search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gayathri Raghuram"

    • மாணவ-மாணவிகளுக்கு லேப்டாப் நிறுத்தப்பட்டதால் உயர்கல்வி படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
    • நீட் தேர்வை ரத்து செய்வதாக கூறி மாணவர்களை ஏமாற்றி இன்னும் நாடகமாடி வருகின்றனர்.

    போடி:

    தேனி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து மகளிர் அணி துணை செயலாளரும், நடிகையுமான காயத்ரி ரகுராம் பல்வேறு இடங்களில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது,

    எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவை முதலமைச்சராக்கியது தேனி மாவட்டம். தற்போது மீண்டும் அவரது ஆசிபெற்ற அ.தி.மு.க. வேட்பாளர் இங்கு போட்டியிடுகிறார். தமிழகத்தில் போதை, கஞ்சா விற்பனை அதிகரித்து வருகிறது. தி.மு.க.வினரே இதுபோன்ற விற்பனையில் ஈடுபட்டு வருவதுதான் கொடுமை.

    மக்களுக்கு நல்ல பல திட்டங்களை கொண்டு வந்தவர் ஜெயலலிதா. அதனை எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து செயல்படுத்தினார். ஆனால் தி.மு.க. ஆட்சியில் அதனை அடியோடு நிறுத்திவிட்டனர். தாலிக்கு தங்கம் வழங்காததால் பல பெண்களின் திருமணம் கேள்விக்குறியாகி உள்ளது. தற்போது 1 பவுன் தங்கம் ரூ.52 ஆயிரத்தை தாண்டி விற்கப்படுகிறது. அ.தி.மு.க. ஆட்சியாக இருந்தால் அந்த தங்கம் பெண்களுக்கு கிடைத்திருக்கும. மாணவ-மாணவிகளுக்கு லேப்டாப் நிறுத்தப்பட்டதால் உயர்கல்வி படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

    தாங்கள் ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு ரூ.1000 வழங்குவதாக தி.மு.க.வினர் வாக்குறுதி அளித்தனர். ஆனால் 20 சதவீதம் பேருக்கு மட்டுமே அது வழங்கப்படுகிறது. தகுதியின் அடிப்படையில் உரிமைத்தொகை வழங்கப்படுவதாக அவர்கள் கூறுகின்றனர். பெண்களை தகுதியின் அடிப்படையில் நிர்ணயிக்க உங்களுக்கு என்ன தகுதி உள்ளது என அவர்களிடம் நீங்கள் கேட்கவேண்டும்.

    நீட் தேர்வை ரத்து செய்வதாக கூறி மாணவர்களை ஏமாற்றி இன்னும் நாடகமாடி வருகின்றனர். தமிழகத்தில் மின்கட்டணம், சொத்துவரி, பதிவு கட்டணம் போன்றவை பல மடங்கு உயர்த்திவிட்டனர். விலைவாசி கடுமையாக உயர்ந்த பிறகு ரூ.1000 கொடுத்து என்ன பயன்?

    இவ்வாறு அவர் பேசினார்.

    • எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுக-வில் இணைத்துக் கொண்டார்.
    • நன்றியை மறக்கக்கூடாது என்பதற்காக அதிமுக-வில் இணைந்துள்ளேன் என தெரிவித்தார்.

    பிரபல நடிகையும், நடன இயக்குநருமான காயத்ரி ரகுராம், அண்ணாமலையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பாஜக-வில் இருந்து விலகுவதாக அறிவித்தார். மேலும், தமிழக பாஜக-வில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என குற்றம் சாட்டிய அவர், பாஜக-விற்கு எதிரான கருத்துக்களையும் பதிவிட்டு வந்தார்.

    இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியை சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அலுவலகத்தில் சந்தித்து அதிமுக-வில் இணைத்துக் கொண்டார். இதுகுறித்து அவர் கூறியதாவது, என் குடும்பத்தினர் எப்போதும் அதிமுக-வினர் தான், நன்றியை மறக்க கூடாது என்பதற்காக அதிமுக-வில் இணைந்துள்ளேன் எனக் கூறினார்.

