என் மலர்
நீங்கள் தேடியது "இயக்குனர்"
- டூரிஸ்ட் ஃபேமிலி 4 வாரங்கள் கடந்தும் தமிழ் நாட்டில் அதிக ஷோ எண்ணிக்கையுடன் ஓடிக்கொண்டு இருக்கிறது.
- டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை பார்த்த பல திரைப்பிரபலங்கள் படக்குழுவை பாராட்டி பதிவிட்டு வருகின்றனர்.
சசிகுமார், சிம்ரன் நடிப்பில் கடந்த மே 1ம் தேதி உலகம் முழுவதும் வெளியான திரைப்படம் 'டூரிஸ்ட் ஃபேமிலி'. இப்படத்தை அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவின்ந்த் இயக்கியுள்ளார். இப்படம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த திரைப்படத்தில் மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ், யோகி பாபு, ரமேஷ் திலக், எம்.எஸ். பாஸ்கர், பக்ஸ் என்ற பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இலங்கையைச் சேர்ந்த ஒரு தமிழ் குடும்பம் தமிழ்நாட்டுக்கு அகதிகளாக வந்து சந்திக்கும் சவால்களை காமெடி கலந்து எடுக்கப்பட்டுள்ளது. திரைப்படம் 4 வாரங்கள் கடந்தும் தமிழ் நாட்டில் அதிக ஷோ எண்ணிக்கையுடன் ஓடிக்கொண்டு இருக்கிறது.
படத்தை பார்த்த பல திரைப்பிரபலங்கள் படக்குழுவை பாராட்டி பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை பார்த்த நடிகர் சூர்யா, இயக்குனர் அபிஷன் ஜீவிந்த்தை நேரில் பாராட்டியுள்ளார்.
இதுதொர்பாக இயக்குனர் அபிஷன் தனது எக்ஸ் தள பக்கத்தில் நடிகர் சூர்யாவுடனான சந்திப்பு மற்றும் அவரது வாழ்த்து குறித்து நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சூர்யாவின் ரெட்ரோ திரைப்படம் வெளியான அதே நாளில் டூரிஸ்ட் பேமிலி படமும் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
- சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார். யுவன் பின்னணி இசையமைத்துள்ளார்.
- பறந்து போ வருகிற ஜூலை மாதம் 4-ம் தேதி வெளியாகிறது.
கற்றது தமிழ், தங்க மீன்கள், பேரன்பு, தரமணி உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியவர் இயக்குனர் ராம்.
இவர் தற்போது 'பறந்து போ' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
இதில், மிர்ச்சி சிவா கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி, அஜு வர்கீஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இப்படத்திற்கு, சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார். யுவன் பின்னணி இசையமைத்துள்ளார்.
இப்படம் வருகிற ஜூலை மாதம் 4-ம் தேதி வெளியாகிறது.
இந்நிலையில், பறந்து போ படத்தில் இடம்பெற்றுள்ள சன் ஃபிளவர் என்கிற பாடல் வெளியாகும் தேதி குறித்து படக்குழு அறிவித்துள்ளது.
அதன்படி, வரும் மே 23ம் தேதி சன் பிளவர் என்கிற முதல் சிங்கிள் பாடல் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- தோட்டக்கலை துறை, அலுவலர்கள் பணி யாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- பண்ணை பராமரிப்பு குறித்த அறிவுரைகளை வழங்கினார்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி மாவட்டம் அரசு தோட்டக்கலை பண்ணை பேச்சிப்பாறை யில் தோட்டக்கலை மலை பயிர்கள் துறை இயக்குனர் டாக்டர். பிருந்தா தேவி தோட்டக்கலை பண்ணை பணிகளை ஆய்வு மேற்கொண்டு பண்ணை பராமரிப்பு குறித்த அறிவு ரைகளை வழங்கினார்.
இந்த ஆய்வில் டாக்டர். பிருந்தாதேவி கூறியதாவது:-
பண்ணை பகுதிகளில் நெகிழி குப்பைகள் இல்லா வண்ணம் அனைவரும் பராமரிக்க வேண்டும். பண்ணையில் தாய் செடிகள் மற்றும் மரக்கன்றுகளை நட்டு தினமும் பராமரிக்க வேண்டும். இலவங்க பட்டை மரங்களை பராமரிக்க முன்னுரிமை கொடுத்து அதன் உற்பத்தியை பெருக்க வேண்டும். தேன் பதப்படுத்தும் அலகி னை பண்ணையிலும் விவசாயிகளும் தொடர்ந்து பயன்படுத்தி பயனடைய வேண்டும் என்றும் தெரி வித்தார்.
