என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பறிமுதல்"
- சந்தேகத்திற்கிடமான முறையில் நிறுத்தப்பட்டிருந்த படகை நோக்கி சுங்கத்துறை அதிகாரிகள் சென்றனர்.
- ராமநாதபுரம் மாவட்டத்தில் அன்னிய ஊடுருவல் மற்றும் கடத்தலை தடுக்க சஜாக் என்ற பெயரில் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது.
ராமேசுவரம்:
ராமேசுவரத்தில் இருந்து கடல் வழியாக மிகவும் அருகாமையில் உள்ள அண்டை நாடான இலங்கைக்கு இங்கிருந்து மஞ்சள், பீடி உள்ளிட்டவை அதிக அளவில் கடத்தப்பட்டு வருகிறது. அதேபோல் இலங்கையில் இருந்து வரி ஏய்ப்பு செய்து தமிழகத்திற்கு தங்கம் போன்ற விலை உயர்ந்த பொருட்கள் கடத்தலும் வழக்கமான ஒன்றாகி விட்டது.
இதனை தடுப்பதற்காக இந்திய கடலோர காவல் படை, கடற்படை போலீசார், அதிநவீன ஹோவர் கிராப்ட் படகுகள், சுங்கத்துறை உள்ளிட்டவை தீவிர கண்காணிப்பு பணியில் இருந்தபோதிலும் அதனையும் மீறி கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது.
சமீபத்தில் இரண்டு முறை இலங்கையில் இருந்து தங்கம் கடத்தலும், அதிகாரிகளை பார்த்ததும் கடத்தல் கும்பல் தங்க கட்டிகளை கடலில் வீசி எறிந்துவிட்டு தப்பிச்சென்ற சம்பவங்களும் நடந்தன. இந்த நிலையில் இலங்கையில் இருந்து ராமேசுவரத்திற்கு தங்கம் கடத்தப்பட இருப்பதாக திருச்சி சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் சுங்கத்துறை உதவி ஆணையர் ரவி அற்புதராஜ் தலைமையில், 10 பேர் கொண்ட குழுவினர் கடந்த 2 நாட்களாக ராமேசுவரத்தில் முகாமிட்டு கடலோர பகுதிகளை தீவிரமாக கண்காணித்து வந்தனர். நேற்று நள்ளிரவில் பாம்பன் முந்தல்முனை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் நிறுத்தப்பட்டிருந்த படகை நோக்கி சுங்கத்துறை அதிகாரிகள் சென்றனர். அவர்களை வருவதை பார்த்ததும் அந்த படகில் இருந்து 4 மர்மநபர்கள் தப்பி ஓடி தலைமறைவாகினர். இதையடுத்து அந்த படகை அதிகாரிகள் சல்லடை போட்டு சோதனை நடத்தினர்.
இதில் படகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.2 கோடியே 15 லட்சம் மதிப்புள்ள 3½ கிலோ எடையுள்ள தங்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதிகாரிகள் அந்த தங்கத்தை கைப்பற்றியதோடு, தங்கம் கடத்தி வந்த நாட்டுப்படகையும் பறிமுதல் செய்து பாம்பன் சுங்கத்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.
தங்கம் கடத்தி வந்த மர்மநபர்கள் யார், எங்கு தங்கியிருக்கிறார்கள், யாருக்காக இந்த தங்கம் இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்டது என்பது தொடர்பாக தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இதற்கிடையே நேற்று ராமநாதபுரம் மாவட்டத்தில் அன்னிய ஊடுருவல் மற்றும் கடத்தலை தடுக்க சஜாக் என்ற பெயரில் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது.
60 பேர் கொண்ட படையினர் 4 குழுக்களாக பிரிந்து 180 கிலோ மீட்டர் கடல் பரப்பில் நேற்று சஜாக் என்ற பெயரில் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்ட நிலையில் மறுநாளான இன்று இலங்கையில் இருந்து துணிச்சலாக தங்கம் கடத்தி வரப்பட்டுள்ளது கடலோர காவல் படையினருக்கு சவால் விடுக்கும் வகையில் அமைந்துள்ளது.
- கடந்த 28 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கப்பட்ட பெண் யானை ஒன்று இந்த தர்காவினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது.
- வனத்துறையினர் யானையை மீட்டு திருச்சியில் உள்ள முகாமிற்கு ஏற்றி அனுப்பி வைத்தனர்.
கடையநல்லூர்:
மதுரை-தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் கடைய நல்லூர் பகுதியில் மக்தூம் ஞானியார் தர்கா உள்ளது.
