மார்த்தாண்டம் அருகே வேலையில்லாத விரக்தியில் வாலிபர் தற்கொலை

வருமானம் இல்லாததால் மனவிரக்திமார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
கோப்பு படம் 
கோப்பு படம் 
Published on

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்ட காவல் நிலையத்துக்கு உட்பட்ட கீழ்பம்மம் கொற்ற விளையை சேர்ந்தவர் ரெஜின் (வயது 29) திருமணம் ஆகவில்லை. இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வந்தார்.

அங்கு வேலை சரியாக அமையாததால் சொந்த ஊரான மார்த்தாண்டத்திற்கு வந்து வெல்டிங் தொழில் செய்து வந்தார். அதிலும் போதிய வருமானம் இல்லாததால் மனவிரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து சம்பவத்தன்று இரவு வீட்டில் உணவருந்தி விட்டு மாடியில் தூங்க சென்றுள்ளார்.காலையில் வெகு நேரம் ஆகியும் அவர் வெளியே வரவில்லை.

இதனையடுத்து அவரது தந்தை மாடியில் சென்று பார்த்தபோது அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. தகவல் அறிந்து மார்த்தாண்டம் போலீசார் அவரது உடலை கைப்பற்றி குழித்துறை அரசு மருத்துவ மனைக்கு பிரேத பரிசோ தனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com