என் மலர்

  நீங்கள் தேடியது "Srikanth"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • அறிமுக இயக்குனர் பா.ரஞ்சித்குமார் இயக்கும் படம் சம்பவம்.
  • இப்படத்தில் ஸ்ரீகாந்த், நட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

  மைனா, சாட்டை, மொசக்குட்டி, சௌகார்பேட்டை, பொட்டு, கா ஆகிய படங்களை தொடர்ந்து ஷாலோம் ஸ்டுடியோஸ் சார்பாக தயாரிப்பாளர் ஜான்மேக்ஸ் தயாரிக்கும் அடுத்த படம் சம்பவம். இதில் ஸ்ரீகாந்த், நட்டி கதை நாயகர்களாக நடிக்க, கதை நாயகிகளாக பூர்ணா, ஸ்வேதா அவஸ்தி நடிக்கின்றனர். இதன் முக்கிய கதாபாத்திரத்தில் ரங்கராஜ் பாண்டே நடிக்கிறார். நீண்ட இடைவேளைக்கு பிறகு சுந்தரா டிராவல்ஸ் படத்தின் நாயகி ராதா நடிக்கிறார். மேலும் இயக்குனர் ஏ.வெங்கடேஷ், ஜெயபிரகாஷ், கே.ராஜன், மகேந்திரகுமார் நாகர், சிங்கம்புலி, நாஞ்சில் சம்பத், விஜய் டிவி முல்லை மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

  சம்பவம் திரைப்படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குனராக அறிமுகமாகிறார் பா.ரஞ்சித்குமார். இவர் இயக்குனர் ஏ.வெங்கடேஷிடம் இணைஇயக்குனராக பணிபுரிந்தவர். ஒளிப்பதிவை இனியன் ஜே ஹாரிஸ் கவனிக்க இசை அம்ரீஷ் மற்றும் படத்தொகுப்பு சந்திரகுமார் கவனிக்கின்றனர்.


  உயிருக்கு போராடும் தனது மகளை காப்பாற்ற துடிக்கும் ஒரு தந்தையும், இந்த சமூகத்தால் பாதிக்கப்பட்ட ஒரு சாதாரண மனிதனும் சந்தர்ப்ப சூழ்நிலையால் ஒரே நேர்கோட்டில் பயணிக்கும் போது நடைபெறும் சம்பவமே கதையின் மையக்கரு. இதன் துவக்க விழாவில் தயாரிப்பாளர் கே.ராஜன், இயக்குனர் திருமலை, மகேந்திரகுமார் நாகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். சம்பவம் திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படம் குறித்த அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமலேயே வாக்களித்த நடிகர்கள் சிவகார்த்திகேயன், ஸ்ரீகாந்திடம் விசாரணை நடத்தப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறினார். #LokSabhaElections2019 #SatyabrataSahoo
  சென்னை:

  சென்னையில் தலைமைச்செயலகத்தில் நிருபர்களுக்கு, சத்யபிரத சாகு அளித்த பேட்டி வருமாறு:-

  வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமலேயே நடிகர்கள் சிவகார்த்திகேயன், ஸ்ரீகாந்த் வாக்களித்த விவகாரத்தில் குற்றப்பதிவு செய்ய வேண்டி உள்ளது. அதற்கான உரிய விசாரணையை நடத்த வேண்டி உள்ளது. எனவே அதில் காலதாமதம் ஆகலாம்.  அதன் பிறகு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு தண்டனை விதிக்கப்படும். அதில் எடுக்கப்படும் ஒழுங்கு நடவடிக்கையை தேர்தல் ஆணையம்தான் உறுதி செய்யும்.

  தற்போது அந்த விவகாரத்தை மாவட்ட தேர்தல் அதிகாரி விசாரிக்கிறார். அவரிடம் இருந்து அறிக்கை பெறப்படும். அலுவலர்கள் செய்த தவறு வரிசையாக பட்டியலிடப்படும். அதுபற்றி சம்பந்தப்பட்ட அலுவலரின் பதில் பெறப்படும்.

  அதற்கான விசாரணை அதிகாரி நியமிக்கப்பட்டுதான் விசாரணை நடத்தப்படும். அனைத்து நடைமுறையையும் பின்பற்றித்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதால் இந்த பிரச்சினையில் காலதாமதம் ஏற்படும்.

