என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    போதைப் பொருள் வழக்கு: நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு அமலாக்கத்துறை சம்மன்
    X

    போதைப் பொருள் வழக்கு: நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு அமலாக்கத்துறை சம்மன்

    • சென்னை உயர்நீதிமன்றம் அவர்களுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியது.
    • புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இருவரும் ஜாமினில் வெளியே வந்தனர்.

    சென்னை:

    போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் கடந்த ஜூன் மாதம் 23-ம் தேதி நடிகர் ஸ்ரீகாந்தும், 26-ம் தேதி நடிகர் கிருஷ்ணாவும் கைது செய்யப்பட்டனர். இருவரும் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    அவர்கள் இருவரும் ஜாமின் கோரி சென்னை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர். காவல்துறை எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த மனு தள்ளுபடி ஆனது.

    இதையடுத்து, ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் ஜாமின் வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். மனு மீதான விசாரணை முடிந்தநிலையில் சென்னை உயர்நீதிமன்றம் அவர்களுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியது. அதன்படி, புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர்கள் இருவரும் ஜாமினில் வெளியே வந்தனர்.

    இந்நிலையில், போதைப் பொருள் வழக்கில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. அதன்படி ஸ்ரீகாந்த் வரும் 28-ம் தேதியும், கிருஷ்ணா வரும் 29-ம் தேதியும் ஆஜராக வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×