என் மலர்
நீங்கள் தேடியது "passes away"
- பாவேந்தர் பாரதிதாசன் அவர்களுடன் பத்தாண்டுகள் நெருங்கிப் பழகிய சிறப்புக்குரியவர் ஈரோடு தமிழன்பன்.
- எண்ணற்ற விருதுகளைப் பெற்று அவற்றுக்குப் பெருமை சேர்த்திருக்கிறார் கவிஞர் ஈரோடு தமிழன்பன்.
ஈரோடு தமிழன்பன் ஒரு தமிழ்க் கவிஞர், எழுத்தாளர் மற்றும் விமர்சகர் வயது மூப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 92. அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஈரோடு தமிழன்பன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
மரபுக்கவிதை, புதுக்கவிதை என இரண்டிலும் சிறந்து, தமிழுக்கு வளம் சேர்த்த அறிஞர் ஈரோடு தமிழன்பன் என்கிற செந்தீசன் மறைந்த செய்தியறிந்து மிகவும் வருந்தினேன்.
பாவேந்தர் பாரதிதாசன் அவர்களுடன் பத்தாண்டுகள் நெருங்கிப் பழகிய சிறப்புக்குரியவர் ஈரோடு தமிழன்பன். சென்னை தொலைக்காட்சி நிலையத்தில் செய்தி வாசிப்பாளர், பேராசிரியர், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர், அறிவியல் தமிழ் மன்ற உறுப்பினர், அரிமா நோக்கு இதழின் ஆசிரியர் எனப் பல்வேறு பொறுப்புகளில் அவர் ஆற்றிய பணிகளும் எழுதிய நுங்களும் ஏராளம்.
தமது இடையறாத தமிழ்ப் பணிகளுக்கு அங்கீகாரமாகக் கலைமாமணி சாகித்ய அகாதெமி, பாரதிதாசன் விருது, சிறந்த நூலுக்கான தமிழ்நாடு அரசின் விருது, குறள்பீட விருது, முரசொலி அறக்கட்டளையின் கலைஞர் விருது, கவிக்கோ விருது என எண்ணற்ற விருதுகளைப் பெற்று அவற்றுக்குப் பெருமை சேர்த்திருக்கிறார் கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்கள்.
நமது திராவிட மாடல் ஆட்சிக்கு வந்ததும் 2022-ம் ஆண்டு முத்தமிழறிஞரின் பிறந்ததாளில் கனவு இல்லம் திட்டம் திட்டத்தின்கீழ், அவருக்கு அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடு வழங்கியிருந்தோம்.
மேலும், அவர் இயற்றிய கீழடியில் கேட்ட தாலாட்டுகள், நெருக்கடி நேரத்தில் கலைஞரோடு (கவிதைகளும் கட்டுரைகளும்) ஆகிய நூல்களையும், வட அமெரிக்க ஈரோடு தமிழன்பன் வாசகர் பேரவை தயாரித்துள்ள, ஈரோடு தமிழன்பன் அவர்களின் வாழ்க்கை வரலாறு குறித்த "மகாகவி" என்ற ஆவணப் படத்தையும் முதலமைச்சராக வெளியிடும் பேற்றினைப் பெற்றிருந்ததை இவ்வேளையில் நினைவுகூர்கிறேன்.
இறுதிக்காலம் வரையிலும் பல வகைமைகளிலும் தமிழுக்குத் தொண்டாற்றிய நீண்ட நெடிய பெருவாழ்வுக்குச் சொந்தக்காரரான கவிஞர் ஈரோடு தமிழன்பனை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கும். தமிழன்பர்களுக்கும் எனது ஆழந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
துள்ளுவதோ இளமை படத்தில் தனுஷ் உடன் நடித்த நடிகர் அபினய், கடுமையான கல்லீரல் தொடர்பான உடல்நலப் பிரச்சனைகளால் போராடி வந்தார்.
இந்நிலையில், நடிகர் அபினய் இன்று அதிகாலை 4 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். நடிகர் அபினயின் மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
44 வயதான அபினய் வேலை இன்றி, தனியாக வாழ்க்கையை நடத்தி வந்தார். உடல்நலமும், பொருளாதாரமும் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைக்கான செலவுகள் கூட சமாளிக்க முடியாத சூழ்நிலை அவருக்கு ஏற்பட்டது.