  விசாரணை அதிகாரி அந்த நடிகர்களை சாட்சியாக விசாரிக்க முடியும். அலுவலர்கள் சொல்வது சரியா என்பதை நடிகர்கள் கூறும் கருத்துடன் ஒப்பிட்டுப் பார்ப்பார்கள். முதலில் குற்றப்பதிவு செய்யப்படும். இரண்டாவதாக, விசாரணை அதிகாரி நியமிக்கப்படுவார். மூன்றாவதாக, விசாரணை அதிகாரியின் அறிக்கை, மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் சமர்ப்பிக்கப்படும். அதன் பிறகு அவர் தகுந்த தண்டனையை விதிப்பார். அந்தத் தண்டனையை தேர்தல் ஆணையம் உறுதி செய்யும். இதுதான் நடைமுறை.

  இவ்வாறு அவர் கூறினார். #LokSabhaElections2019 #SatyabrataSahoo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நடிகர் சிவகார்த்திகேயனை போல் ஸ்ரீகாந்தும் விதிகளை மீறி வாக்களித்துள்ளதாக சென்னையில் நிருபர்களை சந்தித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார். #LokSabhaElections2019 #Srikanth
  தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு சென்னை தலைமை செயலகத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

  நடிகர் சிவகார்த்திகேயன் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாத நிலையில் அவர் வாக்களித்துள்ளார். இதேபோல் நடிகர் ஸ்ரீகாந்த் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாத நிலையில் அவரும் விதிகளை மீறி வாக்களித்துள்ளது தெரியவந்துள்ளது. ஸ்ரீகாந்த் சாலிகிராமத்தில் காவேரி பள்ளிக்கூடத்தில் வாக்களித்தது தொடர்பாக வாக்குச்சாவடி அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. இதிலும் பூத் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும்.  இவர்களது ஓட்டுகளை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கியது யார் என்பதை கண்டுபிடித்து அந்த ஊழியர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.

  இவ்வாறு அவர் கூறினார். #LokSabhaElections2019 #Srikanth

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கே.சி.பொகாடியா இயக்கத்தில் ஸ்ரீகாந்த், இசன்யா, சாயாஜி, நாசர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘ராக்கி தி ரிவெஞ்ச்’ படத்தின் விமர்சனம். #RockyTheRevenge
  இரட்டை நாய்களை ஒரு கும்பல் கடத்துகிறது. இதில் ஒரு நாய் தப்பித்து விபத்தில் சிக்குகிறது. இதை போலீஸ் அதிகாரியான ஸ்ரீகாந்த், காப்பாற்றி தன்னுடன் வளர்க்கிறார். இதற்கு ராக்கி என்றும் பெயர் வைக்கிறார். ராக்கி மிகவும் புத்திசாலியாக இருப்பதால், பிரம்மானந்தம் மூலமாக போலீசில் துப்பறியும் நாய்கள் பயிற்சியில் சேர்க்கிறார்.

  இந்நிலையில், எம்.எல்.ஏ.வாக இருக்கும் சாயாஜி ஷிண்டேவின் கூட்டாளி சுந்தரை ஆயுதம் கடத்தியதாக ஸ்ரீகாந்த் கைது செய்கிறார். ஆனால் சுந்தர், எம்.எல்.ஏ. சாயாஜி மூலம் வெளியே வந்து விடுகிறார். மறுபடியும் சுந்தரை பிடிக்க முயற்சி செய்யும் போது ஸ்ரீகாந்தை கொலை செய்து விடுகிறார்கள். இதை ராக்கி நாய் பார்த்து விடுகிறது. 

  இறுதியில் ஸ்ரீகாந்தை கொலை செய்தவர்களை ராக்கி எப்படி பழி வாங்குகிறது? என்பதே படத்தின் மீதிக்கதை.  படத்தில் நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார் ஸ்ரீகாந்த். வழக்கம் போல் இளமை துள்ளலான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் இசன்யாவிற்கு காட்சிகள் குறைவு என்றாலும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். திரையில் பார்ப்பதற்கு அழகாகவும் இருக்கிறார். எம்.எல்.ஏ.வாக வரும் சாயாஜி, போலீஸ் உயர் அதிகாரியாக வரும் நாசர் ஆகியோர் தங்களுடைய அனுபவ நடிப்பால் பளிச்சிடுகிறார்கள். 

