நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் பதிவுத்துறை சீராய்வு கூட்டம் - அமைச்சர் மூர்த்தி பங்கேற்பு

பத்திரப்பதிவுத்துறையில் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் இன்று நடைபெற்றது. நெல்லை மண்டல துணை பதிவுத்துறை தலைவர் ராஜ்குமார் நன்றி கூறினார்.
அமைச்சர் மூர்த்தி தலைமையில் கூட்டம் நடந்த போது எடுத்தபடம். அருகில் கலெக்டர் விஷ்ணு, அப்துல்வகாப் எம்.எல்.ஏ. மற்றும் பலர் உள்ளனர்.
அமைச்சர் மூர்த்தி தலைமையில் கூட்டம் நடந்த போது எடுத்தபடம். அருகில் கலெக்டர் விஷ்ணு, அப்துல்வகாப் எம்.எல்.ஏ. மற்றும் பலர் உள்ளனர்.
Published on

நெல்லை:

நெல்லை மண்டலத்தில் பத்திரப்பதிவுத்துறையில் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. கலெக்டர் விஷ்ணு தலைமை தாங்கினார்.

வணிகவரி மற்றும் பதிவுத்துறை அரசு செயலாளர் ஜோதி நிர்மலாசாமி, பதிவுத்துறை தலைவர் சிவன்அருள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்டு மண்டல அளவில் பதிவுத்துறையில் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து கூட்டத்தில் பேரூரையாற்றினார்.

இதில் அப்துல்வகாப் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். நெல்லை மண்டல துணை பதிவுத்துறை தலைவர் ராஜ்குமார் நன்றி கூறினார்.

இந்த சீராய்வு கூட்டத்தில் நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் பணியாற்றும் மாவட்ட பதிவாளர்கள், சார்பதி வாளர்கள் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com