என் மலர்
நீங்கள் தேடியது "father"
- மகளிடம் தவறாக நடக்க முயன்ற தந்தை போக்சோ சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.
- மனைவி கலெக்டரிடம் புகார் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் மகளிடம் தவறாக நடக்க முயன்றதாக தந்தையை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தரப்பில் கூறப்பட்டதாவது:- இந்த தம்பதிக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். சம்பவத்தன்று இரவு கணவர் தனது மனைவியை தாம்பத்ய உறவுக்கு அழைத்துள்ளார். அதற்கு மனைவி வர மறுத்ததால், நீ வரவில்லையென்றால் பெற்ற மகளை தொடுவேன் என்று கூறி அவர் தூங்கி கொண்டிருந்த 16 வயதுடைய இளைய மகளிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து கணவருடன் தாம்பத்ய உறவுக்கு மனைவி சென்று விட்டாராம். மேலும் அந்த கணவர் தனது மனைவியை எப்போதும் சந்தேகப்பட்டு கொடுமைப்படுத்தி வந்தாராம். இது தொடர்பாக மனைவி கலெக்டரிடம் புகார் தெரிவித்துள்ளார். இதையடுத்து சைல்டு லைன் மற்றும் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகின் அலுவலர்கள் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி பாதுகாப்பு நலன் கருதி அச்சிறுமியை மீட்டு குழந்தைகள் இல்லத்தில் தங்க வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் தாய் பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறுமியின் தந்தையை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.
- மனைவி மீதான கோபத்தில் மகனை வீட்டில் அடைத்து சி்த்ரவதை செய்த தந்தை போலீசார் தேடி வருகின்றனர்.
- தந்தை விளக்கால் பெற்ற மகனையே குத்தியுள்ளார். வலியால் துடித்த சிறுவன் கதறி அழுதுள்ளான்.
மேலூர்
மதுரை மாவட்டம் மேலூர் கொட்டாம்பட்டி அருகே உள்ளது சின்னகற்பூரம்பட்டியை சேர்ந்தவர் அறிவாணன் (வயது32). இவரது மனைவி ரோஜா (29) இவர்களுக்கு ஜீவா(8) என்ற மகனும், நிலா என்ற மகளும் உள்ளனர்.
கணவன்-மனைவி இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதில் ஏற்பட்ட பிரச்சினையில் ரோஜா தனது குழந்தைகளுடன் தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். மனைவியின் மீது ஆத்திரத்தில் இருந்த அறிவாணன் சம்பவத்தன்று தனது மகன் ஜீவாவை யாருக்கும் தெரியாமல் தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு விளக்கால் பெற்ற மகனையே குத்தியுள்ளார். வலியால் துடித்த சிறுவன் கதறி அழுதுள்ளான்.
இந்த நிலையில் மாயமான மகனை பல்வேறு இடங்களில் ேதடி பார்த்து உள்ளார். அப்போது ரோஜாவின் உறவினரான இன்பவள்ளி என்பவர், கணவர் வீட்டிலிருந்த மகனின் சத்தம் கேட்டதாக கூறியுள்ளார்.
இதனை அடுத்து ரோஜா கணவர் வீட்டுக்கு சென்று பார்த்தபோது சிறுவன் ஜீவா காயங்களுடன் கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அவரது தாயார் உடனடியாக மகனை மீட்டு மேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக கொட்டாம்பட்டி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கமலமுத்து, தனிப்பிரிவு ஏட்டு தினேஷ் வழக்குப்பதிவு செய்து அறிவாணனை தேடி வருகின்றனர். மனைவி மீது உள்ள கோபத்தில் பெற்ற மகனை தந்தை சித்ரவதை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- கடந்த 2020-ம் ஆண்டு அக்டோபர் 10-ந் தேதி மாடப்ப தேவரை அவரது மகன் செல்வராஜ் கல்லால் தாக்கி கொலை செய்தார்.
- இந்த வழக்கு விசாரணை நெல்லை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இன்று இந்த வழக்கில் நீதிபதி ஜெசிந்தா மார்ட்டின் தீர்ப்பு கூறினார்.
நெல்லை:
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள சின்ன கோவிலாங்குளம் போலீஸ் சரகம் ஊத்தன்குளத்தை சேர்ந்தவர் மாடப்ப தேவர் (வயது 65). விவசாயி.
