தை மாதம் முடிய இன்னும் 9 நாட்கள் இருக்கிறது.
- ஓ.பி.எஸ். தனிக்கட்சி தொடங்குவாரா?.
மீனம்பாக்கம்:
தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள் கூட்டணி அமைப்பது, தேர்தல் அறிக்கை தயாரிப்பது, தங்கள் கட்சி சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் விருப்ப மனுக்களை பெறுவது என தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன.
இந்நிலையில் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து மதுரைக்கு செல்ல வந்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறும்போது, "தை மாதம் முடிய இன்னும் 9 நாட்கள் இருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 3 மாதம் இருக்கிறது" என்றார்.
அப்போது நிருபர்கள், "ஓ.பி.எஸ். தனிக்கட்சி தொடங்குவாரா?. தி.மு.க. அல்லது த.வெ.க.வில் இணைவாரா?" என கேட்டதற்கு அவர், "எந்த ஓ.பி.எஸ்.?" என கேட்டுவிட்டு அங்கிருந்து சென்றார்.
- பெரியகுளத்தில் உள்ள ஓ.பி.எஸ்.சின் பண்ணை வீட்டில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
- நான் 2-வது தர்மயுத்தம் நடத்தியதற்கு காரணமே வைத்திலிங்கம் மற்றும் மனோஜ்குமார்தான் காரணம்.
பெரியகுளம்:
2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பல்வேறு கட்சிகளும் கூட்டணி அமைப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன. அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியில் டி.டி.வி. தினகரன், அன்புமணி ராமதாஸ், ஜி.கே.வாசன் உள்ளிட்ட பலர் இணைந்துள்ள நிலையில் மேலும் சிலர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்புக் கழக தலைவரும், முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தனது நிலைப்பாட்டை தெரிவிக்காமல் இருந்து வருகிறார். அவரது ஆதரவாளர்கள் பலரும் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க., த.வெ.க.வில் இணைந்து வந்த நிலையிலும் ஓ.பி.எஸ். மவுனமாகவே இருந்து வருகிறார்.
இந்நிலையில் பெரியகுளத்தில் உள்ள ஓ.பி.எஸ்.சின் பண்ணை வீட்டில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இன்று 2வது நாளாக ஓ.பி.எஸ். தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அவரது ஆதரவு மாவட்ட நிர்வாகிகள் பலர் தமிழகம் முழுவதிலும் இருந்து இதில் கலந்து கொண்டனர்.
ஓ.பி.எஸ். அ.தி.மு.க.வில் இணைந்தாலும் அவருக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்படாது என்றும் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் நிற்க வாய்ப்பு வழங்கப்படாது என்றும் தெரிவித்து வருவதால் தனது நிலைப்பாட்டை அறிவிப்பதில் தாமதப்படுத்தி வந்தார். அ.ம.மு.க. அணியில் குக்கர் சின்னத்தில் ஓ.பி.எஸ். மற்றும் அவரது ஆதரவாளர்கள் 2 பேருக்கு சீட்டு வழங்கப்பட உறுதியளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரியகுளம், போடி சட்டமன்ற தொகுதியில் தொடர்ந்து 6 முறை போட்டியிட்டு இதுவரை தோல்வியே காணாத தலைவராக ஓ.பி.எஸ். உள்ளார். கடந்த பாராளுமன்ற தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் பலாபழம் சின்னத்தில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
எனவே வருகிற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி அல்லது தமிழக வெற்றிக்கழகம் ஆகிய அணிகளில் ஓ.பி.எஸ். இணைவார் என்று பரவலாக கருத்துகள் வெளியாகின. இன்று பெரியகுளம் பண்ணை வீட்டில் ஆதரவாளர்கள் மத்தியில் ஓ.பன்னீர்செல்வம் பேசும்போது நிர்வாகிகள் அனைவரும் நாம் அடுத்து எந்த அணியில் இடம்பெற வேண்டும்? எவ்வாறு தேர்தலில் பங்காற்ற வேண்டும்? என்ற கருத்தை துண்டுச்சீட்டில் எழுதி தருமாறும், பெரும்பான்மையான நிர்வாகிகள் அளிக்கும் ஆலோசனைகளின் முடிவை வைத்து தான் முடிவு எடுக்கப்போவதாகவும் தெரிவித்தார்.
