என் மலர்
நீங்கள் தேடியது "sand theft"
- இரவு நேரங்களில் மணல் திருட்டு படுஜோராக நடந்து வருகிறது.
- மணல் கொள்ளை மாட்டுவண்டி, டிராக்டர் டிப்பர் மூலம் நடக்கிறது.
கடலூர்:
திட்டக்குடி வெள்ளா ற்றில் இரவு நேரங்க ளில் மணல் திருட்டு படுஜோராக நடந்து வருகிறது. கடலூர் மாவட்டம் திட்டக்குடி வெள்ளாற்றங்கரையோரத்தில் திட்டக்குடி, வதிஷ்ட்ட புரம், தரும குடிகாடு, இடைச்செருவாய் உள்ளிட்ட கிராமங்களில் மணல் கொள்ளை மாட்டுவண்டி, டிராக்டர் டிப்பர் மூலம் நடக்கிறது. இரவு முழுக்க மணல் திருடுவது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தும் அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை . வெள்ளாற்றில் பரவலாக மணல் திருட்டு என்பது வாடிக்கையாக நடைபெறும். கொரோனா ஊரடங்கு காலத்தில் மணல் திருட்டு சிறிது குறைந்திருந்தது. ஆனால் சில நாட்களாக வெள்ளாற்றில் மணல் திருட்டு மீண்டும் அதிகரித்துள்ளது. தொடரும் மணல் திருட்டால், நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப் பட்டுள்ளதாக பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில் வெள்ளாற்றில் மணல் கொள்ளையில் ஈடுபட்டு வரும் சமூகவிரோத கும்பலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வா கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து வருவாய் துறை, காவல் துறை அதிகாரி களுக்கு தகவல் தெரி வித்தும், அவர்களை கட்டுப்படுத்த முடிய வில்லை. இதில் அரசியல் தலை யீடும் இருப்பதால் மணல் கொள்ளையர்களை கட்டுப்படுத்த அதிகாரிகளுக்கு பெரும் சவாலாக உள்ளது. இனி வெயில் காலம் என்பதால் நீர்மட்டம் குறையும் நிலையில் உள்ளது அரசு அதிகாரிகள் பொறுப்புடன் ஓரளவு செயல்பட் டால் இது போன்ற மணல் திருட்டை கனிமவளத் திருட்டை தடுக்க முடியும் என்பது சமூக ஆர்வலரின் கோரிக்கை.
- நெல்லை மாவட்ட பொது மக்கள் வாராந்திர குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
- எங்கள் கிராமத்திற்கு உட்பட்ட மருதகுளம் பகுதியில் சாலை சீரமைப்பு பணி என்ற பெயரில் பழைய சாலைகள் தோண்டப்பட்டுள்ளது. அப்போது அதிகமான அளவு மண் திருடப்பட்டுள்ளது.
நெல்லை:
நெல்லை மாவட்ட பொது மக்கள் வாராந்திர குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு மனுக்கள் கொடுத்தனர்.
மணல் திருட்டு
நாங்குநேரி தாலுகா தோட்டாக்குடி கிராம பொது மக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
எங்கள் கிராமத்திற்கு உட்பட்ட மருதகுளம் பகுதியில் சாலை சீரமைப்பு பணி என்ற பெயரில் பழைய சாலைகள் தோண்டப் பட்டுள்ளது. அப்போது அதிகமான அளவு மண் திருடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஊராட்சி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
அம்பை
அம்பை அருகே உள்ள சிவந்திபுரம் ஆறுமுகப்பட்டியை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் கொடுத்த மனுவில், ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் இணைப்பு பெறுவதற்காக ஊராட்சி மன்ற தலைவர் தகவலின் பேரில் ரூ.7,500 செலுத்தினேன்.