இவரது மகன் செல்வராஜ் (40). இவருக்கு திருமணம் ஆகவில்லை. இதனால் தனது தந்தையிடம் அடிக்கடி திருமணம் செய்து வைக்குமாறு கூறி வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு அக்டோபர் 10-ந் தேதி மாடப்ப தேவர் ஊர் அருகில் உள்ள தோட்டத்தில் மாடுகளை தொழுவத்தில் அடைத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த செல்வராஜ் தந்தையுடன் தகராறில் ஈடுபட்டு கல்லால் தாக்கி கொலை செய்தார்.
இச்சம்பவம் குறித்து சின்ன கோவிலாங்குளம் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து செல்வராஜை கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை நெல்லை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இன்று இந்த வழக்கில் நீதிபதி ஜெசிந்தா மார்ட்டின் தீர்ப்பு கூறினார். அப்போது செல்வராஜுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு வழக்கறிஞர் கருணாநிதி ஆஜரானார்.
- மோட்டார் சைக்கிளில் அன்னூரிலிருந்து அவினாசி நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
- அனந்தகிரி அருகே வந்தபோது எதிரே வேகமாக வந்த வேண் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
அவினாசி :
அவினாசி அம்மாபாளையத்தை சேர்ந்தவர் ஆனந்தராஜ் (வயது42). இவரும் இவரது மகன் தரணி (15) ஆகிய இருவரும் மோட்டார் சைக்கிளில் அன்னூரிலிருந்து அவினாசி நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
அவினாசியை அடுத்து அனந்தகிரி அருகே வந்தபோது எதிரே வேகமாக வந்த வேண்மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். இது குறித்த புகாரின்பேரில் அவினாசி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- சேத்தியாத்தோப்பு அருகே மகள் வீட்டுக்கு வந்த தந்தை விபத்தில் பலியானார்.
- சாைலயை கடக்க முயன்ற போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றது
கடலூர்:
நெய்வேலி அருகே உள்ள பெரியாக்குறிச்சியை சேர்ந்தவர் முத்துலிங்கம். விவசாயி.இவரது மகள் சேத்தியாத்தோப்பு அருகே வளையமாதேவி கிராமத்தில் உள்ளார். இவரது வீட்டுக்கு முத்துலிங்கம் வந்தார். அப்போது சாைலயை கடக்க முயன்ற போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றது. படுகாயம் அடைந்த அவர் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி முத்துலிங்கம் இறந்தார். இது பற்றி சேத்தியாத்ேதாப்பு போலீசார் விசாரிக்கிறார்கள்.
- மனைவி மேரி மற்றும் மகன் உறவினர் வீட்டுக்கு சென்றிருந்த நிலையில் வீட்டில் சந்திரமோகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- மடத்துக்குளம் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உடுமலை :
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே உள்ள பெரிய வட்டாரம் கோவில்கோவில் வீதியைச் சேர்ந்தவர் சந்திரமோகன் (வயது 46 ). பிரிட்ஜ் மற்றும் ஏ.சி. பழுது நீக்கும்தொழில் செய்து வந்தார்.
கடந்த 20ந்தேதி பத்தாம் வகுப்பு தேர்வு வெளியான நிலையில் அவரது மூத்த மகன் பெயில் ஆனதால் சந்திரமோகன் கவலையில் இருந்துள்ளார். இந்த நிலையில் நேற்று மனைவி மேரி மற்றும் மகன் உறவினர் வீட்டுக்கு சென்றிருந்த நிலையில் வீட்டில் பேன் மாட்டும் கொக்கியில் சந்திரமோகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த மடத்துக்குளம் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
- கவுந்தப்பாடி அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவர் தினகரன் முறையாக விடுப்பு எடுக்காமல் உடன் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்களுடன் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அவருக்கு பதிலாக அவரது மகன் அஸ்வின் என்பவர் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துள்ளார்.
- இது குறித்து ஈரோடு சுகாதார துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு, ஜூன். 22-
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவராக தினகரன் (57) என்பவர் உள்ளார்.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தலைமை மருத்துவர் தினகரன் முறையாக விடுப்பு எடுக்காமல் உடன் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்களுடன் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா சென்றுள்ளார்.
அந்த சமயம் அவருக்கு பதிலாக அவரது மகன் அஸ்வின் என்பவர் கவுந்தப்பாடி அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துள்ளார்.
