என் மலர்
நீங்கள் தேடியது "போதை பொருள்"
- திமுகவின் 55 மாத ஆட்சிக்காலத்தில் இளைஞர்களின் எதிர்காலத்திற்கான வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தவில்லை.
- இளைஞர்களை சீரழித்த வேதனையான சாதனையை திமுக அரசு செய்திருக்கிறது.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
திருத்தணி தொடர்வண்டி நிலையத்தில் வடமாநில இளைஞரை 4 சிறுவர்கள் கஞ்சா போதையில் சரமாரியாக அரிவாளால் வெட்டியதால் ஏற்பட்ட அதிர்ச்சியும், பதட்டமும் விலகுவதற்கு முன்பாகவே, அதே தொடர்வண்டி நிலையத்தில் ஜமால் என்ற புடவை வணிகர் போதையில் இருந்த 4 இளைஞர்களால் கொடூரமான முறையில் தாக்கப்பட்டுள்ளார். ஒரே தொடர்வண்டி நிலையத்தால் அடுத்தடுத்து போதைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதும், அத்தாக்குதல்களைத் தடுப்பதில் திமுக அரசு தோல்வி அடைந்திருப்பதும் கண்டிக்கத்தக்கது.
தொடர்வண்டி நிலையத்தில் தான் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது என்று கூறி திமுக அரசு பொறுப்பைத் தட்டிக்கழிக்க முடியாது. தாக்குதல் எங்கு நடத்தப்பட்டது என்பது இங்கு சிக்கல் அல்ல. தாக்குதலுக்கான காரணம் என்ன? என்பது தான் இங்கு பிரச்சினையே. சில நாள்களுக்கு முன் கஞ்சா போதையில் இருந்த சிறுவர்களால் சரமாரியாக வெட்டப்பட்ட வடமாநில இளைஞரும், இப்போது தாக்கப்பட்டுள்ள புடவை வணிகர் ஜமாலும் அப்பாவிகள். அவர்கள் எந்தத் தவறும் செய்யவில்லை. அவர்கள் எந்தத் தூண்டுதலிலும் ஈடுபடவில்லை. மாறாக கஞ்சா போதையில் இருந்தவர்கள் தான் அவர்களைத் தாக்கியுள்ளனர்.
திருத்தணி தொடர்வண்டி நிலையத்தில் நடந்த இரு தாக்குதல்களுக்கும் காரணம் மது, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களின் கட்டுப்படுத்தப்படாத புழக்கம் தான். அதனால் தான் இத்தகையத் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் கஞ்சா புழக்கம் அடியோடு கட்டுப்படுத்தப்பட்டு விட்டதாக இமாலயப் பொய் ஒன்றை சுகாதாரத்துறை அமைச்சர் கூறியதற்கு அடுத்த நாளே இந்த நிகழ்வு நடந்திருப்பதன் மூலம் தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்கள் எங்கும் நிறைந்திருப்பது உறுதியாகியிருக்கிறது.
திமுகவின் 55 மாத ஆட்சிக்காலத்தில் இளைஞர்களின் எதிர்காலத்திற்கான வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தவில்லை; தரமான கல்வி வழங்கவில்லை; அரசு பள்ளிகளையும், கல்லூரிகளையும் வலுப்படுத்தவில்லை; தனியார் தொழில் மற்றும் வணிக நிறுவனங்களின் வேலைவாய்ப்புகளில் உள்ளூர் இளைஞர்களுக்கு 75% இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டத்தை நிறைவேற்றவில்லை. ஆனால், தமிழ்நாடு முழுவதும் கஞ்சா, மது உள்ளிட்ட அனைத்து வகையான போதைப் பொருள்களை வெள்ளமாக பாயவிட்டு இளைஞர்களை சீரழித்த வேதனையான சாதனையை மட்டுமே திமுக அரசு செய்திருக்கிறது.
தமிழ்நாட்டை ஆட்சி செய்து வரும் திமுக அனைத்துத் துறைகளிலும், குறிப்பாக போதைப் பொருள்களை கட்டுப்படுத்துவதிலும், சட்டம் - ஒழுங்கை பாதுகாப்பதிலும் படுதோல்வி அடைந்து விட்டது என்பது தான் உண்மை. இளைஞர்களை சீரழித்த, தோல்வியடைந்த திமுக தமிழகத்தை தொடர்ந்து ஆளும் தகுதியை இழந்து விட்டது. இதை அடுத்த சில வாரங்களில் நடைபெறவுள்ள தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் உறுதி செய்வார்கள்.
