என் மலர்
நீங்கள் தேடியது "பீகார்"
- ஜெய் பாபு, ஜெய் பீம், ஜெய் அரசியல் சாசனம் கூட்டம் பீகாரில் நடைபெற்றது.
- இதில் கார்கே, பீகார் மாநில காங்கிரஸ் தலைவர்கள் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.
மகாத்மா காந்தி மற்றும் அம்பேத்கரை நினைவு கூறும் வகையில் மத்திய, மாநில, மாவடட் அளவில் ஜெய்பாபு, ஜெய் பீம், ஜெய் அரசியல் சாசனம் என்ற கோஷத்துடன் பேரணிகள், கூட்டங்களை காங்கிரஸ் கட்சி நடத்தி வருகிறது.
அந்த வகையில் நேற்று பீகார் மாநிலம் புக்சார் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கலந்து கொண்ட ஜெய் பாபு, ஜெய் பீம், ஜெய் அரசியல் சாசனம் (Jai Bapu, Jai Bhim, Jai Samvidhan) கூட்டம் தல்சாகார் மைதானத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில் மல்லிகார்ஜூன உரையாற்றினார். அவரது உரையை கேட்க அதிக அளவில் மக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்கான அதிக அளவில் இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. ஆனால் கார்கே, மாநிலத் தலைவர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்ட போதிலும் அதிக அளவில் கூட்டம் வரவில்லை. அதிக அளவிலான இருக்கைகள் காலியாக இருந்துள்ளது.
இதனால் புக்சார் மாவட்ட காங்கிரஸ் தலைவர் மனோஜ் குமார் பாண்டே, ஒத்துழைப்பு குறைபாடு காரணமாக கட்சியின் அனைத்து விதமான பதவிகளில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
இந்த பேரணியில் பீகார் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் கிருஷ்ணா அலாவாரு, மாநில காங்கிஸ் தலைவர் அகிலேஷ் பிரசாத் சிங், புக்சார் ராஷ்டிரிய ஜனதா தளம் எம்.பி. சுதாகர் சிங், சாசாராம் காங்கிரஸ் எம்.பி. மனோஜ் குமார் ராம் மற்றும் பல எம்.எல்.ஏ.-க்கள் கலந்து கொண்டனர்.
- பீகாரில் ஊழலை நிறுவனமாக்கியதற்காக நிதிஷ் குமார் பொறுப்பேற்க வேண்டும்.
- முதல்வர் மாநில அரசின் நிதிகளை அவருடைய தேர்தல் பிரசாரத்திற்காக பயன்படுத்துகிறார்.
பீகார் மாநிலத்தில் நிதிஷ் குமார் ஊழலை நிறுவனமாக்கிவிட்டார். அரசு நிதிகள் இந்த வருடம் இறுதியில் நடைபெற இருக்கும் தேர்தலுக்கான அரசியல் பிரசாரத்திற்காக பயன்படுத்தப்படுகிறது என ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக தேஜஸ்வி யாதவ் கூறியதாவது:-
பீகாரில் ஊழலை நிறுவனமாக்கியதற்காக நிதிஷ் குமார் பொறுப்பேற்க வேண்டும். முதல்வர் மாநில அரசின் நிதிகளை அவருடைய தேர்தல் பிரசாரத்திற்காக பயன்படுத்துகிறார். பெண்கள் அரசுடன் தொடர்பு கொள்வதற்காக சமீபத்தில் தொடங்கப்பட்ட மகிலா சம்வாத் என்ற முன்முயற்சி திட்டம் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தேர்தல் பிரசாரத்தில் ஒரு பகுதியாக பயன்படுத்தப்படுகிறது. இந்த முன்முயற்சி திட்டத்திற்காக அமைச்சரவை 225 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. மாநில அரசு இந்த பொது நிதியை தேர்தல் பிரசாரத்திற்காக பயன்படுத்துகிறது.
மாநில பெண்களுக்கு உறுதியான எதுவும் களத்தில் இல்லை. ஆனால் பிரசாரத்திற்காக கோடிக்கணக்கில் செலவிடப்படுகிறது.
டிசம்பர் 2024-ல் இருந்து கட்டுமான செயல்பாட்டிற்காக 76,622 கோடி ரூபாப் பரிந்துரைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஆச்சர்யம் அளிக்கும் வகையில், முதன்முறையாக அரசு இந்த பணிகளுக்காக சர்வதேச அளவிலான டெண்டர்களை கோரியுள்ளது. உலகளாவிய டெண்டருக்கான காணரம் என்ன?.
