என் மலர்
நீங்கள் தேடியது "Collector office"
- பிரதமரின் கோவை சுற்றுப்பயணத்தில் குண்டுவெடிப்பு நடத்த உள்ளோம் என குறிப்பிடப்பட்டு இருந்தது.
- கோவையில் தொடர்ந்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
கோவையில் இன்று இயற்கை வேளாண் விவசாயிகள் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இந்தநிலையில் பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து வெடிகுண்டு மிரட்டல் வந்தது கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு பணிக்கு வந்த ஊழியர்கள் இன்று காலை இ-மெயில் தகவல்களை சரிபார்த்தனர். அப்போது வெடிகுண்டு மிரட்டல் ஒன்று வந்திருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பிரதமரின் கோவை சுற்றுப்பயணத்தில் குண்டுவெடிப்பு நடத்த உள்ளோம் என குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதையடுத்து ஊழியர்கள் மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். மாநாடு நடைபெறும் கொடிசியா வளாகம் மற்றும் விமான நிலையத்தில் மோப்பநாய் கொண்டு சல்லடை போட்டு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது. அதன்பிறகே போலீசாரும், ஊழியர்களும் நிம்மதி அடைந்தனர். இருந்தாலும் தொடர்ந்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
- கலெக்டர் அலுவலகத்திற்கு ஒருசிலர் வெடிகுண்டு வைப்பதற்கு திட்டமிட்டு உள்ளனர்.
- தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் இருந்து அந்த கடிதம் கோவைக்கு அனுப்பப்பட்டு இருப்பது தெரியவந்து உள்ளது.
கோவை:
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 30-க்கும் மேற்பட்ட அரசுத்துறை அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. அங்கு பல்வேறு பாதுகாப்பு காரணங்கள் கருதி 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு ஒரு தபால் வந்தது. தென்காசி மாவட்டத்தை சேர்ந்த அரசு வக்கீல் பெயரில் வந்திருந்த தபாலை கலெக்டர் அலுவலக ஊழியர்கள் பிரித்து பார்த்தனர்.
அந்த கடித்தத்தில் கலெக்டர் அலுவலகத்திற்கு ஒருசிலர் வெடிகுண்டு வைப்பதற்கு திட்டமிட்டு உள்ளனர். அவர்கள் பற்றிய விவரம் எனக்கு தெரியும். என் உயிருக்கு பாதுகாப்பு அளித்தால் அவர்கள் குறித்த விபரத்தை தெரிவிப்பதாகவும் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த கலெக்டர் அலுவலக ஊழியர்கள் இதுகுறித்து உயர்அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளிக்கப்பட்டு இன்ஸ்பெக்டர் கந்தசாமி விசாரணை நடத்தினார்.
மேலும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டு இருந்த அரசு வக்கீலிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் தனது பெயரில் யாரோ ஒருவர் கடிதம் எழுதி இருப்பதாக கூறினார்.
மேலும் இதே போன்ற கடிதம் அனைத்து மாவட்டத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் இருந்து அந்த கடிதம் கோவைக்கு அனுப்பப்பட்டு இருப்பது தெரியவந்து உள்ளது. தொடர்ந்து அந்த கடிதத்தை அனுப்பிய நபரை கண்டுபிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- காலை மர்ம நபர்கள் இ-மெயில் மூலம் வெடி குண்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.
- மாவட்ட கலெக்டர் அலுவலகம் முழுவதும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர்.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் தென்காசி மாவட்ட பா.ஜ.க. தலைவராக இருந்து வரும் ஆனந்தன் அய்யாசாமிக்கும் இன்று காலை மர்ம நபர்கள் இ-மெயில் மூலம் வெடி குண்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதுகுறித்த கலெக்டர் அலுவலகம் தரப்பிலும், ஆனந்தன் அய்யாசாமி தரப்பிலும் போலீசில் புகார் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து போலீசாரின் முழு பாதுகாப்பின் கீழ் தென்காசி கலெக்டர் அலுவலகம் கொண்டு வரப்பட்ட நிலையில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வரும் அனைத்து அரசு ஊழியர்களும், பொதுமக்களும் மெட்டல் டிடெக்டர் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் மூலமாக முழுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
மேலும், மாவட்ட கலெக்டர் அலுவலகம் முழுவதும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர். மேலும் மிரட்டல் விடுத்த மர்ம நபர் யார்? என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து ஊழியர்கள் வெளியேற்றப்பட்டனர்.
- மோப்பநாய் வரவழைக்கப்பட்டு கலெக்டர் அலுவலக வளாகம் முழுவதும் அறை அறையாக சோதனை நடைபெற்றது.