அப்போது கவுந்தபாடி பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவர் சிகிச்சைக்கு வந்தார். மருத்துவர் எங்கே என்று கேட்டபோது தான் பவானி அரசு மருத்துவமனையின் மருத்துவர் என்று கூறி சிகிச்சை அளித்துள்ளார்.
அதற்கு பின்னர் தான் சிகிச்சை அளித்த அஸ்வின் அரசு தலைமை மருத்துவர் தினகரன் மகன் என தெரியவந்தது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து தலைமை மருத்துவர் தினகரன், பணியில் இல்லாத பெண் மருத்துவர் சண்முகவடிவு ஆகியோரை சஸ்பெண்டு செய்து சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்தது.
இந்நிலையில் கவுந்தப்பாடி சத்தி சாலையை சேர்ந்த கூலி தொழிலாளியான முருகேசன்(42) என்பவர் ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் அளித்த புகார் மனு அளித்தார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:
நான் வயிற்று வலி காரணமாக எனது நண்பர் உதவியுடன் கடந்த 19-ந் தேதி மாலை சுமார் 6.40 மணிக்கு கவுந்தப்பாடி அரசு மருத்துவ மனைக்கு சென்றேன். அங்கு தலைமை மருத்துவர் தினகரனுக்கு பதிலாக வேறொரு வாலிபர் இருந்தார்.
அவரிடம் டாக்டர் எங்கே என கேட்டபோது, நான் தான் டாக்டர் எனவும், பவானி அரசு மருத்துவ மனை மருத்துவர் என கூறி எனக்கு வெளிநோயாளி சீட்டு பதிவு செய்யாமல் ஊசி செலுத்தி, சீட்டு ஏதும் இன்றி மாத்திரைகளை வழங்கினார்.
இதையடுத்து அடுத்த நாள் எனக்கு மருத்துவம் பார்த்தது தலைமை மருத்துவர் தினகரனின் மகன் அஸ்வின் என்பதும், அவா் அரசு மருத்துவர் இல்லை என்பது தெரிந்து அதிர்ச்சி அடைந்தேன். இதுதொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி தலைமை மருத்துவர் தினகரன், பெண் மருத்துவர் சண்முகவடிவு ஆகியோரை தற்காலிக பணி நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
ஆனால், போலியாக அரசு மருத்துவமனையில், மருத்துவர் என நம்ப வைத்து சிகிச்சை அளித்த அஸ்வின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, தந்தைக்கு பதிலாக மருத்துவம் பார்த்த தலைமை மருத்துவரின் மகன் அஸ்வின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில் ஈரோடு சுகாதார துறையினர் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் விசாரணையை முடித்து இதுகுறித்து நடவடிக்கை எடுக்க போலீசிடம் புகார் அளிப்பார்கள். அதன் அடிப்படையில் அஸ்வின் மீது போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள் என தெரியவருகிறது.
- ஆறுமுகம் தனது சொத்துக்களை பிள்ளைகளுக்கு பங்கு வைத்து கொடுத்து விட்டார்
- போலீசார் நம்பிராஜன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி தேடி வருகின்றனர்.
களக்காடு:
திருக்குறுங்குடி அருகே உள்ள வடுகச்சிமதில் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது68). மாற்று திறனாளி. இவருக்கு 2 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி விட்டது.
இதனால் ஆறுமுகம் தனது சொத்துக்களை பிள்ளைகளுக்கு பங்கு வைத்து கொடுத்து விட்டார். மேலும் ஒரு இடத்தை தனது பெயருக்கு வைத்துக் கொண்டார்.
இந்நிலையில் அவரது மகன் நம்பிராஜன் (38) ஆறுமுகம் பெயரில் உள்ள இடத்தை அளக்க ஏற்பாடுகள் செய்தார்.
இதற்கு ஆறுமுகம் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த நம்பிராஜன் அரிவாளை எடுத்து வந்து ஆறுமுகத்தை கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தார்.
அத்துடன் அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தினார்.
இதுபற்றி ஆறுமுகம் திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்தார். போலீசார் நம்பிராஜன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி அவரை தேடி வருகின்றனர்.