அபினயின் சிகிச்சைக்காக திரைத்துறையை சேர்ந்த பலரும் உதவி செய்து வந்தனர். அந்த வகையில். நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி, பின்னர் ஹீரோவாக மாறிய பாலா, அபினயை நேரில் சந்தித்து நிதி உதவி வழங்கியிருந்தார். நடிகர் தனுஷ் நிதி உதவியாக ரூ.5 லட்சம் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
அபினய், 2002ஆம் ஆண்டு கஸ்தூரி ராஜா இயக்கிய துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அந்தப் படத்தில் தனுஷ், ஷெரின் ஆகியோருடன் நடித்த அவர், ஜங்க்ஷன் (2002), சிங்காரா சென்னை (2004), பொன் மேகலை (2005) போன்ற படங்களில் நாயகனாகவும், பின்னர் பல்வேறு படங்களில் துணை வேடங்களிலும் நடித்தார். மேலும், மலையாளத் திரையுலகிலும் பணியாற்றினார்.
நடிகராக மட்டுமின்றி, அபினய் பல்வேறு ஹீரோக்களுக்கு குரல் கொடுத்த டப்பிங் ஆர்டிஸ்டாகவும் இருந்தார்.
- சினேகனின் தந்தை சிவசங்கு வயது மூப்பு காரணமாக இன்று அதிகாலை காலமானார்.
- பாடலாசிரியர் சினேகன் தந்தை மறைவுக்கு திரை உலகினர், பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞருமான சினேகனின் தந்தை சிவசங்கு வயது மூப்பு காரணமாக தஞ்சாவூர் புது காரியாபட்டியில் உள்ள இல்லத்தில் இன்று அதிகாலை காலமானார்.
இதுகுறித்து தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள சினேகன்,
நட்புக்குரிய திரையுலக நண்பர்களுக்கும், ஊடகத்துறை நண்பர்களுக்கும் /அனைத்து கட்சி அரசியல் தோழர்களுக்கும் வணக்கம்.
எனது தந்தையார் இன்று அதிகாலை 4.30 மணிக்குக் காலமாகி விட்டார் என்ற துயர தகவலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
நாளை காலை 11 மணிக்கு தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள எனது சொந்த கிராமம் புதுக்கரியப்பட்டியில் நல்லடக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.
பாடலாசிரியர் சினேகன் தந்தை மறைவுக்கு திரை உலகினர், பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
- வயது மூப்பின் காரணமாக சென்னை பெரம்பூரில் இன்று மாலை காலமானார்.
- ஆயிரக்கணக்கான திரைப் பாடல்களை கவிஞர் பூவை செங்குட்டுவன் எழுதியுள்ளார்.
கவிஞரும், திரைப்பட பாடலாசிரியருமான பூவை செங்குட்டுவன் (90) வயது மூப்பின் காரணமாக சென்னை பெரம்பூரில் இன்று மாலை காலமானார்.
1,000-க்கும் மேற்பட்ட திரை பாடல்கள், 4,000 சுயாதீனப் பாடல்கள், 5,000 பக்திப்பாடல்களை செங்குட்டுவன் எழுதியுள்ளார்.
குறிப்பாக செங்குட்டுவன் எழுதிய, நான் உங்கள் வீட்டுப்பிள்ளை, தாயிற்சிறந்த கோவிலுமில்லை, திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா, இறைவன் படைத்த உலகை போன்ற பாடல்கள் என்றும் நினைவில் நீங்கா இடம்பெற்ற பாடல்கள் என கூறலாம்.
- நுரையீரல் பாதிப்புக்காக சென்னை தனியார் மருத்துவமனையில் ரேணுகாதேவி சிகிச்சை பெற்று வந்தார்.
- கடந்த ஒரு மாதமாக ரேணுகாதேவி தொடர் சிகிச்சையில் இருந்தார்.
தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலுவின் மனைவியும், தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவின் தாயாருமான ரேணுகாதேவி (80) உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.
நுரையீரல் பாதிப்புக்காக கடந்த சில மாதங்களாக சென்னை தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த ஒரு மாதமாக தொடர் சிகிச்சையில் இருந்தார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை ரேணுகாதேவி காலமானார்.
