search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மார்த்தாண்டம்"

    • கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு
    • தொண்டர் அணி சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம்

    நாகர்கோவில் : கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு குமரி மேற்கு மாவட்ட தி.மு.க. மகளிர் அணி மற்றும் தொண்டர் அணி சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மார்த்தாண்டம் வெட்டுமணி ஒய்.எம்.சி.ஏ.வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் சிபித்தாஸ் தலைமை தாங்கினார். தொண்டர் அணி அமைப்பாளர் விஜயராணி முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக அமைச்சரும், குமரி மேற்கு மாவட்ட செயலாளருமான மனோ தங்கராஜ் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

    மேலும் குழித்துறை நகர தி.மு.க. செயலாளர் வினுக்குமார் கலந்துகொண்டனர். முகாமில் உள்ளாட்சி பிரதிநிதிகள், நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.


    • திரைப்பட பாடல் ஆசிரியர் அறிவுமதி பங்கேற்பு
    • பால்மா செயல் இயக்குனர் ஜேக்கப் ஆபிரகாம் வணிக மைய வாகனத்தை அர்ப்பணித்தார்.

    மார்த்தாண்டம்:

    மார்த்தாண்டம் சாங்கையில் அமைந்துள்ள பால்மா மக்கள் அமைப்புகளின் 19-வது ஆண்டு தொடக்க விழா பால்மா அரங்கத்தில் நடைபெற்றது. அன்பையன் தலைமை தாங்கினார். செயல் இயக்குனர் ஜேக்கப் ஆபிரகாம் முன்னிலை வகித்தார். பால்மா இசைக் குழுவினர் இறைவணக்கம் பாடினார். சிறப்பு விருந்தினர்கள் குத்து விளக்கு ஏற்றினார்கள். இயக்குனர் செல்லன் வரவேற்று பேசினார். பால்மா இயக்குனர் ஜோதி விமலாபாய் அறிக்கை வாசித்தார். அதனை தொடர்ந்து சிறுவர்களுக்கான நடனம் நடைபெற்றது.

    பின்னர் உண்ணாமலை கடை பேரூராட்சி தலைவி பமலா மற்றும் பேரூராட்சி வார்டு உறுப்பினர் விஜிலா, முன்னாள் பேரூராட்சி தலைவர் ஜெயசீலன், காட்டத்துறை ஊராட்சி தலைவர் இசையாஸ், பால்மா சட்ட ஆலோசகர் சுரேஷ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பின்னர் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. பால்மா கூட்டமைப்பின் தலைவர் ஐடா குளோரி பாய் சிறப்பு பாடல் பாடினார். பால்மா செயல் இயக்குனர் ஜேக்கப் ஆபிரகாம் வணிக மைய வாகனத்தை அர்ப்பணித்தார். பின்னர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட திரைப்பட பாடல் ஆசிரியர் அறிவுமதி பேசியதாவது:-

    பால்மா அமைப்பு என்பது பெண்களை ஒன்றிணைத்த ஒரு பெரிய அமைப்பாகும். மக்களை ஒன்றிணைத்து அவர்களுக்குள் இருக்கும் மனித வளத்தை மிக சிறப்பாக வெளிக்கொண்டு வந்த பெருமை இந்த அமைப்பின் நெறிமுறையாளர் அன்பையன் அவர்களையே சாரும். இன்றைக்கு இந்த அரங்கம் நிறைந்து காணப்படுகிறது என்றால் அதற்கு காரணம் 41 ஆண்டு காலம் நீங்கள் விதைத்த விதைதான்.

    இந்த பால்மா அமைப்பானது 451 சுய உதவி குழுக்கள் மற்றும் பனை தொழிலாளர் பேரவை என்ற பெயரில் 102 மன்றங்களை உருவாக்கி மாவட்டத்தின் அடையாளமாய் புகழின் உச்சிக்கு சென்றுள்ளனர். இது மட்டுமல்லாமல் கொடிய நோயினால் பாதிக்கப்பட்ட இளம் சிறார்களுக்கு தொடர் உதவி தொகைகள், முதியோர் ஓய்வு உதவி திட்டம், ஏழை மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை, ஏழை மகளிர் திருமண வைப்பு நிதி உதவி திட்டம், ஒருங்கிணைந்த பிற மேம்பாட்டு பணிகள் என பல்வேறு பணிகளை சிறப்பாக செய்து வருகின்றனர். ஒடியல் கூழ் இலங்கையில் தயாரிக்கப்படும் ஒடியல் கூழ் பனை மரப்பொருட்களை கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு சுவையான உணவு பொருளாகும். இந்த உணவு பொருள் தமிழ்நாட்டில் அதுவும் முதலில் குமரி மாவட்டத்தில் தயாரிக்கப் பட்டு அனைத்து இடங்களிலும் பிரபலப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். பின்னர் பால்மா கூட்டமைப்பு தலைவர் ஐடா குளோரி பாய் நன்றி கூறினார்.