    பாஜக உடனான கூட்டணில் இருந்து அதிமுக விலகிய பிறகு, பாஜக-வை சேர்ந்த பலரும் அதிமுக-வில் இணைந்து வருகின்றனர். அந்த வகையில், தற்போது பாஜக-வில் இருந்து விலகிய நடிகை காயத்ரி ரகுராம், இன்று அதிமுக-வில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அண்ணாமலையால் ஒரு இஞ்ச் கூட பா.ஜனதா வளரவில்லை என்பது தான் உண்மை.
    • எடப்பாடி பழனிசாமி திறமையான அரசியல்வாதி. அவரது தலைமையில் அ.தி.மு.க. நிச்சயம் வளரும்.

    பா.ஜனதாவில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட நடிகை காயத்ரி ரகுராம் அரசியல் பக்கம் தலைகாட்டாமல் இருக்கிறார். இருந்தாலும் அண்ணாமலையை அவ்வப்போது வெளுத்து வாங்குகிறார். இது தற்காலிகமாக ஏற்பட்டுள்ள இடைவெளிதான். நிச்சயமாக அரசியலுக்கு வருவேன். பெண்களுக்கு எந்த கட்சியில் மரியாதை இருக்கிறதோ அந்த கட்சியில் இணைந்து செயல்படுவேன் என்றார். அவர் மேலும் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் மோடியின் பெயரால் பா.ஜனதா சற்று வளர்ந்திருக்கிறது என்று சொல்லலாம். ஆனால் அண்ணாமலையால் ஒரு இஞ்ச் கூட பா.ஜனதா வளரவில்லை என்பது தான் உண்மை.

    எடப்பாடி பழனிசாமி திறமையான அரசியல்வாதி. அவரது தலைமையில் அ.தி.மு.க. நிச்சயம் வளரும். கடந்த தேர்தலில் 2½ சதவீத வாக்குகள் வித்தியாசத்தில் தான் அ.தி.மு.க. தோற்றது. இப்போது பா.ஜனதாவிடம் இருந்து வெளியேறியது அந்த கட்சிக்கு கூடுதல் ஆதாயத்தை தான் கொடுக்கும் என்றார்.

    • அரசியல் கட்சியில் இருந்து வெளியே வந்த பிறகு நானும் ஒரு சாமானிய பெண் என்பதால் எனக்கு அச்சுறுத்தல்கள் உள்ளன.
    • அண்ணாமலை செல்லும் யாத்திரைக்கு எதிராக அதே நாளில் எனது யாத்திரையை நான் தொடங்குவேன்.

    சென்னை:

    தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வருகிற ஏப்ரல் 14-ந் தேதி முதல் திருச்செந்தூரில் இருந்து தமிழகம் முழுவதும் பாத யாத்திரை செல்கிறார்.

    அவருக்கு போட்டியாக பா.ஜனதாவில் இருந்து நீக்கப்பட்ட நடிகை காயத்ரி ரகுராமும் பாதயாத்திரை செல்லப்போவதாக அறிவித்துள்ளார்.

    நடிகை காயத்ரி ரகுராம் பா.ஜனதாவில் இருந்தபோது உள்கட்சி விவகாரங்கள் பற்றி கடுமையாக விமர்சித்தார். இதனால் கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து காயத்ரி ரகுராம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

    இதுதொடர்பாக நன்றி தெரிவித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் பா.ஜனதாவை கடுமையாக விமர்சித்தார். எனது 8 வருட கடின உழைப்பு, பணம், தனிப்பட்ட வாழ்க்கை எல்லாவற்றையும் பறித்துக்கொண்டு தூக்கி எறிந்ததற்கு நன்றி என்று குறிப்பிட்டு இருந்தார். மேலும் ஜனவரி 27-ந் தேதி பாத யாத்திரை புறப்படுவதாகவும் களத்தில் சந்திப்போம் என்றும் கூறி இருக்கிறார்.