- புற்றுநோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த மதன் பாப் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
- பாலு மகேந்திர இயக்கத்தில் வெளிவந்த நீங்கள் கேட்டை படத்தின் மூலம் அறிமுகமானவர்.
சினிமா குணச்சித்திர நடிகர் மதன் பாப் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 71.
பாலு மகேந்திர இயக்கத்தில் வெளிவந்த நீங்கள் கேட்டை படத்தின் மூலம் அறிமுகமானவர். இவர் கடைசியாக நடித்த படம் எமன் கட்டளை.
புற்று நோய்க்காக ஏற்கனவே அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று மாலை 5 மணி அளவில் அவர் உயிரிழந்துள்ளார்.
அவரது உடல் சென்னை அடையாரில் உள்ள அவரது இல்லத்தில் குடும்பத்தினர் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
மதன் பாப், ஃபிரண்ட்ஸ், காவலன், மழை, தெனாலி, வசூல்ராஜா எம்பிபிஎஸ், வில்லன், யூத் உள்ளிட்ட படங்களில் நடித்து கவனத்தை ஈர்த்தவர்.
ஏ.ஆர்.ரகுமானின் குரு, தூர்தர்ஷன் டிவின் முதல் இசை கலைஞர் என பல்வேறு பெருமைகளுக்கு சொந்தக்காரர்.
இசையமைப்பாளர், காமெடி ஷோ நடுவர், குணச்சித்திர நடிகர் என பன்முகத் தன்மை கொண்டவர்.
மதன் பாப் மறைந்த தகவல் அறிந்து திரைத்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
- சென்னை பல்கலையில் முதுகலை பட்டம் மற்றும் முனைவர் பட்டம் பெற்றவர் வசந்தி தேவி.
- 2002- 2005ஆம் ஆண்டு வரை மாநில மகளிர் ஆணையத்தின் தலைவராக வசந்தி தேவி இருந்துள்ளார்.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரான கல்வியாளர் வசந்தி தேவி (87) சென்னையில் காலமானார்.
சென்னை பல்கலையில் முதுகலை பட்டம் மற்றும் முனைவர் பட்டம் பெற்றவர் வசந்தி தேவி.
1973ம் ஆண்டு பத்ம விபூஷண் விருது பெற்றவர் வசந்தி தேவி
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. துணைவேந்தராக 1992- 1998 வரை வசந்திதேவி இருந்துள்ளார்.
2002- 2005ஆம் ஆண்டு வரை மாநில மகளிர் ஆணையத்தின் தலைவராக வசந்தி தேவி இருந்துள்ளார்.
2017இல் வாழ்நாள் சாதனையாளருக்கான சக்தி விருதை வென்றவர் வசந்தி தேவி.
2016ஆம் ஆண்டில் சென்னை ஆர்.கே. நகர் தொகுதியில் ஜெயலலிதாவை எதிர்த்து வசந்திதேவி போட்டியிட்டார்.
- தேடல் உள்ள நடிப்புக் கலைஞர்களில் அதிகம் வாசிப்பதையும் வாசித்ததைச் சிந்திப்பதையும் வழக்கமாகக்கொண்டவர்.
- அவரை இழந்து வேதனைப்படும் குடும்பத்தாருக்கு என் ஆறுதல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
நடிகர் ராஜேஷ் மறைவுக்கு நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கமல்ஹாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-
தேடல் உள்ள நடிப்புக் கலைஞர்களில் அதிகம் வாசிப்பதையும் வாசித்ததைச் சிந்திப்பதையும் வழக்கமாகக்கொண்டவர் அன்பு நண்பர் ராஜேஷ்.
தன் வாழ்வின் இறுதிவரை உற்சாகமும் செயல்பாடும் குறையாமல் வாழ்ந்த அவரது மறைவு பெரும் வருத்தத்தை ஏற்படுத்துகிறது. அவரை இழந்து வேதனைப்படும் குடும்பத்தாருக்கு என் ஆறுதல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- இறுதிச் சடங்குகள் தேனி மாவட்டம் வடுகபட்டியில் நாளை ஞாயிறு மாலை நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
- வைரமுத்துவின் தாயார் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
கவிஞர் வைரமுத்துவின் தாயார் அங்கம்மாள் இன்று மாலை காலமானார்.
இவரது மறைவு குறித்து கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் தள பதிவில் வெளியிட்டு உறுதி செய்துள்ளார்.