இந்த தர்காவில் நூறாண்டுகளுக்கு மேலாக பள்ளிவாசலுக்கு என்று சொந்தமாக யானை வாங்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி கடந்த 28 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கப்பட்ட பெண் யானை ஒன்று இந்த தர்காவினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த யானையை வளர்க்க சில ஆண்டுகளாக வனத்துறையிடம் முறையான அனுமதி பெறாமல் தர்காவினர் வளர்த்து வந்ததால், வனத்துறை தெரிவித்த தகவலின்பேரில், சென்னையில் இருந்து யானை பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு கமிட்டியினர் ஒரு குழுவாக கடையநல்லூர் வந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு யானையை பார்வையிட்டனர்.
இந்நிலையில் யானையை வளர்க்க தோட்டம், நீச்சல் குளம், தூங்குவதற்கு தேவையான வசதிகள் உள்ளிட்டவை தர்காவில் இல்லை என்று கூறி உடனடியாக இந்த யானையை பறிமுதல் செய்து திருச்சியில் உள்ள யானைகள் முகாமிற்கு கொண்டு செல்ல அந்த குழு உத்தரவு பிறப்பித்தது.
அதனைத்தொடர்ந்து நேற்று இரவு கடையநல்லூர் ரேஞ்சர் சுரேஷ்குமார் தலைமையிலான வனத்துறையினர் யானையை மீட்டு திருச்சியில் உள்ள முகாமிற்கு ஏற்றி அனுப்பி வைத்தனர்.
தற்போது 58 வயது கொண்ட இந்த பெண் யானையின் எடை 4.5 டன் ஆகும். இந்த தர்காவிற்கு இது 5-வது யானையாகும். நூற்றாண்டு பழமையான இந்த தர்காவில் இருந்து யானையை வனத்துறையினர் கைப்பற்றி சென்றது அங்குள்ளவர்களுக்கு வேதனையை ஏற்படுத்தியது.
இதனால் பொதுமக்கள் அங்கு திரண்டு வந்து யானையுடன் செல்பி எடுத்துக் கொண்டனர். அதேநேரத்தில் யானை பாகன் நத்கர் பாதுஷா, யானையின் பிரிவை தாங்க முடியாமல் கண்ணீர் விட்டு அழுதபடி யானைக்கு பிரியா விடை கொடுத்தார்.
- கரூர் மாவட்டம் வேலாயு தம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.
- அப்போது அங்கு விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 31 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்பிலான 13 கிலோ பான் மசாலா, குட்கா, பான்பராக், ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
வேலாயுதம்பாளையம்
கரூர் மாவட்டம் வேலாயு தம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்கு விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 31 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்பிலான 13 கிலோ பான் மசாலா, குட்கா, பான்பராக், ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கடை உரிமையாளர் ரமேஷ் கைது செய்யப்பட்டார்.
அதேபோல் வேலாயு தம்பாளையம்-நொய்யல் செல்லும் சாலையில் உள்ள புங்கோடை பகுதியில் வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டபோது, தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்களை, நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பாப்பன் தோட்டம் பகுதியைச் சேர்ந்த ராமசாமி(வயது 57) என்பவர் கடைகளுக்கு சப்ளை செய்ய வந்தது தெரிய வந்தது. அவரிடம் இருந்த 2 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 2 கிலோ புகையிலைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசார ணையில் பெங்களூருவில் இருந்து, வாங்கி வந்து கடைகளுக்கு விற்பனை செய்து வருவதாக தெரிவி த்தார். இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து தீவிர விசா ரணை நடத்தி வருகின்றனர்.
- மோட்டார் சைக்கிளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
- பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் மதிப்பு ரூ.5 ஆயிரம் ஆகும்.
நீடாமங்கலம்:
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் குடமுருட்டி ஆற்றுப்பகுதியில் வலங்கை மான் இன்ஸ்பெக்டர் சந்தனமேரி, போலீஸ் சந்திரமோகன், சிறப்பு தனிப்படை போலீஸ் அறிவழகன் மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது கும்பகோணத்தில் இருந்து வந்த ஒரு மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்தனர்.
மோட்டார் சைக்கிளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர், நடத்திய சோதனையில் அவரிடம் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கம் இருப்பது தெரியவந்தது.
தொடர்ந்து, அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் கும்பகோணம் அருகே உள்ள அண்ணலக்ரஹாரம் பகுதியை சேர்ந்த ராஜேஷ் (வயது 31) என்பது தெரியவந்தது.
பின், போலீசார் அவரிடம் இருந்த புகையிலை பொருட்கள் மற்றும் ரொக்கத்தை பறிமுதல் செய்து ராஜேஷை கைது செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் மதிப்பு ரூ.5 ஆயிரம் ஆகும்.
இதுகுறித்து வலங்கைமான் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்பத்தியது.
