search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Actor"

    • இயக்குனர் எஸ்.யு. அருண்குமார் தலைமையிலான எங்கள் குழு ஏப்ரல் 2024 முதல் படப்பிடிப்பை தொடங்குகிறது.
    • இதில் சியான் விக்ரம் நடிப்பு அனைவரும் திகைக்கும் வகையில் அமைந்து இருக்கும் .


    பா.ரஞ்சித் இயக்கத்தில் பிரபல நடிகர் சியான் விக்ரம் 'தங்கலான்' படத்தில் நடித்து வருகிறார். அவரது ரசிகர்கள் இந்த படத்தை ஆவலுடன் எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர்.

    இந்நிலையில், 'சித்தா' புகழ் எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் ''சியான் 62' என்று தற்காலிகமாக பெயரிடப்பட்ட புது படத்தில் நடிகர் விரக்ம் நடிக்க இருக்கிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஏப்ரல் மாதம் தொடங்கும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

    சியான் 62' படத்தை இதற்கு முன் 'மும்பைகார்' மற்றும் 'தக்ஸ்' படங்களை தயாரித்த ரியா ஷிபுவின் எச்.ஆர் பிக்ச்சஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இயக்குனர் எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில் ஏப்ரல் மாதம் சியான் விக்ரம் படப்பிடிப்பில் பங்கேற்று நடிக்க தொடங்குகிறார்.




     

    இதில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா, மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு ஆகியோர் விக்ரமுடன் இணைந்து நடிக்கின்றனர்.இப்படத்துக்குஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர் ரியா ஷிபு, தனது இன்ஸ்டாகிராம் பதிவில் 'சியான் 62' படப்பிடிப்பு குறித்த 'அப்டேட்' பகிர்ந்து உள்ளார்.

     அதில் 'சியான் 62' படப்பிடிப்பு தொடர்பாக இயக்குனர் எஸ்.யு. அருண்குமார் தலைமையிலான எங்கள் குழு ஏப்ரல் 2024 முதல் படப்பிடிப்பை தொடங்குகிறது. இதற்காக நாங்கள் முழு உழைப்பில் ஈடுபட்டு வருகிறோம். இதில் சியான் விக்ரம் நடிப்பு அனைவரும் திகைக்கும் வகையில் அமைந்து இருக்கும் 'என கூறி உள்ளார்


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • சென்னை, பெங்களூரு, கோவா வழியாக மும்பை சென்று அதன் பின் சென்னை திரும்பினார்
    • முதல் படத்தில் நடித்த பல்லவியை அப்போது அவர் காதலித்து திருமணம் செய்து கொண்டார்

    சென்னையை சேர்ந்தவர் நடிகர் ஜி.எம்.குமார். இவர் இயக்குனர், தயாரிப்பாளர், எழுத்தாளர் என பன்முகத் தோற்றம் கொண்டவர். 1986-ல் சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பிரபு நடித்த அறுவடை நாள் என்ற படத்தில் இயக்குனராக சினிமாவில் அறிமுகமானார்.

    அதைத்தொடர்ந்து பிட் பாக்கெட், இரும்பு பூக்கள், உருவம் போன்ற பல படங்களை இயக்கினார். 1993-ல் 'கேப்டன் மகள்' என்ற படம் மூலம் நடிகரானார். அதன் பின் பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்தார். மேலும் கொலைக்காட்சி தொடர்களிலும் நடித்தார்.

    பல படங்களை தயாரித்து இயக்கியதால் அதில் தோல்வி ஏற்பட்டு நஷ்டம் அடைந்தார். அதனால் சில வருடம் சினிமா பக்கம் செல்லாமல் இருந்தார். அதன்பின் 'வெயில்' படம் இவருக்கு திருப்புமுனை ஏற்படுத்தியது. முதல் படத்தில் நடித்த நடிகை பல்லவியை அப்போது அவர் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

    இந்நிலையில் ஜி.எம்.குமார் 'எக்ஸ்' இணைய தளத்தில் 'எனது முன்னாள் காதலியை பார்க்க 3 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் கார் ஓட்டிச் சென்றேன். சென்னை, பெங்களூரு, கோவா மும்பை அதன் பின் சென்னை' என்று பதிவிட்டுள்ளார்.