ஆனால் என்னிடம் அதிக அளவு பணம் பெறப்பட்டுள்ளது. மேலும் 6 மாதம் ஆகியும் அதற்கான ரசீதுகள் எனக்கு வழங்கப்படவில்லை. எனவே இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
பட்டா நிலம்
நாங்குநேரி தாலுகா மேல முனைஞ்சிபட்டியை சேர்ந்த ஆதிதிராவிட மக்கள் திரண்டு வந்து கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
எங்கள் ஊரில் 85-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்களுக்கு குடியிருப்பு பட்டா நிலம் வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் அதில் நாங்கள் வீடு கட்டாமல் வைத்துள்ளோம். தற்போது அந்த பட்டாவை ரத்து செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். எனவே அதனை தடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
பெண் புகார்
மேலப்பாளையத்தை சேர்ந்த முகம்மது நஸ்ரின் சிபிகா (வயது 23) என்பவர் கொடுத்த மனுவில், நான் 8 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டேன். திருமணத்தின் போது ரூ.1 லட்சமும், சீர்வரிசை பொருட்களும் எனது குடும்பத்தினர் கொடுத்தனர்.
தற்போது எனது கணவர் தொழில் செய்ய பெற்றோரிடம் பணம் வாங்கி வருமாறு என்னை துன்புறுத்தி வருகிறார். எனவே அவரது குடும்பத்தினரும் என்னை துன்புறுத்தி வருகிறார்கள். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
- நேற்று இரவு சுமார் 1.30 மணி அளவில் பிலிக்கல்பா ளையம் காவிரி ஆற்று பகுதிக்கு திடீரென சென்று ஆய்வு செய்தபோது காவிரி ஆற்றுக்குள் சுமார் 150க்கும் மேற்பட்ட மணல் மூட்டைகள் வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
- போலீசாரை பார்த்ததும் மணல் அள்ளிக்கொண்டிருந்த சுமார் 5-க்கும் மேற்பட்டோர் அங்கு இருந்து தப்பி ஓடிவிட்டனர்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுக்கா பிலிக்கல்பாளையம் காவிரி ஆற்றில் இரவு நேரங்களில் மணல் அள்ளி கடத்தப்படுவதாக அப்பகுதியை சேர்ந்தவர்கள் பரமத்தி வேலூர் துணைக் காவல் கண்காணிப்பாளர் கலையரசனுக்கு ரகசிய தகவல் தெரிவித்தனர்.
அதன் அடிப்படையில் பரமத்தி வேலூர் போலீஸ் டிஎஸ்பி கலைய ரசன் தலைமையில் ஜேடர்பா ளையம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, தனிப்படை சிறப்பு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் லட்சுமணன் ,தனிப்படை தலைமைக் காவலர் பிரவீன் ஆகி யோர் கொண்ட குழுவினர் நேற்று இரவு சுமார் 1.30 மணி அளவில் பிலிக்கல்பா ளையம் காவிரி ஆற்று பகுதிக்கு திடீரென சென்று ஆய்வு செய்தபோது காவிரி ஆற்றுக்குள் சுமார் 150க்கும் மேற்பட்ட மணல் மூட்டைகள் வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. போலீசாரை பார்த்ததும் மணல் அள்ளிக்கொண்டிருந்த சுமார் 5-க்கும் மேற்பட்டோர் அங்கு இருந்து தப்பி ஓடிவிட்டனர். பின்னர் போலீசார் மணல் மூட்டைகளின் சாக்குகளை அறுத்து மணலைகொட்டிச் சென்றனர். பின்னர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் . இந்நிலையில் பரமத்தி வேலூர் உட்கோட்ட கட்டுப்பாட்டில் உள்ள காவிரி ஆற்றில் திருட்டுத்தனமாக மணலை அள்ளி மணல் திருட்டில் ஈடுபட்டால் அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்படுவார்கள் என போலீஸ் டி.எஸ்.பி. கலையரசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
- சட்டவிரோத மணல் திருட்டு நடைபெறுவது எப்படி? என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளது.
- அமராவதி ஆற்றின் கரையில் 10 முதல் 15 அடி ஆழம் வரை தோண்டி மணல்கள் திருடப்பட்டு உள்ளது.
மதுரை
கரூர் மாவட்டம், சாணிபிரட்டி கிராமத்தை சேர்ந்த குணசேகரன் மதுரை ஐகோர்ட்டில் ஒரு மனுவினை தாக்கல் செய்தார்.
