search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Drug Case"

    • பல்வேறு பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    • இதைத் தொடர்ந்து சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

    பிரபல நடிகர் அஜாஸ் கானின் மனைவியை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. முன்னதாக நடிகர் அஜாஸ் கானின் ஜோதேஷவரி இல்லத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். சோதனையில் அவரது வீட்டில் இருந்து பல்வேறு பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    முன்னதாக கடந்த அக்டோபர் மாதம் 8 ஆம் தேதி அஜாஸ் கானின் அலுவலக ஊழியர் சுராஜ் கௌத் ஐரோப்பிய நாட்டில் இருந்து 100 கிராம் மெஃபெடிரோன் (Mephedrone-MD) என்ற போதைப் பொருளை ஆர்டர் செய்திருந்தார். இந்த கொரியர் அஜாஸ் கானின் அந்தேரி அலுவலகத்திற்கு விநியோகம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து சுராஜை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

    இதைத் தொடர்ந்து சுங்கத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில், அஜாஸ் கான் மனைவி ஃபாலன் குலிவாலாவுக்கு போதைப் பொருள் கடத்தலில் தொடர்பு இருப்பதை கண்டுபிடித்தனர். மேலும் அவர் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

    இந்த தகவலை வைத்து சுங்கத்துறை அதிகாரிகள் ஜோதேஷ்வரி குடியிருப்பில் ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வின் போது 130 கிராம் எடை கொண்ட மாரிஜூவானா மற்றும் இதர போதைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். குலிவாலா கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அஜாஸ் கானிடம் போதைப் பொருள் பறிமுதல் குறித்து அதிகாரிகள் விளக்கம் கேட்க முயற்சித்துள்ளனர். எனினும், அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று கூறப்படுகிறது. 

    • பாலிவுட் நடிகர் சக்தி கபூரின் மகன் தான் சித்தாந்த்.
    • பிரபல பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் சித்தாந்தின் சகோதரி ஆவார்.

    பெங்களூரு :

    கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருக்கும் சொகுசு ஓட்டல் ஒன்றில் நேற்று முன்தினம் இரவு நடந்த விருந்து நிகழ்ச்சியில் போதை பொருள் பயன்படுத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அங்கு சோதனை நடத்தினர். அதில் விருந்தில் போதை பொருள் பயன்படுத்தப்பட்டது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து, சிலரை கைது செய்து, சோதனைக்காக அவர்களின் ரத்தமாதிரி எடுக்கப்பட்டது.

    35 பேரில் 5 பேர் போதை பொருள் பயன்படுத்தியது ரத்த பரிசோதனையில் தெரிய வந்தது. அதில் பாலிவுட் நடிகர் சித்தாந்த் கபூரும் ஒருவர். போலீசார் சித்தாந்த் கபூரை கைது செய்து, போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். பாலிவுட் நடிகர் சக்தி கபூரின் மகன் தான் சித்தாந்த். பிரபல பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் சித்தாந்தின் சகோதரி ஆவார். முன்னதாக பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் இறந்தபோது இந்தி திரையுலகை சேர்ந்த பலரை போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். அதில் ஷ்ரத்தா கபூரும் ஒருவர். ஆனால் அவருக்கு எதிராக எதுவும் நிரூபிக்கப்படவில்லை.

    பெங்களூரு ஓட்டலில் நடந்த போதை விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களில், போதை பொருட்களை உட்கொண்ட குற்றச்சாட்டின் கீழ் நடிகை ஷ்ரத்தா கபூரின் சகோதரர் சித்தாந்த் கபூர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இதுபற்றி பெங்களூரு நகர கிழக்கு டி.சி.பி. பீமசங்கர் எஸ் குலெட் செய்தியாளர்களிடம் கூறும்போது, சித்தாந்த் கபூர் போதை பொருட்களை எடுத்துள்ளார் என மருத்துவ பரிசோதனை உறுதிப்படுத்தி உள்ளது.

    அவரை முன்பே கைது செய்து, அதன் பின்னரான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம் என நேற்று கூறினார். தொடர்ந்து அவரை காவலுக்கு எடுத்து விசாரிக்க இருக்கிறோம் என கூறினார். இந்நிலையில் அவர் கூறும்போது, காவல் நிலைய ஜாமீன் அடிப்படையில் சித்தாந்த் கபூர் உள்பட 5 பேரை விடுவித்து உள்ளோம். தேவைப்பட்டால் விசாரணைக்கு ஆஜராக அவர்களுக்கு அழைப்பு விடப்படும். அதன்பேரில் அவர்கள் நேரில் ஆஜராவார்கள் என்று குலெட் கூறியுள்ளார்.

    • நகைச்சுவை நடிகை பாரதி சிங் மும்பை அந்தேரி பகுதியில் வசித்து வருகிறார்.
    • பாரதி சிங் அவரது கணவர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.

    மும்பை

    மும்பை அந்தேரி பகுதியில் நகைச்சுவை நடிகை பாரதி சிங் வசித்து வருகிறார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் அவரது வீட்டில் இருந்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    இதையடுத்து அதிகாரிகள் பாரதி சிங் மற்றும் அவரது கணவர் ஹார்ஷ் லிம்பாச்சியா மற்றும் அவர்களுக்கு போதைப்பொருள் சப்ளை செய்த நபரை கைது செய்தனர். இதில் பாரதி சிங்கும் அவரது கணவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

    இந்தநிலையில் போதைப்பொருள் வழக்கில் நடிகை பாரதி சிங், அவரது கணவர் மற்றும் போதைப்பொருள் சப்ளை செய்தவருக்கு எதிராக போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் மும்பை கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து உள்ளனர். சுமார் 1,200 பக்கங்கள் கொண்ட அந்த குற்றப்பத்திரிகையை கோர்ட்டில் ஒரு வாரத்துக்கு முன் தாக்கல் செய்ததாக போதைப்பொருள் தடுப்பு அதிகாரி ஒருவர் கூறினார்.

