என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "karunas"

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெற்றது.
    • தவெக., அன்புமணி தரப்பு பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் கூட்டத்தை புறக்கணித்தன.

    சென்னை தி.நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெற்றது.

    64 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் 21 கட்சிகள் பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. தவெக., அன்புமணி தரப்பு பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் கூட்டத்தை புறக்கணித்தன.

    இந்நிலையில், SIR-க்கு எதிரான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் விஜய் பங்கேற்காதது குறித்து முக்குலத்தோர் புலிப்படைத் தலைவர் கருணாஸ் விமர்சித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் SIR பற்றியும், அதன் விபரீதத்தை பற்றியும் அனைத்துக் கட்சி தலைவர்களும் தங்களது கருத்துகளை எடுத்துரைத்தார்கள்.

    தேர்தல் வரும் நிலையில், தேர்தல் ஆணையம் செய்யக்கூடிய SIR நடவடிக்கை முழுக்க முழுக்க தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் விரோதமானது.

    குறுக்கு வழியில் வாக்குரிமைகளை பரிப்பதன் மூலம் குடியுரிமையற்றவர்களாக சிறுபான்மையினர்களையும் மற்றவர்களையும் உருவாக்கனும் என்பதுதான் அவர்களுடைய தொலைநோக்கு திட்டம்.

    அதற்கு நாம் எந்த விதத்திலம் இடம் கொடுத்துவிடக்கூடாது. சட்டரீதியாக அனைவரும் உச்சநீதிமன்றம் சென்று அவரவர்கள் தனிதனியாக வழக்கு போட வேண்டும்.

    அந்த மாதிரி நேரங்களில் திமுக சார்பிலான வழக்கறிஞர்கள் உதவி செய்வார்கள் என்கிற உத்தரவாதத்தை கொடுத்திருக்கிறார்கள். SIR நடவடிக்கையால் ஏற்படும் விபரீதம் தொடர்பாக மக்களிடம் எடுத்து சொல்ல வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்கள்.

    இதுபோன்ற மக்களின் முக்கியமான பிரச்சனைகள், மாநிலத்தில் மக்களுடைய வாக்குகள் பறிப்போகும் நிலை நம் கண் எதிரே தெரிகிறது.

    இதுபோன்ற கூட்டத்தில் விஜய் கலந்துக்காமல், பிரதிநிதிகளை அனுப்பாமல் இருப்பது அவருக்கு மக்கள் மீது அக்கறை இல்லாததை காட்டுகிறது.

    பாஜக எந்தவிதமான திட்டத்தை கொண்டு வந்தாலும் எடப்பாடி பழனிசாமி ஏற்றுக் கொள்வார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கென் கருணாஸ் இயக்கி நடிக்கும் படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார்.
    • இந்த படத்தில் மொத்தம் 3 கதாநாயகிகள் நடிக்க இருக்கின்றனர்.

    2019 ஆம் ஆண்டு வெற்றி மாறன் இயக்கத்தில் வெளியான அசுரன் திரைப்படத்தில் தனுஷின் இளைய மகனாக நடித்து இருந்தார் கென் கருணாஸ். இவரது நடிப்பு பலராலும் பாராட்டு பெற்றது. அதைத் தொடர்ந்து வாத்தி மற்றும் விடுதலை பாகம் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து மக்களின் கவனத்தை பெற்றார்.

    தற்போது கென் கருணாஸ் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார். இவர் இயக்கும் படத்தில் இவரே கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். இது ஒரு பள்ளிக்கூட பின்னணியில் நடக்கும் கதைக்களமாக இருக்கும் என கூறப்படுகிறது.

    இப்படத்தில் மலையாள நடிகரான சுராஜ் வெஞ்சரமூடு மற்றும் தேவதர்ஷினி முக்கிய கதாபத்திரங்களிலும், அனிஸ்மா, மீனாட்சி தினேஷ், பிரியான்ஷி யாதவ் என மொத்தம் 3 கதாநாயகிகள் நடிக்க இருக்கின்றனர். இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார்.

    இந்நிலையில், இப்படத்தின் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் இப்படத்தில் நடிக்கும் சுராஜ் வெஞ்சரமூடு, தேவதர்ஷினி மற்றும் ஜி.வி பிரகாஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    மேலும், இந்த நிகழ்வில் இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் நடிகர்கள் கார்த்தி, விஷால், ஆர்.ஜெ.பாலாஜி ஆகியோர் கலந்துகொண்டனர். 

    • நம்பிக்கை துரோகத்தை நாம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளக்கூடாது.
    • இபிஎஸ் நல்ல பெயர் வாங்குவதற்காக கபடநாடகம் நடத்திக் கொண்டிருக்கிறார்.