புதுச்சேரி:
புதுச்சேரி-வழுதாவூர் சாலையில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அமைந்துள்ளது.
இன்று காலை வழக்கம் போல் 8.45 மணி அளவில ஊழியர்கள் அலுவலகத்திற்கு வந்து பணிகளை தொடங்கினர். இந்த நிலையில் கலெக்டரின் அதிகாரபூர்வ மெயிலில் கலெக்டர் அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மர்ம நபர் மிரட்டல் விடுத்திருந்தார்.
வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து ஊழியர்கள் வெளியேற்றப்பட்டனர். கோரிமேடு போலீசார் மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் விரைந்து வந்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சோதனை செய்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
மோப்பநாய் வரவழைக்கப்பட்டு கலெக்டர் அலுவலக வளாகம் முழுவதும் அறை அறையாக சோதனை நடைபெற்றது. பொதுமக்கள் அலுவலகத்தில் நுழைய தடை விதிக்கப்பட்டது. சுமார் 1 ½ மணி நேர சோதனைக்கு பின்னர் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரிய வந்தது.
தமிழகத்தில் சவுக்கு சங்கர் வீட்டில் சமீபத்தில் மர்ம நபர்கள் புகுந்து பொருட்களை சூறையாடிய விவகாரத்தில் முறையான நடவடிக்கை இல்லாததை கண்டித்து மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளதாக தெரிகிறது.
- சபை கட்டுவதற்கு அனுமதிக்கோரி கடந்த பல மாதங்களாக கலெக்ட ரையும், வருவாய்துறை அதிகாரிகளையும் சந்தித்து மனு கொடுத்து வந்தார்.
- அனைத்து கிறிஸ்தவ சபை போதகர்களும் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் :
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் விடிய, விடிய போராட்டத்தில் ஈடுபட்ட கிறிஸ்தவ மக்கள், திருச்சபை கட்ட அனுமதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர்.
திருப்பூர் மண்ணரை பகுதியை சேர்ந்தவர் அருண் அந்தோணி. சபை போதகர். இவர் அதே பகுதியில் பெத்தேல் ஏ.ஜி.சபை என்ற திருச்சபையை நடத்தி வருகிறார். இந்த நிலையில் சபைக்கு சொந்த கட்டிடம் கட்டுவதற்காக கடந்த 2021-ம் ஆண்டு ஊத்துக்குளி ரோடு சர்க்கார் பெரியார்பாளையம் பகுதியில் இடம் வாங்கி, சுற்றுச்சுவர் கட்டுவதற்கா ன பணிகளை தொட ங்கியபோது, ஒருசிலர் சபை கட்டுமான பணி நடந்த இடத்திற்குள் அத்துமீறி நுழைந்து, கட்டுமான பணிகளை தடுத்ததுடன், அருகில் அரசுக்கு சொந்தமான இடத்தில் விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்தனர். இதையடுத்து இதுதொடர்பாக போதகர் அருண் அந்தோணி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். மேலும் சபை கட்டுவதற்கு அனுமதிக்கோரி கடந்த பல மாதங்களாக கலெக்ட ரையும், வருவாய்துறை அதிகாரிகளையும் சந்தித்து மனு கொடுத்து வந்தார்.
இந்த நிலையில் சொந்த இடத்தில் திருச்சபை கட்ட தொடர்ந்து அனுமதி மறுப்பதை கண்டித்தும், கிறிஸ்தவர்களின் உரிமைகளை பறிக்கும் வகையில் செயல்படும் அதிகாரிகளின் செயல்களை கண்டித்தும் பெத்தேல் ஏ.ஜி. சபை போதகர் அருண் அந்தோணி தலைமையில் சபை மக்கள் 50-க்கும் மேற்பட்டோரும், அனைத்து கிறிஸ்தவ சபை போதகர்களும் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று காலை தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் திருப்பூர் மாவட்டத்தில் கிறிஸ்தவ சபைகள் கட்டுவதற்கு அனுமதி மறுக்கப்படுவதையும், சிறுபான்மை மக்களின் உரிமைகள் தொடர்ந்து பறிக்கப்படுவதையும் தமிழக அரசுக்கு தெரியப்படுத்தும் வகையில் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவற்றை ஒப்படைக்கும் போராட்ட த்திலும் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் போரா ட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சப் கலெக்டர், வரு வாய்த் துறையினர், போலீஸ் உயரதிகாரிகள் பே ச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் எங்களது சொந்த இடத்தில் திருச்சபை கட்டுவதற்கு அனுமதி கொடுக்க வேண்டும் என்றும், அனுமதி கொடுக்கும் வரை போராட்டம் தொடரும் என்றும் கூறி, அந்த திருச்சபையைச் சார்ந்த பெண்கள், குழந்தைகள் உட்பட கிறிஸ்தவ மக்கள் விடிய, விடிய கலெக்டர் அலுவலக வளாகத்திலேயே தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் காரணமாக நேற்றும் இன்றும் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பரபரப்பான சூழ்நிலை காணப்படுகிறது.
