search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மார்த்தாண்டத்தில் போதை பொருள் பறிமுதல்
    X

    கைது செய்யப்பட்டவர்களை படத்தில் காணலாம் 

    மார்த்தாண்டத்தில் போதை பொருள் பறிமுதல்

    • 2 பேர் கைது - ஒருவர் தப்பி ஓட்டம்
    • போலீசார் தீவிர வாகன சோதனை

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் கேரளாவில் போதைப் பொருள்களின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது இதனை தடுக்கும் விதத்தில் போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று மதியம் படந்தாலு மூடு சோதனை சாவடியில் தனிப்பிரிவு சப்- இன்ஸ்பெக்டர் மகேஸ்வரராஜ் தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது வேகமாக வந்த சொகுசு காரை தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால் கார் நிற்காமல் வேகமாக சென்றது. அந்த காரை போலீசார் இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து விரட்டிய போது, கார் குழித்துறை சப்பாத்து பாலம் அருகாமையில் சென்றபோது தொடர்ந்து செல்ல முடியாமல் நின்றது. அப்போது காரில் இருந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கடத்தல் கும்பல் தலைவன் கணேஷ் தப்பி ஒடிவிட்டார்.

    காரில் இருந்த டிரைவர் மற்றும் 2 பேர் சிக்கினர்.அவர்களிடமிருந்து 300 கிராம் போதை பொருளும் சிக்கியது. பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது அதன் விவரம் வருமாறு:-

    ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கணேஷ் குட்கா கடத்தல் தொழில் செய்து வருகிறார்.இவர் மார்த்தாண்டம் பழைய தியேட்டர் ஜங்ஷன் அருகில் துணிக்கடை நடத்தி வருவருகிறார். ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த புத்தாரம் மகன் பிரகாஷ் (வயது 30) மூலம் ராஜஸ்தானிலிருந்து போதைப் பொருள் கடத்தி வந்து குமரி மாவட்டம், கேரளா, பெங்களுர் உட்பட பல இடங்களில் புழக்கத்தில் விட்டுள்ளனர்.

    இந்நிலையில் ராஜஸ்தானை சேர்ந்த கிருஷ்ணாலால் மகன் ராஜேஷ் (27) என்பவர் மூலம் கல்லூரி மாணவர்களுக்கும் போதைப்பொருள் சப்ளை செய்து வந்தது தெரிய வந்தது. தொடர்ந்து பிரகாஷ், ராஜேஷ் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்

    மேலும் ஓட்டுனருக்கு இந்த கடத்தல் சம்பவத்தில் தொடர்பு உள்ளதா எனவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முக்கிய குற்றவாளியான கணேசை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றார்.போலீசார் நடத்திய விசாரணையில் மார்த்தாண்டத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் வடநாட்டு கும்பல்களுக்கும், குமரி மாவட்டத்தைச் சேர்ந்த பல முக்கிய புள்ளிகளுக்கும் தொடர்புள்ளதாக கூறப்படுகிறது. கணேஷ் கைதாகும் பட்சத்தில் மேலும் பலர் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த போதைப்பொருள் கடத்தல் சம்பவம் குமரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×