என் மலர்
நீங்கள் தேடியது "ஜெயலலிதா"
- நீங்கள் தள்ளி விட்ட ஜெயலலிதாவை அ.தி.மு.க.வில் முதலமைச்சர் ஆக்கி காட்டுவேன் என சபதம் எடுத்தேன்.
- நான் அரசியல்வாதியாக ஜெயலலிதாவிடம் பழகவில்லை.
ஜெயலலிதா மரணத்தின்போது நடந்தது என்ன? என்பது பற்றி சசிகலா நேற்று பரபரப்பாக பேசினார். கமுதி பொதுக்கூட்டத்தில் சசிகலா பேசியதாவது:-
1987-ல் எம்.ஜி.ஆரின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள ஜெயலலிதாவுக்கு அனுமதி இல்லை. ராணுவ வாகனத்தில் எம்.ஜி.ஆர். உடல் வந்த பிறகு மலர் வளையம் வையுங்கள் எனக்கூறினர். அதன்படிதான் ஜெயலலிதா மலர் வளையம் வைத்தார்.
அப்போது ஆர்.எம்.வீரப்பனுக்கு துணையாக இருந்த சிலர் ஜெயலலிதாவை கீழே தள்ளினர். அப்போது நான் தான், ஜெயலலிதாவை தாங்கி பிடித்தேன்.
அப்போதுதான், நீங்கள் தள்ளி விட்ட ஜெயலலிதாவை அ.தி.மு.க.வில் முதலமைச்சர் ஆக்கி காட்டுவேன் என சபதம் எடுத்தேன்.
'அரசியல் எனக்கு வேண்டாம். அனைவரும் என்னை கேவலப்படுத்துகின்றனர்' என்று ஜெயலலிதாகூறினார்.
உடனே, "உங்களை சீண்டியவர்களை சும்மா விடக்கூடாது. ஒரு முறையாவது ஜெயிக்க வேண்டும்" எனக்கூறி அரசியலில் தொடர வைத்தேன். அவரும் தேர்தல்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி தலைவராகவும், முதலமைச்சராகவும் பணியாற்றினார்.
2016-ம் ஆண்டு ஜெயலலிதாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. 72 நாட்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். உடல்நலம் தேறி வந்தது. வீட்டிற்கு அழைத்து வர நல்ல நாள் பார்த்தபோது யாரும் எதிர்பார்க்காத வகையில் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. அவரது மறைவு குறித்து பலரும் பலவிதமாக பேசினார்கள்.
'நான் தான் கொன்றேன்' என பலரும் கூறினர். ஜெயலலிதா மறைந்த பிறகு அன்றைய தினம் இரவு அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் என அனைவரும் என்னிடம் வந்து, நீங்கள்தான் முதலமைச்சர் ஆக வேண்டும் என கூறினர். இந்த நிகழ்வு அனைத்தும் அந்த தனியார் ஆஸ்பத்திரியில் வைத்துதான் நடந்தது.
அப்போது, நான் அரசியல்வாதியாக ஜெயலலிதாவிடம் பழகவில்லை. சகோதரியாகத்தான் பழகினேன். எனக்கு அந்த பதவி தேவையில்லை. எனவே ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் முதலமைச்சராக இருக்கட்டும் என கூறினேன்.
மற்ற அமைச்சர்கள் எல்லாம் அப்படியே இருக்கட்டும் என்றேன். இடையில் அமைச்சரவையில் இருந்து செங்கோட்டையனை நீக்கியிருந்தார்கள். அவரை மட்டும் சேர்க்க வேண்டும் என சொன்னேன். அதன்படி இரவோடு இரவாக அமைச்சர்கள் பதவி ஏற்றார்கள் என்றார்.
- ஜெயலலிதா படத்துக்கு பூ போட்டு வைக்கப்பட்டு இருந்தது.
- இது மற்ற நிர்வாகிகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.
போடியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்துக் கொண்டு இருந்தபோது அவருக்கு அருகில் ஜெயலலிதா படத்துக்கு பூ போட்டு வைக்கப்பட்டு இருந்தது.
படத்திற்கு கீழே இருந்த ரோஜாபூவை ஓ.பி.எஸ். ஆதரவாளரும் முன்னாள் மாவட்ட செயலாளருமான சையது கான் எடுத்து வாயில் போட்டு சாப்பிட்டபடி இருந்தார்.