- போதையில் யார் நம்மைத் தாக்கப் போகிறார் என்ற உயிர் பயத்திலேயே தமிழக மக்கள் வாழ வேண்டுமா?
- ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் இருந்த 3 அடி கஞ்சா செடி தெரியவில்லையா?
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
திருத்தணி ரயில் நிலையத்தில் நின்றுக் கொண்டிருந்த ஒரு சாமானியர் மீது 2 இளைஞர்கள் சரமாரியாக தாக்கியதாக செய்திகள் வருகின்றன. அதேபோல், திருப்பூரில் போதை இளைஞர் ஒருவர், காவலரை கத்தியுடன் நடுரோட்டில் விரட்டிய செய்தியும் அதிர்ச்சி அளிக்கின்றன.
போதைப் பொருள் புழக்கமும், போதை இளைஞர்களால் ஏற்படும் சட்டம் ஒழுங்கு சீர்கேடும் தினசரி செய்தியாகி இருப்பதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார் பொம்மை முதல்வர்?
அடுத்த நொடி யார், எந்த போதையில் நம்மைத் தாக்கப் போகிறார் என்ற உயிர் பயத்திலேயே தமிழக மக்கள் வாழ வேண்டுமா?
"தமிழ்நாட்டில் கஞ்சாவே இல்லை" என்று வெட்கமே இன்றி கூறும் மாரத்தான் அமைச்சருக்கு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் இருந்த 3 அடி கஞ்சா செடி தெரியவில்லையா?
கடந்த ஒரு வாரத்தில் மட்டும், நாகப்பட்டினத்தில் 140 கிலோ, இராமநாதபுரத்தில் 564 கிலோ, திருச்சியில் 4 கிலோ என தமிழகத்தில் பிடிப்பட்டுள்ள கஞ்சா குறித்த செய்திகள் எல்லாம் இந்த அமைச்சருக்கும், அவரின் தலைவரான பொம்மை முதல்வருக்கும் தெரியாதா என்ன?
போதைப் பொருளைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால்,
சட்டம் ஒழுங்கைக் காக்க முடியவில்லை என்றால்,
எதற்கு நீங்கள் ஆட்சியில் இருக்கிறீர்கள்?
நிர்வாகம் என்றால் என்னவென்றே தெரியாத திறனற்ற பொம்மை முதல்வரிடம் சிக்கித் தமிழ்நாடு தவித்தது போதும்!!
2026, விடியா ஆட்சியிடம் இருந்து தமிழகம் விடுதலை பெறும் ஆண்டாக அமையட்டும் என கூறினார்.
- துணை நடிகைகள் பலரும் இந்த வழக்கில் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- யார் யாரெல்லாம் போதை பொருள் பயன்படுத்தினர் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை:
போதைப்பொருள் விற்பனை சப்ளையில் ஈடுபட்டதாக திரைப்பட இணை தயாரிப்பாளர் சர்புதீன், முகப்பேரைச் சேர்ந்த சீனிவாசன், வளசரவாக்கத்தைச் சேர்ந்த சரத் ஆகியோரை திருமங்கலம் போலீசார் கடந்த 20-ந்தேதி கைது செய்தனர்.
சர்புதீனின் காரில் இருந்து 27.91 லட்சம் ரூபாயும், சீனிவாசன் வீட்டில் 10 கிராம் ஓ.ஜி. கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.
இதையடுத்து திருமங்கலம் போலீசார் 3 பேரையும் சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் சர்புதீன், தொழில்அதிபர் சரத் ஆகியோரை திருமங்கலம் போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.
சர்புதீன் நடிகர் சிம்புவிற்கு மேலாளராக பணியாற்றி உள்ளார். பல நடிகர்கள், நடிகைகளுடன் பழக்கமுடையர். இதனால் அதில் யாருக்கெல்லாம் போதைப்பொருள் சப்ளை செய்துள்ளார்? என்பது தொடர்பாக போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
மேலும் எந்தெந்த சினிமா விருந்துகளில் போதைப்பொருள் பயன்படுத்தப்பட்டது? அதில் கலந்து கொண்ட திரை உலகினர் யார் யார் என்பது தொடர்பாகவும் சர்புதீனிடம் விசாரணை நடத்தி பட்டியலை தயாரித்தனர்.
