search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jayalalithaa birthday"

    • காவிரியை காப்பாற்றக்கூடிய ஒரே தலைவாக எடப்பாடி பழனிசாமி இருந்து வருகிறார்.
    • மேகதாதுவில் அணை கட்டுவதற்கு, ஒரு போதும் அ.தி.மு.க.வும், எடப்பாடி பழனிசாமியும் இடம் தர மாட்டார்.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் ஓசூர் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க சார்பில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம், ஓசூர் அருகே பாகலூரில் நடைபெற்றது.

    பாகலூர் பஸ் நிலையத்தில் நடந்த இக்கூட்டத்திற்கு, வடக்கு ஒன்றிய செயலாளரும், மாவட்டக்குழு உறுப்பினருமான ரவிகுமார் தலைமை தாங்கினார். மாநில, மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், தம்பிதுரை எம்.பி. கலந்து கொண்டு பேசியதாவது:-

    நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தல், தமிழகத்தின் தலைவிதியை நிர்ணயிக்கும் தேர்தல். தமிழகத்தில், நான்கரை ஆண்டுகாலம் எடப்பாடி பழனிசாமி சிறப்பான ஆட்சியை தந்தார். தமிழகம் அமைதிப்பூங்காவாக திகழ்ந்தது. சாதாரண தொண்டராகிய எடப்பாடி பழனிசாமியை மக்கள் நம்ப வேண்டும். அவர், உங்களில் ஒருவர். நம்மில் ஒருவர். அவரது கரத்தை வலுப்படுத்தும் வகையில் பாராளுமன்ற தேர்தலில் மக்கள் அமோக ஆதரவு தர வேண்டும்.

    தமிழகத்தில், பாராளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சி, கூட்டுறவு சங்கம்... என எந்த தேர்தல் வந்தாலும் அதிமுகவிற்கும், திமுகவிற்கும் மட்டும்தான் போட்டியாக இருக்கும். காவிரியை காப்பாற்றக்கூடிய ஒரே தலைவாக எடப்பாடி பழனிசாமி இருந்து வருகிறார். மேகதாது அணை கட்டுவது பயனற்றது. அங்கு, அணை கட்டாமலேயே பெங்களூரு மாநகரத்திற்கு தேவையான 18 டிஎம்சி தண்ணீரை கே.ஆர்.எஸ். அணையிலிருந்து எடுத்துக் கொள்ளட்டும். அதற்கு, அதிமுக சார்பில் எந்த ஆட்சேபணையும் இல்லை. இதுதான் அதிமுகவின் கருத்து மற்றும் கொள்கையாகும். மேகதாதுவில் அணை கட்டுவது தேவையற்றது. மேகதாதுவில் அணை கட்டுவதற்கு, ஒரு போதும் அ.தி.மு.க.வும், எடப்பாடி பழனிசாமியும் இடம் தர மாட்டார். மக்கள் இதை நம்பலாம். இந்த விவகாரத்தில் தமிழகத்தின் உரிமை நிலை நாட்டப்படும்.

    இவ்வாறு அவர் கூட்டத்தில் பேசினார்.

    மேலும், மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ணரெட்டி தலைமைக்கழக பேச்சாளர் சாரதா ஆகியோர் கூட்டத்தில் பேசினர். இதில், கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில், பாகலூர் ஊராட்சி தலைவர் வி.டி. ஜெயராமன் நன்றி கூறினார்.

    • பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை ஜெயலலிதாவை நினைவு கூர்ந்து எக்ஸ் தளத்தில் பதிவு.
    • தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா அவர்களின் பிறந்த தினம் இன்று.

    சென்னை :

    மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா அவர்களின் பிறந்த தினம் இன்று.

    தமிழக மக்கள் நலனுக்காகவும், சமூக நலனுக்காகவும், அவர் செயல்படுத்திய நலத்திட்டங்கள் என்றும் அவரது புகழைக் கூறும் என பதிவிட்டுள்ளார்.

    • பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ள இடங்கள்; அவற்றில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுவோர் விபரங்கள் அடங்கிய பட்டியல் இத்துடன் வெளியிடப்படுகிறது.
    • கழக சட்டமன்ற உறுப்பினர்களும், கழக சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகளும், தாங்கள் சார்ந்த தொகுதிகளில் நடைபெற உள்ள பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுவார்கள்.

    சென்னை :

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    புரட்சித் தலைவி ஜெயலலிதாவின் 76-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு 24.2.2024 முதல் 28.2.2024 வரை 5 நாட்கள், 'இதய தெய்வம் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் 76-ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டங்கள்', கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களுக்கு உட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளிலும், கழக அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பிற மாநிலங்களிலும் நடைபெற உள்ளன.

    பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ள இடங்கள்; அவற்றில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுவோர் விபரங்கள் அடங்கிய பட்டியல் இத்துடன் வெளியிடப்படுகிறது.

    கழக சட்டமன்ற உறுப்பினர்களும், கழக சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகளும், தாங்கள் சார்ந்த தொகுதிகளில் நடைபெற உள்ள பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுவார்கள்.

    மாவட்டக் கழகச் செயலாளர்கள், தங்கள் மாவட்டத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ள பொதுக்கூட்டங்களை, கழகம், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மன்றம், புரட்சித் தலைவி அம்மா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்பப் பிரிவு, வர்த்தக அணி மற்றும் கலைப் பிரிவு உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளுடனும், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளுடனும் இணைந்து சிறப்புப் பேச்சாளர்களுடன் தொடர்புகொண்டு, இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் 76-ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டங்களை ஏற்பாடு செய்து சிறப்பாக நடத்தி, அதன் விபரங்களை தலைமைக் கழகத்திற்கும், "நமது புரட்சித் தலைவி அம்மா நாளிதழுக்கும்" அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    ராயப்பேட்டை, தலைமைக் கழக வளாகத்தில் உள்ள ஜெயலலிதா சிலைக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, இனிப்பு வழங்க உள்ளனர். #ADMK #EPS #OPS #Jayalalithaa
    சென்னை:

    அ.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    புரட்சித் தலைவி அம்மாவின் 71-வது பிறந்த நாளான 24-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு, ராயப்பேட்டை, தலைமைக் கழக வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்-அமைச்சர். ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, இனிப்பு வழங்க உள்ளனர்.

    தொடர்ந்து தலைமைக் கழக நிர்வாகிகளும், அமைச்சர் பெருமக்களும் மாலை அணிவிக்க உள்ளனர்.

    அம்மா விரும்பியபடி அவரது பிறந்தநாளை முன்னிட்டு, கழகத்தில் பல்வேறு நிலைகளில் செயல்பட்டு வரும் நிர்வாகிகள் அனைவரும் தத்தமது பகுதிகளில், கண் தானம், ரத்ததானம் செய்தல்; மருத்துவ முகாம் நடத்துதல்; கவிதைப் போட்டி, கட்டுரைப் போட்டி, விளையாட்டுப் போட்டிகளை நடத்துதல்; மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில் அவர்களுக்கான கல்வி உபகரணங்களை வழங்குதல்; ஏழை, எளியோருக்கு அன்னதானம் வழங்குதல்; அனாதை இல்லங்கள் மற்றும் முதியோர் இல்லங்களில் வசிப்பவர்களுக்கு அறுசுவை உணவு வழங்குதல்; வேஷ்டி, சேலை வழங்குதல் உள்ளிட்ட மக்கள் மனம் குளிரும் வகையிலான நலத்திட்ட உதவிகளை வழங்கிட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #ADMK #EPS #OPS #Jayalalithaa
    ஜெயலலிதாவின் 71-வது பிறந்த நாள் பிப்ரவரி 24-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை 5 நாட்கள் கொண்டாடப்படும் என அ.தி.மு.க. தலைமை நிலையம் அறிவித்துள்ளது. #Jayalalithaa #ADMK
    சென்னை:

    அ.தி.மு.க. தலைமை நிலையம்  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    அ.தி.மு.க. கழகப் பொதுச் செயலாளராகவும், தமிழ்நாடு முதலமைச்சராகவும், தனது வாழ்நாளை மக்களுக்காகவே அர்ப்பணித்து, தவ வாழ்வு வாழ்ந்து மறைந்த அம்மாவின் 71-வது பிறந்த நாளை முன்னிட்டு, வருகிற 24-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் 28-ந்தேதி வரை அம்மாவின் 71-வது பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது.