    சிவகங்கையில் முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவர் கருணாஸ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    எனக்கு எம்.எல்.ஏ. பதவியை விட முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவன் என்பதையே பெருமையாகதான் நினைக்கிறேன். அதில் எனக்கு அக மகிழ்ச்சி இருக்கிறது.

    எடப்பாடி பழனிசாமி துரோகம் செய்யக்கூடியவர். இந்த உலகத்தில் எதை வேண்டுமானாலும் நாம் மன்னித்துவிடலாம். ஆனால், நம்பிக்கை துரோகத்தை நாம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளக்கூடாது.

    நிச்சயம் அதற்கான பலனை அவர் வாழும் காலத்திலேயே அனுபவிப்பார். முக்குலத்தோர் சமூதாயத்திற்காக எடப்பாடி பழனிசாமியின் ஆட்சிக்காலத்தில் பலமுறை கோரிக்கை வைத்துள்ளேன். அப்போதெல்லாம் செவி சாய்க்காத அவருக்கு இப்போது எங்கிருந்து தோன்றுகிறது.

    எடப்பாடி பழனிசாமி செய்த துரோகங்கள், அனைத்து தரப்பு மக்களுக்கும், அடிநலையில் இருக்கக்கூடிய மக்கள் வரை போய் சேர்ந்துவிட்டது. அவர்களிடம் நல்ல பெயர் வாங்குவதற்காக கபடநாடகம் நடத்திக் கொண்டிருக்கிறார்.

    அண்ணன் எடப்பாடி பழனிசாமி அவர்கள், தென் மாவட்டங்களில் நீங்கறே வந்து சிலையாக நின்றாலும், உங்களுக்கு வாக்கு கிடைக்காது.

    தான் செய்த தவறுகளை மறைப்பதற்காக மற்றவர்கள் மீது பழிப்போடும் செயல். என்னை பொறுத்தவரையில் அனைத்து இந்திய அண்ணா திராவிட கழகம் யார் ஒருவரும் பிரிக்கணும், அழிக்கணும் என்கிற வேலையில் இறங்கத் தேவையில்லை.

    அதிமுக-வை வெளியில் இருந்து யாரும் வந்து அழிக்கத் தேவையில்லை. எடப்பாடி பழனிசாமியே அதை அழித்து முடித்து விடுவார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழ்நாட்டில் வெளிமாநிலத்தவரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
    • வெளிமாநிலத்தவர்களுக்கு குடும்ப அட்டை வழங்கக் கூடாது. வாக்களர்களாக மாற்றக் கூடாது.

    தமிழ்நாட்டில் வெளிமாநிலத்தவரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

    வெளிமாநிலத்தவர்களை தமிழ்நாட்டு வாக்களர் பட்டியலில் சேர்க்கப்படவுள்ளதை கண்டித்து முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவர் கருணாஸ் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    அந்த அறிக்கையில், "தமிழ்நாட்டில் வெளிமாநிலத்தவரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. என்று தொடர்ந்து பல ஆண்டுகளாக எச்சரித்துக் கொண்டே இருந்தோம்! எந்த அரசும் அதற்கு செவிசாய்க்கவில்லை. இப்போது வெளிமாநிலத்தவரை தமிழ்நாட்டு வாக்காளராக மாற்ற போகிறார்கள் என்ற செய்தி அறிந்ததும் பலர் அலறுகிறார்கள். இப்போதாவது விழித்துக் கொள்ளுங்கள் தமிழர்களே!!

    சிறப்பு தீவிர வாக்களர் பட்டியல் திருத்த செயல் திட்டத்தில் பீகாரை சேர்ந்த 6.5 லட்சம் பேர் தமிழக வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படவுள்ளனர். பெரும் அதிர்ச்சி இது! 70 இலட்சம் வெளிமாநிலத்தவர்கள் தமிழ்நாட்டில் வாக்காளர்கள் அதாவது 10% வெளிமாநிலத்திவர் என்றால் நாளை தமிழ்நாட்டு அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

    இந்த தொலைநோக்குத் திட்டத்தை நீண்டகாலமாக செய்துவருகிறது பா.ஜ.க. எப்படியாவது தமிழ்நாட்டை பீகாராக, மத்திய பிரதேசமாக மாற்றவேண்டும் என்ற திட்டத்தில் இந்திக்காரர்களை மிகை எண்ணிக்கையில் தமிழ்நாட்டிற்கு குடியேற பா.ஜ.க. அரசு அனுமதித்தது. தமிழ்நாட்டில் ஆட்சியாளர்கள் யார் வந்தாலும் இதை பெரிதாக கண்டுகொள்வதில்லை. வந்தாரை வாழ வைப்போம் என்ற பெரிய மனதோடு தமிழ்நாட்டு வேலைகளுக்கு வெளிமாநிலத்தவரை அனுமதித்தார்கள். இப்போது தமிழ்நாட்டில் அவர்களும் வாக்களர்களாக மாறப் போகிறார்கள்.

