search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Minister Moorthy"

    • ஜல்லிக்கட்டு தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை வரவேற்கிறோம்.
    • ஜல்லிக்கட்டு தீர்ப்பிற்கு முதல் காரணம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான்.

    மதுரை:

    மதுரை அருகே உள்ள சத்திரப்பட்டியில் தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனையை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்டு 2312 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2 கோடியே 8 லட்சத்து 36 ஆயிரத்து 923 மதிப்பிலான உதவி உபகரணங்களை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஜல்லிக்கட்டு தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை வரவேற்கிறோம். ஜல்லிக்கட்டு தொடர்பாக சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானத்தின் அடிப்படையில் தான் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

    ஜல்லிக்கட்டு தீர்ப்பிற்கு முதல் காரணம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான். 2016-ம் ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்த பிரச்சினைகள் வந்த போது அதற்கு தீர்வு கண்டவர் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி.

    இந்த வெற்றி தமிழர்களின் உணர்வுக்கும், பண்பாட்டு கலாச்சாரத்திற்கும் கிடைத்தது. இதற்கு காரணமாக இருந்த முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் அனீஸ் சேகர், கூடுதல் கலெக்டர் சரவணன், வெங்கடேசன் எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் கோ.தளபதி, பூமிநாதன், துணை மேயர் நாகராஜன், சேர்மன் வீரராகவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • அண்ணாவின் 54-வது நினைவு தின நிகழ்ச்சி சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடந்தது.
    • வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்டு அண்ணா படத்தி ற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    சங்கரன்கோவில்:

    தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணாவின் 54-வது நினைவு தின நிகழ்ச்சி சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். தலைமை செயற்குழு உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான தங்கவேலு, பரமகுரு முன்னிலை வகித்தனர். இதில்சிறப்பு அழைப்பா ளராக வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்டு அண்ணா படத்தி ற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    இதில் மாவட்ட துணை செயலாளர்கள் ராஜதுரை, புனிதா ஒன்றிய செயலாளர்கள் பூசை பாண்டியன், சேர்மத்துரை, வெற்றிவிஜயன், பெரியதுரை, பொதுக்குழு உறுப்பினர்கள் வேல்சாமிபாண்டியன், வெள்ளத்துரை, சாகுல் ஹமீது, மாரிசாமி, பராசக்தி, மகேஸ்வரி நகர செயலாளர்கள் பிரகாஷ், அந்தோணிசாமி, சங்கரன்கோவில் முன்னாள் நகர செயலாளர் சங்கரன், நகராட்சி சேர்மன்கள் உமா மகேஸ்வரி, விஜயா , பேரூர் செயலாளர்கள், டாக்டர் செண்பக விநாயகம், குருசாமி, ரூபிபாலசுப்பிரமணியன், மாரி முத்து,

    தொ.மு.ச.முத்துக்குமார், நகர் அவைத்தலைவர் முப்புடாதி, நகர துணை செயலாளர்கள் கே.எஸ்.எஸ். மாரியப்பன், முத்துக்குமார், சுப்புத்தாய் மற்றும் இளை ஞர் அணி சர வணன், பசுபதி பாண்டியன், முகேஷ், சண்முகராஜ், சண்முகராஜ் ,மூத்த உறுப் பினர்கள் கணேசன், சந்திரன் மற்றும் நிர்வாகிகள் ஜெயராணி, துரைப் பாண்டியன், ஜெயக்குமார், கணேசன், முத்துகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • நெல்லை மாவட்டத்தில் இருந்து தனியாக பிரிக்கப்பட்டு தென்காசி புதிய மாவட்டமாக உருவாகி உள்ளது.
    • மனுவைப் பெற்றுக் கொண்ட அமைச்சர் மூர்த்தி இதுகுறித்து உடனடியாக பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

    சங்கரன்கோவில்:

    நெல்லை மாவட்டத்தில் இருந்து தனியாக பிரிக்கப்பட்டு தென்காசி புதிய மாவட்டமாக உருவாகி உள்ளது. இந்த புதிய மாவட்டத்தில் சங்கரன்கோவில், தென்கா சிக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய நகரமாகும்.