    இந்த நிலையில் அண்ணாமலை திருச்செந்தூரில் இருந்து தமிழகம் முழுவதும் பாத யாத்திரை தொடங்க போவதாக அறிவித்துள்ளார்.

    இப்போது அவரது பாத யாத்திரைக்கு போட்டியாக காயத்ரியும் தனது பாத யாத்திரையை தொடங்க முடிவு செய்துள்ளார்.

    இதுதொடர்பாக காயத்ரி ரகுராம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு மக்களின் ஆதரவுடனும், ஆசியுடனும் எனது சக்தி யாத்திரை ஏப்ரல் 14-ந் தேதி சென்னை முதல் கன்னியாகுமரி வரை தொடங்கவுள்ளது.

    ஜனவரி 27-ந் தேதி சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை பாதிக்கப்பட்ட பெண்களுக்காக நடைபெறவிருந்த எனது "சக்தி யாத்திரையை" ஏப்ரல் 14-ந் தேதிக்கு மாற்றுகிறேன். இந்த தேதி மாற்றத்திற்கு ஈரோடு இடைத்தேர்தலும் ஒரு காரணம்.

    அரசியல் கட்சியில் இருந்து வெளியே வந்த பிறகு நானும் ஒரு சாமானிய பெண் என்பதால் எனக்கு அச்சுறுத்தல்கள் உள்ளன. எனக்கு இசட் பிரிவு பாதுகாப்பு இல்லை. எனவே ஒரு தேசியக்கட்சியின் மாநிலத்தலைவருக்கு எதிராக நீதிக்கு போராடும் ஒரு பெண் என்ற முறையில் நான் கவனமாக இருக்க வேண்டும்.

    ஆனாலும் நான் பயப்பட மாட்டேன். ஆகையால் அண்ணாமலை செல்லும் யாத்திரைக்கு எதிராக அதே நாளில் எனது யாத்திரையை நான் தொடங்குவேன். உண்மையும் நீதியும் வெல்லும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • காயத்ரி கொஞ்சம் உணர்ச்சிவசப்படக்கூடியவர். தவறு என்றால் உடனடியாகச் சொல்லக்கூடிய தைரியம் மிகுந்த பெண்மணி.
    • பிரச்சினைகளை எப்படி லாவகமாக, தைரியத்தோடு எதிர்கொள்ள வேண்டும் என்பதை நாம்தான் தெரிந்துகொள்ள வேண்டும்.

    நடிகை காயத்ரி ரகுராமுக்கும் பா.ஜனதா தலைமைக்கும் இடையே ஏற்பட்ட கருத்து மோதலால் அவர் கட்சியில் இருந்து விலகினார். இப்போது அவர் கட்சியின் அடிப்படை பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். காயத்ரியின் புகார்கள் குறித்து அகில இந்திய பா.ஜனதா மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் கூறியதாவது:-

    காயத்ரி, கொஞ்சம் உணர்ச்சிவசப்படக்கூடியவர். தவறு என்றால் உடனடியாகச் சொல்லக்கூடிய தைரியம் மிகுந்த பெண்மணி, ஆனால், கட்சிக்கு என்று ஒரு கட்டுப்பாடு இருக்கிறது. உங்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளுக்கு, கட்சிக்குள் இருக்கக்கூடிய அமைப்பு ரீதியான விஷயத்தைப் பின்பற்றித்தான் நியாயம் பெற வேண்டும். அதை விட்டு விட்டு தலைவர்களைப் பொதுவெளியில் விமர்சிப்பதன் மூலமாக, பிரச்சினையை வெளியே கொண்டு வரலாமே தவிர, நீதி கிடைக்குமா என்பதை பார்க்க வேண்டும்.