இந்த ஆய்வில் டான்ஹோடா செயற்பொறியாளர் பாலாஜி, தோட்டக்கலை துணை இயக்குநர் ஷீலா ஜாண், தோட்டக்கலை உதவி இயக்குநர் (நடவு பொருள்) மு.வ சரண்யா, தோட்டக்கலை உதவி இயக்குநர் ஆஸ்லின் ஜோஷி, தோட்டக்கலை உதவி இயக்குநர் திலீப், அருண்குமார், நந்தினி மற்றும் தோட்டக்கலை துறை, அலுவலர்கள் பணி யாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- இவர் லண்டனில் உள்ள விர்ரல் பல்கலைகழக மருத்துவமனையில் பல ஆண்டுகள் பணியாற்றியவர்
- சென்னையில் உள்ள எம்.ஐ.ஓ.டி. சர்வதேச மருத்துவமனையிலும், பெங்களூரு மருத்துவமனையிலும் பணியாற்றியுள்ளார்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் பொன் ஜெஸ்லி சூப்பர் ஸ்பெசா லிட்டி மருத்துவமனையில் லண்டன் குடியுரிமை பெற்ற இதயவியல் நிபுணர் டாக்டர் சரவணன் (வயது 53) நாளை (திங்கட்கிழமை) முதல் முழுநேர மருத்துவ மனை இயக்குனராகவும் இருதய வியல் துறை தலைவராகவும் பதவியேற்கிறார். இவர் எம். பி.பி.எஸ்., எம்.டி. பட்டங்களை மதுரை மருத்துவ கல்லூரி யிலும், எப்.ஆர். சி.பி. லண்ட னிலும், சி.சி.டி. லண்ட னிலும், சி.சி.டி.எஸ். அமெரிக்காவிலும், எப்.இ. எஸ்.இ. லண்டனிலும் படித்துள்ளார்.
இவர் லண்டனில் உள்ள விர்ரல் பல்கலை கழக மருத்துவமனையில் பல ஆண்டுகள் பணி யாற்றிவிட்டு, சென்னையில் உள்ள எம்.ஐ.ஓ.டி. சர்வதேச மருத்துவமனையிலும், பெங்களூரு மருத்துவமனை யிலும் பணியாற்றியுள்ளார்.
இவர் ரத்த ஓட்ட சோதனை இதய தமனி களில் ரத்த ஓட்டத்தை பரிசோதித்தல், மூடிய இதய தமனிகளை திறந்து பின்னர் ஸ்டென்ட் பொருத்துதல், இதய முடுக்கி பொருத்து தல், இதய படபடப்பு தடுப்பு மற்றும் உயிர் காக்கும் எந்திரம் பொருத்துதல், இதய மறு சீரமைப்பு, இதய முடுக்கி பொருத் துதல், இதய மின் இணைப்புக்களை சோதித்தல் போன்ற சிகிச் சைகள் அளிக்கிறார்.
இவரை பொன் ஜெஸ்லி குழு மங்களின் தலைவர் பொன்.ராபர்ட் சிங், மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ஜார்ஜ். இருதயவியல் டாக்டர்கள் ஸ்ரீதரசுதன், வெங்கடேஸ் மற்றும் மருத்துவமனை டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் பணி யாளர்கள் வாழ்த்தினர்.
- ஜிப்மர் இயக்குனருக்கு எதிராக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்துக்கும் புகார்கள் சென்றது.
- இயக்குனர் பதவிக்கு தகுதியானோர் வருகிற ஜூலை 31-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
புதுச்சேரி:
புதுவை ஜிப்மர் இயக்குனராக கடந்த 2029-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி ராகேஷ் அகர்வால் நியமிக்கப்பட்டார்.
ஜிப்மர் இயக்குனராக ராகேஷ் அகர்வால் நியமிக்கப்பட்டப் பிறகு இந்தி கட்டாயம், இலவச மருந்து மாத்திரை விநியோகம் நிறுத்தம், மாத்திரை தட்டுப்பாடு, உயர்சிகிச்சைக்கு ஏழைகளை தவிர்த்து கட்டணம் என அறிவித்து பல சர்ச்சைக்கு உள்ளானார்.
இதனால் ஜிப்மருக்கு எதிராக அரசியல் கட்சிகளின் போராட்டம் நடந்தது. மத்திய அரசு கூடுதல் நிதி அளித்தும் அந்த நிதியை முறையாக பயன்படுத்தி செயல்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.
ஜிப்மர் இயக்குனருக்கு எதிராக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்துக்கும் புகார்கள் சென்றது.
இதனை தொடர்ந்து கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் முன்னிலையில் ஜிப்மர் இயக்குனர் மற்றும் நிர்வாக அதிகாரிகளை அழைத்து விளக்கம் பெறப்பட்டது. கவர்னர் தமிழிசை ஜிப்மர் மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வும் செய்தார்.