    எனவே மாவட்ட பதிவாளர் அலுவலகம் சங்கரன்கோவிலில் அமைக்க வேண்டும். மேலும் சார்பதிவாளர் அலுவலகம் பல ஆண்டுகளாக பழைய கட்டிடத்தில் இயங்கி வருவதால் புதிய கட்டிடமும், வணிகவரித் துறை அலுவலகம் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருவதால் அதற்கு புதிய கட்டிடமும் அமைத்து தர வேண்டுமென வலியுறுத்தி வணிகவரித்துறை மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தியை தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. சந்தித்து மனு அளித்தார்.

    மனுவைப் பெற்றுக் கொண்ட அமைச்சர் மூர்த்தி இதுகுறித்து உடனடியாக பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி தமிழகத்தில் அனைத்து துறைகளும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
    • மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

    நாகர்கோவில்:

    வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி இன்று குமரி மாவட்டம் வந்தார்.

    அதன்பிறகு நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்டு பேசினார். பத்திரபதிவுத்துறை செயலாளர் ஜோதி நிர்மலாசாமி, கலெக்டர் அரவிந்த், பதிவுத்துறை தலைவர் சிவனருள், மாவட்ட பதிவாளர் பாலசுப்பிரமணியன், மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன், சப்-கலெக்டர் குணால் யாதவ், கோட்டாட்சியர் சேது ராமலிங்கம் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    பத்திரப்பதிவு துறையில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்வது தொடர்பாக கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. தொடர்ந்து அமைச்சர் மூர்த்தி நிருபர்களிடம் கூறியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி தமிழகத்தில் அனைத்து துறைகளும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறையை பொருத்தவரை 39 புதிய சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அந்த சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டதால் பத்திரப்பதிவுத்துறை வளர்ச்சி அடைந்துள்ளது.

    கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வணிக வரித்துறையில் ரூ.21 ஆயிரத்து 500 கோடியும், பதிவு துறையில் ரூ.3 ஆயிரம் கோடியும் வருவாய் உயர்ந்து உள்ளது. நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மற்றும் குமரி மண்டலத்துக்குட்பட்ட பகுதிகளில் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது.

    குமரி மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் பத்திரப்பதிவில் நடைமுறை சிக்கல்கள் உள்ளன. 3 அடி முதல் 4 அடியில் மட்டுமே பாதைகள் இருப்பதால் அந்த பகுதியில் உள்ள நிலங்களை பதிவு செய்வதில் சிக்கல்கள் உள்ளது. இது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டு உள்ளோம்.

    மேலும் சம்பந்தப்பட்ட இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளோம். அந்த இடத்தின் அமைப்பு எந்த மாதிரியாக உள்ளது? என்பதை ஆய்வு செய்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வோம்.

    'டெஸ்ட் பர்சேஸ்' என்ற பெயரில் வணிகர்களிடம் தமிழக அரசு எந்தவித கெடுபிடியும் காட்டவில்லை. வணிகர்களுக்கு பாதுகாவலனாக இந்த அரசு விளங்கி வருகிறது. நியாயமாக, நேர்மையாக வியாபாரம் செய்பவர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை.

    மக்களிடம் வாங்கக்கூடிய வரி அரசுக்கு முறையாக செலுத்தப்பட வேண்டும் என்பது தான் இந்த அரசு மேற்கொள்ளும் நடவடிக்கையாகும். இதில் வணிகர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. 'டெஸ்ட் பர்சேஸ்' குறித்து வியாபாரிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகளை வணிக வரித்துறை மேற்கொண்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பத்திரப்பதிவுத்துறையில் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் இன்று நடைபெற்றது.
    • நெல்லை மண்டல துணை பதிவுத்துறை தலைவர் ராஜ்குமார் நன்றி கூறினார்.

    நெல்லை:

    நெல்லை மண்டலத்தில் பத்திரப்பதிவுத்துறையில் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. கலெக்டர் விஷ்ணு தலைமை தாங்கினார்.

    வணிகவரி மற்றும் பதிவுத்துறை அரசு செயலாளர் ஜோதி நிர்மலாசாமி, பதிவுத்துறை தலைவர் சிவன்அருள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்டு மண்டல அளவில் பதிவுத்துறையில் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து கூட்டத்தில் பேரூரையாற்றினார்.

    இதில் அப்துல்வகாப் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். நெல்லை மண்டல துணை பதிவுத்துறை தலைவர் ராஜ்குமார் நன்றி கூறினார்.