    வெளிமாநிலத்தவர்களுக்கு குடும்ப அட்டை வழங்கக் கூடாது. வாக்களர்களாக மாற்றக் கூடாது. 90% வேலை தமிழ்நாட்டு தமிழர்களுக்கே என்று நாம் தொடர்ந்து வலியுறுத்தினோம். இப்போது எல்லாம் தலை கீழாக மாறிவிடுமோ என்ற அச்சம் நமக்கு இருக்கிறது.

    கடந்த 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கீட்டின்படி தமிழ்நாட்டில் 34 லட்சத்து 87 ஆயிரத்து 974 வெளிமாநிலத்தவர்கள் வேலைக்கு வந்து தங்கி உள்ளனர். இந்த எண்ணிக்கை இப்போது பல மடங்காக மாறிவிட்டது. இந்த வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் முடிந்து விட்டால், தமிழ்நாட்டில் தற்போது உள்ள வெளிமாநிலத்தைச் சேர்ந்த சுமார் 70 லட்சம் பேர் தமிழ்நாடு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்து வாக்களிக்கும் உரிமை பெறுவர்கள். அவ்வாறு நடந்தால் தமிழ்நாட்டின் எதிர்கால அரசியல் பா.ஜ.க.விடம் கையளிக்கப்படும். ஏனென்றால் பீகார், உத்திரபிரதேசம், குஜராத் உள்ளிட்ட வெளிமாநிலத்தவர் அனைவரும். பா.ஜ.க.விற்குதான் அரசியல் வழியாக பங்குகளிப்பு செய்வார்கள். அப்படி செய்தால் தமிழ்நாட்டின் அரசியல் நிலை என்னவாகும். தமிழ்நாட்டில் எது நடக்கக் கூடாது என்று நினைத்தோமே அது உடனடியாக நடந்தேறும்.

    ஆகவே தமிழ்நாடு அரசு உடனடியாக இதை கவனத்தில் எடுத்துக் கொண்டு, வெளிமாநிலத்தவரை வெளியேற்றும் செயலில் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இன்று தமிழ்நாட்டில் நகரம் தொடங்கி கிராமம் வரை இந்திக்காரர்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது. பா.ஜ.க. சனாதன கும்பல் அவர்கள் வழியாகத்தான் தமிழ்நாட்டில் தொடர்ந்து இந்தியை தமிழர்களிடையே திணிக்கிறது.

    மண்ணின் மக்களின் அனைத்து வேலை வாய்ப்புகளும் இந்திக்காரர்கள் வசம் சென்றடைந்து விட்டது. இப்போது கிராமப்புற வங்கிகளில் மேலாளர்கள், எழுத்தர்களாக வட இந்தியர்களைப் பணியமர்த்துகிறார்கள். அவர்கள் தமிழும் பேசுவதில்லை. ஆங்கிலமும் பேசுவதில்லை. பா.ஜ.க. அரசு தமிழர் இன ஒதுக்கல் கொள்கையை தொடர்ந்து கடைபிடித்து இந்திக்காரர்களை திட்டமிட்டே பணியமர்த்துகிறது. ஆகவே நாம் விழித்துக் கொள்ளவேண்டும்.

    கர்நாடகா, குஜராத், மத்தியப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ளதுபோல், தமிழ்நாட்டிலும் மத்திய, மாநில அரசுத் துறைகள், தனியார் நிறுவனங்களில் மண்ணின் மக்களுக்கே வேலை என்ற சட்டத்தை உருவாக்க வேண்டும். வெளிமாநிலத்தவர்களை வேலைக்கு அழைத்து வந்தாலும், வேலை கொடுக்கும் ஒப்பந்தபடி குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அவர்களின் சொந்த மாநிலத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.

    அருணாச்சலப் பிரதேசம், நாகலாந்து உள்ளிட்ட மாநிலங்களில் இன்னர் லைன் பர்மீட் என்ற சட்டம் உள்ளது. இதுபோன்று தமிழ்நாட்டிலும் உள் அனுமதிச் சட்டத்தைக் கொண்டுவர வேண்டும். இதை உடனடியாக நடைமுறைப் படுத்தினால் வெளியாரின் மிகை எண்ணிக்கையிலிருந்தும், எதிர்கால அரசியலிலிருந்தும் நாம் தப்பிக்க முடியும் இல்லையேல் தமிழ்நாடு பீகார். உத்திரபிரதேசமாக மாறும். நாம் இரண்டாம் தர குடிமக்களாக மாறுவோம்!