மேலும், தொடர்பு சாலைகள் இல்லாமல் பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. பல கட்டிடங்கள் தயாராக உள்ளன, ஆனால் சம்பந்தப்பட்ட துறைகள் அவற்றை கையகப்படுத்தவில்லை. (புதிய) மருத்துவமனை கட்டிடங்களில் உபகரணங்கள் அல்லது மருத்துவர்கள் இல்லை. 'ஹர் கர் நல் கா ஜல்' திட்டத்திற்காக பல கோடிகள் செலவிடப்பட்டன. ஆனால் தண்ணீர் விநியோகம் இல்லை என்பதை நாம் கண்டிருக்கிறோம்.
இவ்வாறு தேஜஸ்வி யாதவ் குற்றம்சாட்டியுள்ளார்.
- சிறுவனின் குடும்பத்துக்கு அரசாங்கத்திடமிருந்து ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது.
- போலீசார் மீது நம்பிக்கை இழந்த குடும்பத்தினர் சிறுவனை நேராக நீதிமன்றம் அழைத்துச் சென்று ஆஜர் படுத்தியுள்ளனர்.
பீகாரின் தர்பங்கா மாவட்டத்தில் ஒரு மாதத்திற்கு முன்பு இறந்துவிட்டதாகக் கருதப்பட்டு தகனம் செய்யப்பட்ட 17 வயது சிறுவன் உயிருடன் திரும்பிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சிறுவன் காணாமல் போனதாக அவனது குடும்பத்தினர் பிப்ரவரி 8 ஆம் தேதி போலீசில் புகார் அளித்தனர். சில வாரங்களுக்குப் பிறகு, அல்லல்பட்டி பகுதியில் உள்ள ரயில் தண்டவாளத்தில் கை மற்றும் கால்கள் துண்டிக்கப்பட்டு அடையாளம் காண முடியாத ஒரு உடல் கண்டெடுக்கப்பட்டது.
அது காணாமல் போன சிறுவன் என கூறி குடும்பத்திடம் அந்த உடல் ஒப்படைக்கப்பட்டது. குடும்பத்தினரும் அந்த உடலை தகனம் செய்தனர். சிறுவனின் குடும்பத்துக்கு அரசாங்கத்திடமிருந்து ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது.
ஆனால் அவர்களின் மகன் ஏப்ரல் 17 ஆம் தேதி தர்பங்கா மாவட்ட நீதிமன்றத்தில் உயிருடன் ஆஜராகி தனக்கு நேர்ந்ததை விவரித்துள்ளான். அதாவது, கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது மூன்று முதல் நான்கு பேர் தனது வாயை துணியால் மூடியதாகவும், அதனால் தான் சுயநினைவை இழந்ததாகவும் தெரிவித்தான்.
மேலும் விழித்துப் பார்த்தபோது தான் நேபாள் நாட்டில் இருப்பதை உணர்ந்ததாகவும் தெரிவித்தான். சந்தர்ப்பம் பார்த்து கடத்தல்காரர்களிடமிருந்து தப்பிய சிறுவன், தனது அண்ணனுக்கு வீடியோ கால் செய்துள்ளான். நேபாளுக்கு கிளம்பிச் சென்ற சகோதரன், தம்பியை பத்திரமாக திருப்ப அழைத்து வந்து குடும்பத்துடன் சேர்த்தான்.
போலீசார் மீது நம்பிக்கை இழந்த குடும்பத்தினர் சிறுவனை நேராக நீதிமன்றம் அழைத்துச் சென்று ஆஜர் படுத்தியுள்ளனர். இந்நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்த போலீசார், தகனம் செய்யப்பட்ட உடல் யாருடையது என்பது குறித்து ஆராய்ந்து வருவதாகவும், சிறுவன் கடத்தப்பட்டது குறித்து விசாரிப்போம் என்றும் தெரிவித்தனர்.
- ரெயில் ஓட்டுநர் அப்பெண்ணை கண்டு உடனடியாக பிரேக் போட்டார். ஆனால் ரயிலை உடனடியாக நிறுத்த முடியவில்லை.
- அப்பெண் ஷகர்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் என்று அடையாளம் காணப்பட்ட்டார்.
பீகாரில் தற்கொலை செய்ய தண்டவாளத்தில் குதித்த நடுத்தர வயது பெண் ரெயில் ஓட்டுனரின் சமயோஜித நடவடிக்கையால் உயிர்பிழைத்தார்.