ஓ.பன்னீர்செல்வம் உருக்கமாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை பற்றி பேசிக் கொண்டு இருந்தபோது அதை பொருட்படுத்தாமல் இவர் ரோஜாபூவை ஸ்நாக்ஸ் சாப்பிடுவதைப்போல ஒவ்வொன்றாக எடுத்து சுவைத்துக் கொண்டு இருந்தார். இது மற்ற நிர்வாகிகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.
- ஜெயலலிதா கட்டளையை ஏற்று முதலமைச்சராக பொறுப்பேற்றேன்.
- முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. பல்வேறு சோதனைகளை சந்தித்து வருகிறது.
தேனி மாவட்டம் போடியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* ஜெயலலிதா கட்டளையை ஏற்று முதலமைச்சராக பொறுப்பேற்றேன்.
* 6 மாத கால முதலமைச்சராக இருந்த நான் ஜெயலலிதா கேட்டதும் பதவியை ஒப்படைத்தேன்.
* ஜெயலலிதா இல்லாதபோது நான் முதலமைச்சராக இருக்க விரும்பவில்லை.
* என்னை கட்டாயப்படுத்தி தான் முதலமைச்சராக அமர வைத்தனர்.
* 3-வது முறையாக கட்டாயத்தின் அடிப்படையில்தான் முதலமைச்சராக பொறுப்பேற்றேன்.
* முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. பல்வேறு சோதனைகளை சந்தித்து வருகிறது.
* அனைவரும் ஒற்றுமையுடன் இருந்தால் மட்டுமே சோதனைகளை எதிர்கொள்ள முடியும் என வலியுறுத்தி வந்தேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழக வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் அவர் ஆற்றிய பங்களிப்பையும், இந்நாளில் நினைவு கூர்கிறேன்.
- தமிழக வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் அவர் ஆற்றிய பங்களிப்பையும், இந்நாளில் நினைவு கூர்கிறேன்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான மறைந்த ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு எனது அஞ்சலி.
பெண்கள் முன்னேற்றம், ஏழை எளிய மக்களின் நலன், சமூக நீதியை நிலை நாட்டிட பல முக்கிய நலத்திட்டங்களை முன்னெடுத்து, தமிழக மக்களின் இதயங்களில் அழியாத தடம் பதித்தவர்.
துணிவு, தெளிவு, தீர்மானமான முடிவு மற்றும் பொதுச்சேவைக்கான அர்ப்பணிப்பு என தனித்துவமிக்க தலைவராக திகழ்ந்த, அவரது சீரிய பணிகளையும் தமிழக வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் அவர் ஆற்றிய பங்களிப்பையும், இந்நாளில் நினைவு கூர்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- அம்மா ஜெயலலிதா அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட முன்னோடித் திட்டங்களும், அதனால் முன்னேறிய மக்களும் ஏராளம்.
- காலங்கள் மாறினாலும், அம்மாவின் சிறந்த ஆட்சியின் புகழ் என்றும் மறையாது.
சென்னை:
பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
மக்களின் பேராதரவுடன் தனியொரு பெண்ணாக ஆட்சிப் பீடத்தில் அமர்ந்து, பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் தொடங்கி ஏழை எளிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது வரை 360 டிகிரியிலும் மக்கள் நலனை மட்டுமே முதன்மையாகக் கொண்டு செயல்பட்ட, 'அம்மா' என்று தமிழக மக்களால் அன்போடு அழைக்கப்பட்ட மாண்புமிகு முன்னாள் முதல்வர் செல்வி. ஜெ. ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாளில், அவரது பொற்கால ஆட்சியை யாராலும் போற்றாமல் இருக்க முடியாது.
மாணவர்களுக்கு சைக்கிள் முதல் லேப்டாப் வரை பல்வேறு பொருட்கள் வழங்கும் திட்டம், அம்மா உணவகம், தொட்டில் குழந்தைகள் திட்டம், தாலிக்குத் தங்கம் திட்டம் என அம்மா ஜெயலலிதா அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட முன்னோடித் திட்டங்களும், அதனால் முன்னேறிய மக்களும் ஏராளம். காலங்கள் மாறினாலும், அம்மாவின் சிறந்த ஆட்சியின் புகழ் என்றும் மறையாது.