  நாய் பழிவாங்குவதை மையமாக வைத்து படம் இயக்கி இருக்கிறார் இயக்குனர் கே.சி.பொகாடியா. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இதுபோல் ஒரு படத்தை பார்க்கும் அனுபவம் இருந்தாலும், ஒரு சில காட்சிகளை பார்க்கும் போது பழைய படங்கள் ஞாபகத்திற்கு வருகிறது. நாய்க்கு முக்கியத்துவம் கொடுத்து, சிறப்பாக வேலை வாங்கி இருக்கிறார்.   பப்பி லஹரி மற்றும் சரன் அர்ஜுனின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையை ஓரளவிற்கு ரசிக்க வைத்திருக்கிறது. அஸ்மல் கானின் ஒளிப்பதிவு சுமார் ரகம்.

  மொத்தத்தில் ‘ராக்கி’ கொஞ்சம் வீக்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கே.சி.பொகாடியா இயக்கத்தில் ஸ்ரீகாந்த் - எஸ்நயா நடிப்பில் உருவாகி இருக்கும் `ராக்கி' படத்தின் முன்னோட்டம். #RockyTheRevenge #Srikanth
  பி.எம்.பி. புரொடக்‌ஷன்ஸ் சார்பில் கே.சி.பொகாடியா தாயாரித்துள்ள படம் `ராக்கி'.

  ஸ்ரீகாந்த் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் எஸ்நயா நாயகியாக நடித்திருக்கிறார். நாசர், பிரம்மானந்தம், ஷாயாஜி ஷிண்டே, ஓஏகே சுந்தர், கராத்தே ராஜா, ரமேஷ்.டி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நாய் ஒன்று முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறது.

  படத்தொகுப்பு - பி.லெனின், இசை - பாப்பி லாஹிரி, சரண் அர்ஜூன், ஒளிப்பதிவு - அஸ்மல் கான், பாடல்கள் - ஏ.ஆர்.பி. ஜெயராம், நடனம் - பாப்பி, தயாரிப்பு, எழுத்து, இயக்கம் - கே.சி.பொகாடியா.  விபத்தில் அடிபட்ட ஒரு நாய்க்குட்டியை சிகிச்சை கொடுக்க வைத்து காப்பாற்றி, ராக்கி என்று பெயர் வைக்கிறார் ஸ்ரீகாந்த். ராக்கி மிகவும் புத்திசாலியாகவும் இருப்பதால் போலீஸ் துறை துப்பறியும் நாய்கள் பயிற்சி நிலையத்தில் சேர்த்து பயிற்சி பெற வைக்கிறார். எம்.எல்.ஏ.வுடன் ஏற்படும் பிரச்சனையில், ஸ்ரீகாந்தை கொலை செய்து விடுகிறார்கள். ஆனால், ராக்கி ஸ்ரீகாந்தை கொலை செய்தவர்களை எப்படி கண்டுபிடிக்கிறது என்பதை திரைக்கதையாக உருவாக்கி இருக்கிறார்கள்.

  படம் வருகிற ஏப்ரல் 12-ந் தேதி திரைக்கு வருகிறது. #RockyTheRevenge #Srikanth #Eshanya

  ராக்கி டீசர்:

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நாயை மையமாக வைத்து உருவாகி வரும் ‘ராக்கி’ படத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். #Rocky #Srikanth
  ஸ்ரீகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘ராக்கி’. இதில் இவர் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இவருடன் ஒரு நாய்க்குட்டியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறது. விபத்தில் அடிபட்ட ஒரு நாய்க்குட்டியை சிகிச்சை கொடுக்க வைத்து காப்பாற்றி, ராக்கி என்று பெயர் வைக்கிறார் ஸ்ரீகாந்த். 

  ராக்கி மிகவும் புத்திசாலியாகவும் இருப்பதால் போலீஸ் துறை துப்பறியும் நாய்கள் பயிற்சி நிலையத்தில் சேர்த்து பயிற்சி பெற வைக்கிறார். எம்.எல்.ஏ.வுடன் ஏற்படும் பிரச்சனையில், ஸ்ரீகாந்தை கொலை செய்து விடுகிறார்கள். ஆனால், ராக்கி ஸ்ரீகாந்தை கொலை செய்தவர்களை எப்படி கண்டுபிடிக்கிறது என்பதை திரைக்கதையாக உருவாக்கி இருக்கிறார்கள்.  இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விவேக் வெளியிட்டார். இப்படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வரவிருக்கிறது. 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் பி.வி.சிந்துவும், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்ரீகாந்தும் வெற்றி பெற்றனர். #IndianOpenBadminton #PVSindhu
  புதுடெல்லி:

  இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டி நேற்று முன்தினம் டெல்லியில் தொடங்கியது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து 21-8, 21-13 என்ற நேர் செட்டில் சக நாட்டவர் முக்தா அக்ரியை வீழ்த்தினார். இந்த ஆட்டம் வெறும் 23 நிமிடங்கள் மட்டுமே நடந்தது.

  ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய முன்னணி வீரர் ஸ்ரீகாந்த் 21-16, 18-21, 21-19 என்ற செட் கணக்கில் வோங் விங் கி வின்சென்டை (ஹாங்காங்) போராடி தோற்கடித்தார். மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் சுபாங்கர் தேவ் 14-21, 22-20, 21-11 என்ற செட் கணக்கில் 9-ம் நிலை வீரர் டாமி சுகியர்டோவுக்கு (இந்தோனேஷியா) அதிர்ச்சி அளித்தார். சாய் பிரனீத், சமீர் வர்மா, பிரனாய் ஆகிய இந்தியர்களும் தங்களது முதல் சுற்றில் வெற்றி கண்டனர். #IndianOpenBadminton #PVSindhu
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  1983-ஆம் ஆண்டு உலக கோப்பை போட்டியை மையப்படுத்தி உருவாகும் ‘1983’ படத்தில் தமிழக வீரர் ஸ்ரீகாந்த் கதாபாத்திரத்தில் நடிக்க ஜீவா ஒப்பந்தமாகி இருக்கிறார். #Jiiva #Srikanth
  1983-ம் ஆண்டு கபில் தேவ் தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி முதன்முறையாக உலகக் கோப்பையை வென்றது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டு ‘1983’ என்ற தலைப்பில் இந்தியில் புதிய திரைப்படம் உருவாகி வருகிறது.

  கபீர் கான் இயக்கும் இந்தப் படத்தில் கபில் தேவ் கதாபாத்திரத்தில் ரன்வீர் சிங் நடிக்கிறார். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் உலகக் கோப்பை அணியில் இடம்பெற்று இருந்தார். அவரது கதாபாத்திரத்தில் யார் நடிப்பது என்ற கேள்வி எழுந்தது. முதலில் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் அந்த கதாபாத்திரத்தில் நடிப்பதாகக் கூறப்பட்டது. பின் விஜய் தேவரகொண்டா நடிப்பதாகச் செய்திகள் வெளியாகின.  ஆனால், அந்தக் கதாபாத்திரத்தில் ஒரு தமிழ் நடிகர் நடித்தால் மட்டுமே சரியாக இருக்கும் என்று எண்ணிய இயக்குனர் கபீர் கான் நடிகர் ஜீவாவை ஒப்பந்தம் செய்துள்ளார். இந்தப் படத்துக்காக ஜீவா தினமும் இரண்டு மணிநேரம் கிரிக்கெட் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். #Jiiva #Srikanth

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ரோஜா கூட்டம், ஏப்ரல் மாதத்தில், பார்த்திபன் கனவு ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்த ஸ்ரீகாந்த் தற்போது வில்லனாக நடித்துள்ளார். #Srikanth
  ரோஜா கூட்டம் படம் மூலம் அறிமுகமான ஸ்ரீகாந்த் தொடர்ந்து ஏப்ரல் மாதத்தில், பார்த்திபன் கனவு என்ற வெற்றி படங்களில் நடித்தார். தற்போது தமிழ், மலையாளம் இரண்டு மொழிகளில் உருவாகும் ‘உன் காதல் இருந்தால்’ படத்தில் வில்லனாக நடிக்கிறார். மலையாளத்தில் 10க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்துள்ள ஹாசிம் மரிக்கர் இப்படத்தை இயக்கி உள்ளார். 

  படம் பற்றி அவர் கூறும்போது ‘படத்தில் ஸ்ரீகாந்துடன் லெனா, மக்பூல் சல்மான், சந்திரிகா, காயத்ரி உள்பட பலர் நடித்துள்ளனர். ஒரு படம் நன்றாக ஓடுவதற்கு கதை தான் தேவை. இந்த படத்தில் அது இருக்கும். படத்தின் பெயர் தான் காதல் சம்பந்தப்படுத்தி இருக்கும். ஆனால் படத்தில் காதல் பற்றி ஒன்றும் இருக்காது. 