அந்த பதிவில் அவர், "என்னைப் பெற்ற அன்னை திருமதி அங்கம்மாள் அவர்கள் இன்று சனிக்கிழமை மாலை இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்தோடு அறிவிக்கிறேன்.
இறுதிச் சடங்குகள் தேனி மாவட்டம் வடுகபட்டியில் நாளை ஞாயிறு மாலை நடைபெறும்" என குறிப்பிட்டுள்ளார்.
கவிஞர் வைரமுத்துவின் தாயார் மறைவுக்கு திரையுலகம் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், வைரமுத்துவின் தாயார் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்," தமிழையும் அன்பையும் ஊட்டி வளர்த்த அன்னையை இழந்து தவிக்கும் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.
- நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.
- தேனாம்பேட்டையில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது.
நகைச்சுவை நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது.
திரைத்துறையில் இருந்து ஏராளமானோர் வந்து கவுண்டமணியின் மனைவியின் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தவெக தலைவர் விஜய் கவுண்டமணியின் மனைவி உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
மேலும், விஜய் நடிகர் கவுண்டமணியை ஆரத் தழுவி ஆறுதல் தெரிவித்தார்.
- போப்பின் உடல் ரெடெம்ப்போரிஸ் தேவாலயத்தில் வைக்கப்பட உள்ளது.
- 100 ஆண்டுகளுக்குப் பிறகு வாடிகனுக்கு வெளியே அடக்கம் செய்யப்பட உள்ள முதல் போப் இவர் ஆவார்.
கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் காலமானார். போப்பின் உடல் ரெடெம்ப்போரிஸ் தேவாலயத்தில் வைக்கப்பட உள்ளது.
செயின்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவில் தன் கல்லறையை அமைக்க போப் பிரான்சிஸ் விரும்பவில்லை என்றும் ரோமில் உள்ள சான்டா மரியா மேகியார் பசிலிகாவில் தனது கல்லறையை அமைக்க போப் பிரான்சிஸ் விரும்பியதாக கூறப்படுகிறது.
ரோமுக்கு செல்லும்போதெல்லாம் சான்டா மரியா மேகியார் பசிலிகாவுக்கு செல்வதை போப் வழக்கமாக வைத்திருந்தார்.
இதன்மூலம் 100 ஆண்டுகளுக்குப் பிறகு வாடிகனுக்கு வெளியே அடக்கம் செய்யப்பட உள்ள முதல் போப் இவர் ஆவார்.
இந்நிலையில், போப் பிரான்சிஸ் மறைவை ஒட்டி, இன்றும் நாளையும் துக்கம் அனுசரிக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
மேலும், போப் பிரான்சிஸின் இறுதிச்சடங்கு நடைபெறும் நாளன்றும் துக்கம் அனுசரிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவிப்பு.
போப் பிரான்சிஸ் மறைவை ஒட்டி, இந்தியாவில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- பிரான்சிஸ் மறைவை ஒட்டி, 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
- நாடு முழுவதும் தேசிய கொடிகள் அரை கம்பத்தில் பறக்க விடப்படும்
கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் காலமானார். போப்பின் உடல் ரெடெம்ப்போரிஸ் தேவாலயத்தில் வைக்கப்பட உள்ளது.
செயின்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவில் தன் கல்லறையை அமைக்க போப் பிரான்சிஸ் விரும்பவில்லை என்றும் ரோமில் உள்ள சான்டா மரியா மேகியார் பசிலிகாவில் தனது கல்லறையை அமைக்க போப் பிரான்சிஸ் விரும்பியதாக கூறப்படுகிறது.
ரோமுக்கு செல்லும்போதெல்லாம் சான்டா மரியா மேகியார் பசிலிகாவுக்கு செல்வதை போப் வழக்கமாக வைத்திருந்தார்.
இதன்மூலம் 100 ஆண்டுகளுக்குப் பிறகு வாடிகனுக்கு வெளியே அடக்கம் செய்யப்பட உள்ள முதல் போப் இவர் ஆவார்.
இந்நிலையில், போப் பிரான்சிஸ் மறைவை ஒட்டி, 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதனால் நாடு முழுவதும் தேசிய கொடிகள் அரை கம்பத்தில் பறக்க விடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.