அதில், தமிழ்நாடு, கேரளா எல்லைப் பகுதியில் அமராவதி ஆறு உருவாகிறது. அமராவதி ஆறு திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டத்திற்கு குடிநீர் மற்றும் விவசாய தேவையை பூர்த்தி செய்கிறது. அமராவதி ஆற்றின் கரையில் 10 முதல் 15 அடி ஆழம் வரை தோண்டி மணல்கள் திருடப்பட்டு உள்ளது.
இரவு நேரங்களில் மாட்டு வண்டிகளைக் கொண்டும் ஆற்றுக்கு செல்வதற்கு பாதைகள் அமைத்து ஆற்று மணலை திருடி வருகின்றனர்.சட்டவிரோதமாக ஆற்று மணலை திருடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
எனவே, அமராவதி ஆற்றில் சட்டவிரோதமாக மணல் எடுப்பதை தடுக்கவும், மணல் எடுப்பதற்காக ஆற்றில் போடப்பட்ட பாதையை அகற்றி உத்தரவிட வேண்டும். என்று கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், மணல் திருட்டை தடுப்பதற்கு பல்வேறு உத்தரவுகளை இந்த நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. இருந்தும் சட்ட விரோத மணல் திருட்டு நடைபெறுவது எப்படி? என கேள்வி எழுப்பினர்.
மேலும், தமிழகம் முழுவதும் சட்டவிரோத மணல் திருட்டு என்பது இருக்கக் கூடாது எனக் கூறி வழக்கு குறித்து தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 2 வாரத்திற்கு பிறகு நடைபெறும் என்று தெரிவித்து ஒத்திவைத்தனர்.
- திட்டக்குடி அருகே வெள்ளாற்றில் மணல் திருடிய கும்பல் கைது செய்யப்பட்டனர்.
- ஒரு ஜேசிபி, ஒரு மினி லாரி, ஒரு இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து செய்துள்ளனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே கீழக்கல்பூண்டி கிராமத்தில் உள்ள வெள்ளாற்றில் நேற்று இரவு அனுமதி இன்றி மணல் திருடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் வெள்ளாற்றில் மணல் அள்ளிக் கொண்டிருந்த புதுக்குளம் கிராமத்தை சேர்ந்த முருகானந்தம் (28), புலிக்கரைம்பலூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (29), கீழக்கல் பூண்டி கிராமத்தை சேர்ந்த மணிரத்தினம் (32), கண்டமத்தான் கிராமத்தைச் சேர்ந்த செல்வகுமார் (43) மற்றும் இவர்களுடன்2 சிறுவர்கள் இணைந்து மினி லாரியில் ஜேசிபி உதவியுடன் மணல் அள்ளிக்கொண்டிருந்த போது போலீசார் கையும் களவுவமாக பிடித்தனர். தகவலின் பேரில் இரவு சம்பவ இடத்திற்கு வந்த திட்டக்குடி டிஎஸ்பி காவியா மற்றும் ராமநத்தம் (பொறுப்பு) இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன், மற்றும் போலீசார் ராமநத்தம் காவல் நிலையம் அவர்களை அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதுகுறித்து ராமநத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர். அவரிடம் இருந்து ஒரு ஜேசிபி, ஒரு மினி லாரி, ஒரு இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து செய்துள்ளனர்.
- போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
- உபகரணங்கள் பறிமுதல் செய்தனர்.
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் நேற்று நாட்டறம்பள்ளி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர் .
அப்போது பச்சூர் அருகே உள்ள ஆற்றில் அரசு அனுமதியின்றி மணல் எடுத்து கொண்டு இருப்பதாக தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில்
போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்றனர்.
இது சம்பந்தமாக பச்சூர் பகுதியில் உள்ள ஆற்றில் மணல் எடுத்து கொண்டு இருந்த 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இவர்களிடமிருந்து மணல் அள்ளி கொண்டு இருந்த உபகரணங்கள் பறிமுதல் செய்தனர்.
- மணிமுத்தாறு கால்வாய் அருகே சிலர் 3 லாரிகளில் எம்.சாண்ட் மணல் அள்ளிக்கொண்டிருந்தனர்.