    மேலும் தனது முன்னாள் காதலியுடன் இருக்கும் படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார். அந்த பதிவு தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.இது குறித்து இணைய தளத்தில் நெட்டிசன்கள் பலர் பலவித விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

    • கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடிகர் விஷால் மற்றும் எஸ்.ஜே சூர்யா நடிப்பில் வெளிவந்த மார்க் ஆண்டனி படத்தில் மிக முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார் செல்வராகவன்.
    • ’எனது பிறந்தநாளுக்கு பொன்னான நேரத்தை ஒதுக்கி வாழ்த்திய அனைவருக்கும் நன்றி.

    தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ஸ்டைல் வைத்து எடுக்கும் திரைப்பட இயக்குனர்களில் ஒருவர் தான் செல்வராகவன்.

    இவர் தனது திரையுலக பயணத்தை 2002 ஆம் ஆண்டு தனுஷ் நடித்த துள்ளுவதோ இளமை எனும் படத்தில் இருந்து ஆரம்பித்தார். இப்படம் தான் தனுஷிற்கும் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

    கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடிகர் விஷால் மற்றும் எஸ்.ஜே சூர்யா நடிப்பில் வெளிவந்த மார்க் ஆண்டனி படத்தில் மிக முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார் செல்வராகவன்.

    தனது இயக்குனர் அவதாரத்தில் இருந்து இப்பொழுது நடிப்பு அவதாரத்திற்கு மாறியுள்ளார் . தற்போது நடிகர் தனுஷ் இயக்கத்தில் ராயன் எனும் படத்தில் நடித்து வருகிறார்.

    நேற்று பிறந்தநாள் கொண்டாடிய இயக்குனர் செல்வராகவன். இன்று அவரது எக்ஸ் பக்கத்தில் 'எனது பிறந்தநாளுக்கு பொன்னான நேரத்தை ஒதுக்கி வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. இது எனக்கு கிடைத்த பெரிய விஷயம் எப்போதும் போல நான் உங்களுக்கு நன்றியுடன் இருப்பேன்" என்று அவரின் நெகிழ்ச்சியை பதிவிட்டுள்ளார்.

    • நடிகர் சூரஜ் மீது பாலாரிவட்டம் போலீசார் வழக்கு பதிந்தனர்.
    • விளக்கம் கேட்டு நடிகர் சூரஜூக்கு மோட்டார் வாகன துறை 3 முறை நோட்டீசு அனுப்பியிருந்தது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் சூரஜ் வெஞ்சரமூடு. மலையாள திரைப்பட நடிகரான இவர் தேசிய விருது பெற்றிருக்கிறார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் சூரஜ் ஓட்டிச்சென்ற கார் மோதி, மஞ்சேரியை சேர்ந்த சரத்(வயது31) என்ற வாலிபர் காயமடைந்தார். இதுகுறித்து நடிகர் சூரஜ் மீது பாலாரிவட்டம் போலீசார் வழக்கு பதிந்தனர்.

    அவர் மீது வழக்கு பதியப்பட்டதற்கான முதல் தகவல் அறிக்கை மோட்டார் வாகன துறைக்கு அனுப்பப்பட்டது. அதனடிப்படையில் விளக்கம் கேட்டு நடிகர் சூரஜூக்கு மோட்டார் வாகன துறை 3 முறை நோட்டீசு அனுப்பியிருந்தது. ஆனால் அதற்கு அவர் பதிலளிக்கவில்லை. ஆகவே அவரது ஓட்டுனர் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்ய மோட்டார் வாகன துறை முடிவு செய்துள்ளது. அதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுத்து வருகின்றனர்.