    பிரச்சினைகளை எப்படி லாவகமாக, தைரியத்தோடு எதிர்கொள்ள வேண்டும் என்பதை நாம்தான் தெரிந்துகொள்ள வேண்டும். எனக்கும் இதுபோன்ற பல்வேறு சிக்கல்கள் வந்திருக்கின்றன. அதையெல்லாம் பொறுமையாகவும், சட்டரீதியாகவும் தகர்த்தெறிந்திருக்கிறேன். அதனால் அந்த நம்பிக்கையைவிட்டு வெளியே செல்லக்கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை நடைபயணம் நடத்துவேன்.
    • தனியாக இருந்தாலோ அல்லது யார் வேண்டுமானாலும் என்னுடன் சேரலாம்.

    சென்னை:

    நடிகை காயத்ரி ரகுராம் இன்று டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    "பா.ஜ.க பெண்களை அவமானப்படுத்தியதற்காகவும், பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்காததற்காகவும் ஜனவரி 27-ம் தேதி முதல் சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை நடைபயணம் நடத்துவேன். தனியாக இருந்தாலோ அல்லது யார் வேண்டுமானாலும் என்னுடன் சேரலாம். எந்த அச்சுறுத்தலுக்கும் நான் பயப்படவில்லை.

    என் உயிர் போனாலும் செய்வேன். நான் நீதிக்காக போராடுவேன். நான் அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துவேன். இது அரசியலில் பொது சேவை மற்றும் பொது வாழ்க்கை பெண்களுக்கானது.

    இந்த நடைப்பயணம் அரசியலில் உள்ள அனைத்து பாதிக்கப்பட்ட பெண்களுக்கும், பாதிக்கப்பட்ட சாதாரண பொது பெண்களுக்கும், பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் பாதிக்கப்பட்ட காவல்துறை பெண்களுக்கும்" என கூறியுள்ளார்.

    • பா.ஜனதா கட்சியில் ‘சஸ்பெண்டு’ ஆகி இருக்கிறேன் என்பது மட்டும் தான் எல்லோருக்கும் தெரியும்.
    • பா.ஜனதாவில் ஆடியோ வீடியோ விவகாரத்தில் எவ்வளவோ பெண்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

    சென்னை:

    தமிழக பா.ஜனதாவின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவராக இருந்தவர் நடிகை காயத்ரி ரகுராம்.

    இவர் கட்சிக் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டதாக கூறி 6 மாதத்துக்கு சஸ்பெண்டு செய்யப்படுவதாக தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை அறிவிப்பு வெளியிட்டார்.

    இந்த நிலையில் பா.ஜனதா கட்சியில் இருந்து நடிகை காயத்ரி ரகுராம் விலகினார். இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் அறிவிப்பு வெளியிட்டார்.

    பா.ஜனதாவில் இருந்து விலகியது தொடர்பான காரணம் குறித்து காயத்ரி ரகுராம் அளித்த பேட்டி வருமாறு:-

    பா.ஜனதா கட்சியில் 'சஸ்பெண்டு' ஆகி இருக்கிறேன் என்பது மட்டும் தான் எல்லோருக்கும் தெரியும். அதையும் தாண்டி துபாயில் என்னென்ன விஷயங்கள் நடந்தது என்பது தொடர்பாக பத்திரிகைகளில் வந்துள்ளது. 150 பேர் இருக்கும் ஆலோசனை கூட்டத்தில் அண்ணாமலை என்னை பற்றி தரக்குறைவாக பேசி இருக்கிறார்.

    பா.ஜனதாவில் ஆடியோ வீடியோ விவகாரத்தில் எவ்வளவோ பெண்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்களுக்கான நீதி எங்கே? அவர்கள் வெளியே வந்து பேசப் பயப்படலாம். அவர்களின் பதவி பறி போகலாம் அல்லது அவர்கள் குடும்ப ரீதியாக மன அழுத்தத்துக்கு ஆளாகலாம். எனவே அவர்கள் பேச பயப்படுகிறார்கள்.