    ஆகவே வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் சேர்க்கப்படவுள்ள 70 இலட்சம் வெளிமாநிலத்தவரை தமிழக வாக்காளர் பட்டியலில் சேர்க்கக் கூடாது உடனடியாக தமிழக அரசு தடுத்த நிறுத்தவேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்!" என்று தெரிவித்துள்ளார். 

    • பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என்று நீதிபதி அறிவித்தார்.
    • குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

    பொள்ளாச்சியில் நடந்த கூட்டு பாலியல் வழக்கு தமிழகத்தில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய வழக்குகளில் ஒன்று. ஒரு கல்லூரி மாணவி மற்றும் பெண்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து ஆபாச வீடியோ எடுத்து துன்புறுத்தப்பட்டனர். இந்த சம்பவம் கடந்த 2019-ம் ஆண்டு நடந்தது.

    இந்த வழக்கில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி விசாரணை மேற்கொண்டு திருநாவுக்கரசு (வயது 25), சபரிராஜன் (25), சதீஷ் (28), வசந்தகுமார் (27), மணிவண்ணன் (28), ஹெரன்பால் (29), பாபு (27), அருளானந்தம் (34) மற்றும் அருண்குமார் ஆகிய 9 பேரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    இந்த வழக்குக்கான தீர்ப்பை நீதிபதி நந்தினி தேவி அறிவித்தார். அதில் பொள்ளாச்சி கூட்டு பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என்று அறிவித்தார். குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

    பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மொத்தமாக ரூ.85 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் என வழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

    இந்நிலையில் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்த தீர்ப்பை முக்குலத்தோர் புலிப்படை கட்சித் தலைவர் கருணாஸ் வரவேற்றுள்ளார்.

    இன்று நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கருணாஸ், "அதிமுக ஆட்சிக்காலத்தில் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் புகார் கொடுத்த பெண்ணின் விவரங்களை வெளியிட்டார்கள். இது எடப்பாடி பழனிச்சாமி ஆட்சிக்காலத்தில் நடந்த அருவருப்பான செயல். இதில் அவரது கட்சிக்காரர்களின் பிள்ளைகள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்று வழக்கின் விசாரணையை நடத்தாமல் முடக்கி வைத்திருந்தனர்.

    இன்று மக்கள் சட்டத்தின் மீது வைத்திருந்த நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் நீதிமன்றம் நல்ல தீர்ப்பை வழங்கியுள்ளது. என்னை பொறுத்தவரை பொள்ளாச்சி வழக்கின் நீதிமன்ற தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு கிடைத்த பிறந்தநாள் பரிசு என்று நான் நினைக்கிறேன்" என்று தெரிவித்தார்.

    • இயக்குனர் கிட்டு இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சல்லியர்கள்’.
    • இந்த படத்தை கருணாஸ் மற்றும் கரிகாலன் இணைந்து தயாரித்துள்ளனர்.

    'மேதகு' படத்தை இயக்கிய இயக்குனர் கிட்டு இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'சல்லியர்கள்'. ஐ.சி.டபில்யூ நிறுவனம் சார்பில் கருணாஸ் மற்றும் கரிகாலன் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் சத்யா தேவி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், கருணாஸ், களவாணி புகழ் திருமுருகன் மற்றும் மகேந்திரனும் உள்பட பலர் நடித்திருக்கின்றனர். வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ள இந்த படத்திற்கு கருணாஸ் மகன் நடிகர் கென் மற்றும் அவரது நண்பர் ஈஸ்வர் இருவரும் இணைந்து இசையமைத்துள்ளனர்.


    சல்லியர்கள் பட இசை வெளியீட்டு விழா

    சென்னையில் நடைபெற்ற இந்தபடத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, இயக்குனர்கள் வெற்றிமாறன், சீனுராமசாமி, ராம்நாத் பழனிக்குமார், தமிழ்தேசிய பேரியக்கத்தை சேர்ந்த பெ.மணியரசன், திராவிடர் விடுதலை கழகத்தைச் சேர்ந்த கொளத்தூர் மணி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுப்புலட்சுமி ஜெகதீசன், சட்ட தரணி கே.எஸ்.ராதாகிருஷ்ணன், மே 17 இயக்கத்தை சேர்ந்த திருமுருகன் காந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


    சல்லியர்கள் பட இசை வெளியீட்டு விழா

    இந்நிகழ்ச்சியில் நடிகர் கருணாஸ் பேசியதாவது, "நான்கு நாட்களுக்கு முன்பு துபாயில் இருந்த சமயத்தில்தான் இயக்குனர் கிட்டு என்னை அழைத்து, மாவீரர் பிறந்தநாளில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடத்தினால் நன்றாக இருக்கும் என கேட்டுக்கொண்டார். அப்படி குறுகிய காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டதுதான் இந்த விழா. இந்த படத்தில் எனது மகனின் நண்பர் ஈஸ்வரை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்துகிறேன். என் மகனும் அவனுடன் இணைந்து இசையமைப்பு பணிபுரிந்துள்ளார் என்றாலும் அவர் ஒரு நல்ல நடிகனாக வரவேண்டும் என்றுதான் நான் ஆசைப்படுகிறேன்.