- சித்த மருத்துவ இயக்குனர் உஷா ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றனர்.
- அரசு அலுவலர்களுக்கு இயற்கை உணவு முறைகள் நோய்களுக்கு ஏற்றவாறு யோகாசன பயிற்சிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
தென்காசி:
தென்காசி மாவட்ட கலெக்டர் கூட்டரங்கில் தேசிய இயற்கை மருத்துவ தினத்தை முன்னிட்டு எஸ்.தங்கப்பழம் மருத்துவக் கல்லூரி சார்பில் இயற்கை மருத்துவ முகாம் நடைபெற்றது.
இதில் மருத்துவப் பணிகள் துணை இயக்குனர் பிரேமலதா, சித்த மருத்துவ இயக்குனர் உஷா ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றனர். முகாமில் பங்கேற்ற அரசு அலுவலர்களுக்கு இயற்கை உணவு முறைகள் நோய்களுக்கு ஏற்றவாறு யோகாசன பயிற்சிகளும் மற்றும் இயற்கை மருத்துவ முறைகள் உள்ளிட்ட பரிசோதனைகளும் செய்யப்பட்டது.
மேலும் இதுகுறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அதிகாரிகள், அரசு அலுவலர்கள் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- பத்திரப்பதிவுத்துறையில் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் இன்று நடைபெற்றது.
- நெல்லை மண்டல துணை பதிவுத்துறை தலைவர் ராஜ்குமார் நன்றி கூறினார்.
நெல்லை:
நெல்லை மண்டலத்தில் பத்திரப்பதிவுத்துறையில் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. கலெக்டர் விஷ்ணு தலைமை தாங்கினார்.
வணிகவரி மற்றும் பதிவுத்துறை அரசு செயலாளர் ஜோதி நிர்மலாசாமி, பதிவுத்துறை தலைவர் சிவன்அருள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்டு மண்டல அளவில் பதிவுத்துறையில் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து கூட்டத்தில் பேரூரையாற்றினார்.
இதில் அப்துல்வகாப் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். நெல்லை மண்டல துணை பதிவுத்துறை தலைவர் ராஜ்குமார் நன்றி கூறினார்.
இந்த சீராய்வு கூட்டத்தில் நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் பணியாற்றும் மாவட்ட பதிவாளர்கள், சார்பதி வாளர்கள் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- நெல்லை மாவட்ட பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது
- மானூர் சுற்றுவட்டார பகுதிகளை வறட்சி பகுதியாக அறிவித்து நிவாரணமாக ஒரு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும்.
நெல்லை:
நெல்லை மாவட்ட பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கை மனு கொடுத்தனர்.
அழுகிய நெற் பயிர்கள்
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மானூர் ஒன்றிய செயலாளர் ஆபிரகாம் தலைமையில் ஏராளமான விவசாயிகள் அழுகிய நெற் பயிர்களுடன் வந்து திரண்டு வந்து கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
மானூர் சுற்றுவட்டார பகுதியில் உளுந்து நெற்பயிர்கள் ஏராளமான ஏக்கரில் பயிரிட்டுள்ளோம். இதற்கு பயிர் காப்பீடும் செய்துள்ளோம். இந்த பகுதியில் மழையை நம்பியே விவசாயிகள் காத்திருக்கிறார்கள். தற்போது வடகிழக்கு பருவமழை போதிய அளவு பெய்யாததால் குளங்கள் நிரம்பவில்லை.
இதனால் பயிர்கள் கருகி உள்ளது. எனவே மானூர் சுற்றுவட்டார பகுதிகளை வறட்சி பகுதியாக அறிவித்து நிவாரணமாக ஒரு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும். மேலும் பயிர் காப்பீடு செய்துள்ள விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டு தொகையையும் வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இந்து மக்கள் கட்சி
இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் மாரியப்பன், தென்மண்டல தலைவர் ராஜா பாண்டியன் ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் ஊர்வலமாக வந்து ஒரு மனு கொடுத்தனர்.
அதில் கூறியிருப்ப தாவது:-
இந்து மக்கள் கட்சி மாநில பொது செயலாளர் குருமூர்த்தி மீது அம்பேத்கர் சிலைக்கு காவி பூசியதாக வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனை நாங்கள் கண்டிக்கிறோம்.