    பா.ஜனதா கட்சியில் இருந்து அழைப்பு வந்தால் மீண்டும் சேருவேன். இது என் தாய்வீடு என்று சொல்லி இருக்கிறேன். கட்சியில் சேர்க்காவிட்டால் கூட எனது ஓட்டு பா.ஜனதாவுக்குத் தான்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்தியாவில் படித்த இளைஞர்கள் வேலைக்காக வெளிநாடு செல்கிறார்கள். குறிப்பாக தமிழகத்தில் இருந்து அதிகம் பேர் வேலைக்கு செல்கின்றனர்.
    • வெளிநாடு செல்பவர்களில் பலர் போலி விசாவை பெற்று சென்று அங்கு தவறான கும்பலிடம் மாட்டி கொள்கின்றனர்.

    கோவை:

    பா.ஜனதா கட்சியின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் சார்பில் கோவை வடகோவை பகுதியில் உள்ள குஜராத் சமாஜத்தில் மாநில அளவிலான பயிற்சி முகாம் நடைபெற்றது.

    பா.ஜனதா கட்சியின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு தலைவர் காயத்ரி ரகுராம் கலந்து கொண்டார்.

    அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    இந்தியாவில் படித்த இளைஞர்கள் வேலைக்காக வெளிநாடு செல்கிறார்கள். குறிப்பாக தமிழகத்தில் இருந்து அதிகம் பேர் வேலைக்கு செல்கின்றனர். இப்படி செல்பவர்களில் பலர் போலி விசாவை பெற்று சென்று அங்கு தவறான கும்பலிடம் மாட்டி கொள்கின்றனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட இதுபோன்று சிக்கி கொண்ட இந்தியர்களை மத்திய அரசு மீட்டு இந்தியாவிற்கு அழைத்து வந்துள்ளது. எனவே தமிழகத்தில் இருந்து வெளிநாடு செல்லும் இளைஞர்கள் பாதிக்காத வகையில் தமிழக அரசு தீவிர சட்டங்களை இயற்ற வேண்டும்.

    நான் பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து தமிழ் மொழி குறித்து அங்குள்ள மக்களிடம் கூறி வருகிறேன். அப்படி ஒரு முறை பிலிப்பைன்ஸ் சென்றபோது, அங்கு தமிழைப் போற்றும் திருவள்ளுவர் சிலைகள் அதிகமாக இருந்தது. எனவே தமிழகத்திலும் வெளிநாடுகளைப் போல திருவள்ளுவர் சிலைகளை அதிக அளவில் சிலை வடிவமைப்பாளர்கள் செய்து விற்பனை செய்ய வேண்டும்.

    திராவிட இயக்கத்தினர் எப்போதும் தமிழை வளர்க்கவில்லை. மாறாக அவர்கள் ஆங்கிலத்தையே வளர்த்தனர். தமிழை வளர்க்க விடாமல் செய்து வருகின்றனர். மேலும் தமிழகத்தில் ஆங்கில பள்ளிக்கூடங்களே அதிகளவில் உள்ளது. எனவே தமிழக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இந்தி எங்கும், யாரிடமும் திணிக்கப்படவில்லை.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பேட்டி முடிந்ததும், நிருபர்கள், டுவிட்டர் பக்கத்தில் சர்ச்சைக்குரிய வகையில் 1998-ம் ஆண்டு போன்று மீண்டும் ஒரு சம்பவம் நடந்திருப்பது போல பதிவு செய்துள்ளீர்களே என காயத்ரி ரகுராமிடம் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு அவர், அதுபோன்ற பதட்டமான நிலையை உருவாக்க நான் எந்தப் பதிவும் போடவில்லை. இந்த கேள்வி கேட்டு நீங்கள் தான் பதட்டமான சூழ்நிலையை உருவாக்குகிறீர்கள் என தெரிவித்தார். இதனால் நிருபர்களுக்கும், காயத்ரி ரகுராமுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அங்கிருந்த பா.ஜ.க.வினர் நிருபர்களை சூழ்ந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர். அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    மோடி பதவியேற்கும் நேரத்தில் வடிவேலு பட வசனம் டிரெண்டாவது முட்டாள்தனமானது என்று காயத்ரி ரகுராம் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    வடிவேலு நடித்த பிரெண்ட்ஸ் படத்தின் காமெடி காட்சி 2 நாட்களாக சமூகவலைதளங்களில் உலக அளவில் டிரெண்டாகி வருகிறது.