    • அனுமதி இல்லாமல் மது விற்பனை செய்ததாக வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
    • 28 மதுபாட்டில் இருந்ததை கண்டு பிடித்தனர்.

    தக்கலை:

    தக்கலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆஷா ஜெபகர் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அழகியமண்டபம் பகுதியில் போலீசை கண்டதும் வாலிபர் ஒருவர் ஓடினார். சந்தேகம் அடைந்த போலீசார் அந்த வாலிபரை விரட்டி பிடித்து சோதனை செய்து பார்த்த போது மறைத்து விற்பனைக்கு வைத்திருந்த 28 மதுபாட்டில் இருந்ததை கண்டு பிடித்தனர். உடனே அவரை போலீஸ் நிலையம் கொண்டு விசாரணை நடத்தினர். அப்போது அவர் காப்புகாடு பகுதியில் சேர்ந்த சிந்துகுமார் (வயது 35).இவர் அனுமதி இல்லாமல் மது விற்பனை செய்ததாக வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்துக்குட்பட்ட நல்லூர் பகுதியில் மதுபானம் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வினீஷ் பாபு தலைமையிலான போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது நல்லூர் தேனாம்பாறை பகுதியில் நல்லூர் தேம்பறதல விளை பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் தங்கராஜ் (வயது 71) என்பவர் மதுபானம் விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து 7 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் சொகுசு வாழ்க்கை நடத்தினர்.
    • பெண்களை குறிவைத்து தாக்கி நகைகளை ஒரு கும்பல் பறித்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தனியாக வாகனங்களில் செல்லும் பெண்களை குறிவைத்து தாக்கி நகைகளை ஒரு கும்பல் பறித்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இந்த நிலையில் காப்பிகாடு பகுதியை சேர்ந்த டயானா என்ற பெண்ணிடம், 16½ பவுன் தங்க சங்கிலியை கடந்த 4-ந் தேதி இருசக்கர வாகனத்தில் வந்த கொள்ளையர்கள் பறித்துச் சென்றனர். இது தொடர்பாக மார்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வந்தனர். மேலும் சம்பவம் நடந்த சாலையோரம் உள்ள சி.சி.டி.வி. காட்சி பதிவுகளை கைப்பற்றியும் ஆய்வு செய்தனர்.

    அதில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இதில் டயானாவிடம் நகை பறித்ததாக திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தை சேர்ந்த செய்யது அலிகான் (வயது 24), அப்துல் ராசிக்(29) ஆகியோரை தனிப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

    அவர்களிடம் நடத்திய விசாரணையில் கொள்ளை கும்பல் தலைவனாக சேக்ஜாமான் மைதீன் என்பவர் செயல்பட்டதும் இந்தக் கும்பல் பல்வேறு இடங்களில் கைவரிசை காட்டியிருப்பதும் தெரியவந்தது. தொடர்ந்து தலைமறைவாக உள்ள சேக்ஜாமான் மைதீனை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    நகை பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையர்கள், அதில் கிடைக்கும் பணத்தில் கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு சென்று சொகுசாக வாழ்ந்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாணவி மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி திருநெல்வேலியில் நர்சிங் படித்து வருகிறார்.

    விடுமுறை நாட்களில் அந்த மாணவி மேடைகளில் நடனமாட செல்வது வழக்கம்.இந்த நிலையில் இரணியலை சேர்ந்த ஆபினேஷ் என்ற வாலிபர் மாணவியுடன் நடன கலை நிகழ்ச்சிகளில் செண்டை வாத்தியங்கள் அடிப்பது வழக்கம்.

    அவர் மாணவியிடம் தொடர்ந்து காதல் வசனங்களை பேசி காதலிப்பதாகவும், உன்னை தான் திருமணம் செய்து கொள்வேன் என ஆசை வார்த்தைகள் கூறி உள்ளார். இதனை மாணவியும் நம்பி உள்ளார்.

    இதனை சாதகமான பயன்படுத்திக் கொண்ட ஆபினேஷ் குற்றாலத்தில் உள்ள ஒரு விடுதிக்கு மாணவியை அழைத்து சென்று பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளார்.

    அதன்பின்னர் மாணவியுடன் பேசுவதை நிறுத்தி விட்டார். மாணவி அந்த வாலிபரை தேடி சென்று தன்னிடம் ஏன் பேசவில்லை என காரணம் கேட்டுள்ளார். அதற்கு உன்னை எனக்கு பிடிக்கவில்லை என அந்த ஆபினேஷ் தெரிவித்துள்ளார்.

    இதனால் மனமுடைந்து போன மாணவி மார்த்தா ண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×