- நவம்பர் 22-ந் தேதி காலை 9 மணி முதல் நேற்று காலை 9 மணி வரை ரூ.12.16 கோடி மதிப்பிலான பணம் மற்றும் மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
- நேற்றைய நிலவரப்படி 8,574 கிலோ கஞ்சா, 479 கஞ்சா செடிகள், 30 கிலோ மஜ்ரிவாலா கலந்த சாக்லேட் பார்கள், 3 கிலோ கஞ்சா எண்ணெய் கைப்பற்றப்பட்டு உள்ளது
தெலுங்கானா சட்டமன்றத் தேர்தல் அட்டவணையை தேர்தல் ஆணையம் அக்டோபர் 9-ந் தேதி அறிவித்தது. அதன்படி வருகின்ற 30-ந் தேதி தெலுங்கானா சட்டமன்றத்திற்கு தேர்தல் நடைபெற உள்ளது.
அதன்படி அக்டோபர் 9-ந் தேதி முதல் தேர்தல் நடைமுறை அமலுக்கு வந்தது. இதையடுத்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் வாக்காளர்களுக்கு பணம் பரிசு பொருட்கள் வழங்குவது தடுக்கும் விதமாக மாநில முழுவதும் ஆங்காங்கே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.
வாகன தணிக்கையின் போது 2 லட்சத்து 96 ஆயிரத்து 595 கிலோ அரிசி, 9,207 யூனிட் குக்கர்கள், 88 ஆயிரத்து 496 புடவைகள், 18,576 கடிகாரங்கள், 7 லட்சத்து 24 ஆயிரத்து 713 செல்போன்கள், 86 ஆயிரத்து 113 தையல் ஏந்திரங்கள், 86 ஆயிரத்து 115 மின்விசிறிகள், 40 டிவிக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அதிகபட்சமாக நவம்பர் 22-ந் தேதி காலை 9 மணி முதல் நேற்று காலை 9 மணி வரை ரூ.12.16 கோடி மதிப்பிலான பணம் மற்றும் மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
நேற்றைய நிலவரப்படி 8,574 கிலோ கஞ்சா, 479 கஞ்சா செடிகள், 30 கிலோ மஜ்ரிவாலா கலந்த சாக்லேட் பார்கள், 3 கிலோ கஞ்சா எண்ணெய் கைப்பற்றப்பட்டு உள்ளது. போதைப் பொருட்கள் கடத்தலின் மதிப்பு ரூ.35.09 கோடியாகும். இலவச பொருட்கள் மற்றும் இதர பொருட்களின் மதிப்பு ரூ.81.18 கோடி ஆகும். மாநிலம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 87.23 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
அக்டோபர் 9-ந் தேதி முதல் நேற்று வரை ரூ 260 கோடி மதிப்பிலான ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தெலுங்கானா சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் நேற்று வரை மொத்தம் ரூ.669 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடலூர்:
ராமத்தில் உள்ள வெள்ளாற்றில் இரவு நேரங்களில் மர்ம நபர்கள் அரசு அனுமதியின்றி மணல் எடுப்பதாக புகார் வந்ததை அடுத்து நேற்று நள்ளிரவு ஆவினங்குடி போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது வெள்ளாற்றில் இருந்து மணல் ஏற்றிக்கொண்டு வந்த தொளார் கிராமத்தை சேர்ந்த பிச்சப்பிள்ளை (வயது 45), ராஜசேகரன் (45), கொடிகளம் கிராமத்தைச் சேர்ந்த அழகரசன் 25, கூடலூர் கிராமத்தை சேர்ந்த ராஜ்குமார் (33) ஆகிய 4 பேரும் மாட்டு வண்டியில் மணல் அள்ளி வரும் பொழுது கையும் கழுவுமாக பிடிபட்டனர். 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து, கைது செய்த போலீசார் நான்கு மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர். மேலும் 2 பேரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
- கடைகளில் இருந்து மொத்தம் ரூ.1,600 அபராதம் விதிக்கப்பட்டது.
- பறிமுதல் செய்யப்பட்ட பிளாஸ்டிக்குகள் நகராட்சி வளாகம் கொண்டு வரப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகர் பகுதியில் கடைகளில் ஒரு முறை பயன்படுத்தப்படும் நெகிழிப்பைகள் அரசு தடை செய்யப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் பயன்பா ட்டிற்கு வழங்கப்படுகிறதா, விற்கப்படுகிறதா என நகராட்சி ஆணையர் ஹேமலதா, நகர் மன்ற தலைவர் துர்கா ராஜசேகரன் ஆகியோர் அறிவுறுத்தலையின்படி நகராட்சி பணியாளர்கள் உதவியோடு நகரின் பல்வேறு பகுதிகளில் வர்த்தக நிறுவனங்கள் கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்ப ட்டது.
பல்வேறு கடைகளில் 50 கிலோ நெகிழிப்பைகள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.1600 அபராதம் விதிக்க ப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட நெகிழி பைகள நகராட்சி வளாகம் கொண்டு வரப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டது.