    மோடி பதவி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெறும் நாளில் அவரது எதிர்ப்பாளர்களான தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் தான் இந்த பரபரப்பை ஏற்படுத்தியதாக மோடி ஆதரவாளர்கள் குறை கூறி வருகிறார்கள்.

    பா.ஜனதாவில் சில காலம் இருந்துவிட்டு தற்போது அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கும் காயத்ரி ரகுராம் இதை கண்டித்து பதிவிட்டு இருந்தார். காயத்ரி தனது டுவிட்டர் பக்கத்தில் ‘நான் சில மக்களுக்காக வருத்தப்படுகிறேன். ஒரு சினிமா காட்சியை வைத்து இவ்வளவு காமெடி செய்ய என்ன அவசியம்.



    அதை வைத்துப் போடப்படும் மீம், ஹேஷ்டேக் போன்ற வி‌ஷயங்கள் எல்லாம் தேவையில்லாத ஒன்று. தேவையில்லாத ஹேஷ்டேக் டிரெண்ட் ஆகி வருகிறது. நம்முடைய நக்கல்தனத்தாலும், வெட்டித்தனத்தாலும் முட்டாளாக தெரியப் போகிறோம்’ என கோபமாக பகிர்ந்து இருந்தார்.

    அதற்கு கமெண்டில் குவிந்த மோடி எதிர்ப்பாளர்கள் ‘மோடியை டிரெண்ட் பண்ணாததால் கோபம் வருகிறதா?’ என்பது போல் கேட்டிருந்தனர்.

    இதுபோல் தொடர்ந்து மோடியை ஒப்பிட்டு கமெண்ட் வரவும் அதற்கு இன்னொரு டுவிட்டைப் பகிர்ந்திருந்தார் காயத்ரி ரகுராம். அதில், ‘மோடிஜிக்கு எதிராக இதை நீங்கள் செய்ய நினைத்தால் இது முட்டாள்தனமானது.

    இது நம்மை முட்டாள்தனமாகக் காட்டும் செயல். மற்ற நாடுகளில் இருக்கும் மக்கள் நமக்கு மூளையில்லை என்று நினைத்து விடுவார்கள். முக்கால்வாசி ஆட்கள் இந்த காமெடியையே புரிந்துகொள்ளவில்லை. இது ஏன் சுற்றிக்கொண்டிருக்கிறது? முட்டாள்தனம்’ என கூறி இருக்கிறார்.
    இந்து தீவிரவாதம் பற்றி கமல்ஹாசன் பேசியது முட்டாள் தனமானது என்று நடிகை காயத்ரி ரகுராம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    இந்து தீவிரவாதம் பற்றி கமல்ஹாசன் பேசியதற்கு நடிகை காயத்ரி ரகுராம் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    ‘இது போன்ற முட்டாள் தனமான பேச்சுகளை விட்டு விட்டு மாற்றத்தை ஏற்படுத்துங்கள். அதற்காக தான் மக்கள் ஓட்டு போட்டுள்ளனர். கொலைகாரர்களுக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே வித்தியாசம் உள்ளது. தீவிரவாதத்தில் மதத்தை கொண்டு வர வேண்டாம்.

    நீங்கள் திரையுலகில் சிறந்த மனிதர் என்பதில் ஐயம் இல்லை ஆனால் அரசியல் என்பது மேடை நாடகம் இல்லை.