இந்த நிலையில் சர்புதீன் கொடுத்த தகவலின் பேரில் திரைப்பட தயாரிப்பாளர் தினேஷ் ராஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதை தொடர்ந்து துணை நடிகைகள் பலரும் இந்த வழக்கில் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. யார் யாரெல்லாம் போதை பொருள் பயன்படுத்தினர் என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.
மேலும் பிரபல நடிகைகளுக்கும் இதில் தொடர்பு உள்ளதா? என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
- கத்தியை கழுத்தில் வைத்து மிரட்டி கஞ்சாவை பயன்படுத்த செய்திருக்கிறார்.
- அதிர்ச்சியடைந்த சிறுவனின் தாய், கொச்சி வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் பிரபின் அலெக்சாண்டர். இவருக்கும், கொச்சியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் பழக்கம் இருந்தது. மகளுக்கு திருமணமாகி மகன் உள்ள நிலையில் அந்த பெண், பிரபினை காதலித்து வந்ததாக தெரிகிறது.
அந்த பெண் தனது மகளுடன் வீட்டு வேலை செய்து குடும்பத்தை நடத்தி வந்தார். இந்தநிலையில் தான் அந்த பெண்ணுக்கு பிரபினுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. காதலன் என்ற பெயரில் பெண்ணின் வீட்டில் பிரபின் அடிக்கடி தங்கியிருந்திருக்கிறார்.
அப்போது அந்த பெண்ணின் பேரனான 14 வயது சிறுவனுக்கு போதை பொருட்களை பயன்படுத்த செய்திருக்கிறார். 9-ம் வகுப்பு படித்து வந்த அவனுக்கு, முதலில் கஞ்சாவை கொடுத்திருக்கிறார். அதனை பயன்படுத்த மறுத்ததால் அடித்து துன்புறுத்தி கத்தியை கழுத்தில் வைத்து மிரட்டி கஞ்சாவை பயன்படுத்த செய்திருக்கிறார்.
பின்பு மதுபானம் மற்றும் ஹாஸிஸ் ஆயில் உள்ளிட்டவைகளையும் சிறுவனுக்கு கொடுத்து பயன்படுத்த செய்து போதை பழக்கத்துக்கு அடிமையாக்கி இருக்கிறார். போதைப்பொருட்கள் பயன்படுத்தியதால் தேவையில்லாமல் அதிகமாக கோபப்படுதல் உள்ளிட்ட செயல்களில் சிறுவன் ஈடுபட்டிருக்கிறான்.
இதனால் சந்தேகமடைந்த சிறுவனின் தாய் அவனிடம் கேட்டபோது, பாட்டியின் காதலன் வலுக்கட்டாயப்படுத்தி தனக்கு போதைப்பொருட்களை கொடுத்துவந்த தகவலை தெரிவித்தான். அதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுவனின் தாய், அதுபற்றி கொச்சி வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன் பேரில் விசாரணை நடத்திய போலீசார் பிரபின் அலெக்சாண்டரை கைது செய்தனர். அவர் மீது சிறார் நீதி சட்டம் மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.
- கலெக்டர் உத்தரவு
- போதை பொருட்கள் விற்றால் உரிமையாளர் மீது குற்றவியல் நடவடிக்கை
வேலூர்:
வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகளிலும் போதை பொருட்களாக கருதப்படும் ஹான்ஸ் மற்றும் குட்கா, புகையிலை ஆகியவை விற்பனை செய்வதை ஏற்கனவே தடைசெய்யப்பட்டு அமுலில் உள்ளது.
சில வியாபாரிகள் கள்ளத்தனமாக தடைசெய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்து வருகிறார்கள்.