பீகாரில் பெகுசராய் பகுதியில் நேற்று முன் தினம் காலை சலோனா ரெயில் நிலையம் அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது.
சஹர்சாவிலிருந்து சமஸ்திபூருக்குச் செல்லும் பயணிகள் ரெயில், நிலையத்தை விட்டு வெளியேறியபோது அந்தப் பெண் திடீரென தண்டவாளத்தில் குதித்தார். ரெயில் ஓட்டுநர் அப்பெண்ணை கண்டு உடனடியாக பிரேக் போட்டார். ஆனால் ரெயிலை உடனடியாக நிறுத்த முடியவில்லை.
இறுதியில் அப்பெண் என்ஜினுக்கு அடியில் சிக்கிக்கொண்டார். ஓட்டுநரும் உள்ளுர்வாசிகளும் உடனே விரைந்து ரெயிலுக்கு அடியில் சிக்கிய பெண்ணை சிறு காயங்களுடன் பத்திரமாக மீட்டனர். அப்பெண் ஷகர்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் என்று அடையாளம் காணப்பட்ட்டார்.
குடும்பத் தகராறு காரணமாக அந்தப் பெண் தற்கொலைக்கு முயன்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உள்ளூர்வாசிகள் அந்தப் பெண்ணை என்ஜினுக்கு அடியில் இருந்து மீட்ட காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.
- பீகார் மாநிலத்தில் நேற்று முன்தினம் பலத்த மழை கொட்டித் தீர்த்தது.
- அதிகபட்சமாக, நாலந்தா மாவட்டத்தில் 23 பேர் இறந்துள்ளனர்.
பாட்னா:
பீகார் மாநிலத்தில் நேற்று முன்தினம் பலத்த மழை கொட்டித் தீர்த்தது. மின்னல் தாக்குதல், ஆலங்கட்டி மழை போன்ற மழை தொடர்பான சம்பவங்களில் 25 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டது.
மழையால் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல் மந்திரி நிதிஷ்குமார், பலியானோர் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து கிடைத்த தகவல்கள் அடிப்படையில், பலி எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது. 39 பேர் ஆலங்கட்டி மழையாலும், 22 பேர் மின்னல் தாக்கியதாலும் பலியானார்கள். அதிகபட்சமாக, நாலந்தா மாவட்டத்தில் 23 பேர் இறந்துள்ளனர்.
- பீகார் மாநில மக்கள் நாட்டின் மற்ற மாநிலங்களுக்கு இடம் பெயர்தலை தடுத்து நிறுத்த நிதிஷ் குமார் தலைமையிலான அரசு தவறிவிட்டது.
- பீகார் மாநிலத்தில் வேலைவாய்ப்பின்மை உயர்வுக்கு, பல வருடங்களாக முதல்வராக இருந்து வரும் நிதிஷ் குமார் பொறுப்பேற்க வேண்டும்.
காங்கிரஸ் கட்சி தலைவரும், ராஜஸ்தான் மாநில முன்னாள் துணை முதல்வருமான சச்சின் பைலட், நிதிஷ் குமார் தலைமையிலான அரசு வேலைவாய்ப்பின்மை உயர்ந்து வருவதை கட்டுப்படுத்துவதில் தோல்வியடைந்து விட்டதுஎனக் குற்றிம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பான சச்சின் பைலட் கூறியதாவது-
பீகார் மாநில மக்கள் நாட்டின் மற்ற மாநிலங்களுக்கு இடம் பெயர்தலை தடுத்து நிறுத்த நிதிஷ் குமார் தலைமையிலான அரசு தவறிவிட்டது. அதுபோல இளைஞர்களுக்கு வேலை வழங்குவதிலும் தோல்வியடைந்து விட்டது. பீகார் மாநிலத்தில் வேலைவாய்ப்பின்மை உயர்வுக்கு, பல வருடங்களாக முதல்வராக இருந்து வரும் நிதிஷ் குமார் பொறுப்பேற்க வேண்டும்.
பீகாரில் நியாயமாகவும், சர்ச்சைகள் இல்லாமலும் நடத்தப்படும் தேர்வுகள் அரிதாகவே உள்ளன. அவரது அரசாங்கத்தால் இளைஞர்களுக்கு வேலை வழங்க முடியவில்லை. மாநிலத்தில் உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கம் ஏழைகளுக்கு எதிரானது மற்றும் இளைஞர்களுக்கு எதிரானது.