அத்தகைய புகழ்மிக்க தமது ஆட்சியில் போக்குவரத்துத்துறை, ஊரகத்தொழில்கள் துறை, மின்சாரத்துறை மற்றும் தொழில்துறை என்ற நான்கு முக்கியத் துறைகளின் அமைச்சராக என்னைப் பொறுப்பேற்கச் செய்து மக்கள் பணி செய்ய வாய்ப்பளித்த புரட்சித்தலைவி அம்மா அவர்களை என்றென்றும் நன்றியுடன் நினைவுகூர்ந்து அகமகிழ்வேன்! என்று கூறியுள்ளார்.
- எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. கொடியை ஏற்றி வைத்தார்.
- சமூக நீதியை காத்த காவலர் எடப்பாடியார் என்ற அ.தி.மு.க. ஆண்டு மலரை வெளியிட்டார்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது.
ராயப்பேட்டை அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் உள்ள மறைந்த தலைவர்களான எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார். இதையடுத்து அ.தி.மு.க. கொடியையும் ஏற்றி வைத்தார்.
கட்சி கொடியை ஏற்றி வைத்த அவர், சமூக நீதியை காத்த காவலர் எடப்பாடியார் என்ற பெயரிலான அ.தி.மு.க. ஆண்டு மலரை வெளியிட்டார்.
ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாள் என்பதால் 78 கிலோ கேக் வெட்டப்பட்டது. இதன் பின்னர் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
- துணிச்சலின் உருவமாகத் திகழ்ந்த அவர், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பில் அக்கறை கொண்டிருந்தார்.
- முன்னாள் முதலமைச்சரின் துணிச்சலையும், சமூகநீதி சிந்தனையையும் அவரது பிறந்தநாளில் ஒட்டுமொத்த தமிழ்நாடும் போற்றும்.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில் கூறி இருப்பதாவது:-
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், மறைந்த முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதாவின் 78-ம் ஆண்டு பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், முதலமைச்சராக தமிழ்நாட்டுக்கு அவர் ஆற்றிய பணிகளை நான் நினைவு கூர்கிறேன்.
துணிச்சலின் உருவமாகத் திகழ்ந்த அவர், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பில் அக்கறை கொண்டிருந்தார். சட்டம்-ஒழுங்கை கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். 69 சதவீதம் இட ஒதுக்கீட்டுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்ட போது அதை சட்டரீதியாக முறியடித்து சமூகநீதியின் மீது தாம் கொண்டிருந்த அக்கறையை நிரூபித்தார். முன்னாள் முதலமைச்சரின் துணிச்சலையும், சமூகநீதி சிந்தனையையும் அவரது பிறந்தநாளில் ஒட்டுமொத்த தமிழ்நாடும் போற்றும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- நினைவுகளாலும் நம்மை இயக்கிக் கொண்டிருக்கும் இதயதெய்வம்.
- திசையெங்கும் சூழ்ந்து நின்ற சூழ்ச்சிகளைச் சுக்கு நூறாக்கிய இரும்புப் பெண்மணி.
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான மறைந்த ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
தமிழகத்தையும், தமிழக மக்களையும் அரண்போல காத்திட்ட அன்புத் தாய், சிந்தனைகளாலும், நினைவுகளாலும் நம்மை இயக்கிக் கொண்டிருக்கும் இதயதெய்வம், திசையெங்கும் சூழ்ந்து நின்ற சூழ்ச்சிகளைச் சுக்கு நூறாக்கிய இரும்புப் பெண்மணி, ஏழை, எளிய மக்களுக்கு எண்ணற்ற நலத்திட்டங்களைச் செயல்படுத்தி நீங்கா புகழோடு எந்நாளும் நிலைத்து நிற்கும் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்த தினம் இன்று.
இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளை அதிகரித்திட, உழவர்களுக்கான வேளாண் உற்பத்தியைப் பன்மடங்கு பெருக்கிட, தொழில்துறையில் முதலிடத்தை அடைந்திட, தமிழகத்தை இந்திய தேசத்தின் அறிவுசார் தலைநகரமாக உயர்த்திட தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்திட்ட இதயதெய்வம் அம்மா அவர்களையும், மக்கள் நலனுக்காக அவர் நிகழ்த்திட்ட அற்புதங்களையும் எந்நாளும் போற்றிக் கொண்டாடுவோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சோதனைகள் சூழ்ந்த தருணங்களிலும் அசைக்க முடியாத மனவலிமையுடன் தமிழகம் காக்க போராடிய தலைவர்.