    சல்லியர்கள் பட இசை வெளியீட்டு விழா

    இந்த இடத்தில் முக்கியமான ஒன்றை கூற கடமைப்பட்டுள்ளேன். இங்கே தமிழகத்தில் விஸ்காம் படித்த மாணவர்களுக்கு படிப்பை முடித்தபின் நல்ல தளம் கிடைப்பதில்லை. வருடத்திற்கு 2500 மாணவர்கள் படித்துவிட்டு வெளிவருகின்றனர். இவர்களுக்கு உதவிசெய்ய வேண்டிய சினிமாவில் உள்ள தயாரிப்பாளர் சங்கம் உள்ளிட்ட பல சங்கங்கள் பஜ்ஜி, வடை சாப்பிட்டுக்கொண்டுதான் இருக்கின்றன.

    1985-லிருந்து ஈழத்தமிழர்களுக்காக என்னால் இயன்றவரை ஏதாவது செய்துகொண்டுதான் இருக்கிறேன். எனது சொந்தப்பணத்தில் 153இலங்கை அகதி மாணவர்களை படிக்க வைத்தேன் என்பதை பெருமையாக சொல்கிறேன். இன்று அவர்கள் நல்ல வேலைகளில் இருக்கிறார்கள். வெளிநாடுகளில் கூட பணிபுரிந்து வருகிறார்கள். இப்படி ஒரு கட்டமைப்பை உருவாக்கி பின்னால் வரும் கென், ஈஸ்வர் போன்ற இளைஞர்களிடம் கொடுத்து விடுகிறேன். அவர்கள் அதை பார்த்துக்கொள்ளட்டும். இதுதான் என்னுடைய விஷன்.. இதற்கு எவ்வளவு செலவானாலும் பத்து பேரிடம் பிச்சை எடுத்தாவது அந்த பணத்தை கொடுப்பேன்" என்று கூறினார்.

    • மேதகு என்ற படத்தை இயக்கி சலசலப்பை உருவாக்கிய இயக்குனர் கிட்டு அடுத்ததாக இயக்கியிருக்கும் படம் 'சல்லியர்கள்'.
    • இப்படத்தின் மூலம் கென் கருணாஸ் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார்.

    மேதகு என்ற படத்தை இயக்கி சலசலப்பை உருவாக்கிய இயக்குனர் கிட்டு அடுத்ததாக இயக்கியிருக்கும் படம் 'சல்லியர்கள்'. இப்படத்தை நடிகர் கருணாஸ் தனது ஐசிடபுள்யூ தயாரிப்பு நிறுவனம் சார்பாக தயாரித்துள்ளார். இப்படத்தில் சத்யாதேவி, கருணாஸ், திருமுருகன், ஜானகி உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

     

    கென் கருணாஸ் - ஈஸ்வர் - கருணாஸ்

    கென் கருணாஸ் - ஈஸ்வர் - கருணாஸ்

    இப்படத்தின் மூலம் கருணாஸின் மகன் கென் கருணாஸ் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். இவர் ஈஸ்வர் என்ற அவருடைய நண்பருடன் இணைந்து இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர், அரசியல் பிரமுகர்கள், திரைப்பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டனர். அதில் பேசிய கென் கருணாஸ், "இந்தப் படத்திற்கு என் நண்பன் ஈஸ்வர்தான் மெயின் இசையமைப்பாளர். நான் அவனுக்குப் பக்க பலமாக பணியாற்றியுள்ளேன்" என்றார்.

    • வி.பி.சிங், நிதிஷ் குமாருக்கு கருணாஸ் புகழாரம் சூட்டினார்.
    • முக்கு லத்தோர் புலிப்படை அவருக்கு மரியாதையோடு வணக்கம் செலுத்துகிறது.

    பரமக்குடி

    முக்குலத்தோர் புலிப்படை தலைவர் சேது.கருணாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    பசும்பொன் முத்துராம லிங்கத்தேவர் ஜெயந்தி விழாவில் வட இந்திய தலைவர்களுக்கு தமிழ்நாட்டிலிருந்து நான் ஏன் மரியாதை செலுத்து கிறேன் என்று பலர் விமர்சனம் செய்யலாம். நன்றியோடு வாழ்வதே தமிழர் அறம்!. அந்த நன்றிக்குரியோர் இருவர். ஒருவர் மறைந்த பிரதமர் வி.பி.சிங், இன்னொருவர் பீகார் முதல்வர் நிதிஷ்குமார்.