இதையடுத்து நடவடிக்கை எடுக்கும் பொருட்டு மாவட்ட நிர்வாகத்தால் சிறப்பு குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளது. சோதனையின்போது மேற்படி பொருட்கள் விற்பனை செய்வதை கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட கடையின் உரிமையாளர் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மற்றும் கடையின் உரிமத்தினை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும். எனவே வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வியாபாரிகளும் தங்கள் கடைகளின் முன்பு பொதுமக்களுக்கு நன்கு தெரியும் வகையில் "இங்கு ஹான்ஸ், குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்கப்படுவதில்லை" என்ற அறிவிப்பு பலகைகள் வைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- குலசேகரம் இன்ஸ்பெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
- இந்த ஓட்டமானது திற்பரப்பு பகுதியில் இருந்து தொடங்கி குலசேகரம் அரசு மருத்துவமனை வரை நடைபெற்றது.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் பகுதியில் இன்றைய சமுதாயத்தில் போதை பொருட்களுக்கு அடிமை யாகும் மாணவர்கள், இளைஞர்கள் அதன் அழிவை உணர்ந்து அதில் இருந்து விடுபட உறுதிமொழி ஏற்று குலசேகரத்தில் செயல்ப டும் நற்பணி மன்றம் சார்பாக நடத்திய மாரத்தான் விழிப்புணர்வு போட்டியில் நேபாள நாட்டிற்குச் சென்று சிலம்பு விளையாடி தங்கம், வெள்ளி பதக்கங்கள் பெற்ற விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.
இந்த போட்டியானது திற்பரப்பு பகுதியில் இருந்து 6000 மீட்டர் தூரத்திற்கு 100-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்றனர். இந்த ஓட்டத்தை குல சேகரம் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் டாக்டர் நெல்சன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இந்த ஓட்டமானது திற்பரப்பு பகுதியில் இருந்து தொடங்கி குலசேகரம் அரசு மருத்துவமனை வரை நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணவ-மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் போதைப் பொருள்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில் 65 வயதான மூதாட்டி பள்ளி மாணவ- மாணவிகளோடு கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி மக்களை மகிழ் வித்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த மூதாட் டியை கவுரவிக்கும் விதமாக ஊக்க தொகையும், கேடயமும் வழங்கப்பட்டது. மூதாட்டி இந்த மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்றது அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் மன நலம் குன்றிய மாணவர் ஒருவர் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. அந்தமாணவனை கவுரவிக்கும் விதமாக ஊக்கத்தொகையும், நினைவு பரிசும் வழங்கப்பட்டது.
- சப்-இன்ஸ்பெக்டர் சோபனராஜ் பெண்கள் வன்கொடுமை குறித்து மாணவ மாணவிகளிடம் விளக்கி கூறினார்.
- போதை பொருட்கள் நடமாட்டம் குறித்து தகவல் கிடைத்தால் மாணவர்கள் காவல் துறையினரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும்
கன்னியாகுமரி:
கருங்கல் போலீஸ் நிலையத்தில் மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் துண்டத்துவிளை புனித அந்தோனியார் மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவியர் சுமார் 50 பேர் ஆசிரியையுடன் கலந்து கொண்டனர். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் மகேஷ் மற்றும் சோபனராஜ் ேபாலீசாரின் செயல்பாடு, காவல்துறையில் தற்போது பயன்படுத்தப்பபட்டு வரும் கம்ப்யூட்டர் தொழில் நுட்ப பயன்பாடுகள் குறித்து விளக்கம் அளித்தனர்.
தொடர்ந்து மாணவ-மாணவிகளுக்கு கஞ்சா போன்ற போதைப்பொருட்களால் ஏற்படும் பாதிப்புகளை சப்-இன்ஸ்பெக்டர் மகேஷ் எடுத்து கூறி, போதைப்பொருட்களை ஒருவரும் பயன் படுத்தகூடாது என அறிவுறுத்தினார். மேலும் போதை பொருட்கள் நடமாட்டம் குறித்து தகவல் கிடைத்தால் மாணவர்கள் காவல் துறையினரிடம் தகவல் தெரிவித்து போதை பழக்கத்தில் இருந்து மாணவர்களை காக்க உதவ வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
மேலும் சப்-இன்ஸ்பெக்டர் சோபனராஜ் பெண்கள் வன்கொடுமை குறித்து மாணவ மாணவிகளிடம் விளக்கி கூறினார். இவைகளை கேட்டு அறிந்த மாணவ மாணவிகள் போலீசாருக்கு நன்றி கூறினர்.
- டிரோனில் 5 கிலோ ஹெராயின் போதை பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
- பாகிஸ்தானின் டிரோன்களை எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர்.
பஞ்சாப் மாநிலம் டர்ன்தரான் மாவட்டத்தில் உள்ள இந்தியா- பாகிஸ்தான் எல்லை அருகே வயல் வெளியில் டிரோன் ஒன்று கிடந்தது. அதனை போலீசார் கைப்பற்றி சோதனை செய்தபோது அதில் 5 கிலோ ஹெராயின் போதை பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து போலீஸ் தலைமை இயக்குனர் சவுரவ் யாதவ் கூறும்போது, "5 கிலோ எடையுள்ள ஹெராயின் அடங்கிய நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஹெக்சாகாப்டர் டிரோனை போலீசார் கைப்பற்றினர்" என்றார்.