    • ரூ.15,000 அபராதம் விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு.
    • தீர்ப்பை தொடர்ந்து எஸ்.வி.சேகர் அபராத தொகையை செலுத்தினார்.

    நடிகர் எஸ்.வி.சேகருக்கு ஒரு மாத சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

    கடந்த 2018ம் ஆண்டு பெண் பத்திரிகையாளர்கள் குறித்து பேஸ்புக் பக்கத்தில் அவதூறாக பதிவிட்ட வழக்கில் நடிகர் எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை, ரூ.15,000 அபராதம் விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

    "சந்தேகத்திற்கு இடமின்றி குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன" என்று நீதிபதி ஜி.செயவேல் உத்தரவிட்டுள்ளார்.

    உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்ய உள்ளதாக அவர் தெரிவித்ததை அடுத்து சிறை தண்டனை நிறுத்திவைப்பு. அபராத தொகையை செலுத்தினார்.

    • விஷால் ரசிகர் மன்றத்தை அரசியல் கட்சியாக மாற்றயுள்ளார்.
    • 2026- ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடவுள்ளார் என தகவல் வெளியானது.

    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஷால் தனது 'மக்கள் நல இயக்கம்' மூலம் பல உதவிகளை செய்து வருகிறார். இதையடுத்து நடிகர் விஷால் தனது ரசிகர் மன்றத்தை அரசியல் கட்சியாக மாற்றி அதற்கான பெயரை இன்று காலை விஷால் அறிவிப்பார் என்றும் 2026- ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடவுள்ளார் என்றும் தகவல் பரவி வந்தது.

    இந்நிலையில், இந்த தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக விஷால் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "சமூகத்தில் எனக்கு இத்தனை ஆண்டுகளாக ஒரு நடிகனாக, சமூக சேவகனாக உங்களில் ஒருவனாக அந்தஸ்தும் அங்கீகாரமும் அளித்த தமிழக மக்களுக்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன்.


    என்னால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் ஆரம்ப காலத்தில் இருந்தே என்னுடைய ரசிகர் மன்றத்தை ஒரு சராசரி மன்றமாய் கருதாமல் மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்று எண்ணினேன், "இயன்றதை செய்வோம் இல்லாதவர்களுக்கு" என்ற நோக்கத்தில் நற்பணி இயக்கமாக செயல்படுத்தினோம்.

    அடுத்த கட்டமாக மக்களின் முன்னேற்றத்திற்காக மக்கள் நல இயக்கத்தை உருவாக்கி மாவட்டம், தொகுதி, கிளை வாரியாக மக்கள் பணி செய்வதுடன், என் தாயார் பெயரில் இயங்கும் 'தேவி அறக்கட்டளை' மூலம் அனைவரும் கல்வி கற்க மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஐயா அப்துல் கலாம் அவர்களின் பெயரில் வருடந்தோறும் பல எண்ணற்ற ஏழை எளிய மாணவ, மாணவியர்களை படிக்க உதவி வருகிறோம் மற்றும் பாதிக்கப்பட்ட விவசாய தோழர்களுக்கு உதவிகளை செய்து வருகிறோம்.


    விஷால் அறிக்கை

    அதுமட்டுமின்றி படப்பிடிப்பிற்காக நான் செல்லும் பல இடங்களில் மக்களை சந்தித்து அவர்களின் அடிப்படைத் தேவைகளையும் குறைகளையும் கேட்டறிந்து அவர்களின் கோரிக்கைளையும் என் மக்கள் நல இயக்கம் மூலம் செய்து வருகிறேன்.