    மோசமான அரசியல்வாதிகளான அரவிந்த் கெஜ்ரிவால், மம்தா ஆகியோரின் ஆதரவை பெற, மக்களிடம் அனுதாபத்தை பெற அழுவது போன்றவற்றை விட்டுவிட்டு மாற்றத்தை ஏற்படுத்துவீர்கள் என்று நம்பி மக்கள் வாக்களிக்கிறார்கள். அரசியலில் மேலும் ஒரு நடிகராகிவிடாதீர்கள்.


    என் அங்கிளாக, நடிகராக உங்களை மதிக்கிறேன். ஆனால் இது போன்ற வார்த்தைகளை அல்ல. மாற்றமாக இருங்கள். மேலும் ஒரு அரசியல் வாதியாக அல்ல.

    என்னை முதுகில் குத்துபவர்கள் பலர் உள்ளனர். அவர்களை நான் தீவிரவாதிகள் என்று கூறட்டுமா? அது உங்களையும் சேர்த்து தான்.

    பல ஆண்டுகளாக காங்கிரஸ் இந்தியாவின் முதுகில் குத்தியுள்ளது. அப்படி என்றால் காங்கிரஸை தீவிரவாதி எனலாமா? கமல் நடித்தது போதும்’

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    இன்னொரு பதிவில் ‘வேறு ஒரு மதத்தினர் வசிக்கும் பகுதியில் இந்து மதத்தை குறிப்பிட்டு கமல் பேசியது ஏன்?. அவர் கடவுள் நம்பிக்கை இல்லாதவர் தானே? இந்துக்களுக்கு கமல் தீவிரவாதியா?, பயங்கரவாதியா? தவறான வார்த்தைகளை நியாயப்படுத்தாதீர்கள். அவரது வார்த்தை முட்டாள் தனமானது.

    இந்து மதத்தை அவமதிப்பது போல கமல், கி.வீரமணி, ஸ்டாலின் ஆகிய சிலர் தொடர்ந்து பேசி வருகின்றனர். முதல்வர் பழனிசாமி இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜெயலலிதா ஆட்சியில் இருந்த போது இது போன்று யாரும் பேச துணிவிருந்ததில்லை. நீங்களும் இதைப் போல செய்ய வேண்டுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    பா.ஜ.க.வில் இருந்து தன்னை நீக்குவதற்கு மாநில தலைவரான தமிழிசை சவுந்தரராஜனுக்கு அதிகாரம் இல்லை என்று காயத்திரி ரகுராம் கூறியுள்ளார். #GayathriRaghuram #TamilisaiSoundararajan #BJP
    சென்னை:

    தமிழ் சினிமாவில் நடிகையாகவும் நடன இயக்குனராகவும் விளங்குபவர் காயத்திரி ரகுராம்.

    இவர் நள்ளிரவு குடிபோதையில் கார் ஓட்டி போலீசில் அபராதம் செலுத்தியதாக செய்தி வெளியானது. இந்த செய்தியை மறுத்த காயத்திரி ரகுராம் தன்மீது இதுபோன்ற அவதூறு பரப்பப்படுவதற்கு தமிழக பா.ஜனதாவில் நிலவும் உள்கட்சி பூசலே காரணம் என்று குற்றம் சாட்டினார். காயத்திரி ரகுராம் பா.ஜனதா கட்சியின் இளைஞர் அணியில் இருப்பதால் இந்த குற்றச்சாட்டு தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    நேற்று பா.ஜனதா கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனிடம் செய்தியாளர்கள் இந்த குற்றச்சாட்டு பற்றி கேட்டார்கள். அதற்கு தமிழிசை ‘காயத்திரி ரகுராம் பா.ஜனதாவிலேயே இல்லை’ என்று பதில் அளித்தார். இந்த கருத்துக்கு காயத்திரி ரகுராம் கோபமாக பதில் அளித்துள்ளார்.