கடந்த 28ம் தேதி அமிர்தசரஸ் மற்றும் டர்ன் தரான் மாவட்டங்களில் ஊடுருவிய இரண்டு பாகிஸ்தானின் டிரோன்களை எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
- 2 பேர் கைது - ஒருவர் தப்பி ஓட்டம்
- போலீசார் தீவிர வாகன சோதனை
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் கேரளாவில் போதைப் பொருள்களின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது இதனை தடுக்கும் விதத்தில் போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று மதியம் படந்தாலு மூடு சோதனை சாவடியில் தனிப்பிரிவு சப்- இன்ஸ்பெக்டர் மகேஸ்வரராஜ் தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது வேகமாக வந்த சொகுசு காரை தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால் கார் நிற்காமல் வேகமாக சென்றது. அந்த காரை போலீசார் இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து விரட்டிய போது, கார் குழித்துறை சப்பாத்து பாலம் அருகாமையில் சென்றபோது தொடர்ந்து செல்ல முடியாமல் நின்றது. அப்போது காரில் இருந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கடத்தல் கும்பல் தலைவன் கணேஷ் தப்பி ஒடிவிட்டார்.
காரில் இருந்த டிரைவர் மற்றும் 2 பேர் சிக்கினர்.அவர்களிடமிருந்து 300 கிராம் போதை பொருளும் சிக்கியது. பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது அதன் விவரம் வருமாறு:-
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கணேஷ் குட்கா கடத்தல் தொழில் செய்து வருகிறார்.இவர் மார்த்தாண்டம் பழைய தியேட்டர் ஜங்ஷன் அருகில் துணிக்கடை நடத்தி வருவருகிறார். ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த புத்தாரம் மகன் பிரகாஷ் (வயது 30) மூலம் ராஜஸ்தானிலிருந்து போதைப் பொருள் கடத்தி வந்து குமரி மாவட்டம், கேரளா, பெங்களுர் உட்பட பல இடங்களில் புழக்கத்தில் விட்டுள்ளனர்.
இந்நிலையில் ராஜஸ்தானை சேர்ந்த கிருஷ்ணாலால் மகன் ராஜேஷ் (27) என்பவர் மூலம் கல்லூரி மாணவர்களுக்கும் போதைப்பொருள் சப்ளை செய்து வந்தது தெரிய வந்தது. தொடர்ந்து பிரகாஷ், ராஜேஷ் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்
மேலும் ஓட்டுனருக்கு இந்த கடத்தல் சம்பவத்தில் தொடர்பு உள்ளதா எனவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முக்கிய குற்றவாளியான கணேசை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றார்.போலீசார் நடத்திய விசாரணையில் மார்த்தாண்டத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் வடநாட்டு கும்பல்களுக்கும், குமரி மாவட்டத்தைச் சேர்ந்த பல முக்கிய புள்ளிகளுக்கும் தொடர்புள்ளதாக கூறப்படுகிறது. கணேஷ் கைதாகும் பட்சத்தில் மேலும் பலர் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த போதைப்பொருள் கடத்தல் சம்பவம் குமரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
- குற்றவாளியை பிடிக்க தனிப்படை ராஜஸ்தானுக்கு விரைந்தது
- தப்பி ஓடிய கணேஷ் மற்றும் அவரது சக கூட்டாளிகளை பிடிக்க ராஜஸ்தான் போலீசின் உதவியை நாட குமரி மாவட்ட போலீசார் முயற்சி
கன்னியாகுமரி:
குமரி மாவட்டம் மற்றும் கேரளாவில் போதைப் பொருள்களின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும் விதத்தில் போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நேற்று படந்தாலு மூடு சோதனை சாவடி யில் தனிப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகேஸ்வர ராஜ் தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்ட போது சொகுசு கார் வேகமாக வந்தது.
அந்த காரை போலீசார் நிறுத்தும்படி கூறியும் நிற்காமல் சென்றதால் அதனை விரட்டிச் சென்று குழித்துறை சப்பாத்து பாலம் பகுதியில் போலீசார் மடக்கினர்.