சமூக ரீதியாக ஒதுக்கப்பட்ட மற்றும் பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினரின் மேம்பாட்டிற்கும் மேம்பாட்டிற்கும் பாடுபடும் ஒரே கட்சி காங்கிரஸ் மட்டுமே. பீகார் மற்றும் நாடு முழுவதும் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதில் நாங்கள் சமமாக அக்கறை கொண்டுள்ளோம்.
இவ்வாறு சச்சின் பைலட் தெரிவித்துள்ளார்.
- மின்னல் தாக்கியும், ஆலங்கட்டி மழையாலும் 25 பேர் உயிரிழந்தனர்.
- உத்தரப் பிரதேசத்தில் கனமழை தொடர்பான விபத்துகளில் இதுவரை 22 பேர் உயிரிழந்தது குறிபிடத்தக்கது.
பீகாரின் பல மாவட்டங்களில் நேற்று (வியாழக்கிழமை) இடி, மின்னல் தாக்கியும், ஆலங்கட்டி மழையாலும் 25 பேர் உயிரிழந்தனர்.
முதலமைச்சர் அலுவலகம் (CMO) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நாளந்தாவில் 18 பேரும், சிவானில் 2 பேரும், கதிஹார், தர்பங்கா, பெகுசராய், பாகல்பூர் மற்றும் ஜெகனாபாத்தில் தலா ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் நிதீஷ் குமார், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.
முன்னதான புதன்கிழமை, பீகாரின் நான்கு மாவட்டங்களில் மின்னல் தாக்கி 13 பேர் உயிரிழந்தனர். அதேசமயம் உத்தரப் பிரதேசத்தில் கனமழை தொடர்பான விபத்துகளில் இதுவரை 22 பேர் உயிரிழந்தது குறிபிடத்தக்கது.
- பக்கத்து வீட்டு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டு டெல்லிக்கு ஓட்டம்.
- மகளை நைசாக பேசி வீட்டுக்கு அழைத்து வந்து கொலை செய்து உடலை மறைத்து வைத்த தந்தை.
பீகார் மாநிலம் சமாஸ்திபூரில் வசித்து வருபவர் முகேஷ் சிங். இவரது மகள் சாக்ஷி (வயது 25). முகேஷ் சிங் வீட்டருகே வசித்து வந்த வாலிபரும், சாக்ஷியும் ஒன்றாக கல்லூரியில் படித்துள்ளனர். அப்போதில் இருந்து இருவரும் பழகி வந்ததாக தெரிகிறது.
கடந்த மாதம் 4ஆம் தேதி சாக்ஷி வீட்டைவிட்டு வெளியேறி தனது காதலனுடன் டெல்லிக்கு சென்றுள்ளார். அங்கு இருவரும் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. தனது மகள் டெல்லியில் இருப்பதை அறிந்த முகேஷ் சிங், அங்கு சென்றுள்ளார்.
பின்னர், தனது மகள் மனம் மாறும் வகையில் பேசி மீண்டும் வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார். வீட்டுக்கு வந்ததும் அடுத்த சாதி பையனுடன் ஓடுவாயா? எனக் கோபப்பட்டு பெற்ற மகள் என்று கூட பாராமல் கடந்த 7ஆம் தேதி கொலை செய்துள்ளார்.
கொலை செய்து மகள் உடலை பாத்ரூமில் வைத்து பூட்டி வைத்துள்ளார். பின்னர் ஏதும் தெரியாதது போல் இருந்துள்ளார். அவரது மனைவி மகளை எங்கே? என்று கேட்க, மீண்டும் அந்த பையனுடன் ஓடியதாக கூறியுள்ளார்.
ஆனால் அவரது மனைவிக்கு சந்தேகம் வர, போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் பாத்ரூமில் இருந்து துர்நாற்றம் வீச திறந்து பார்க்கும்போது சாக்ஷி உடல் இருந்தது தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியபோது, முகேஷ் சிங் தனது மகளை கொலை செய்தத ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், தன் மகளை கொலை செய்தபின், அந்த வாலிபர் கொலை செய்ய சென்றுள்ளார். ஆனால் அவர் அங்கே இல்லாததால் ஏமாற்றம் அடைந்து திரும்பியுள்ளார். இல்லையென்றால் அந்த வாலிபரையும் கொலை செய்திருப்பார்.
- மும்பை தாக்குதல் குற்றவாளி ராணா விரைவில் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார்.