இளநிலை உதவியாளர் பாபு, பணி மேற்பார்வையாளர் கலிய பெருமாள், பரப்புரையாளர் அலெக்ஸாண்டர் ஆகியோர் உடன் இருந்தனர்.
- 24 மூட்டைகளில் பதுக்கிய போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
- இதன் மதிப்பு ரூ. 2 லட்சத்து 20 ஆயிரம் ஆகும்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டத்தில் கஞ்சா, மது கடத்தல், புகையிலை விற்பனை மற்றும் கடத்தலை தடுக்கும் வகையில் பல்வேறு இடங்களில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நாகூரை அடுத்த தெத்தியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை முட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதாக நாகூர் இன்ஸ்பெ க்டர் சதீஷ்குமார்க்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து தெத்தி ஜம்மியத் நகரில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.
அப்போது முகம்மது சித்திக் என்பவரது வீட்டில் மூட்டை, மூட்டையாக அடுக்கி வைத்த பட்டிருந்த குட்கா, பான்மசாலா, கூலிப் உள்ளிட்ட போதைப் பொருட்களை போலீசார் கண்டுபிடித்தனர்.
இதனையடுத்து 24 மூட்டைகளில் இருந்த 300 கிலோ மதிப்புள்ள புகையிலை பாக்கெட் முட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் போதை பொருளை கடத்திய முகம்மது சித்தீக் என்பவரை கைது செய்தனர்.
மேலும் தப்பி ஓடிய ஒருவரை நாகூர் போலீசார் தேடி வருகின்றனர்.
ரூ. 2 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பிலான கைப்பற்றப்பட்ட போதை பொருட்களை நாகூர் காவல் நிலையத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் நேரில் பார்வையிட்டு போலீசாரை பாராட்டினார்.
இதில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன், நாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர்க் சதீஷ்குமார், முதல் நிலை காவலர்கள் மதியழகன், காமேஷ்,உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
- தனிப்படை போலீசார் வெளிப்பாளையம் பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தினர்.
- மது விற்பனையில் ஈடுபட்டவர்களை கைது செய்த தனிப்படை போலீசாருக்கு பாராட்டு தெரிவித்தார்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங், உத்தரவின் பேரில் கள்ளச்சாராய விற்பனை மற்றும் கடத்தல் ஆகியவற்றினை கட்டுப்படுத்த தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்று போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் தனிப்படை போலீசார் வெளிப்பாளையம் பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தினர்.
இதில் ஏழை பிள்ளையார் கோவில் அருகில் சட்டத்திற்கு புறம்பாக புதுச்சேரி மாநில மது பாட்டில்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த செல்லூர் சுனாமி குடியிருப்பை சேர்ந்த பாண்டித்துரை (வயது 28) என்பவரை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடமிருந்து ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள புதுச்சேரி மாநில 570 மது பாட்டில்கள் மற்றும் 140 சாராய பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஒரு மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.
அதே போல புதிய பஸ் நிலையம் அருகே புதுச்சேரி மாநில மது பாட்டில்களை விற்பனைக்காக வைத்திருந்த சிவன்காளை என்பவரது மனைவி மகேஷ்வரி (40), விஜயகுமார் என்பவரது மனைவி திவ்யா (40) ஆகிய இரண்டு பேரை கைது செய்த தனிப்படை போலீசார் அவர்களிடம் இருந்த 300 புதுச்சேரி மாநில மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
நாகையில் புதுச்சேரி மாநில மது பாட்டில்களை கடத்தி வைத்திருந்த 2 பெண்கள் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். சிறப்பாக செயல்பட்டு சட்டவிரோதமாக மது விற்பனை ஈடுபட்டவர்களை கைது செய்த தனிப்படை போலீசாருக்கு பாராட்டு தெரிவித்தார்.
- தர்மபுரி வாலிபர் கைது
- ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரணை
கோவை,
கோவை மத்திய சிறையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் சிறைக்குள் தடைசெய்யப்பட்ட செல்போன், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை பயன்படுத்துகிறார்களா? என போலீசார் அடிக்கடி ஆய்வு செய்வது வழக்கம்.
இந்த நிலையில் நேற்று சிறையின் நுழைவுவாயில் அருகே சந்தேகம்படும்படி நின்றிருந்த ஒருவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார்.
எனவே போலீசார் அவரை சோதனை செய்து பார்த்தனர். இதில் அவர் ஒரு கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதற்காக வந்திருந்தது தெரிய வந்தது. தொடர்ந்து அவரிடம் ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இது குறித்து மத்திய சிறை ஜெயிலர் சிவராஜன், ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் அவர் தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டியை சேர்ந்த கூலிதொழிலாளி கிரி(வயது 19) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.