search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Drugs Case"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஜாபர் சாதிக்கை கைது செய்த போதை பொருள் தடுப்பு பிரிவினர் அவரது தயாரிப்பில் ஒரு படத்தை இயக்கிக் கொண்டிருந்த அமீரையும் விசாரணை செய்ய முடிவு செய்தனர்.
    • போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு சென்று தன்னுடைய நிலையை விளக்குவேன் என்று அமீர் ஆடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

    டெல்லியில் 3 தமிழர்கள் போதைப் பொருளுடன் பிடிபட்ட நிலையில் அதற்கு மூளையாக இருந்து செயல்பட்டது தமிழகத்தை சேர்ந்த ஜாபர் சாதிக் என்பது தெரிய வந்தது.

    இதனை அடுத்து தலைமறைவாக இருந்த ஜாபர் சாதிக்கை கைது செய்த போதை பொருள் தடுப்பு பிரிவினர் அவரது தயாரிப்பில் ஒரு படத்தை இயக்கிக் கொண்டிருந்த அமீரையும் விசாரணை செய்ய முடிவு செய்து ஏப்ரல் 2-ந்தேதி அமீர் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பினர்.

    இந்நிலையில், போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு சென்று தன்னுடைய நிலையை விளக்குவேன் என்று அமீர் ஆடியோ ஒன்றை வெளியிட்டிருந்த நிலையில் சற்றுமுன் டெல்லியில் உள்ள மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் வழக்கறிஞர் பிரபாகரனுடன் ஆஜராகியுள்ளார்.

    திருப்பதி தேவஸ்தான முன்னாள் அறங்காவலர் குழு தலைவரின் மகன் போதைப்பொருள் சப்ளை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்தவர் ஆதிகேசவலு நாயுடு. இவர் திருப்பதி தேவஸ்தான முன்னாள் அறங்காவலர் குழு தலைவராக இருந்தார்.

    இவரது மகன் சீனிவாஸ் (வயது 45). இவர் நேற்று ஐதராபாத்தில் இருந்து பெங்களூருக்கு விமானத்தில் சென்றார். பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த சீனிவாசனை போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் பெங்களூரில் சதாசிவம் நகரில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்று வீடு முழுவதும் சோதனை நடத்தினர்.

    இதையடுத்து சீனிவாசை கோர்ட்டில் ஆஜர்படுத்தி 15 நாள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

    சீனிவாஸ் கைது குறித்து போலீசார் கூறுகையில்:-

    ஐதராபாத் பெங்களூரு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் சினிமா நடிகர், நடிகைகள் முக்கிய பிரமுகர்களுக்கு சீனிவாஸ் போதை பொருள் சப்ளை செய்ததாக அவர் மீது புகார் எழுந்தது. இதுகுறித்து விசாரணை நடத்தியதில் சீனிவாஸ் பிரவுன் சுகர் உள்ளிட்ட போதைபொருட்கள் சப்ளை செய்தது உறுதியானது.

    இதையடுத்து அவரை கைது செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.

    திருப்பதி தேவஸ்தான முன்னாள் அறங்காவலர் குழு தலைவரின் மகன் போதைப்பொருள் சப்ளை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×