search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்சபை கட்ட அனுமதி கோரி திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் விடிய, விடிய போராட்டம்
    X

    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் விடிய, விடிய போராட்டம் நடத்திய மக்கள்.

    திருச்சபை கட்ட அனுமதி கோரி திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் விடிய, விடிய போராட்டம்

    • சபை கட்டுவதற்கு அனுமதிக்கோரி கடந்த பல மாதங்களாக கலெக்ட ரையும், வருவாய்துறை அதிகாரிகளையும் சந்தித்து மனு கொடுத்து வந்தார்.
    • அனைத்து கிறிஸ்தவ சபை போதகர்களும் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் விடிய, விடிய போராட்டத்தில் ஈடுபட்ட கிறிஸ்தவ மக்கள், திருச்சபை கட்ட அனுமதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர்.

    திருப்பூர் மண்ணரை பகுதியை சேர்ந்தவர் அருண் அந்தோணி. சபை போதகர். இவர் அதே பகுதியில் பெத்தேல் ஏ.ஜி.சபை என்ற திருச்சபையை நடத்தி வருகிறார். இந்த நிலையில் சபைக்கு சொந்த கட்டிடம் கட்டுவதற்காக கடந்த 2021-ம் ஆண்டு ஊத்துக்குளி ரோடு சர்க்கார் பெரியார்பாளையம் பகுதியில் இடம் வாங்கி, சுற்றுச்சுவர் கட்டுவதற்கா ன பணிகளை தொட ங்கியபோது, ஒருசிலர் சபை கட்டுமான பணி நடந்த இடத்திற்குள் அத்துமீறி நுழைந்து, கட்டுமான பணிகளை தடுத்ததுடன், அருகில் அரசுக்கு சொந்தமான இடத்தில் விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்தனர். இதையடுத்து இதுதொடர்பாக போதகர் அருண் அந்தோணி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். மேலும் சபை கட்டுவதற்கு அனுமதிக்கோரி கடந்த பல மாதங்களாக கலெக்ட ரையும், வருவாய்துறை அதிகாரிகளையும் சந்தித்து மனு கொடுத்து வந்தார்.

    இந்த நிலையில் சொந்த இடத்தில் திருச்சபை கட்ட தொடர்ந்து அனுமதி மறுப்பதை கண்டித்தும், கிறிஸ்தவர்களின் உரிமைகளை பறிக்கும் வகையில் செயல்படும் அதிகாரிகளின் செயல்களை கண்டித்தும் பெத்தேல் ஏ.ஜி. சபை போதகர் அருண் அந்தோணி தலைமையில் சபை மக்கள் 50-க்கும் மேற்பட்டோரும், அனைத்து கிறிஸ்தவ சபை போதகர்களும் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று காலை தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் திருப்பூர் மாவட்டத்தில் கிறிஸ்தவ சபைகள் கட்டுவதற்கு அனுமதி மறுக்கப்படுவதையும், சிறுபான்மை மக்களின் உரிமைகள் தொடர்ந்து பறிக்கப்படுவதையும் தமிழக அரசுக்கு தெரியப்படுத்தும் வகையில் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவற்றை ஒப்படைக்கும் போராட்ட த்திலும் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் போரா ட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சப் கலெக்டர், வரு வாய்த் துறையினர், போலீஸ் உயரதிகாரிகள் பே ச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் எங்களது சொந்த இடத்தில் திருச்சபை கட்டுவதற்கு அனுமதி கொடுக்க வேண்டும் என்றும், அனுமதி கொடுக்கும் வரை போராட்டம் தொடரும் என்றும் கூறி, அந்த திருச்சபையைச் சார்ந்த பெண்கள், குழந்தைகள் உட்பட கிறிஸ்தவ மக்கள் விடிய, விடிய கலெக்டர் அலுவலக வளாகத்திலேயே தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் காரணமாக நேற்றும் இன்றும் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பரபரப்பான சூழ்நிலை காணப்படுகிறது.

    Next Story
    ×