இந்நிலையில் புதுவை ஜிப்மர் இயக்குனர் மாற்றம் உறுதியாகி உள்ளது. தற்போதைய இயக்குனர் ராகேஷ் அகர்வால் நியமிக்கப்பட்ட காலத்தில் இருந்து 5 ஆண்டுகள் வரை பதவியில் இருக்கலாம். தற்போது அவர் பொறுப்பேற்று 4½ ஆண்டுகள் முடிந்துள்ளது.
இந்த நிலையில் ஜிப்மர் இணையத்தளத்தில் இயக்குனர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் ஜிப்மர் இயக்குனர் பதவிக்கு தகுதியானோர் வருகிற ஜூலை 31-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
மருத்துவத்துறையில் 25 ஆண்டுகள் பணியாற்றி இருக்கவேண்டும். 10 ஆண்டுகளுக்கு குறையாமல் ஆராய்ச்சி மற்றும் கற்பித்தல் துறையில் இருந்திருக்க வேண்டும். மருத்துவம் அல்லது அறுவை சிகிச்சை அல்லது பொது சுகாதாரத்தில் உயர் முதுகலைத்தகுதி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் ரூ.2 ½ லட்சத்துக்குள் தரப்படும். ஜிப்மர் வளாகத்தில் குடியிருப்பு விடுதி தரப்படும். வயது 60-க்கு மிகாமல் இருக்க வேண்டும். ஜிப்மர் இயக்குனராக 65 வயது வரையிலோ, நியமனத்தில் இருந்து 5 ஆண்டுகள் வரையிலோ பதவியில் இருக்கலாம். நிர்வாக துணை இயக்குனருக்கு விண்ணப்பங்களை அனுப்பலாம் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்த நடிகை குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானாராம். எப்படியாவது நடிகையுடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என பலர் தவம் கிடந்தார்களாம். ஒரு கட்டத்தில் மார்க்கெட் குறையவே நடிகை திருமணம் செய்து கொண்டாராம்.
அதன்பின்னர், வரும் படங்களை தட்டிக்கழிக்காமல் நடித்து வருகிறாராம். ஒரு படப்பிடிப்பின் போது நடிகை மீது ஆசைப்பட்ட முன்னணி நடிகர் எதாவது சொல்லி நடிகையின் சுண்டுவிரலையாவது தொட்டுவிட வேண்டும் என இயக்குனருடன் சேர்ந்து பல தில்லாலங்கடி வேலை பார்த்து வந்தாராம். இதை தெரிந்து கொண்ட நடிகை முடியவே முடியாது என ஸ்டிரிக்டாக சொல்லிவிட்டாரம்.
வாரிசு நடிகை தன் கவர்ச்சியினால் சினிமாவில் கலக்கி வருகிறாராம். நடிகையின் மீது ஆசைப்பட்ட நடிகர் தன் படத்தில் அந்த நடிகைதான் நடிக்க வேண்டும் என அடம்பிடித்து வருகிறாராம். இதனை அறிந்த வாரிசு நடிகையின் அப்பா அந்த நடிகருடன் மட்டும் நடிக்க வேண்டாம் என்று கூறியுள்ளாராம்.
இதனை அறிந்த நடிகர் எப்படியாவது அந்த நடிகையை தனது படத்தில் நடிக்க வைக்க வேண்டும் என கங்கனம் கட்டிக் கொண்டு அலைகிறாராம். இதன் முதல் படியாக நடிகர் அந்த கவர்ச்சி நடிகையின் அப்பாவிடம் பேசியுள்ளார். ஆனால் இந்த பிளான் எடுபடாமல் போகவே இயக்குனருடன் சேர்ந்து நடிகையிடம் பேசி வருகிறாராம். இதுதான் தற்போது கோடம்பாக்கத்தில் ஹாட் டாப்பிக்காக பேசப்படுகிறது.
இந்திய திரையுலகில் பல முன்னணி நடிகர்களின் படங்களை இயக்கி இயக்குனர் ஒருவர் பிரபலமடைந்தாராம். இவர் இயக்கிய படம் ஒன்று சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து முன்னனி இயக்குனராக திரையுலகையே ஒரு கலக்கு கலக்கினாராம். ஆனால் சமீபகாலமாக இவர் ஆபாச இயக்குனராக மாறிவிட்டாராம். சமீபத்தில் நடிகை ஒருவரின் காலை ஆபாசமாக தொட்டப்படி வீடியோவை பகிர்ந்து அனைவரையும் அதிர்ச்சிகுள்ளாக்கினாராம்.
