`ஜெ' இருந்த இடத்தில் விஜய்... செங்கோட்டையன் சட்டைப்பையில் மாறிய புகைப்படம்..!

த.வெ.க. தலைவர் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார் செங்கோட்டையன். செங்கோட்டையன் தனது சட்டைப்பையில் புகைப்படத்தை மாற்றியுள்ளார்.
`ஜெ' இருந்த இடத்தில் விஜய்... செங்கோட்டையன் சட்டைப்பையில் மாறிய புகைப்படம்..!
Published on

அ.தி.மு.க. கட்சியின் முக்கிய நிர்வகியாக இருந்து சமீபத்தில் த.வெ.க. கட்சியில் இணைந்தவர் செங்கோட்டையன். எம்.ஜி.ஆர். காலக்கட்டத்தில் இருந்தே அ.தி.மு.க. கட்சியிலும், சட்டமன்ற உறுப்பினர் உள்பட பல முக்கிய பொறுப்புகளை வகித்து வந்துள்ளார். இடையில், அ.தி.மு.க. கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், தனது ஆதரவாளர்களுடன் த.வெ.க. தலைவர் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார் ெசங்கோட்டையன்.

த.வெ.க. கட்சியில் செங்கோட்டையனுக்கு நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. கட்சி மாறிய போதிலும், தனது சட்டப்பையில் ஜெயலலிதா படத்தை வைப்பதை செங்கோட்டையன் மாற்றாமல் இருந்தார். மேலும், முக்கிய தினங்களில் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா புகழ் பாடுவதையும் செங்கோட்டையன் நிறுத்தாமல் இருந்தார். இந்த நிலையில், த.வெ.க. நிர்வாகியான செங்கோட்டையன் தனது சட்டைப்பையில் புகைப்படத்தை மாற்றியுள்ளார்.

முதல் முறையாக தனது சட்டைப்பையில் விஜய் படத்தை செங்கோட்டையன் வைத்திருக்கிறார். அதில் ஒருபக்கம் எம்.ஜி.ஆர். படமும், மறுபக்கம் ஜெயலலிதா படமும் இடம்பெற்றுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com