- அனைத்து மொழி மாணவர்களிடமும் இந்தி மற்றும் ஆங்கிலத்தை காங்கிரஸ்தான் திணித்தது.
புதுடெல்லி:
பீகார் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியிலும், தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டும் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தல்களில் பா.ஜ.க. வெற்றி பெறும் என மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறியுள்ளார்.
டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது இதுகுறித்து அவர் கூறியதாவது:-
பாராளுமன்ற தேர்தலில் எங்களுக்கு வாக்குகள் குறைந்தது. பிரதமர் மோடிக்கு அதிக வாக்குகள் கிடைக்காதது குறித்து வாக்காளர்கள் வருந்தினர். எனவே அரியானா, டெல்லி தேர்தலில் அவர்கள் அதிகமாக வாக்களித்து வெற்றி பெற வைத்தனர்.
அதைப்போல பீகார் மற்றும் தமிழ்நாட்டிலும் சட்டசபை தேர்தல்களில் பா.ஜ.க. வெற்றி பெறும்.
தொகுதி மறுசீரமைப்பில் இமாசல பிரதேசத்திலோ அல்லது இந்தியா கூட்டணி ஆளும் எந்த மாநிலத்திலோ ஏதாவது நடந்திருக்கிறதா? தொகுதி மறுசீரமைப்பு கமிஷனோ அல்லது அதற்காக நீதிபதியையோ அரசு அறிவித்து இருக்கிறதா?
தமிழ்நாட்டில் ஊழலை மறைக்கவே இந்த பிரச்சினையை எழுப்புகிறார்கள். தொகுதி மறுசீரமைப்பில் எந்தவித அநீதியும் இழைக்கப்படாது என்றும், விகிதாச்சாரப்படி அவர்கள் தொகுதிகளை பெறுவார்கள் என்றும் தென் இந்திய மக்களுக்கு நான் உறுதியளிக்கிறேன்.
மும்பை தாக்குதல் குற்றவாளி ராணா விரைவில் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார். இது பிரதமர் மோடி தலைமையிலான அரசுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி ஆகும்.
நமது வேர்கள் மற்றும் வரலாற்றுடன் தொடர்பு கொள்ள விரும்பினால் அனைத்து இந்திய மொழிகளையும் பாதுகாக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன். அனைத்து மொழி மாணவர்களிடமும் இந்தி மற்றும் ஆங்கிலத்தை காங்கிரஸ்தான் திணித்தது. ஆனால் பிராந்திய மொழிகளிலேயே தேர்வு எழுதுவதை நாங்கள் உறுதிசெய்தோம். மருத்துவம் மற்றும் பொறியியல் மாணவர்கள் தங்கள் தாய் மொழியிலேயே படிக்கிறார்கள்.
இவ்வாறு அமித்ஷா கூறினார்.
- பாஜகவின் 46வது நிறுவன தினத்தை முன்னிட்டும் அவர் இந்த தர்ம காரியத்தை செய்தது தெரியவந்துள்ளது.
- போர்வைகளை வழங்கும் வீடியோக்கள் இணையத்தில் படு வேகமாக வைரலாகி டிரால்களுக்கு உள்ளாகி வருகின்றன.
கொளுத்தும் வெயிலுக்கு பீகார் அமைச்சர் தனது தொகுதி மக்களுக்கு கம்பளிப் போர்வைகள் கொடுத்த வினோத சம்பவம் அரங்கேறி உள்ளது.
பீகாரில் நிதிஷ் குமார் முதல்வராக உள்ளார். இவரின் ஐக்கிய ஜனதா தளம் பாஜகவின் என்டிஏ கூட்டணியில் இடம்பெற்றுள்ளது. நிதிஷ் குமார் அமைச்சரவையில் பாஜகவை சேர்ந்த சுரேந்திர மேத்தா விளையாட்டுத் துறை அமைச்சராக உள்ளார்.
இந்நிலையில் 35 முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை வாட்டி வதைத்து வரும் சுரேந்திர மேத்தா தனது பச்வாரா சட்டமன்றத் தொகுதியின் கீழ் உள்ள அஹியாபூர் கிராமத்தில் வசிக்கும் ஏழை மக்களுக்கு 500க்கும் மேற்பட்ட கம்பளிப் போர்வைகளை விநியோகித்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பாஜகவின் 46வது நிறுவன தினத்தை முன்னிட்டும் அவர் இந்த தர்ம காரியத்தை செய்தது தெரியவந்துள்ளது.