    இது தொடர்பன அவரது டுவிட்டர் பதிவில் ‘அன்புள்ள தமிழிசை மேடம், நான் பாஜனதாவின் உறுப்பினராகச் சேர்க்கப்பட்டது ஒரு கணினி மூலமாக. நீங்களாக யாரையும் கட்சியில் சேர்க்கவோ விலக்கவோ இயலாது. இது ஒரு தேசியக் கட்சி. இரண்டாவதாக தமிழக பாஜக யுவ மோர்சாவின் செயல்வீரர்களும் தலைவர்களும் பெண்களுக்கு எதிரானவர்கள். அவர்கள் பெண்களை மிரட்டுகின்றனர். அவர்களை யாரும் கேள்வியே கேட்கக்கூடாதா என்ன?

    நான் பா.ஜனதாவில் இருப்பது நரேந்திர மோடிக்காகவே தவிர உள்ளூர் முகங்களுக்காக அல்ல. உங்கள் கட்சியிலிருந்து உறுப்பினர்களை விரட்டுவதை விட்டுவிட்டு ஆள் சேர்க்கப் பாருங்கள். உங்களுக்கு யாரை சேர்க்க வேண்டும் நீக்க வேண்டும் என்று சொல்லும் அதிகாரம் இல்லை.

    நீங்கள் தமிழக பாஜனதாவின் தலைவர் மட்டும்தான். நீங்களே எல்லா எதிர்காலத்தையும் நிர்ணயித்துவிட முடியாது. தமிழக பாஜகவில் இருந்து கொண்டு பிரச்சனைகளை சந்திப்பதைவிட அதில் இருந்து நான் விலகியே இருக்கிறேன். அன்று காவலர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படும் சர்ச்சையில் நான் உண்மையை விளக்கத் தயாராக இருக்கிறேன்.

    ஆனால், யாரும் கேட்கத் தயாராக இல்லை. அன்று நான் தான் காரை ஓட்டிச் சென்றேன். காவலர் ஒருவர் என்னை இறக்கிவிட்டார் என்று சொல்வது பொய். நான் தேவைப்பட்டால் ரத்த பரிசோதனைக்குக்கூட தயார்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார். #GayathriRaghuram #TamilisaiSoundararajan #BJP
    நடிகை காயத்ரி ரகுராம் குடிபோதையில் கார் ஓட்டியதாக செய்திகள் வெளியான நிலையில், இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். #GayathriRaghuram
    நடிகையும் நடன இயக்குனருமான காயத்ரி ரகுராம் குடிபோதையில் கார் ஓட்டி அடையாறு போக்குவரத்து போலீசாரிடம் சிக்கியதாக தகவல் வெளியானது. இதுகுறித்து அவர் ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

    இந்த போலி செய்தியை உருவாக்கியது குடித்துவிட்டு கார் ஓட்டி சிக்கிய நிருபர் தான். நான் படப்பிடிப்பு முடித்துவிட்டு என் சக கலைஞரை வீட்டில் விடச் சென்றேன்.

    வழக்கமான பரிசோதனைக்காக என் காரை நிறுத்தினார்கள். நான் போலீசாருடன் மோதவில்லை.

    ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்கள் வேறு பையில் இருந்தது. அதனால் அந்த ஆவணங்களை சரிபார்க்க போக்குவரத்து போலீசார் என்னுடன் வந்தார். அவர்களின் பணியை பாராட்டுகிறேன். சண்டை எதுவும் இல்லை.


    அவர் என் தந்தை பற்றி பேசினார், அவர் என் ரசிகர் அதனால் நாங்கள் சேர்ந்து செல்பி எடுத்துக் கொண்டோம். நான் காரை ஓட்டினேன். நான் குடிபோதையில் இருந்திருந்தால் அவர்கள் மீண்டும் என்னை காரை ஓட்ட விட்டிருக்கமாட்டார்கள்.

    இவ்வாறு அவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். #GayathriRaghuram

    ×