- "நமது வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லும் இப்படை தோற்கின் எப்படை வெல்லும்”
சென்னை :
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
இதயதெய்வம் புரட்சித் தலைவி "அம்மா" அவர்களின் 78வது பிறந்த நாளில், அம்மாவின் நெடும் புகழை போற்றுகிறோம்,
"அம்மா" எங்களின் அடையாளம் … ஏழைகளின் நம்பிக்கை,
பெண்களின் தைரியம்,
தாய்மையின் உருவம்.
அதிகாரம் அவரை உயர்த்தவில்லை;
மக்கள் மீது கொண்ட அன்பே அவரை உயர்த்தியது.
புரட்சித் தலைவி அம்மா அவர்களின் ஒவ்வொரு திட்டமும், ஒவ்வொரு தீர்மானமும், "Poverty Alleviation" -க்கான Global standards -சை நிறுவி ஏழை எளிய மக்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்றியது.
சோதனைகள் சூழ்ந்த தருணங்களிலும் அசைக்க முடியாத மனவலிமையுடன் தமிழகம் காக்க போராடிய தலைவர்.
We Take a leaf out of your book in all
of our actions for the people Amma
'மக்களால் நான், மக்களுக்காகவே நான்' என்று புரட்சித் தலைவி அம்மா அவர்கள் சொன்னதைப் போல, அ.தி.மு.க. என்றென்றும் மக்கள் இயக்கமாகவே திகழ்கிறது.
"எனக்குப் பின்னாலும், இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மக்களுக்காகவே இயங்கும்" என்று நம் இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் சூளுரைத்தார்கள்.
அந்த வெற்றி முழக்கத்தை, கொள்கைப் பிரகடனத்தை செயல்படுத்திட நாம் அனைவரும் உறுதி ஏற்க வேண்டிய நாள்தான் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் பிறந்த நாள்.
அ.இ.அ.தி.மு.க. அரசின் சாதனைகளையெல்லாம், தி.மு.க. அரசு தங்களது சாதனைகளாக பொய்ப் பிரச்சாரம் செய்து வரும் தி.மு.க-வினரின் பிரச்சாரங்களை முறியடித்து,
கழகத்தின் தலைமையிலான பொற்கால ஆட்சியில் செய்திட்ட சாதனைகளையெல்லாம் எடுத்துக் கூறி, தேர்தல் களத்திலே மாபெரும் வெற்றியைப் பெறுவதற்கு அயராது உழைப்போம்! அம்மாவின் உண்மைத் தொண்டர்களாகப் பணியாற்றுவோம்! என்று அம்மா அவர்களின் பிறந்த நாளில் வீரசபதம் ஏற்போம்.
"நமது வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லும் இப்படை தோற்கின் எப்படை வெல்லும்"
வாழ்க புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் புகழ்!
வளர்க புரட்சித் தலைவி அம்மாவின் பெரும் புகழ்!
வெல்க அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்! என்று கூறியுள்ளார்.
- அவரது வாழ்க்கைப் பயணம் மன உறுதி மற்றும் தீர்மானத்துடன் இருந்தது.
- அவருடனான எனது கலந்துரையாடல்களை மிகுந்த மகிழ்ச்சியோடு நான் நினைவுகூர்கிறேன்.
புதுடெல்லி:
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான மறைந்த ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பிரதமர் மோடி எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிந்து வெளியிட்டுள்ள பதிவில்,
ஜெயலலிதா அவர்களை அவரது பிறந்த நாளில் நினைவுகூர்கிறேன். மனம் கவர்ந்த தலைவர் மற்றும் தலைசிறந்த நிர்வாகியாக எண்ணற்ற மக்களின் இதயங்களிலும், மனங்களிலும் அவர் இடம் பிடித்துள்ளார். அவரது வாழ்க்கைப் பயணம் மன உறுதி மற்றும் தீர்மானத்துடன் இருந்தது.
தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற முறையில், பெண்களுக்கு அதிகாரமளித்தல் குறித்து வலுவான நோக்கத்துடனும், சமூக நீதி மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய நலத்திட்டங்களாலும் இயக்கப்பட்ட நிர்வாகத்தில் சிறந்த ஆட்சியாளராக திகழ்ந்தார். கருணை, உறுதி என்ற இரண்டு பண்புகளையும் அவர் கொண்டிருந்தார். அவருடனான எனது கலந்துரையாடல்களை மிகுந்த மகிழ்ச்சியோடு நான் நினைவுகூர்கிறேன்.
