search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "63"

    • ஈரோடு மாவட்டத்தில் நாளை நடைபெறும் குரூப்-4 தேர்வுக்காக மாவட்டம் முழுவதும் 201 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
    • தேர்வர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து வர வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

    ஈரோடு:

    தமிழக தேர்வாணையம் மூலம் அரசு பதவிகளுக்கான தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நாளை (24-ந்தேதி)தமிழகம் முழுவதும் குரூப்-4 தேர்வு நடைபெறுகிறது. இதற்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    ஈரோடு மாவட்டத்தில் நாளை நடைபெறும் குரூப்-4 தேர்வுக்காக மாவட்டம் முழுவதும் 201 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு மாவட்டத்தில் குரூப் 4 தேர்வை 63 ஆயிரத்து 16 தேர்வர்கள் எழுத உள்ளனர்.

    தேர்வில் முறைகேடு நடப்பதை தடுக்கும் வகையில் கண்காணிப்பு அலுவலர்கள் 201 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    மேலும் 43 நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதேபோல் 16 பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வை வீடியோவாக படம் பிடிக்க 208 ஒளிப்பதிவாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். தேர்வு பாதுகாப்பு பணியில் 260 போலீசார் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

    ஒவ்வொரு தேர்வர்களும் நாளை காலை சரியாக 8.30 மணிக்குள் அந்தந்த தேர்வு மையத்திற்கு சென்று விட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 9 மணிக்கு பிறகு வரும் தேர்வர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தேர்வு சரியாக காலை 9.30 மணிக்கு தொடங்கி 12.30 மணிக்கு நிறைவடையும். அதன்பின் 12.30 மணி முதல் 12.45 மணி வரை தேர்வர்கள் தங்களது ஓஎம்ஆர் சீட்டை சரியாக பூர்த்தி செய்து உள்ளார்களா என்று பார்க்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. 12.45 மணிக்கு பிறகு தேர்வர்கள் அறைய விட்டு வெளியே செல்ல வேண்டும்.

    தற்போது கொரோனா காலகட்டம் என்பதால் பாதுகாப்பு வழிகாட்டி நெறிமுறைகள் பின்பற்றப்படுகிறது.அதன்படி தேர்வர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து வர வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

    முக கவசம் அணியாமல் வருபவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். தேர்வில் கருப்பு நிற பந்து முனை பேனா மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

    தேர்வர்கள் ஹால் டிக்கெட் உடன் ஆதார், டிரைவிங் லைசென்ஸ் பாஸ்போர்ட் போன்ற ஏதாவது ஒரு அடையாள அட்டையை கண்டிப்பாக எடுத்து கொண்டு வர அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    தேர்வு மையங்களில் நுழைவாயிலில் உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்படும். அதில் காய்ச்சல் அறிகுறி இருப்பவர்கள் தனி அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அவர்களுக்கு தேர்வு நடைபெறும்.

    செல்போன், டிஜிட்டல் வாட்ச் கொண்டு வர அனுமதி இல்லை. இவ்வாறாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தேர்வு மையங்கள் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கும்.

    தேர்வுக்குறிய வினாத்தாள்கள் கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளன. அதற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • ஈரோடு ஊராட்சி ஒன்றிய சமத்துவபுரத்தில் 63 வீடுகளுக்கான ஆணையை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வழங்கினார்
    • மேலும் இப்பகுதி பொதுமக்கள் அங்குள்ள புறவழிச் சாலையினை கடக்க ஏதுவாக மேம்பாலம் மற்றும் குடிநீர் வசதி உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து மனு அளித்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் 1 முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ,மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு ள்ளதை யொட்டி, கலெக்டர் கிருஷ்ணனுண்ணி சித்தோடு ராயபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது பள்ளி–யின் வகுப்பறை வெளிப்பு–றத்தில் புகை வண்டி மாதிரி ஓவியங்கள் வரையப்பட்டி–ருந்ததை பார்வையிட்டார். மேலும் இப்பள்ளியில் பயிலும் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு நடப்பாண்டிற்கான பாடப்புத்தகங்களை வழங்கினார்.

    இதனைதொடர்ந்து ஈரோடு ஊராட்சி ஒன்றியம், சமத்துவபுரத்தில் உள்ள 100 வீடுகளில் 63 வீடுகளுக்குபணி ஆணை வழங்கப்பட்டு பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. ஒரு வீட்டிற்கு தலா ரூ.50 ஆயிரம் மதிப்பில் வர்ணம் பூசுதல் மற்றும் சிறு சிறு பழுது பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆ ய்வு மேற்கொண்டார்.

    மேலும் இப்பகுதி பொதுமக்கள் அங்குள்ள புறவழிச் சாலையினை கடக்க ஏதுவாக மேம்பாலம் மற்றும் குடிநீர் வசதி உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து மனு அளித்தனர்.

    தொடர்ந்து சமத்துவ–புரத்தில் உள்ள ஈரோடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார்.மேலும் ஆசிரியர்களிடம் மாணவ, மாணவிகளின் வருகை குறித்து கேட்டறிந்து வருகை தராத குழந்தைகளை கண்டறிந்து பள்ளிக்கு அழைத்து வர நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.

    அதனைத் தொடர்ந்து, சமத்து வபுரத்தில் உள்ள ரேஷன்க்கடையில் ஆய்வு செய்து பருப்பு, அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் இருப்பு குறித்து கேட்டறிந்தார்.

    தொடர்ந்து மாநகராட்சி ஆசிரமம் மெட்ரிக்மேல்நி லைப்பள்ளியில் கனரா வங்கியின் சார்பில் கிராமசுயவேலை வாய்ப்பு பயிற்சியில் 18 வயது முதல் 45 வயதுக்குள் உள்ள கிராம பஞ்சாயத்தை சேர்ந்தவர்கள் மற்று ம்வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

    மேலும், கம்ப்யூட்டர்டேலி பயிற்சி, பெண்களுக்கா ன தையற்கலை, ஆரி எம்பிராய்டரி மற்றும் பேப்ரிக் பெயின்டிங், ஜுட் பொருட்கள் தயாரித்தல், செயற்கை நகை தயாரித்தல், அழகுக்களை போட்டோ கிராபி, வீடியோ கிராபி பேப்பர் பை தயாரித்தல், பைல் தயாரித்தல், செல்போன்கள் சர்வீஸ், வீட்டு உபயோகப் பொருள் தயாரித்தல், சோப்புபவுடர், ஊதுபத்தி, மெழுகுவர்த்தி, எலக்ட்ரிக்கல் ஒயரிங் மற்றும் வீட்டுமின் சாதனப் பொருட்கள் பழுது பார்த்தல், மூங்கில், பிரம்ப நாற்காலி மற்றும் அழகு பொருட்கள் தயாரித்தல் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.

    இந்த ஆய்வுகளின் போது, முதன்மைகல்விஅலுவலர் ராமகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சசிகலா, தங்கவேல், உதவி பொறியாளர் செந்தில்கு–மார், முதன்மை வங்கி பொது மேலாளர் ஆனந்தகுமார், உத வி பொது மேலாளர் சங்கர், கனரா வங்கி பயிற்சி நிலைய இயக்குநர் கவுரிசங்கர் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் உடனிருந்தனர்.

    ×