search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nesamani"

    • பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் மார்ஷல் நேசமணி பிறந்தநாள் விழா நடைபெற்றது.
    • இந்த பிறந்த நாள் விழாவில், அந்தியூர் நகர தலைவர் சரவணன், துணை தலைவர் ஜெயகுமார் மற்றும் பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.முடிவில் மாவட்ட துணைதலைவர் கேசவராஜ் நன்றி கூறினார்

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் தவிட்டுபாளையம் பகுதியிலுள்ள பெருந்தலை–வர் மக்கள் கட்சி அலுவ–லகத்தில் கன்னியா–குமரி மாவட்டத்தை தமிழ–கத்தோடு சேர்க்க போராட்டங்கள் நடத்தி வெற்றி கண்ட

    மார்ஷல் நேசமணியின் 127- வது பிறந்த நாள் நிகழ்ச்சி பெருந்தலைவர் மக்கள் கட்சி ஈரோடு வடக்கு மாவட்டம் சார்பாக மாவட்ட தலைவர் சுப்ரமணியம் தலைமையில் நடைப்பெற்றது

    அந்தியூர் ஒன்றிய தலைவர் சக்திவேலன் அனைவரையும் வரவேற்றார், சிறப்பு அழைப்பாளராக மாநில உயர் மட்ட குழு உறுப்பினர் தங்கதுரை, தென் மாவட்ட நாடார் சங்க தலைவர் நெல்லை மகாதேவன் கலந்து கொண்டு மார்ஷல் நேசமணியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார்.

    அந்தியூர் நகர தலைவர் சரவணன், துணை தலைவர் ஜெயகுமார் மற்றும் பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.முடிவில் மாவட்ட துணைதலைவர் கேசவராஜ் நன்றி கூறினார்

    உலக முழுவதும் ட்ரெண்டான நேசமணியின் நிலைமைக்கு காரணமான கிருஷ்ணமூர்த்தி தற்போது பழிவாங்கப்பட்டிருக்கிறார்.
    விஜய், சூர்யா, வடிவேலு, ரமேஷ் கண்ணா நடிப்பில் வெளியான படம் ப்ரெண்ட்ஸ். இதில் வடிவேலு நேசமணி கதாபாத்திரத்திலும், ரமேஷ் கண்ணா கிருஷ்ணமூர்த்தி கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார்கள். இப்படத்தில் ரமேஷ் கண்ணாவின் கைதவறி விழும் சுத்தியல் வடிவேலு தலையில் பட்டு மயக்கமடைவார். 

    இந்த காமெடியை மையப்படுத்தி ட்விட்டரில் பிரே ஃபார் நேசமணி (#Pray_for_Neasamani) என்ற ஹேஷ்டேக்கை நெட்டிசன்கள் டிரெண்டாக்கி வந்தனர்.

    இதற்கு சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலர் கருத்து தெரிவித்து ட்விட்டரில் பதிவு செய்தனர். இது உலகளவில் டிரெண்டானது. பல மீம்ஸ்கள் உருவாக்கி பகிரப்பட்டு வந்தது. நேசமணியின் நிலைமைக்கு காரணமான கிருஷ்ணமூர்த்தி தற்போது பழி வாங்கப்பட்டிருக்கிறார். 



    காமெடி நடிகர் சதீஷ், தனது ட்விட்டர் பக்கத்தில் ரமேஷ் கண்ணாவை சுத்தியால் அடிப்பது போன்ற வீடியோ ஒன்றை பதிவு செய்து, பழிவாங்கப்பட்டார் கிருஷ்ணமூர்த்தி என்று கூறியிருக்கிறார்.
    வடிவேலுவின் நேசமணி கதாபாத்திரம் உலகளவில் டிரெண்டாகியிருக்கும் நிலையில், அவர் அளித்த பேட்டியில், தயாரிப்பாளர் சங்கத்தில் தன்னை அழிக்க பார்ப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.
    நடிகர் வடிவேலு பிரெண்ட்ஸ் படத்தில் நடித்த நேசமணி காமெடி 2 நாட்களாக உலக அளவில் டிரெண்டிங் ஆனது. இது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    வடிவேலு வசனம் பரபரப்பானதால் நிருபர்கள் வடிவேலுவை தொடர்பு கொண்டு இது பற்றி கேட்டனர். இது தொடர்பாக வடிவேலு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    ‘எல்லா புகழும் இறைவனுக்கே என்று சொல்வார்கள். அதுபோல இந்த நேசமணிக்கு கிடைத்த புகழ் எல்லாமே பிரண்ட்ஸ் பட டைரக்டர் சித்திக்கையே சேரும். நேசமணி என்று ஒரு கேரக்டரை உருவாக்கியதே அவர்தான்.