    காங்கிரசுக்கு எதிராக நாடு தழுவிய அளவில் ஒரு அரசியல் இயக்கத்தை உருவாக்கி அதில் வெற்றியும் கண்டு இந்தியாவில் மாபெ ரும் அரசியல் ஆளுமையாக விளங்கியவர் முன்னாள் பிரதமர் வி.பி.சிங்.

    பிற்படுத்தப்பட்டவர்க ளுக்கு இடஒதுக்கீடு வழங்கும் மண்டல் கமிஷன் பரிந்துரைகளை ஏற்று, இடஒதுக்கீட்டை அமல்படுத்தியதும், காவிரி நதி நீரை எந்தெந்த மாநிலங்கள் எவ்வளவு பகிர்ந்து கொள்வது என்று தீர்ப்பளித்த காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டதும், அம்பேத்கருக்கு 'பாரத ரத்னா' பட்டம் கொடுத்ததும், நாடாளுமன்றத்தில் அவரது படத்தை இடம் பெற வைத்ததும், சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் பிரதமராக இருந்த போது தான் நடந்தது. இந்த பெருமை எல்லாம் அவரையே சேரும்.

    பொது வாழ்விலிருந்து விலகிய பின்னரும் ரிலையன்ஸ் நிறுவனம் நிலம் கையகப்படுத்தியதற்கு எதிராக விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டங் களை முன்னெடுத்து வழி நடத்தி வெற்றி கண்டவர் வி.பி. சிங். இப்படி வி.பி.சிங் தமிழ்நாட்டிற்கு, தமிழர் களுக்கு செய்த நன்மைகள் பல.

    இந்திய விடுதலை போராட்ட தியாகியாக மட்டுமின்றி சமூக விடுதலை நோக்கி வாழ்ந்த பசும்பொன் தேவர் ஜெயந்தி விழாவில் இடஒதுக்கீடு நாயகரை, சமூகநீதி காவலரை முக்குலத்தோர் புலிப்படை இயக்கம் நினைவு கூறி வணக்கம் செலுத்துகிறது. இந்திய விடுதலைக்கு பின்னர் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி முன்னோடியாக திகழும் முதல்வர் நிதிஷ்குமார். ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெ டுப்பு நடத்தி அதன் புள்ளி விவரங்களை வெளியிட்ட பெருமையைக்குரியவர் அவர். இதற்கு முன்பு 1931-ம் ஆண்டு தான் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெ டுப்பு நடந்தது.

    அதை சாத்தியப்படுத்தி இந்திய மாநிலங்களுக்கு பலர் வைக்கும் கோரிக்கை களுக்கு முன்னுதாரணமாக இருப்பவர் பீகார் முதல்வர் நிதிஷ்குமார். சாதி ரீதியான, மத ரீதியான மக்கள் தொகை கணக்கெடுப்புகளை நடத்தி அனைவருக்குமான இட ஒதுக்கீடு- சமூக நீதிக்கு வாசல் திறந்து விட்ட நீதியாளர்களாக நிதிஷ் குமார் திகழ்கிறார்கள். இவ்வேளையில், முக்கு லத்தோர் புலிப்படை அவருக்கு மரியாதையோடு வணக்கம் செலுத்துகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • முக்குலத்தோர் புலிப்படை நிறுவனர் கருணாஸ் தலைமையில் மரியாதை செலுத்தப்பட்டது.
    • தேவர் கீதம் எனும் பெயரில் தேவர் ஜெயந்திக் கான புதிய பாடலை சே. கருணாஸ் வெளியிட்டார்.

    பரமக்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும் பொன் முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் நடந்த குருபூஜை விழா மற்றும் ஜெயந்தி விழாவில் முக்குலத்தோர் புலிப்படை நிறுவன தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ. சே.கருணாஸ் தலைமையில் மாலை அணி வித்து மரியாதை செலுத்தினர்.