ஆனால் ஓ.பன்னீர்செல்வம் சுயமாக முடிவு எடுக்க வேண்டும் என்றும், எந்த முடிவு எடுத்தாலும் நாங்கள் அதனை ஏற்றுக்கொள்வதாகவும், துண்டுச்சீட்டு மூலம் கருத்தை வைத்து முடிவு எடுக்க தங்களுக்கு விருப்பமில்லை என கூச்சலிட்டனர். இதனால் கூட்டத்தில் திடீர் சலசலப்பு ஏற்பட்டது.
அதன் பின்னர் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
சட்டமன்ற தேர்தலில் நான் போட்டியிடுவது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இதுவரை அ.தி.மு.க. தொண்டர்களை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ராமநாதபுரம் தொகுதியில் நான் சுயேட்சை சின்னத்தில் போட்டியிட்டது தொண்டர்கள் மத்தியில் எவ்வளவு செல்வாக்கு உள்ளது என்பதை நிரூபிக்க மட்டுமே.
ஆனால் அங்கும் என்னை தோற்கடிக்க 6 ஓ.பன்னீர்செல்வம் நிறுத்தப்பட்டனர். தற்போது வரை அ.தி.மு.க. வலிமையாகவே உள்ளது. பிரிந்து சென்ற அனைவரும் ஒன்று சேர்ந்தால் தி.மு.க.வை எளிதாக வீழ்த்த முடியும். இதைத்தான் நான் இன்றும் வலியுறுத்தி வருகிறேன். சமூக ஊடகங்கள் மற்றும் ஒரு சில யூடியூப் சேனல்களில் நான் வெவ்வேறு அணியில் இணையப்போவதாக அவர்களது கருத்தை பதிவிட்டு வருகின்றனர். அவர்களுக்கு நான் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன்.
தவறான கருத்துகளை பரப்ப வேண்டாம். நான் 2-வது தர்மயுத்தம் நடத்தியதற்கு காரணமே வைத்திலிங்கம் மற்றும் மனோஜ்குமார்தான் காரணம். மீண்டும் நான் இணைய வேண்டும் என டி.டி.வி. தினகரன் கோரிக்கை விடுத்திருந்தார். அது அவரது நல்லெண்ணைத்தை காட்டுகிறது. அதைத்தான் நானும் கூறி வருகிறேன். அவர் நினைத்தால் கண்டிப்பாக அ.தி.மு.க.வில் என்னை இணைக்க முடியும். அண்ணன் எடப்பாடி பழனிசாமி இதற்கு ரெடியாக உள்ளாரா? என்று கேட்டுச் சொல்ல வேண்டும். நான் இணைய தயாராகத்தான் உள்ளேன். எனவே ஒன்றிணைப்புகான முயற்சியில் டி.டி.வி. தினகரன் மேற்கொள்ள வேண்டும். ஒன்றிணைப்பு சாத்தியமானால் சட்டப்போராட்டம் முடிவுக்கு வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்தவர்கள் அனைவரும் ஒன்றிணைந்தால் தான் எம்.ஜி.ஆர். கனவு நிறைவேறும்.
- பிரதமரின் கூட்டத்தில் பா.ஜ.க. கூட்டணி தலைவர்கள் மேடையேற்றப்பட உள்ளனர்.
சென்னை அண்ணா சாலையில் உள்ள எம்.ஜி.ஆர். திருவுருவ சிலைக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினார்.
எம்.ஜி.ஆரின் 109-வது பிறந்தநாளான இன்று அவரது திருவுருவ சிலைக்கு ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:
* அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்தவர்கள் அனைவரும் ஒன்றிணைந்தால் தான் எம்.ஜி.ஆர். கனவு நிறைவேறும்.
* பிரதமர் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டத்திற்கு எனக்கு அழைப்பில்லை.
* பிரதமரின் கூட்டத்தில் பா.ஜ.க. கூட்டணி தலைவர்கள் மேடையேற்றப்பட உள்ளனர்.
* யாருடன் கூட்டணி என்பது பற்றி ஓரிரு நாளில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பேன்.
* அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்வு குறித்து வழக்கு நடைபெற்று கொண்டிருக்கிறது.
* எந்த காலத்திலும் தனிக்கட்சி தொடங்கப்போவதில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.