    படப்பிடிப்பில் நடிக்கும்போது காமெடியில் எனக்கு தோணும் சின்னச் சின்ன ஐடியாக்களை அவரிடம் சொல்வேன். ஒருமுறைகூட மறுப்பே சொன்னது இல்லை. சந்தோ‌ஷமாக என் விருப்பத்துக்கு நடிக்கவிட்டார். அப்படி ஒரு பெருந்தன்மை கொண்ட டைரக்டர் சித்திக்.

    மேலும் கே.எஸ்.ரவிகுமார், சுந்தர்.சி, சுராஜ், வி.சேகர் ஆகியோரும் வெவ்வேறு விதமான திறமைசாலிகள். காமெடிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நகைச்சுவை மன்னர்கள்.



    நான் வாழக்கூடாது, என்னை சாகடிக்கவேண்டும் என்று என்னை அழிப்பதற்கு தயாரிப்பாளர் சங்கத்தில் முடிவு செய்துவிட்டார்கள். ஏன் இப்படி செய்கிறார்கள் என்று தெரியவில்லை. அதை பற்றி நான் கவலைபடவில்லை.

    சினிமாவில் எனக்கு கிடைத்த இடைவெளி கடவுள் கொடுத்த வரப்பிரசாதம். என் மகன், மகளுக்கு திருமணம் செய்து கடமையை முடித்தேன். ஒரு வழியாக வாழ்க்கையை செட்டில் செய்துட்டேன். இனிமேல் சினிமாவில் நடிக்கிறது கடவுள் கையில் தான் இருக்கிறது.

    இம்சை அரசன் 2-ம் பாகத்தில் 3 விதமான கதாபாத்திரங்களில் நடிக்கிறேன். எனது பங்களிப்பு இல்லாமல் அந்த படத்தை எடுக்க முடியாது. மொத்த படத்தையும் நான்தான் முதுகில் சுமக்க வேண்டும்.

    ஆனால் ‘நான் சொல்கிறபடி மட்டும் நடிங்க என்று சொன்னால் என்ன அர்த்தம். நீங்க நேசமணி டிரெண்டிங்கில் இருக்கிறது என்று சொல்கிறீர்கள். டைரக்டர் என் இஷ்டத்துக்கு நடிக்கவிட்டதுதான் அதற்கு காரணம்.

    அதை புரிந்துகொள்ளாமல் இருந்தால் எப்படி? இப்போது நான் நடிக்காமல், வீட்டுலேயே இருக்க வேண்டும் என்பது தான் அவர்களின் ஆசை. அப்படியே இருந்துவிட்டு போகிறேன். மற்றபடி, நான் நேசமணி டிரெண்டிங்கில் இருக்கிறதை இன்னும் பார்க்கவில்லை.

    மோடி பதவி ஏற்கும் செய்திதான் எனக்கு தெரியும். நேசமணியை நான் இன்னும் பார்க்கவில்லை’.

    இவ்வாறு அவர் கூறினார்.



    சுத்தியலை மையமாக வைத்து சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் ஆகி வரும் நேசமணி பெயரால் திருப்பூரில் உருவாகும் டிசர்ட்டுகளுக்கு வெளிநாடுகளில் இருந்து ஏராளமான ஆர்டர்கள் குவிந்து வருகிறது.
    சென்னை:

    சமூக வலைதளங்களான பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்-அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவற்றில் அடிக்கடி மீம்ஸ்கள் பதிவிட்டு நெட்டிசன்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது பிரே பார் நேசமணி என்ற மீம்ஸ்கள் கடந்த 3 நாட்களாக சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

    விஜய், வடிவேலு, ரமேஷ்கண்ணா உள்ளிட்டோர் நடித்த ‘பிரண்ட்ஸ்’ திரைப்படம் தமிழகத்தில் வெற்றியடைந்தது. இதில் நேசமணி பெயரில் பெயிண்டர் கதாபாத்திரத்தில் நடித்த வடிவேலுவின் காமெடி படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. தற்போது வடிவேலுவின் நேசமணி காமெடியை அண்மை செய்தியாக வெளியிடுவது போல மீம்ஸ் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