அவரைப் பற்றி இந்த மாத மன் கி பாத் நிகழ்ச்சியில் நான் என்ன கூறினேன் என்பது இங்கு இடம் பெற்றுள்ளது என்று கூறியுள்ளார்.
- த.வெ.க. தலைவர் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார் செங்கோட்டையன்.
- செங்கோட்டையன் தனது சட்டைப்பையில் புகைப்படத்தை மாற்றியுள்ளார்.
அ.தி.மு.க. கட்சியின் முக்கிய நிர்வகியாக இருந்து சமீபத்தில் த.வெ.க. கட்சியில் இணைந்தவர் செங்கோட்டையன். எம்.ஜி.ஆர். காலக்கட்டத்தில் இருந்தே அ.தி.மு.க. கட்சியிலும், சட்டமன்ற உறுப்பினர் உள்பட பல முக்கிய பொறுப்புகளை வகித்து வந்துள்ளார். இடையில், அ.தி.மு.க. கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், தனது ஆதரவாளர்களுடன் த.வெ.க. தலைவர் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார் ெசங்கோட்டையன்.
த.வெ.க. கட்சியில் செங்கோட்டையனுக்கு நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. கட்சி மாறிய போதிலும், தனது சட்டப்பையில் ஜெயலலிதா படத்தை வைப்பதை செங்கோட்டையன் மாற்றாமல் இருந்தார். மேலும், முக்கிய தினங்களில் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா புகழ் பாடுவதையும் செங்கோட்டையன் நிறுத்தாமல் இருந்தார். இந்த நிலையில், த.வெ.க. நிர்வாகியான செங்கோட்டையன் தனது சட்டைப்பையில் புகைப்படத்தை மாற்றியுள்ளார்.
முதல் முறையாக தனது சட்டைப்பையில் விஜய் படத்தை செங்கோட்டையன் வைத்திருக்கிறார். அதில் ஒருபக்கம் எம்.ஜி.ஆர். படமும், மறுபக்கம் ஜெயலலிதா படமும் இடம்பெற்றுள்ளது.
- முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆற்றிய மக்கள் பணி என்றும் என் மனதில் நிற்கும்.
- தமிழக மக்கள் ஜெயலலிதா மீது எவ்வளவு மரியாதை வைத்திருக்கிறார்கள் என்பதை பார்த்திருக்கிறேன்.
பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை ரேடியோ மூலம் மனதின் குரல் (மன் கி பாத்) நிகழ்ச்சியில் நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். அந்த நிகழ்ச்சியில் மக்கள் போற்றும் மகத்தான தலைவர் ஜெயலலிதா என பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார். மேலும் அவர் கூறியதாவது:
மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் வருகிற 24-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மன் கி பாத் உரையில் ஜெயலலிதாவை பிரதமர் மோடி பாராட்டியுள்ளார். பெண்களின் நலனுக்காக அவர் பாடுபட்டார் என்று புகழ்ந்துள்ளார். இது தொடர்பாக மோடி தனது உரையில் கூறி இருப்பதாவது:-
பெண்கள் சக்தியின் ஒரு வெளிப்பாடாகவே ஜெயலலிதா இருந்தார். அவரின் தேசப்பக்தி மிகப்பெரியது. மாநிலத்தின் சட்டம், ஒழுங்கை பாதுகாக்க ஜெயலலிதா கடுமையான நடவடிக்கைகளை எடுத்தார்.
சமூக நலனுக்காக பாடுபட்டவர்கள், பொதுமக்களுக்கு முன்னுரிமை அளித்தவர்கள் எப்போதும் மக்களின் இதயங்களில் நிலைத்திருக்கிறார்கள். ஜெயலலிதா அத்தகைய பிரபலமான தலைவர்களில் ஒருவர். பிப்ரவரி 24-ந் தேதி அவரது பிறந்தநாள் விழா. இன்றும் கூட தமிழகத்துக்கு செல்லும்போது மக்கள் அவர் மீது கொண்டிருந்த ஆழ்ந்த பாசத்தை நான் உணர்கிறேன். அம்மா ஜெயலலிதாவைப் பற்றி குறிப்பிடுவது தமிழக மக்களின் முகங்களில் ஒரு பிரகாசத்தைக் கொண்டு வருகிறது. குஜராத்தில் எனது பதவியேற்பு விழாவில் அவர் கலந்து கொண்டார். அவரது சிந்தனை மிகவும் தெளிவாக இருந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.