    நான் எப்போதும் அரசியல் ஆதாயத்தை எதிர்பார்த்து மக்கள் பணி செய்தது இல்லை, "நன்றி மறப்பது நன்றன்று" என்ற வள்ளுவனின் வாக்குப்படி என்னால் முடிந்த உதவிகளை நான் செய்துக்கொண்டே தான் இருப்பேன். அது என்னோட கடமை என்று மனரீதியாக நான் கருதுகிறேன்.

    தற்போது மக்கள் நல இயக்கத்தின் மூலம் நான் செய்து வரும் மக்கள் பணிகளை தொடர்ந்து செய்வேன். வரும் காலகட்டத்தில் இயற்கை வேறு ஏதேனும் முடிவு எடுக்க வைத்தால் அப்போது மக்களுக்காக மக்களின் ஒருவனாக குரல் கொடுக்க தயங்க மாட்டேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.


    • கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பெண் ஒருவர் பிரசவ வலி காரணமாக அவதிப்பட்டார்.
    • அவரை கிராம மக்கள் டோலி கட்டி தூக்கி சென்று அருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர்.

    திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் அருகே நெக்னாமலை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 170-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 750 பேர் வசித்து வருகின்றனர். இங்கு சாலை வசதி இல்லாததால் மக்கள் அன்றாட தேவைக்கும், மருத்துவ தேவைக்கும் 7 கிலோமீட்டர் நடந்தே சென்று வரக்கூடிய சூழ்நிலை உள்ளது.


    கர்ப்பிணி தாய்மார்கள் பிரசவ வலி ஏற்பட்டாலும், உயிரிழப்புகள் ஏற்பட்டாலும் டோலி கட்டி தூக்கிச்செல்லும் அவல நிலையும் தொடர்ந்து வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பெண் ஒருவர் பிரசவ வலி காரணமாக அவதிப்பட்டார். அவரை கிராம மக்கள் டோலி கட்டி தூக்கி சென்று அருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். இது குறித்து செய்திகள் சமூக வளைதளங்களில வெளியானது.


    இந்நிலையில் சின்னத்திரை நடிகர் பாலா நெக்னாமலை கிராமத்திற்கு நேரில் சென்றார். அங்கே அவருக்கு மலை கிராம மக்கள் பட்டாசு வெடித்து, ஆரத்தி எடுத்து வரவேற்றனர். பின்னர் கிராம மக்களுக்கு பயன்படும் வகையில் புதிய ஆம்புலன்ஸ் ஒன்றை வழங்கினார்.

    • கோவாவில் இருந்து போதைப் பொருள் கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • லாவண்யா போதை பொருள் கடத்தி வந்ததாக உறுதியான தகவல் கிடைத்தது.

    தெலுங்கானா மாநிலம், சைபராபாத் அடுத்த கோகா பேட்டையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் லாவண்யா என்கிற அன்விதா ( வயது 33). இவர் தெலுங்கு சினிமாவில் துணை நடிகையாக இருந்து வருகிறார்.

    இந்த நிலையில் லாவண்யா கோவாவில் இருந்து போதைப் பொருள் கடத்தி வருவதாக மடப்பூர் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீசார் லாவண்யாவை கண்காணித்து வந்தனர். அப்போது லாவண்யா போதை பொருள் கடத்தி வந்ததாக உறுதியான தகவல் கிடைத்தது.

    இதையடுத்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் நர்சிங் போலீசார் இணைந்து லாவண்யாவின் வீட்டில் சோதனை நடத்தினர். அவரது வீட்டில் இருந்து விலை உயர்ந்த எம்.டி.எம்.ஏ எனப்படும் 4 கிராம் எடையுள்ள போதை பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர். லாவண்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    அதே குடியிருப்பில் வசித்து வரும் நடிகர் ஒருவருடன் லாவண்யாவுக்கு நெருங்கிய தொடர்பு இருந்து வந்தது. அந்த நடிகருக்காக லாவண்யா கோவாவில் இருந்து போதைப்பொருள் கடத்தி வந்தது விசாரணையில் தெரிய வந்தது. லாவண்யாவுக்கு போதைப் பொருள் சப்ளை செய்த ஒருவர் அவரது காதலியுடன் தலைமறைவாகி உள்ளார். அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 'குக் வித் கோமாளி' என்ற நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்றார் பாலா.
    • இவர் நடிப்பதோடு மட்டுமல்லாமல் பல குழந்தைகளின் படிப்பிற்கு உதவி செய்தும் வருகிறார்.