இந்து அமைப்பு தலைவர்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
ஓய்வூதியம்
பேட்டை ரகுமான் பேட்டை ஆர்.பி. 1-வது தெருவை சேர்ந்த பல்கிஸ் பேகம் (வயது 63) என்பவர் கொடுத்த மனுவில், தமிழக அரசின் விதவை ஆதரவற்றோர் ஓய்வூதியம் பெறுவதற்காக நான் விண்ணப்பித்திருந்தேன். ஆனால் சில அதிகாரிகள் எனக்கு ஓய்வூதியம் பெற தகுதியில்லை என போன் மூலம் தெரிவித்தனர். பொதுவாக ஆதரவற்ற முதியோர் உதவித்தொகை பெற விண்ணப்பித்தவர்களுக்கு வீடுகளுக்கு நேரில் வந்து அதிகாரிகள் ஆய்வு செய்து, வறுமை கோட்டிற்கு கீழ் இல்லாதவர்களை நிராகரிப்பார்கள். ஆனால் எனது வீட்டிற்கு அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்யாமலேயே எனது மனுவை நிராகரித்துள்ளனர். இன்று மனு கொடுக்க வருவதை அறிந்த பின்னர் சில அதிகாரிகள் என்னிடம் சமாதானம் பேசி மீண்டும் விண்ணப்பித்தால் உதவித்தொகை பெற நடவடிக்கை எடுப்போம் என தெரிவித்தனர்.
எனவே விதவை ஓய்வூதியம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி இருந்தார்.
- கடந்த 4 நாட்களுக்கு முன்பு இரவில் அதிசயபுரம் கிராம மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
- கலெக்டர் அலுவலகத்தில் அதிசயபுரத்தை சேர்ந்த பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
தென்காசி:
வீர கேரளம் புதூர் அருகே உள்ள ராஜகோபால பேரி பஞ்சாயத்திற்கு உட்பட்ட அதிசயபுரம் கிராமத்தில் புதிதாக அரசு சார்பில் டாஸ்மாக் கடை திறக்கப்பட இருப்பதாகவும். அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறி கடந்த 4 நாட்களுக்கு முன்பு இரவில் அதிசயபுரம் கிராம மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
டாஸ்மாக் கடை அமைய உள்ள பகுதியில் இந்து மற்றும் கிறிஸ்தவ கோவில்கள் உள்ளது எனவும் அதனை திறக்க அனுமதி வழங்கக் கூடாது எனவும் கூறி தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் அதிசயபுரத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
பின்னர் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனுவை வழங்கினர். இப்போராட்டத்தில் ராஜகோபால பேரி பஞ்சாயத்து தலைவர் கிருஷ்ணவேணி, இந்திய நாடார்கள் பேரமைப்பு மாநிலத் துணைத் தலைவர் அகரக் கட்டு லூர்து நாடார், மாநில தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலாளர் கிருபாகரன்,தென்காசி நகர தலைவர் சுப்பிரமணியன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
- தென்காசி மாவட்டத்தில் 35 அரசு அலுவலகங்களின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
- கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் திருமலை முருகன் தலைமை தாங்கினார்.
தென்காசி:
சேலத்தில் கடந்த 17-ந்தேதி நடைபெற்ற தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில பிரதிநிதித்துவ பேரவை அறைகூவல் தீர்மானத்தின்படி தென்காசி மாவட்டத்தில் 35 அரசு அலுவலகங்களின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர். தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் திருமலை முருகன் தலைமை தாங்கினார். மாவட்ட இணை செயலாளர் மாடசாமி கோரிக்கைகள் குறித்த விளக்கவுரையாற்றினார்.
மேலும் தமிழ்நாடு வருவாய் துறை அலுவலரும், சங்க மாவட்ட செயலாளர் சீனிப்பாண்டி, மாவட்ட நிதி காப்பாளர் ஜாக்டோ-ஜியோ இசக்கி துரை, தமிழ்நாடு பேரூராட்சி ஊழியர் சங்க மாநில பொதுச்செயலாளர் கனகராஜ், தமிழ்நாடு வேலைவாய்ப்பு துறை ஊழியர் சங்கம் மாநில பொதுச் செயலாளர் மார்த்தாண்ட பூபதி,
தமிழ்நாடு தொழிற்பயிற்சி அலுவலர் சங்க நெல்லை மண்டல செயலாளர் சேகர் , தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்க மாவட்ட துணை தலைவர் கணேசன், தமிழ்நாடு புள்ளியியல் சார்நிலை அலுவலர், சங்க மாநில துணை தலைவர் ராதாகிருஷ்ணன் மற்றும் மாவட்ட செயலாளர் துரைசிங் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். மாவட்ட இணை செயலாளர் ராஜ் நன்றி கூறினார்.
- தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர்.
- விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணமாக ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.
தென்காசி:
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க மாநிலத் துணைத் தலைவர் கண்ணையா தலைமையில் தென்காசி மாவட்ட தலைவர் புன்னைவனம் மற்றும் விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-
வீரகேரளம்புதூர் தாலுகா வடபகுதி மற்றும் கீழ் பகுதியில் உள்ள புஞ்சை நிலங்களில் விவசாயிகள் அதிக அளவில் மானாவாரியாக உளுந்து பயிர் செய்துள்ளனர். இந்த ஆண்டில் பருவமழை சரிவர பெய்யாத காரணத்தால் உளுந்து உள்ளிட்ட பயிர் வகைகள் மற்றும் மக்காச்சோளம் உள்ளிட்டவை வறட்சி காரணமாக காய்ந்து விட்டது. எனவே மாவட்ட கலெக்டர் வறட்சி பகுதிகளை நேரில் ஆய்வு செய்து வீரகேரளம்புதூர் தாலுகா கீழ்பகுதி, வடபகுதி மற்றும் சங்கரன்கோவில் தென்பகுதி விவசாயிகளுக்கு உரிய வறட்சி நிவாரணமாக ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.
இதில் ஆலங்குளம் ஒன்றிய பொறுப்பாளர் ரவிவர்மன், செங்கோட்டை ஒன்றிய நிர்வாகி ராம்குமார், ஊத்துமலை கிளை தலைவர் நல்லபெருமாள் யாதவ், ஊத்துமலை விவசாயி முத்துப்பாண்டி, அண்ணாமலை புதூர் தங்கபாண்டி, ஊத்துமலை மாடசாமி, பரமையா தேவர் உள்பட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
- நெல்லை மாவட்ட பொது மக்கள் வாராந்திர குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
- எங்கள் கிராமத்திற்கு உட்பட்ட மருதகுளம் பகுதியில் சாலை சீரமைப்பு பணி என்ற பெயரில் பழைய சாலைகள் தோண்டப்பட்டுள்ளது. அப்போது அதிகமான அளவு மண் திருடப்பட்டுள்ளது.
நெல்லை:
நெல்லை மாவட்ட பொது மக்கள் வாராந்திர குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு மனுக்கள் கொடுத்தனர்.
மணல் திருட்டு
நாங்குநேரி தாலுகா தோட்டாக்குடி கிராம பொது மக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
எங்கள் கிராமத்திற்கு உட்பட்ட மருதகுளம் பகுதியில் சாலை சீரமைப்பு பணி என்ற பெயரில் பழைய சாலைகள் தோண்டப் பட்டுள்ளது. அப்போது அதிகமான அளவு மண் திருடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஊராட்சி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
அம்பை
அம்பை அருகே உள்ள சிவந்திபுரம் ஆறுமுகப்பட்டியை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் கொடுத்த மனுவில், ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் இணைப்பு பெறுவதற்காக ஊராட்சி மன்ற தலைவர் தகவலின் பேரில் ரூ.7,500 செலுத்தினேன்.
ஆனால் என்னிடம் அதிக அளவு பணம் பெறப்பட்டுள்ளது. மேலும் 6 மாதம் ஆகியும் அதற்கான ரசீதுகள் எனக்கு வழங்கப்படவில்லை. எனவே இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
பட்டா நிலம்
நாங்குநேரி தாலுகா மேல முனைஞ்சிபட்டியை சேர்ந்த ஆதிதிராவிட மக்கள் திரண்டு வந்து கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
எங்கள் ஊரில் 85-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்களுக்கு குடியிருப்பு பட்டா நிலம் வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் அதில் நாங்கள் வீடு கட்டாமல் வைத்துள்ளோம். தற்போது அந்த பட்டாவை ரத்து செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். எனவே அதனை தடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
பெண் புகார்
மேலப்பாளையத்தை சேர்ந்த முகம்மது நஸ்ரின் சிபிகா (வயது 23) என்பவர் கொடுத்த மனுவில், நான் 8 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டேன். திருமணத்தின் போது ரூ.1 லட்சமும், சீர்வரிசை பொருட்களும் எனது குடும்பத்தினர் கொடுத்தனர்.
தற்போது எனது கணவர் தொழில் செய்ய பெற்றோரிடம் பணம் வாங்கி வருமாறு என்னை துன்புறுத்தி வருகிறார். எனவே அவரது குடும்பத்தினரும் என்னை துன்புறுத்தி வருகிறார்கள். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.