    போதைப் பொருள் வழக்கில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகிய என்.சி.பி. மண்டல இயக்குனர் சமீர் வான்கடேயின் குடும்பத்தினர் நேற்று கவர்னரை சந்தித்தனர்.
    மும்பை:

    சொகுசு கப்பலில் போதைப் பொருள் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான், போதைப் பொருள் உட்கொண்டதுடன் வைத்திருந்ததாகவும் குற்றம் சாட்டிய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் அவரை அதிரடியாக கைது செய்தனர். 

    இரு வாரங்கள் ஜெயிலில் அடைக்கப்பட்ட நிலையில், மும்பை ஐகோர்ட் ஜாமீன் வழங்கியதால் ஆர்யன் கான் தற்போது வெளியில் உள்ளார்.

    ஆர்யன் கானை கைது செய்த போதைப் பொருள் தடுப்பு பிரிவின் மும்பை பிரிவு தலைவராக சமீர் வான்கடே செயல்பட்டு வருகிறார். ஆர்யன் கான் கைது சம்பவத்தில் இருந்து சமீர் வான்கடே மீது தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மகாராஷ்டிர மந்திரியுமான நவாப் மாலிக் பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார். இந்த விவகாரம் மகாராஷ்டிர அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 

    இதற்கிடையே, போதைப் பொருள் விவகாரம் குறித்து மகாராஷ்டிர மாநில முன்னாள் முதல் மந்திரியும், பா.ஜ.க. மூத்த தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ் நவாப் மாலிக் மீது குற்றச்சாட்டுகளை  முன்வைத்தார். நவாப் மாலிக்கின் நிழல் உலகத்துடனான தொடர்பு குறித்த ஆதாரங்களை வெளிப்படுத்துவேன். தீபாவளி கடந்து செல்வதற்காக காத்திருக்கிறேன் என்றார்.

    நவாப் மாலிக்

    இந்நிலையில், தேவேந்திர பட்னாவிஸ் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    1993ல் நடந்த மும்பை தொடர் குண்டுவெடிப்பில் தண்டிக்கப்பட்ட சலீம் படேல் என்பவரிடமிருந்து குர்லா பகுதியில் 2.8 ஏக்கர் நிலத்தை மாலிக் வாங்கியுள்ளார். இந்த நிலம் நவாப் மாலிக் குடும்பத்துக்கு சொந்தமான நிறுவனத்தின் பெயரில் வாங்கப்பட்டுள்ளது.

    இந்த ஒப்பந்தம் எப்போது நடந்தது என்பதுதான் என் கேள்வி. நீங்கள் மந்திரியாக இருந்தீர்கள். சலீம் படேல் யார் என்று உங்களுக்குத் தெரியாதா? சலீம் படேல் நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமின் உதவியாளர் மற்றும் ஹசீனா பார்கரின் (தாவூத்தின் சகோதரி) டிரைவராக இருந்தார்.

    தாவூத் தப்பிய பிறகு, சலீம் படேல் மூலம் ஹசீனா பார்கர் சொத்துக்களை வாங்கினார். 1993 மும்பை குண்டுவெடிப்புக்கு மூளையாக செயல்பட்டவர் தாவூத் இப்ராகிம்.

    இது பாதாள உலகத்துடன் நேரடி தொடர்பு. குண்டுவெடிப்புக்கு சதி செய்தவர்களுடன் நீங்கள் வியாபாரம் செய்கிறீர்களா? என கேள்வி எழுப்பியுள்ளார். 

    போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி சமீர் வான்கடேவின் மைத்துனி போதைப் பொருள் வியாபாரி என தேசியவாத காங்கிரஸ் தலைவர் நவாப் மாலிக் குற்றம் சாட்டியுள்ளார்.
    மும்பை:

    சொகுசு கப்பலில் போதைப் பொருள் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஷாருக்கான் மகன் ஆர்யன் கான், போதைப் பொருள் உட்கொண்டதுடன் வைத்திருந்ததாகவும் குற்றம் சாட்டிய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் அவரை அதிரடியாக கைது செய்தனர். 

    ஆர்யன் கான் கைது செய்யப்பட்ட சம்பவத்தை தலைமை ஏற்று நடத்தியவர் போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி சமீர் வான்கடே. 

    இரண்டு வாரங்கள் ஜெயிலில் அடைக்கப்பட்ட நிலையில், மும்பை ஐகோர்ட் ஜாமீன் வழங்கிய நிலையில் தற்போது வெளியில் உள்ளார்.

    போதைப் பொருள் வழக்கில் இருந்து ஆர்யன் கானை விடுவிக்க ரூ.25 கோடி பேரம் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. இதில் ஷாருக்கானின் மேலாளர் பூஜா தத்லானியிடம் பேரம் பேசியவர்கள் தொழிலதிபர் சாம் டிசோசா மற்றும் போதைப் பொருள் தடுப்பு பிரிவின் சாட்சி கிரன் கோசவி என கூறப்படுகிறது.

    இந்நிலையில், போதைப் பொருள் வழக்கில் ஷாருக்கானின் மேலாளர் பூஜா தத்லானிக்கு மும்பை போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். போதைப் பொருள் கட்டுப்பாட்டுப் பணியகத்தின் விஜிலென்ஸ் குழுவினால் அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.

    போதைப் பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் (என்சிபி) சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் (எஸ்ஐடி) பூஜா தத்லானி ஆஜராக கூடுதல் அவகாசம் கேட்டுள்ளார்.

    ×