போதைப் பொருள் விவகாரம்- தனிப்படை போலீசாரிடம் சிக்கிய நடிகர் ஸ்ரீகிருஷ்ணா

2 நாட்களாக போலீசார் தேடி வந்தநிலையில், தனிப்படை போலீசார் ஸ்ரீகிருஷ்ணாவை பிடிபட்டார்.சென்னையில் ரகசிய இடத்தில் வைத்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போதைப் பொருள் விவகாரம்- தனிப்படை போலீசாரிடம் சிக்கிய நடிகர் ஸ்ரீகிருஷ்ணா
Published on

போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் ஒப்புக்கொண்டதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ஸ்ரீகாந்த், கிருஷ்ணா போதைப் பொருள் பயன்படுத்தியதாக பிரதீப் தந்த வாக்குமூலம் அடிப்படையில் ஸ்ரீகிருஷ்ணாவிடம் விசாரணை நடத்த முயன்றனர்.

ஆனால், கிருஷ்ணா செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு தலைமறைவானார். 2 நாட்களாக போலீசார் தேடி வந்தநிலையில், தனிப்படை போலீசார் ஸ்ரீகிருஷ்ணாவை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

2 நாட்களாக தேடி வந்த நிலையில் சென்னையில் பிடிபட்ட நடிகர் ஸ்ரீகிருஷ்ணாவை, சென்னையில் ரகசிய இடத்தில் வைத்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரத்த பரிசோதனையில் ஸ்ரீகிருஷ்ணா கொகைன் பயன்படுத்தியது உறுதியானால் ஸ்ரீகாந்தை போல் ஸ்ரீகிருஷ்ணாவையும் போலீசார் கைது செய்யப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com