பென்னாகரம் மூட்டைகார தெருவை சேர்ந்தவர் அய்யம்பெருமாள் (வயது 65). இவரது மகன் கார்த்திகேயன் (28). இவர்கள் வீட்டின் பின்புறம் கஞ்சா செடியை வளர்த்து வருவதாக பென்னாகரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் துரை தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று சோதனை செய்தனர். அப்போது வீட்டு தோட்டத்தில் பூச்செடிகளுடன் ஊடுபயிராக சேர்த்து கஞ்சா செடியை பயிரிட்டு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அய்யம்பெருமாள், இவரது மகன் கார்த்திகேயன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் கஞ்சா செடிகளை போலீசார் அழித்தனர். வீட்டில் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சா செடியை பறிமுதல் செய்யப்பட்டது.
திருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டு ஈஸ்வரன் நகரை சேர்ந்தவர் விஜயபாஸ்கர். பாடியில் உள்ள தனியார் கம்பெனியில் துணை மேலாளராக உள்ளார். இவரது மனைவி சரஸ்வதி. இவர்களுக்கு தனுஸ்ரீ, யாமினிஸ்ரீ ஆகிய 2 மகள்கள் உள்ளனர்.
தனுஸ்ரீ திருநின்றவூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 தேர்வுஎழுதி தேர்ச்சி பெற்று இருந்தார். விஜய பாஸ்கர் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில் தனியாக வசித்து வருவதாக தெரிகிறது.
இந்த நிலையில் பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெற்ற தனுஸ்ரீ இதழியல் அல்லது பி.ஏ. (டிபன்ஸ்) படிக்க முடிவு செய்தார். ஆனால் இதற்கு அவரது தந்தை விஜயபாஸ்கர் எதிர்ப்பு தெரிவித்து தனக்கு விருப்பமான மேல்படிப்பை படிக்குமாறு கூறி வந்தார்.
இதனால் தந்தை-மகள் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளிக்கு சான்றிதழ் வாங்க சரஸ்வதி சென்றபோது ஏற்கனவே அவரது சான்றிதழ்களை தந்தை விஜயபாஸ்கர் வாங்கி சென்றிருப்பது தெரிந்தது.
மேலும் வீட்டில் இருந்த 10-ம் வகுப்பு சான்றிதழும் மாயமாகி இருந்தன. இதுபற்றி தனுஸ்ரீ தனது தந்தையிடம் கேட்டார். அப்போது விஜய பாஸ்கர் தனக்கு விருப்பமான பி.எஸ்.சி. இயற்பியல் அல்லது வேதியியல் படிக்குமாறு அறிவுறுத்தினார். இல்லையேல் மேல் படிப்பு படிக்க வேண்டாம் என்று திட்டவட்டமாக தெரிவித்து விட்டார்.
இதனால் மனவேதனை அடைந்த தனுஸ்ரீ இதுபற்றி வாட்ஸ்-அப் மூலம் போலீசில் புகார் செய்தார். அதில் மேல்படிப்பு படிக்க தனது பள்ளி சான்றிதழை தந்தை தர மறுப்பதாக புகார் தெரிவித்து இருந்தார். இந்த புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க செவ்வாப்பேட்டை போலீசுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
போலீசார் விஜயபாஸ் கரையும் மாணவி தனுஸ்ரீயையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மாணவியின் விருப்பத்துக்கு ஏற்ப படிக்க வைக்குமாறு விஜய பாஸ்கரிடம் அறிவுரை கூறினர்.
மதுரை:
மதுரை சாமநத்தம் கிழக்கு தெருவைச் சேர்ந்த மகாராஜன் மகள் அழகுசந்தியா (வயது 14) இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். அழகுசந்தியா கடந்த மாதம் பிறந்தநாள் கொண்டாடினார். அன்றைய தினம் மகாராஜன் திருப்பதிக்கு சென்று விட்டார்.
இதனால் மனவேதனை அடைந்த அழகுசந்தியா, ‘என் பிறந்தநாளுக்கு அப்பா பரிசு தராமல் திருப்பதிக்கு சென்று விட்டாரே’ என மனவேதனை அடைந்தார். தனது உள்ளக்குமுறலை குடும்பத்தினரிடம் கூறி புலம்பினார்.
இந்த நிலையல் அவர் சம்பவத்தன்று இரவு வீட்டில் தூக்குப்போட்டுக் கொண்டார். உறவினர்கள் அவரை காப்பாற்றி மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அழகுசந்தியா பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக சிலைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.