    பாகிஸ்தானை சேர்ந்த சிவில் என்ஜினீயர் ஒருவர் தனது பேஸ்புக்கில் ஒரு சுத்தியல் படத்தை போட்டு உங்கள் நாட்டில் இதற்கு என்ன பெயர் என்று எதேச்சையாக கேட்க துபாயில் இருந்து இந்தியர் ஒருவர் இதன் பெயர் சுத்தியல். அடிக்கும் போது டங், டங் என்று சத்தம் வரும். ஜமீன் பேலசில் பெயிண்டிங் வேலையின்போது இது மண்டையில் விழுந்ததில் காண்டிராக்டர் நேசமணி காயம் அடைந்தார் என்று காமெடியாக பதிவிட்டார். நேசமணி குணமடைய வாழ்த்துகள் எனவும், அவர் இட்லி சாப்பிட்டார், கலக்கி சாப்பிட்டார் எனவும் மீம்ஸ்கள் வெளியானது.

    இதை உலகம் முழுவதும் தமிழர்கள் பார்த்து ரசிப்பதுடன், நண்பர்களுக்கும் பகிர்ந்து வருகின்றனர். அந்த வீடியோவில் வடிவேலுவின் தலையில் நடிகர் ரமேஷ் கண்ணா எதிர்பாராதவிதமாக சுத்தியலை போடுவது போன்றும், இதனால் வடிவேலு மயங்கி கீழே விழுவதும் போன்றும் இருக்கும். இந்த காட்சி அனைவரையும் சிரிக்க வைத்தது. இதையே மையமாக வைத்து திருப்பூரை சேர்ந்த ஆன்லைன் ஆடை விற்பனையாளர் விமல் டிசர்ட் தயாரித்து விற்பனையில் ஈடுபட்டார். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து அதே படத்தில் சில காட்சிகளுடனும் மற்றும் வேறு திரைப்படங்களில் வடிவேலு காமெடி காட்சிகளை வைத்து டி-சர்ட் தயாரிப்பை அதிகரித்துள்ளார்.

    அந்த டிசர்ட்டுகளுக்கு உள்நாட்டில் அமோக வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து, வெளிநாட்டு ஆர்டர்களும் குவிந்து வருகிறது. நேசமணி கதாபாத்திரத்தை தொடர்புபடுத்தி வடிவேலு நடித்த மற்ற திரைப்படத்தின் நகைச்சுவை காட்சிகளை இணைத்து மீம்ஸ்களையும், வீடியோக்களையும் நெட்டிசன்கள் அதிக அளவில் பரப்பி வருகின்றனர்.


    இதுகுறித்து நேசமணி கதாபாத்திர மீம்ஸ் ஆடை தயாரிப்பாளர் விமல் கூறியதாவது:-

    ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் நான் அதில் வரும் வித்தியாசமான மீம்ஸ்கள் மற்றும் கருத்து படங்களை வைத்து டிசர்ட் தயாரிப்பது குறித்து யோசித்தேன். கடந்த 2 நாட்களாக பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அதிகமாக பேசவும், பகிரவும் செய்யப்பட்ட வீடியோவாக வடிவேலுவின் நேசமணி காமெடி மீம்ஸ் வீடியோவை காண முடிந்தது.

    உடனடியாக அந்த காட்சிகளை வைத்து டிசர்ட் தயாரிக்க முடிவு செய்து, ஆன்லைன் மூலமாக விளம்பரபடுத்தினேன். சென்னை, கோவை, நெல்லை, திருச்சி உள்பட தமிழகம் முழுவதும் இருந்து பெரிய வரவேற்பு கிடைத்ததுடன், ஏராளமான ஆர்டர்களும் கிடைத்தது. மேலும் துபாய், சவுதி உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் அதிகளவில் ஆர்டர்கள் வர தொடங்கி உள்ளன. அடுத்தடுத்த நாட்களில் ஆர்டர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறேன். அந்த டி- சார்டில் நேசமணி படம், சுத்தியல் மற்றும் பிரே பார் நேசமணி என்ற வாசகமும் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த டிசர்ட்டுகள் காட்டன் மற்றும் பாலியஸ்டர் துணிகளை கொண்டு தயாரிக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த டி-சர்ட்டுகள் குறைந்தது ரூ.100 முதல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பிரே பார் நேசமணி மீம்ஸ் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமாக பதிவிடப்பட்டு வருகிறது.
    மோடி பதவியேற்கும் நேரத்தில் வடிவேலு பட வசனம் டிரெண்டாவது முட்டாள்தனமானது என்று காயத்ரி ரகுராம் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    வடிவேலு நடித்த பிரெண்ட்ஸ் படத்தின் காமெடி காட்சி 2 நாட்களாக சமூகவலைதளங்களில் உலக அளவில் டிரெண்டாகி வருகிறது.