    சின்னத்திரையில் தனது காமெடியால் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் பாலா. 'கலக்கப்போவது யாரு' எனும் நிகழ்ச்சி மூலம் திரையுலகிற்கு அறிமுகமான பாலா 'குக் வித் கோமாளி' என்ற நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்றார். தொடர்ந்து பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

    இவர் நடிப்பதோடு மட்டுமல்லாமல் பல குழந்தைகளின் படிப்பிற்கு உதவி செய்தும் வருகிறார். மேலும், சமூக சேவையும் செய்து வருகிறார்.சமீபத்தில் நகைச்சுவை நடிகர் பாலா ஈரோடு மாவட்டம் குன்றி ஊராட்சி மலை கிராமத்திற்கு தன்னார்வ அமைப்பின் மூலம் இலவச ஆம்புலன்ஸ் வாகனத்தை வழங்கினார். இதைத்தொடர்ந்து மிச்சாங் புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னால் முடிந்த உதவியை செய்தார்.

    இந்நிலையில், நடிகர் பாலா தற்போது மருத்துவ சேவைக்காக இலவச ஆட்டோவை வழங்கியுள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது, "மருத்துவத்திற்கு செல்பவர்கள் பேருந்திற்காக காத்திருந்து செல்ல வேண்டி இருக்கிறது. அனைவராலும் அவசரத்திற்கு ஆட்டோவில் செல்ல முடியவில்லை. அதனால் தான் கர்ப்பிணி பெண்கள், முதியோர்கள் மற்றும் மாற்று திறனாளிகளுக்காக இலவச ஆட்டோ சேவையை தொடங்கியுள்ளோம்.

    இந்த இலவச ஆட்டோ காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை இயங்கும். அனகாபுதூர், பம்மல், பல்லாவரம் போன்ற இடங்களை சுற்றியுள்ள மக்கள் மருத்துவத்திற்காக இந்த ஆட்டோவை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த எந்த அளவிற்கு பயன்படுகிறது என்பதை பார்த்துவிட்டு மற்ற பகுதிகளுக்கு ஆட்டோ வழங்குவேன். இந்த ஆட்டோ ஒட்டுனரின் சம்பளம் மற்றும் பெட்ரோல் என் சொந்த செலவில் வழங்கப்படும்" என்று கூறினார்.

    • ஹிருத்திக் ரோஷன் பல படங்களில் நடித்துள்ளார்.
    • இவரது நடனத்திற்கு மயங்காத ரசிகர்களே கிடையாது.

    பாலிவுட்டின் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஹிருத்திக் ரோஷன். குழந்தை நட்சத்திரமாக திரைத்துறையில் அறிமுகமான இவர் கடந்த 2000-ஆம் ஆண்டு வெளியான 'கஹோ நா... பியார் ஹை' திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. தொடர்ந்து பல படங்களில் இவர் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.


    அதிலும் இவரது நடனத்திற்கு மயங்காத ரசிகர்களே கிடையாது. தன் ஒவ்வொரு படத்திலும் தன் நடன திறமையை வெளிப்படுத்தி வருகிறார். இவரது நடனத்திற்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இப்படி தன் திறமையால் தனக்கான மையில்கல்லை எட்டியுள்ள நடிகர் ஹிருத்திக் ரோஷன் நேற்று தனது 50-வது பிறந்த நாளை கொண்டாடினார்.