    இந்நிகழ்வில் தொழிலதிபர் கரிகாலன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். முக்குலத்தோர் புலிப்படை கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் பொதுச்செயலாளர் தாமோதரன் கிருஷ்ணன், மாநிலச் செயலாளர் முத்து ராமலிங்கம், துணைப் பொதுச் செயலாளர் பெரு மாள், மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் கோகுல கிருஷ்ணன்,

    மாநில மகளிர் அணி தலைவர் சத்யாகரிகாலன், தொழிற்சங்க பிரிவு செயலாளர் காமராஜ்தேவர், ராமநாதபுரம் மேற்கு மாவட்டச் செயலாளர் சுந்தரபாண்டியன், ராமநாதபுரம் ஒருங்கிணைப்பாளர் கார்த்திக், ராமநாதபுரம் அமைப்பாளர் பொன்.முத்துராமலிங்கம்,

    ராமநாதபுரம் கிழக்கு ஒருங்கிணைப்பாளர் பாலாஜி, ராமநாதபுரம் மாவட்டத் துணைச் செயலா ளர் மேற்கு பசும்பொன் சௌந்தர், ராமநாதபுரம் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் சிவ சங்கர்மேத்தா, ராமநாதபுரம் மாணவரணி செயலாளர் ஆகாஷ்சேதுபதி, கமுதி ஒன்றிய செயலாளர் தினேஷ்குமார், மாவட்டச் செயலாளர்கள் ராமு, மணி, தென்றல், தர்மா, முருகன், மணி, செல் வகுமார், மஞ்சு, வெள்ளைச் சாமி, ரமேஷ், சாமி உட்பட மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர் நிர்வாகிகள் பங்கேற் றனர். தேவர் கீதம் எனும் பெயரில் தேவர் ஜெயந்திக் கான புதிய பாடலை சே. கருணாஸ் வெளியிட்டார்.

    • எல்லோரும் வெட்கித் தலைகுனியும்படி மீண்டும் ஒரு நிகழ்வு நிகழ்ந்துள்ளது.
    • சங்கம், சட்ட ரீதியான அனைத்து நடவடிக்கைகளுக்கும் துணை நிற்கும்.

    நடிகை திரிஷா குறித்து அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜு பேசியது பெரும் சர்ச்சையை உருவாக்கி உள்ளது. அதற்கு அவர் மன்னிப்பு கேட்டபோதிலும் பல தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்து உள்ளன.

    இந்தநிலையில் இன்று தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் எம்.நாசர் விடுத்து உள்ள கண்டன அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தற்போது பொதுவலைதளங்களில் சகோதரி திரிஷா, சகோதரர் கருணாஸ் குறித்து கேட்பதற்கு கூசுகின்ற ஆதாரமற்ற, பொறுப்பற்ற, தரமற்ற, கீழ்தரமான, வக்கிரமனப்பான்மையோடு, பரவ விடப்பட்டிருக்கும் பொய் கதையை தென்னிந்திய நடிகர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.

    திரைத்துறையை சார்ந்த பிரபலங்களை பற்றி பொதுவெளியில் அவதூறு பரப்பி சுயவிளம்பரம் தேடிக்கொள்ளும் நபர்கள் நாளுக்கு நாள் அதிகமாகி வருகின்றனர்.

    எல்லோரும் வெட்கித் தலைகுனியும்படி மீண்டும் ஒரு நிகழ்வு நிகழ்ந்துள்ளது. 

    திரையிலும் பொதுவெளியிலும் இயங்கி வரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான நடிகர் கருணாஸ் மீதும் தனது கடின உழைப்பாலும் திறமையாலும் முன்னணி நடிகையாக திகழும் திரிஷா மீதும் இப்படி அபாண்டமான அவதூறை அதுவும் பொது வாழ்க்கையில் இருக்கும் நபரே தனது அரசியல் சுயலாபத்துக்காக பரப்புவது வேதனை அளிக்கிறது.

    கவனத்தை ஈர்த்துக் கொள்ளவும் கேட்போரை கீழ்த்தரமானவராய் கருதியும் இத்தகைய செயல்கள் நடந்தேறுவது, இனியும் நடக்க கூடாத வகையில் நடிகர் சங்கம் தீவிரமான முடிவுகளை எடுக்கும்.

    சட்டரீதியாய் இக்குற்றத்தை அணுகவும் செய்யும் பண்பு மென்மை காரணமாய் பிரபலங்கள் பதில் பேச மாட்டார்கள் என்கிற பலத்தை பலவீனமாக்கி விளையாடுவதை இத்தோடு நிறுத்திக் கொள்ளவேண்டும்.

    தென்னிந்திய நடிகர் சங்கம் தனது கடும் கண்டனத்தை தெரிவிப்பதுடன் சட்ட ரீதியான அனைத்து நடவடிக்கைகளுக்கும் துணை நிற்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

     

    • பல யூடியூப் சேனலிலும் என்னை பற்றியும் நடிகை திரிஷா பற்றியும் பல்வேறு உண்மைக்கு மாறான பொய்யான அவதூறு கருத்துக்களை பலரும் பரப்பி வருகின்றனர்.
    • சமூக வலைதளங்களில் உள்ள வீடியோ பதிவினை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

    சென்னை:

    சேலம் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட ராஜூ நடிகை திரிஷா மற்றும் நடிகர் கருணாசை கூவத்தூருடன் தொடர்பு படுத்தி சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்து இருந்தார்.