    இதற்கான பொதுக்கூட்டங்கள் கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் ஒன்றியங்கள், நகரங்கள் மற்றும் மாநகராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளிலும் கழக அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, புதுடெல்லி மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் நடைபெற உள்ளன.

    அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் ஆங்காங்கே நடைபெற உள்ள பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுவார்கள்.

    மாவட்டக் கழகச் செயலாளர்கள் தங்கள் மாவட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பொதுக்கூட்ட நிகழ்ச்சிகளை, கழகம், எம்.ஜி.ஆர். மன்றம், அம்மா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப்பிரிவு உள்ளிட்ட அனைத்து பிரிவினர் உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளுடன், கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகளுடனும் இணைந்து சிறப்புப் பேச்சாளர்கள் மற்றும் கலைக் குழுவினருடன் இணைந்து அம்மா பிறந்த நாளை சிறப்பாக நடத்த வேண்டும்.

    தலைமைக் கழகத்தால் அறிவிக்கப்படாத மற்ற இடங்களிலும், புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, கேரளா, புதுடெல்லி மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும், 24.2.2019 அன்று ஆங்காங்கே அம்மா சிலைக்கு அல்லது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #Jayalalithaa #ADMK
    ஏழைத் தொழிலாளர் குடும்பங்களுக்கு 2000 ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை, ஜெயலலிதாவின் பிறந்தநாளன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைக்க உள்ளார். #SpecialAssistance #NarendraModi #Farmers
    சென்னை:

    கஜா புயலின் தாக்கத்தினாலும், பருவமழை பொய்த்ததன் காரணமாக தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியினாலும் ஏழை மக்கள் பாதிக்கப்பட்டு இருப்பதை கருத்தில் கொண்டு, ஏழைத் தொழிலாளர் குடும்பங்களுக்கு இந்த ஆண்டு தமிழ்நாடு அரசின் சிறப்பு நிதியுதவியாக தலா 2,000 ரூபாய் வழங்கப்படும் என சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

    இதையடுத்து, பயனாளிகளை கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. இந்த மாத இறுதிக்குள் உதவித் தொகை, பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை ஐகோர்ட் தள்ளுபடி செய்ததையடுத்து, 2000 உதவித் தொகை வழங்குவதற்கான பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.



    இந்நிலையில், ஜெயலலிதாவின் பிறந்தநாளான வரும் 24-ம் தேதி இந்த திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்க உள்ளார். இந்த திட்டத்தின்மூலம் சுமார் 60 லட்சம் ஏழைக் குடும்பங்கள் பயன்பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதேபோல் 5 ஏக்கருக்கும் குறைவான நிலம் வைத்துள்ள சிறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும் என மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டமும் வரும் 24-ம் தேதி தொடங்க உள்ளது. ரூ.6 ஆயிரம் உதவித் தொகையானது 3 தவணையாக ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்பட உள்ளது. உதவித் தொகை வழங்கும் பணியை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார். #SpecialAssistance  #NarendraModi #Farmers
    ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு தஞ்சையில், 126 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நாளை(ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
    தஞ்சாவூர்:

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 71-வது பிறந்தநாளை முன்னிட்டு தஞ்சை தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஏழை, எளிய குடும்பங்களை சேர்ந்த 126 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கப்படுகிறது. தஞ்சை திலகர் திடலில் நாளை(ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு நடக்கும் இந்த திருமண விழாவுக்கு துணை ஒருங்கிணைப்பாளரும், தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளருமான ஆர். வைத்திலிங்கம் எம்.பி. தலைமை தாங்குகிறார்.