    இவரது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு ரசிகர்கள் சென்னை சென்ட்ரல், எழும்பூர், பாரிமுனை உள்ளிட்ட இடங்களில் சுமார் ஆயிரம் பேருக்கு உணவு வழங்கினார்கள். அதுமட்டுமல்லாமல் முதியோர் இல்லத்தில் கேக் வெட்டி உணவு பரிமாறி கொண்டினார்கள்.

    • நடிகர்-நடிகைகள் சென்னைக்கு திரும்பி உள்ளனர்.
    • ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    தமிழ் திரையுலகம் சார்பில் திரை உலகில் உள்ள அனைத்து சங்கங்களுடன் இணைந்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கலைஞர் 100 என்கிற விழாவை இன்று மாலை நடத்துகிறது.

    கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் இன்று மாலை 4 மணி அளவில் இந்த விழா தொடங்குகிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் விழாவுக்கு அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சாமிநாதன், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். விழாவில் சிரஞ்சீவி, மோகன்லால், மம்முட்டி மற்றும் திரையுலக நட்சத்திரங்கள் கலந்து கொள்கிறார்கள்.


    கருணாநிதியின் புகழை போற்றும் வகையில் திரை உலகில் அவரது பங்களிப்பு பற்றிய முழுமையான விவரங்கள் அடங்கிய தொகுப்பு விழாவில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. அவரது வசனங்கள் அதன் மூலமாக பேசப்பட்ட தமிழ் திரைப்படங்கள் தொடர்பாகவும் கலைஞர் 100 விழாவில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    நடிகர் சத்யராஜ் மற்றும் நடிகைகள் ரம்யா பாண்டி யன், இனியா, யாஷிகா ஆனந்த், தேஜஸ்ஸ்ரீ மற்றும் நடிகர் மாஸ்டர் மகேந்திரன் ஆகியோர் கலை நிகழ்ச்சிகளை வழங்குகிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் ராமசாமி என்ற முரளி ராமநாராயணன் மற்றும் நிர்வாகிகள் ராதாகிருஷ்ணன், கதிரேசன் ஆகியோர் செய்து வருகிறார்கள்.


    கலைஞர் 100 விழாவையொட்டி இன்று தமிழ் திரைப்பட படப்பிடிப்புகள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன. நடிகர்-நடிகைகள் சென்னைக்கு திரும்பி உள்ளனர். அவர்களும் இன்று மாலை நடை பெறும் விழாவில் கலந்து கொள்கிறார்கள். இதையொட்டி கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானம் களை கட்டி உள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன.

    தமிழ் திரை உலகினர் ஒரே நேரத்தில் ஒட்டு மொத்தமாக திரள்வதால் ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    • விஜயகாந்திற்கு மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டது.
    • இவர் இன்று சிகிச்சை பலனின்றி காலமானார்.

    90-களிம் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் விஜயகாந்த். தன் நடிப்பின் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தார். 'கேப்டன்' என்று மக்களால் அன்போடு அழைக்கப்படும் விஜயகாந்த் நடிகராக மட்டுமல்லாமல் மனிதநேயம் மிக்கவராகவும் இருந்தார். மக்கள் பலருக்கு தன்னால் இயன்ற பல உதவிகளை செய்தார். இவர் தேமுதிக கட்சியின் தலைவராகவும் இருந்தார்.


    நடிகர் விஜயகாந்த் நேற்று முன்தினம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து, தீவிர சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த் இன்று காலமானார். இவரது மறைவிற்கு திரையுலகினர், அரசியல் தலைவர்கள் என பலர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.


    இந்நிலையில், விஜயகாந்திற்கு இரங்கல் தெரிவித்து இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "அந்த கம்பீரம், அந்த மனிதநேயம், அந்த நேர்மை, இனி எப்போது காண்போம் கேப்டன், உங்கள் நினைவுக்கும் ,உங்கள் உதவிகளுக்கும் என்றும் மறைவு இல்லை! ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலி " என்று பதிவிட்டுள்ளார்.

    ×