    இது தொடர்பாக ராஜூவுக்கு நடிகை திரிஷா தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தன்னை பற்றியும் அவதூறாக கூறியது பற்றி நடிகர் கருணாஸ் போலீசில் புகார் செய்தார்.

    இந்த நிலையில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்று மேலும் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:-


    கடந்த சில நாட்களுக்கு முன்பும் தமிழா பாண்டியன் மற்றும் பயில்வான் ரங்கநாதன் ஆகிய இரு நபர்களும் சமூக வலைதளங்களில் என்னை பற்றி பல்வேறு பொய்யான தகவலையும் மற்றும் சங்கதிகளையும் என் மீது வன்மம் கொண்டு அவதூறாக மற்றும் அருவருப்பான மற்றும் உண்மைக்கு மாறான செய்தியை பரப்பி உள்ளார்கள்.

    மேலும் நடிகை திரிஷா மற்றும் சில நடிகைகளையும் ஏற்பாடு செய்து கொடுத்தேன் என்றும் உண்மைக்கு மாறாக பொய்யான செய்தியை விளம்பரத்துக்காக பரப்பி வருகிறார்கள். அதில் இம்மி அளவும் உண்மை இல்லாத பொழுதும் பத்திரிகை மற்றும் சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினராலும் பகிரப்பட்டு தற்போது வைரல் ஆகி உள்ளது. அதனை தொடர்ந்து பல யூடியூப் சேனலிலும் என்னை பற்றியும் நடிகை திரிஷா பற்றியும் பல்வேறு உண்மைக்கு மாறான பொய்யான அவதூறு கருத்துக்களை பலரும் பரப்பி வருகின்றனர். மேலும் மேற்படி நபர்கள் எந்த ஆதாரமும் இன்றி என் மீது பரப்பி வரும் பொய்யான தகவலால் என் பெயருக்கும் புகழுக்கும் சமுதாயத்தில் களங்கம் ஏற்படுத்தி உள்ளார்கள். இதனால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி உள்ளேன்.

    எனவே மேற்படி நபர்கள் மீதும் யூடியூப் சேனல்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுத்து மேற்படி சமூக வலைதளங்களில் உள்ள வீடியோ பதிவினை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • 68 வகுப்பினர்கள் சீர்மரபினர் என வகைப்படுத்தப்பட்டுள்ளனர்
    • அன்றைய அ.தி.முக. அரசு DNC என்பதனை DNT என பெயர் மாற்றம் செய்து ஆணையிட்டது.

    சுதந்திரம் பெறுவதற்கு முன் ஆங்கிலேய ஆட்சியில் குற்றப்பரம்பரை சட்டத்தினால் (Criminal Tribes Act) பாதிக்கப்பட்ட வகுப்பினர்கள், சீர்மரபினர் வகுப்பு என வகைப்படுத்தப்பட்டனர். சீர்மரபினர் வகுப்பினர் மிகப்பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினருடன் சேர்க்கப்பட்டு 20% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு 68 வகுப்பினர்கள் சீர்மரபினர் என வகைப்படுத்தப்பட்டுள்ளனர். சீர்மரபினர் வகுப்பினர்களுக்கு Denotified Communities / Denotified Tribes என இரண்டு சான்றிதழ்களுக்குப் பதிலாக ஒரே சான்றிதழ் வழங்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    முதலமைச்சரின் இந்த உத்தரவுக்கு முக்குலத்தோர் புலிப்படை கட்சித் தலைவர் கருணாஸ் நன்றி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "Denotified Communities (சீர்மரபினர்) பட்டியலில் 68 ஜாதிகள் உள்ளன. அன்றைய அ.தி.முக. அரசு DNC என்பதனை DNT என பெயர் மாற்றம் செய்து ஆணையிட்டது.

    ஆனால் மத்திய அரசு சலுகைகள் பெறுவதற்கு ஒரு பெயரும், தமிழக ஆவணங்களிலும் ஒரு பெயரும் கூடாது. அனைத்து சலுகைகளையும் பெற சீர்மரபின பழங்குடியினர் DNT என்று ஒரே மாதிரியாக மாற்றம் செய்தால்தான் எங்களது தொடர் கோரிக்கை முழுமையாக நிறைவேறும்.

    அதே சமயம் இந்த இரு முரண்பாடுகளானவற்றையும் களைய வேண்டும் என்று நான் சட்டமன்றத்தில் அன்றே கோரிக்கை விடுத்தேன். தற்போது சீர்மரபினருக்கு ஒரே சான்றிதழ் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ள முதல்வர் அவர்களுக்கு நன்றி" என்று கருணாஸ் தெரிவித்துள்ளார்.

    ×