காரில் இருந்த ஓட்டுநர் மற்றும் 2 பேரை பிடித்து விசாரித்த போது அவர்களி டமிருந்து எம். டி .எம். ஏ. என்ற 300 கிராம் போதை பொருள் கைப்பற்றப்பட்டது. தொடர்ந்து போலீஸார் நடத்திய விசாரணையில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கணேஷ் என்பவர் தான் இதனை கடத்தி வந்ததாகவும் அவர் காரில் இருந்து தப்பி சென்று விட்டதும் தெரியவந்தது. மேலும் காரில் வந்த 2 பேர்
மார்த்தாண்டத்தில் ஜவுளிக்கடை நடத்தி வரும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த புத்தாரம் மகன் பிரகாஷ் (வயது30) மற்றும் கிருஷ்ணாலால் மகன் ராஜேஷ் (27) என தெரியவந்தது.
இவர்கள் மூலம் ராஜஸ்தா னிலிருந்து கணேஷ் போதைப் பொருளை கடத்தி வந்து குமரி மாவட்டம், கேரளா, பெங்களுர் உட்பட பல இடங்களில் புழக்கத்தில் விட்டுள்ளான்.
இந்தநிலையில் தப்பி ஓடிய கணேஷ் மற்றும் அவரது சக கூட்டாளிகளை பிடிக்க ராஜஸ்தான் போலீசின் உதவியை நாட குமரி மாவட்ட போலீசார் முயற்சி மேற்கொண்டுள்ளனர். மேலும் அவர்களை பிடிக்க குமரி மாவட்ட தனிப்படை ராஜஸ்தான் சென்றுள்ளது.
கன்னியாகுமரி:
பள்ளி மாணவ-மாணவிகள் தங்களுக்கு ஏதேனும் பிரச்சினைகள் இருந்தாலோ அல்லது போதை பொருள் சம்பந்தப்பட்ட ஏதேனும் தகவல் தெரிந்தாலோ, தகவல் அளிக்க குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாவட்ட காவல்துறை சார்பில் புகார் பெட்டி வைக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவிட்டுள்ளார்.
அதன் ஒரு பகுதியாக நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப்பள்ளியில் காவல்துறை சார்பில் புகார் பெட்டி வைக்கப்பட்டது. அதனை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் திறந்து வைத்தார். பின்னர் அவர் மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற் படுத்தினார்.
அப்போது அவர் கூறுகையில், போதைப் பொருட்களை விற்பனை குறித்து தகவல் தெரிந்தால் 70103 63173 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப் மூலமாகவோ அல்லது தொலைபேசி மூலமாகவோ தொடர்பு கொண்டும், புகார் பெட்டி மூலமாகவும் தகவல் தெரிவிக்கலாம். மேலும் தகவல் அளிப்பவரின் விவரம் ரகசியம் காக்கப்படும் என்றார்.
- போதைப் பொருட்கள் உட்கொண்டால் உடல்நிலை சீர்கெடுவது மட்டுமின்றி ஆயுள் காலம் குறைவதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
- மாணவர்கள் போதைப் பொருட்கள் பழக்கத்துக்கு ஆளாக கூடாது.
ஊத்துக்கோட்டை:
ஊத்துக்கோட்டையில் உள்ள அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் போதைப் பொருட்கள் உட்கொண்டால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் தமிழ்ச் செல்வம் தலைமை தாங்கினார். சப்-இன்ஸ்பெக்டர்கள் முருகேசன், பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இன்ஸ்பெக்டர் ஏழுமலை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.
கஞ்சா, புகையிலை போன்ற போதைப் பொருட்கள் உட்கொண்டால் உடல்நிலை சீர்கெடுவது மட்டுமின்றி ஆயுள் காலம் குறைவதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
எனவே மாணவர்கள் போதைப் பொருட்கள் பழக்கத்துக்கு ஆளாக கூடாது. படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். யாராவது கஞ்சா போன்ற போன்ற போதைப் பொருட்களை விற்பனை செய்தால் 9444005105 செல்போன் எண்ணுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். தகவல் தெரிவிப்போரின் பெயர் ரகசியமாக வைக்கப்படும். மேலும் தகவல் தெரிவிப்போருக்கு தக்க சன்மானம் வழங்கப்படும்.
இவ்வாறு இன்ஸ்பெக்டர் ஏழுமலை தெரிவித்தார்.