- எம்.சான்ட் குவாரியில் இருந்து பாஸ் இல்லாமல் மணல் திருடப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
நாங்குநேரி:
நாங்குநேரி அருகே வடக்கு விஜயநாராயணம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தவசிலிங்கம் தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
சவளைக்காரன்குளம் சாலையில் மணிமுத்தாறு கால்வாய் அருகே சென்றபோது சிலர் 3 லாரிகளில் எம்.சாண்ட் மணல் அள்ளிக்கொண்டிருந்தனர். அவர்கள் போலீசாரை கண்டதும் வாகனங்களை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி ஓட முயன்றனர்.
அவர்களை மடக்கி பிடித்து நடத்திய விசாரணையில், சவளைகாரன்குளத்தை சேர்ந்த ஆறுமுகநயினார்(33), வடக்கு விஜயநாராயணம் பகுதியை சேர்ந்த மாடசாமி(37), சண்முக சுந்தரம்(36) ஆகியோர் என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். நாங்குநேரி குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பிரேமா வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தார்.
தொடர்ந்து நடத்திய விசாரணையில் நாங்குநேரி அருகே உள்ள இலங்குளத்தை சேர்ந்த இஸ்ரவேல் பிரபாகரன் என்பவருக்கு சொந்தமான எம்.சான்ட் குவாரியில் இருந்து பாஸ் இல்லாமல் மணல் திருடப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் இஸ்ரவேல் பிரபாகரனையும் வழக்கில் சேர்த்தனர். இதனையறிந்த அவர் தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.
தலைமறைவான இஸ்ரவேல் பிரபாகரன் தி.மு.க.வை சேர்ந்தவர். அவர் தற்போது இலங்குளம் பஞ்சாயத்து தலைவராக உள்ளார்.
நாகையை அடுத்த நாகூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் மற்றும் போலீசார் நேற்று காலை கங்களாஞ்சேரி சாலை தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 2 லாரிகளை மறித்து சோதனை செய்தனர். அதில் அனுமதியின்றி ஆற்று மணல் ஏற்றி வந்தது தெரிய வந்தது.
தொடர்ந்து லாரியில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தியதில் லாரி டிரைவர்கள் கீழ்வேளூர் கோகூர் மெயின் ரோட்டை சேர்ந்த சிவகுமார் (வயது 48), சிக்கல் குற்றம்புரிந்தானிருப்பு சிவன் கோவில் தெருவை சேர்ந்த செல்லதுரை (36) ஆகியோர் என்பதும், இவர்கள் உரிய அனுமதியின்றி வலங்கைமான் பகுதியில் உள்ள ஆற்றில் இருந்து மணல் ஏற்றி வந்ததும் தெரியவந்தது.
இதுகுறித்து நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவகுமார், செல்லதுரை ஆகிய 2 பேரையும் கைது செய்ததுடன், 2 லாரிகளையும் பறிமுதல் செய்தனர்.
கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணனுக்கு பண்ருட்டி பகுதி தென்பெண்ணை ஆற்றில் மணல் கடத்தல் நடைபெறுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு நாகராஜன் மேற்பார்வையில் பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம், சப்-இன்ஸ்பெக்டர்கள் சந்திரன், பாக்கியலட்சுமி, பால சுப்பிரமணியன் மற்றும் போலீசார் பண்ருட்டி பகுதியில் மணல் கடத்தல் தடுப்பு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது புலவனூரில் இருந்து மாட்டுவண்டிகளில் மணல் அள்ளி வந்தவர்களை பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள் தென்பெண்ணை ஆற்றில் இருந்து மணல் கடத்தி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து மாட்டுவண்டிகளை ஓட்டி வந்த தட்டாம்பாளையத்தை சேர்ந்த சிவராமன்(வயது 35), தட்சிணாமூர்த்தி(52), சந்திரவேல்(39) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
இதேபோல் மேல்குமாரமங்கலம் தென்பெண்ணையாற்றங்கரை அருகே மாட்டுவண்டிகளில் மணல் கடத்தி வந்த மேல்குமாரமங்கலத்தை சேர்ந்த பொன்மன்னன்(40), அம்பிகாபதி(27), லோகநாதன்(27), காசிநாதன்(37), அழகுநாதன்(45), ராமமூர்த்தி(40), கிருஷ்ணமூர்த்தி(53), லட்சுமணன்(48) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் இவர்களிடம் இருந்து 11 மாட்டுவண்டிகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.