    மோடி பதவி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெறும் நாளில் அவரது எதிர்ப்பாளர்களான தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் தான் இந்த பரபரப்பை ஏற்படுத்தியதாக மோடி ஆதரவாளர்கள் குறை கூறி வருகிறார்கள்.

    பா.ஜனதாவில் சில காலம் இருந்துவிட்டு தற்போது அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கும் காயத்ரி ரகுராம் இதை கண்டித்து பதிவிட்டு இருந்தார். காயத்ரி தனது டுவிட்டர் பக்கத்தில் ‘நான் சில மக்களுக்காக வருத்தப்படுகிறேன். ஒரு சினிமா காட்சியை வைத்து இவ்வளவு காமெடி செய்ய என்ன அவசியம்.



    அதை வைத்துப் போடப்படும் மீம், ஹேஷ்டேக் போன்ற வி‌ஷயங்கள் எல்லாம் தேவையில்லாத ஒன்று. தேவையில்லாத ஹேஷ்டேக் டிரெண்ட் ஆகி வருகிறது. நம்முடைய நக்கல்தனத்தாலும், வெட்டித்தனத்தாலும் முட்டாளாக தெரியப் போகிறோம்’ என கோபமாக பகிர்ந்து இருந்தார்.

    அதற்கு கமெண்டில் குவிந்த மோடி எதிர்ப்பாளர்கள் ‘மோடியை டிரெண்ட் பண்ணாததால் கோபம் வருகிறதா?’ என்பது போல் கேட்டிருந்தனர்.

    இதுபோல் தொடர்ந்து மோடியை ஒப்பிட்டு கமெண்ட் வரவும் அதற்கு இன்னொரு டுவிட்டைப் பகிர்ந்திருந்தார் காயத்ரி ரகுராம். அதில், ‘மோடிஜிக்கு எதிராக இதை நீங்கள் செய்ய நினைத்தால் இது முட்டாள்தனமானது.

    இது நம்மை முட்டாள்தனமாகக் காட்டும் செயல். மற்ற நாடுகளில் இருக்கும் மக்கள் நமக்கு மூளையில்லை என்று நினைத்து விடுவார்கள். முக்கால்வாசி ஆட்கள் இந்த காமெடியையே புரிந்துகொள்ளவில்லை. இது ஏன் சுற்றிக்கொண்டிருக்கிறது? முட்டாள்தனம்’ என கூறி இருக்கிறார்.
    விஜய் ரசிகர்கள் பலரும் தளபதி 63 படத்தின் அப்டேட் குறித்து படத் தயாரிப்பு நிறுவனத்திடம் கேட்க, படம் பற்றி பேசுவதற்கு இது சரியான நேரமில்லை என்று தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்துள்ளார்.
    அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 63 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விஜய் பிறந்நாளை முன்னிட்டு படத்தின் முக்கிய அறிவிப்பு வரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஆனால் தளபதி 63 படம் பற்றி பேசுவதற்கு இது சரியான நேரமில்லை என்று படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்துள்ளார்.

    நாடு முழுவதும் நேசமணி, பிரே ஃபார் நேசமணி (#Pray_for_Neasamani) என்ற ஹேஷ்டேக்குகள் டிரெண்டிங்கில் இருக்கும் நிலையில், அந்த ஹேஷ்டேக்கை குறிப்பிட்டு நேசமணிக்காக பிரார்த்திப்பதாக கூறி, அர்ச்சனா தனது ட்விட்டர் பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளார்.


    விஜய், சூர்யா, வடிவேலு நடிப்பில் வெளியான ப்ரெண்ட்ஸ் படத்தில் இடம்பெற்றுள்ள காமெடியை மையப்படுத்தி இந்த ஹேஷ்டேக்கை நெட்டிசன்கள் டிரெண்டாக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×