தான் செய்த நற்காரியத்தில் புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்த மேத்தா, "உலகின் மிகப்பெரிய கட்சி மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்பும் உணர்வோடு செயல்படும் பாஜகவின் 46வது நிறுவன தினத்தை முன்னிட்டு, பச்வாரா சட்டமன்றத் தொகுதியின் கோவிந்த்பூர்-2 பஞ்சாயத்தின் அஹியாபூர் கிராமத்தில் இன்று கொண்டாடப்பட்டு, மக்களுக்கு போர்வைகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது" என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டார். அவர் போர்வைகளை வழங்கும் வீடியோக்கள் இணையத்தில் படு வேகமாக வைரலாகி டிரோல்களுக்கு உள்ளாகி வருகின்றன.
- அரசியலமைப்பு புத்தகத்தில் காந்தி, அம்பேத்கர், நேருவின் கொள்கைகள் உள்ளது.
- அரசியலமைப்பு புத்தகத்தில் சாவர்க்கரின் சித்தாந்தம் கிடையாது.
பீகார் மாநிலம் பாட்னாவில் நடைபெற்ற அரசியலமைப்பு பாதுகாப்பு மாநாட்டில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி.யும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி கலந்து கொண்டார்/
மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி, "நீங்கள் அரசியலமைப்பு புத்தகத்தின் நகலை கையில் வைத்திருக்கும்போது, அதில் மகாத்மா காந்தி, பாபா சாகேப் அம்பேத்கர் மற்றும் ஜவஹர்லால் நேருவின் கொள்கைகள் இருப்பதை நீங்கள் உணர்கிறீர்கள். அதில் சாவர்க்கரின் சித்தாந்தம் கிடையாது.
மகாத்மா காந்தி தன்னுடைய வாழ்க்கை வரலாற்றை சத்திய சோதனை என புத்தகம் எழுதியதுபோல, பிரதமர் மோடி தன்னுடைய சுயசரிதையை பொய்களின் மீதான சோதனை என புத்தகம் எழுதலாம்" என்று கிண்டலாக தெரிவித்தார்.
- பீகாரில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் பாதயாத்திரை நடத்தப்படுகிறது.
- ஓடுவதை நிறுத்துங்கள், பயணத்தில் தோளோடு தோள் சேர்ந்து நடந்து செல்லுங்கள்.
பீகாரில் இந்த வருட இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அங்கு அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் இன்று பீகாரில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் நடத்தப்படும் பாதயாத்திரையில் மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டார்.
பெகுசராய் நகரில் 'இடம்பெயர்வை நிறுத்துங்கள், வேலை கொடுங்கள்' என்ற கருப்பொருளில் இந்த பாதயாத்திரை நடத்தப்படுகிறது. இதற்காக இன்று டெல்லியில் இருந்து வருகை தந்த ராகுல் காந்தி ஆயிரக்கணக்கான இளைஞர்கள் புடை சூழ பேரணியில் நடந்து சென்றார். இதைத்தொடர்ந்து பாட்னாவில் நடக்கும் அரசியலமைப்பு பாதுகாப்பு மாநாட்டில் ராகுல் காந்தி உரையாற்றுகிறார்.
முன்னதாக பாதயாத்திரை குறித்து தனது எக்ஸ் தளத்தில் காணொளி பகிர்ந்து பேசிய ராகுல் காந்தி, பீகாரின் இளம் நண்பர்களே, ஏப்ரல் 7 ஆம் தேதி நான் பெகுசராய்க்கு வருகிறேன். ஓடுவதை நிறுத்துங்கள், பயணத்தில் தோளோடு தோள் சேர்ந்து நடந்து செல்லுங்கள்.
பீகார் இளைஞர்களின் உணர்வு, அவர்களின் போராட்டம், அவர்களின் துன்பம் ஆகியவற்றை உலகம் முழுவதும் காண வேண்டும் என்பதே இதன் குறிக்கோள்.
நீங்களும் வெள்ளை நிற டி-சர்ட் அணிந்து வாருங்கள். கேள்வி கேளுங்கள். உங்கள் உரிமைகளுக்காக பீகார் அரசிடம் குரல் எழுப்புங்கள். சட்டமன்றத் தேர்தலில் அந்த அரசை பதவியில் இருந்து அகற்ற வேண்டும்" என்று அழைப்பு விடுத்டிருந்தார்.