என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரபல நடிகர்"

    • புற்றுநோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த மதன் பாப் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
    • பாலு மகேந்திர இயக்கத்தில் வெளிவந்த நீங்கள் கேட்டை படத்தின் மூலம் அறிமுகமானவர்.

    சினிமா குணச்சித்திர நடிகர் மதன் பாப் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 71.

    பாலு மகேந்திர இயக்கத்தில் வெளிவந்த நீங்கள் கேட்டை படத்தின் மூலம் அறிமுகமானவர். இவர் கடைசியாக நடித்த படம் எமன் கட்டளை.

    புற்று நோய்க்காக ஏற்கனவே அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று மாலை 5 மணி அளவில் அவர் உயிரிழந்துள்ளார்.

    அவரது உடல் சென்னை அடையாரில் உள்ள அவரது இல்லத்தில் குடும்பத்தினர் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

    மதன் பாப், ஃபிரண்ட்ஸ், காவலன், மழை, தெனாலி, வசூல்ராஜா எம்பிபிஎஸ், வில்லன், யூத் உள்ளிட்ட படங்களில் நடித்து கவனத்தை ஈர்த்தவர்.

    ஏ.ஆர்.ரகுமானின் குரு, தூர்தர்ஷன் டிவின் முதல் இசை கலைஞர் என பல்வேறு பெருமைகளுக்கு சொந்தக்காரர்.

    இசையமைப்பாளர், காமெடி ஷோ நடுவர், குணச்சித்திர நடிகர் என பன்முகத் தன்மை கொண்டவர்.

    மதன் பாப் மறைந்த தகவல் அறிந்து திரைத்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    • கணவருடன் ஏற்பட்ட பிரச்சினையின் காரணமாக நீண்ட நாட்களாக மன அழுத்தத்தில் இருந்துள்ளதாக தகவல்.
    • தற்கொலை முயற்சி தொடர்பாக விருகம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.

    சென்னை சாலிகிராம் பகுதியை சேர்ந்தவர் சின்னத்திரை துணை நடிகை அமுதா (வயது 28). இவர் பிரபல தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பாகும் பல்வேறு சீரியல்களில் நடித்துள்ளார். தற்போது 'கயல்' என்ற சீரியலில் நடித்து வருகிறார்.

    சின்னத்திரை நடிகை அமுதா தன் கணவருடன் ஏற்பட்ட பிரச்சினையின் காரணமாக நீண்ட நாட்களாக மன அழுத்தத்தில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில், நேற்று வீட்டில் தனியாக இருந்த அமுதா கழிவறையை சுத்தம் செய்ய பயன்படுத்தும் திரவத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

    இதை அறிந்த அமுதாவின் தோழி, அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.

    இதற்கிடையே, அமுதா தற்கொலை முயற்சி செய்த விவகாரம் தொடர்பாக விருகம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும், அமுதாவின் கணவரிடமும் விசாரணை நடைபெற்று வருவதாக தகவல் கிடைத்துள்ளது. பிரபல சின்னத்திரை நடிகை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது சின்னத்திரை நடிகர், நடிகைகள் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
    • நடிகர் மறைவிற்கு ரசிகர்களும் திரையுலகினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    பிரபல பாலிவுட் நடிகரும், இயக்குநருமான மனோஜ் குமார் (87) உடல்நலக் குறைவால் காலமானார். மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.

    பாலிவுட்டில் 1960, 70களில் மிகப்பெரிய சூப்பர்ஸ்டாராக திகழ்ந்து வந்த இவரின் மறைவிற்கு ரசிகர்களும் திரையுலகினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், நடிகர் மனோஜ் குமாரின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதவிட்டிருப்தாவது:-

    புகழ்பெற்ற நடிகரும் திரைப்படத் தயாரிப்பாளருமான மனோஜ் குமார் அவர்களின் மறைவால் ஆழ்ந்த வருத்தம் அடைந்துள்ளேன்.

    இந்திய சினிமாவின் அடையாளமாக அவர் இருந்தார், குறிப்பாக அவரது தேசபக்தி ஆர்வத்திற்காக நினைவுகூரப்பட்டார். அது அவரது படங்களிலும் பிரதிபலித்தது.

    மனோஜ் குமாரின் படைப்புகள் தேசிய பெருமையின் உணர்வைத் தூண்டின. அது மேலும் தலைமுறைகளுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும். இந்த துயர நேரத்தில் அவரது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களுடன் எனது எண்ணங்கள் உள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தேசப்பற்றுமிக்க படங்களில் நடித்ததற்காக பாரத் குமார் என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டார்.
    • 1992இல் பத்மஸ்ரீ, 2015ல் தாதாசாகேப் பால்கே விருதுகளை பெற்றுள்ளார்.

    பிரபல பாலிவுட் நடிகரும், இயக்குநருமான மனோஜ் குமார் (87) உடல்நலக் குறைவால் காலமானார்.

    மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சைகள் பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

    தேசப்பற்றுமிக்க படங்களில் நடித்ததற்காக பாரத் குமார் என்று ரசிகர்களால் அழைக்கப்பட்ட இவர், 1992இல் பத்மஸ்ரீ, 2015ல் தாதாசாகேப் பால்கே விருதுகளை பெற்றுள்ளார்.

    பாலிவுட்டில் 1960, 70களில் மிகப்பெரிய சூப்பர்ஸ்டாராக திகழ்ந்து வந்த இவரின் மறைவிற்கு ரசிகர்களும் திரையுலகினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    • பிக் பாஸ் நிகழ்ச்சியை தமிழில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.
    • இந்தியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கி வருகிறார்.

    பிரபல பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாக் நிகழ்ச்சி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது.

    பிக் பாஸ் நிகழ்ச்சியை தமிழில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்தியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கி வருகிறார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு, சல்மான் கான் வசிக்கும் மும்பை பாந்த்ரா வீட்டின் முன்பு மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது, இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதனால், பாதுகாப்பு காரணமாக இந்தி பிக்பாஸ் ஓடிடி 3 வது சீசன் ரத்து செய்யப்படுவதாக முன்னதாக தகவல் வெளியாகி இருந்தது. 

    இந்நிலையில், பிக் பாஸ் ஓடிடி-ன் மூன்றாவது சீசனை சல்மான் கான் தொகுத்து வழங்க மாட்டார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

    இதுதொடர்பாக, பிரபல எக்ஸ் பக்கமான 'தி காப்ரி' பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், அனில் கபூர் பிக் பாஸ் ஓடிடி 3-ஐ தொகுத்து வழங்குவார் என பதிவிடப்பட்டுள்ளது.

    முன்னதாக, பிக் பாஸ் ஓடிடி-ன் முதல் சீசனை கரண் ஜோஹர் தொகுத்து வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கலகலப்பு படத்தில் நடிகர் சந்தானம் உடன் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார்.
    • சென்னை பெரம்பூரில் உள்ள அவரது வீட்டில் நடிகர் கோதண்டராமன் காலமானார்.

    பிரபல நடிகர் கோதண்டராமன் (65) உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.

    கடந்த 25 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றி வந்தவர் நடிகர் கோதண்டராமன். ஸ்டண்ட் மாஸ்டர் மட்டுமின்றி பல்வேறு படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார்.

    இவர், கலகலப்பு படத்தில் நடிகர் சந்தானம் உடன் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார்.

    இந்நிலையில், கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு காரணமாக நடிகர் கோதண்டராமன் சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்நிலையில், சென்னை பெரம்பூரில் உள்ள அவரது வீட்டில் நடிகர் கோதண்டராமன் காலமானார்.

    ×