    இந்த சீராய்வு கூட்டத்தில் நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் பணியாற்றும் மாவட்ட பதிவாளர்கள், சார்பதி வாளர்கள் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • வணிகவரித்துறை யாரை வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் ஆய்வு செய்ய அவர்களுக்கு அதிகாரம் உண்டு.
    • வரி ஏய்ப்பு செய்து இருந்தால் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் உண்டு.

    அவனியாபுரம்:

    மதுரை அருகே ஒத்தக்கடையில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் மூர்த்தி வழங்கினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் போலி பத்திரம் ரத்து சட்டம் அமல்படுத்தப்பட்டது, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. யாரெல்லாம் நிலத்தை பறிகொடுத்துள்ளார்களோ, அவர்கள் அதிகாரிகளிடம் மனுவாக அளித்து தன்னுடைய நிலங்களை மீட்டுக் கொள்ளலாம்.

    வணிகவரித்துறையில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தம் காரணமாக வரி செலுத்தாத வணிகர்கள் பயத்தோடு வரி கட்டி வருகிறார்கள்.

    தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு வணிகவரித்துறை மூலம் ரூ. 18 ஆயிரம் கோடி வருவாயும் பத்திரப்பதிவுத்துறை மூலம் ரூ. 8300 கோடி வருவாயும் என மொத்தம் சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

    நடிகர் சூரி எனது தொகுதிக்காரர் என்னுடைய நல்ல நண்பர். அவரது உணவகத்தில் திட்டமிட்டு சோதனை நடத்தப்பட்டது போல தவறான செய்திகளை பரப்பி வருகிறார்கள். வணிகவரித்துறை நிர்வாக ரீதியான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அதில் யாருடைய தலையிடும் இல்லை. வணிகவரித்துறை சுதந்திரமாக செயல்படுகிறது.

    யாரையும் தனிப்பட்ட முறையில் பழி வாங்கும் நடவடிக்கையாக இந்த சோதனை மேற்கொள்ளவில்லை. வணிகவரித்துறை யாரை வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் ஆய்வு செய்ய அவர்களுக்கு அதிகாரம் உண்டு. வரி ஏய்ப்பு செய்து இருந்தால் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் உண்டு.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தி.மு.க. அரசு மக்கள் நலம் சார்ந்த திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. ஒவ்வொரு ஊராட்சியிலும் மாதந்தோறும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்படுகிறது.
    • வணிக வரித்துறையில் வரி செலுத்தாத 3 லட்சம் பேருக்கு முறைப்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. எனவே வரும் காலங்களில் வணிக வரித்துறை சார்பில் அதிக வருவாய் ஈட்டப்படும்.

    அவனியாபுரம்:

    மதுரை குலமங்கலம் ஊராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று நடந்தது. அதில் வணிகவரி மற்றும் பத்திரபதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்டு 479 பயனாளிகளுக்கு ரூ. 1 கோடியே 19 லட்சத்து 69 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

    இதில் அனைத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அரசு திட்டங்கள் குறித்து விளக்கி பேசினார். பின்பு அமைச்சர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தி.மு.க. அரசு மக்கள் நலம் சார்ந்த திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. ஒவ்வொரு ஊராட்சியிலும் மாதந்தோறும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்படுகிறது.

    வணிக வரித்துறையில் வரி செலுத்தாத 3 லட்சம் பேருக்கு முறைப்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. எனவே வரும் காலங்களில் வணிக வரித்துறை சார்பில் அதிக வருவாய் ஈட்டப்படும். பத்திரப்பதிவுத்துறையில் ஒரே நாளில் அதிகாரிகள் இடமாற்றம் செய்தது குறித்து பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ஆதரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்.

    இந்த ஆட்சியில் பத்திரப்பதிவுத்துறையில் நிர்வாகம் சிறப்பாக நடைபெறுகிறது. பத்திரப்பதிவுத்துறையில் அதுபோன்று எந்த முறைகேடும் நடைபெறவில்லை. அவர் தனது குற்றச்சாட்டை நிரூபித்தால் நான் பதவி விலக தயார்.

    பத்திரப்பதிவுத் துறையில் இந்தியாவிலேயே முன் உதாரணமாக தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை மத்திய அரசு இன்னும் கையெழுத்திடாமல் 7 மாதமாக கிடப்பில் போட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×