    எம்.பி.க்கள் பரசுராமன், பாரதிமோகன், சந்திரகாசு, எம்.எல்.ஏ.க்கள் சேகர், கோவிந்தராஜன், ராமஜெயலிங்கம், தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

    இந்த திருமண விழாவில் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, அமைப்பு செயலாளர் நத்தம் விசுவநாதன், அமைப்பு செயலாளரும், அமைச்சருமான தங்கமணி, சட்டசபை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், அமைச்சர்கள் ஆர்.காமராஜ், துரைக்கண்ணு, அரசு தலைமை கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன், பெரம்பலூர் மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு 126 ஜோடிகளுக்கு திருமணத்தை நடத்தி வைக்கிறார்கள்.

    விழாவில் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட பிரிவு நிர்வாகிகள், முன்னாள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். திருமண விழா முடிந்தவுடன் அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்படுகிறது.

    இந்த திருமண விழாவுக்காக தஞ்சை திலகர் திடலில் ஆயிரக்கணக்கானோர் அமரும் வகையில் பிரமாண்ட பந்தல் அமைக்கும் பணி நடந்து வருகிறது. மணமக்கள் மற்றும் அவர்களின் உறவினர்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் அமர்ந்து திருமண விழாவை கண்டு களிக்கும் வகையில் நாற்காலிகள் போடப்பட உள்ளன.

    திருமணத்தையொட்டி மணமக்களுக்கு பட்டு வேட்டி, சட்டை, பட்டுச்சேலை போன்றவை வழங்கப்பட்டுள்ளன. அரை பவுன் தாலியும் வழங்கப்பட உள்ளது. மேலும் சீர்வரிசையாக 2 குத்துவிளக்குகள், மண் விளக்கு, சொம்பு, பூஜை கூடை, குக்கர், தோசைக்கல், கரண்டி, அன்னக்கை, கரண்டி, டம்ளர், ஜக்கு, முறுக்கு அச்சு, சல்லடை, சாப்பாடு தட்டு, பூ வாளி, குடம், தாம்பாலம், இட்லி பானை, அரிவாள்மனை, தேங்காய் திருவி, பூரி கட்டை, கட்டில், மெத்தை, பீரோ, மின்விசிறி உள்ளிட்ட 72 வகையான பொருட்கள் மணமக்களுக்கு வழங்கப்பட உள்ளது.
    முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு ஸ்ரீவைகுண்டத்தில் அ.தி.மு.க. சார்பில் மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி போட்டிகள் வருகிற 26-ந்தேதி பெருங்குளத்தில் நடக்கிறது.
    தூத்துக்குடி:

    அமைச்சர் கடம்பூர் ராஜூ, தூத்துக்குடி மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் சி.த. செல்லப்பாண்டியன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 70-வது பிறந்த நாளை முன்னிட்டு ஸ்ரீவைகுண்டம் ஒன்றியம் பெருங்குளம் பேரூராட்சி அ.தி.மு.க. சார்பில் மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி போட்டிகள் வருகிற 26-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணிக்கு பெருங்குளத்தில் நடக்கிறது. நிகழ்ச்சிக்கு பேரூராட்சி செயலாளர் செல்லத்துரை தலைமை வகிக்கிறார், ஒன்றிய எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் சுந்தர்ராஜன் முன்னிலை வைக்கிறார். பெரிய மாட்டு வண்டி போட்டியை அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைக்கிறார்.சிறிய மாட்டு வண்டி போட்டியை மாவட்ட செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன் தொடங்கி வைக்கிறார். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மொத்தம் ரூ. 2 லட்சம் பரிசு வழங்கப்படுகிறது.

    நிகழ்ச்சிக்கு அனைத்து ‌மாவட்ட, ‌தொகுதி, ஒன்றிய, நகர, ஊராட்சி, கிளை கழக நிர்வாகிகள், அணி நிர்வாகிகள், தொழிற்சங்க நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், இளைஞர்-இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகள், பேரவை நிர்வாகிகள், பொதுமக்கள் திரளானோர் கலந்து கொள்ள கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
    ×