  உச்சபட்ச திரில்லர் படமாக இருக்கும். இந்த படத்தில் ஒரே ஒரு கதாநாயகன் தான். அது ரியாஸ்கான் மட்டும் தான். அவரை தவிர மற்ற அனைவரும் வில்லன்கள் தான். இப்படத்தின் கதையை யாராலும் யூகிக்க முடியாது. படம் பார்ப்பவர்களுக்கு வித்தியாசமான அனுபவமாக இருக்கும். புதுமையான முயற்சிகளை கையாண்டிருக்கிறோம். தமிழ் படங்களை நான் மிகவும் நேசிக்கிறேன். அதனால் தமிழுக்கு வருகிறேன்’ என்றார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பவர்பாண்டி படத்திற்கு பிறகு தனுஷ் இயக்கி நடிக்கும் புதிய படத்தில், அதிதி ராவ் நாயகியாக நடிக்கும் நிலையில், இயக்குநராக தனுஷ் தன்னை கவர்ந்துவிட்டதாக அதிதி ராவ் கூறியுள்ளார். #DD2 #Dhanush
  தனுஷ் நடிப்பில் ‘வட சென்னை’ அக்டோபர் 18-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. இதுதவிர கவுதம் மேனன் இயக்கத்தில் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தையும், பாலாஜி மோகன் இயக்கத்தில் `மாரி-2' படத்திலும் தனுஷ் நடித்து முடித்துவிட்டார்.

  தற்போது பிரம்மாண்ட சரித்திர படம் ஒன்றை தனுஷ் இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு நான் ருத்ரன் என்று பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், இந்த படத்தில் தனுசுடன் நாகாஜுனா, சரத்குமார், எஸ்.ஜே.சூர்யா, ஸ்ரீகாந்த், அதிதி ராவ், அனு இமானுவேல்  உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். 

  காற்று வெளியிடை, செக்கச்சிவந்த வானம் படங்களுக்கு பிறகு அதிதி ராவ் நடிக்கும் படம் இது. தனுஷ் இயக்கத்தில் நடிப்பது பற்றி அவர் கூறும்போது,   ‘முன்பே ஒருமுறை தனுசுடன் நடிக்கும் வாய்ப்பு வந்தது. கால்ஷீட் பிரச்சினையால் அது நிறைவேறவில்லை. இப்போது அவர் இயக்கத்தில் நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளது. அவர் ஷாட் வைப்பது புதுமையாகவும் வேலை வாங்குவது எளிதாகவும் இருக்கிறது. ஒரு இயக்குனராக என்னை கவர்ந்துவிட்டார் தனுஷ்’ என்று பாராட்டி உள்ளார். #DD2 #Dhanush #AditiRaoHydari

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பவர்பாண்டி படத்திற்கு பிறகு தனுஷ் இயக்கி நடிக்கும் புதிய படத்தில் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்துள்ள நிலையில், நடிகை அனு இம்மானுவேல் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். #DD2 #Dhanush #AnuEmmanuel
  தனுஷ் நடிப்பில் ‘வட சென்னை’ அக்டோபர் 18-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. இதுதவிர கவுதம் மேனன் இயக்கத்தில் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தையும், பாலாஜி மோகன் இயக்கத்தில் `மாரி-2' படத்திலும் தனுஷ் நடித்து முடித்துவிட்டார்.

  தனுஷ் நடிப்பதோடு மட்டுமல்லாமல் பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமைகளை கொண்டிருக்கிறார். ‘பவர் பாண்டி’ என்ற திரைப்படம் மூலம் இயக்குனராகவும் அறிமுகமான இவர் தற்போது மீண்டும் இயக்கத்தில் களம் இறங்கி உள்ளார். அந்த வகையில் பிரம்மாண்ட சரித்திர படத்தை தனுசே இயக்கி, நடித்து வருகிறார். 

  படத்துக்கு நான் ருத்ரன் என்று பெயரிடப்பட்டுள்ளதாக தகவல் வருகிறது. இந்தப் படத்தில் தனுசுடன் நாகாஜுனா, சரத்குமார், எஸ்.ஜே.சூர்யா, ஸ்ரீகாந்த், அதிதி ராவ் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.   தற்போது இதில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க நடிகை அனு இமானுவேல் இணைந்துள்ளார். இவர் இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், விஷால் நடித்த ‘துப்பறிவாளன்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர். அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த அனு தமிழ் தவிர தெலுங்கிலும் பிசியாக நடித்து வருகிறார். #DD2 #Dhanush #AnuEmmanuel

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் போட்டியின் முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, வீரர் பிரனாய் ஆ