தற்போது அந்த இயக்குனர் வெளிநாட்டுக்கு சென்றிருக்கிறாராம். அங்கு நிர்வாண நடிகைகளின் போஸ்டர் ஒட்டப்பட்ட இடத்தில் அமர்ந்து கொண்டு இவர் எடுத்த புகைப்படங்களை பலரும் விமர்சித்து பதிவிட்டு வருகிறார்களாம். பலரும் நல்ல இயக்குனர் எதற்காக இப்படி மாறிவிட்டார் என்று யோசித்து வருகின்றார்களாம்.
குறும்படங்கள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான நடிகை அதன் பின்னர் ஒரு சில படங்களில் குறிப்பிட்ட காட்சிகளில் நடிக்க ஒப்பந்தமானாராம். இப்படி கிடைத்த படங்களில் நடித்து கொண்டிருக்கும் போது நடிகையை பிரபல இயக்குனர் ஒருவர் தன் படத்தில் நடிக்க அணுகினாராம். இதனால் படு குஷியான நடிகை அந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டாராம்.
ஆனால், அந்த இயக்குனர் ஒரு காட்சியில் நிர்வாணமாக நடிக்க வேண்டும் என்று ஸ்டிரிக்டாக கூறிவிட்டாராம். இந்த வாய்ப்பை நழுவவிட்டால் வேறு வாய்ப்புகள் கிடைக்காதே என்று நினைத்த நடிகை நிர்வாணமாக நடிப்பதற்கு ஓகே சொன்னாராம். இதுதான் வாய்ப்பு என்று நிர்வாண காட்சியை பலமுறை ரீடேக் எடுத்தாராம் இயக்குனர்.
ஒரு வழியாக படம் வெற்றி பெற்றதும் வாய்ப்புகள் குவியும் என நினைத்த நடிகைக்கு ஒன்றிரண்டு பட வாய்ப்புகள் கிடைத்ததோடி சரி அதன்பின் நடிகை சினிமா பக்கமே வரமுடியாமல் ஆகிவிட்டதாம். இதானல் விரக்தியடைந்த நடிகை சமூக வலைதளத்திலாவது பிரபலமாகலாம் என்று கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறாராம்.
சின்னத்திரையில் குணச்சித்திர வேடங்களில் நடித்த நடிகை ஒரு பெரிய நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானாராம். இந்த வாய்ப்பை பயன்படுத்தி எப்படியாவது வெள்ளித்திரையில் இடம்பிடித்துவிட வேண்டும் என்று நினைத்த நடிகைக்கு ஏமாற்றமே மிஞ்சியதாம்.
காத்திருந்து.. காத்திருந்து கண்கள் பூத்த நடிகை திடீரென கவர்ச்சி அவதாரம் எடுத்தாராம். பெரிய இயக்குனர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் எல்லாம் வாய்ப்புக்காக வளைத்து வளைத்து கவர்ச்சி உடையில் வலம் வந்த நடிகை சமூக வலைதளத்தையும் விட்டு வைக்காமல் கவர்ச்சி புகைப்படங்களை அள்ளி தெளித்தாராம்.
இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலர் என்ன இந்த நடிகை இப்படி பண்றாங்க என்று வசைபாடி வருகிறார்களாம். இதையெல்லாம் கண்டுகொள்ளாத நடிகை நான் செய்வதை தான் செய்வேன் என்று படு கவர்ச்சியாக உலா வருகிறாராம்.
இளம் வயதில் சினிமா துறையில் அறிமுகமான நடிகை தன் கவர்ச்சியாலும், அழகாலும் முன்னணி நாயகர்களுடன் நடித்து பிரபலமானாராம். நடிகையை எப்படியாவது தங்கள் படத்தில் நடிக்க வைத்துவிட வேண்டும் என்று நினைத்த அக்கட இயக்குனர்கள் நான், நீ என்று போட்டிப்போட்டுக் கொண்டு தங்கள் படங்களில் அவரை புக் செய்தார்களாம்.
இதனால் குஷியான நடிகை உச்ச நடிகையாக வலம் வந்தாராம். தற்போது நடிகைக்கு வயதாகிவிடவே இயக்குனர்கள் எல்லாம் நடிகையை கதாநாயகி பதவியிலிருந்து விலக்கி ஒரு ஐட்டம் பாடலுக்கு மட்டும் ஆடுங்கள் என்று கேட்டு வருகிறார்களாம். ஆனால், 50 வயதிற்கு மேற்பட்ட நடிகர்களோ நான் நடித்தால் அந்த நடிகையுடன் தான் நடிப்பேன் என்று அடம்பிடித்து வருகிறார்களாம்.
தனக்கு வாய்ப்பு கிடைக்குமா? கிடைக்காதா? என்று ஏக்கத்தில் இருக்கும் நடிகை சரி படங்களில் தான் வாய்ப்பு கிடைக்கவில்லை வெப் தொடரிலாவது நடிப்போம் என்று முடிவெடுத்து கவர்ச்சியில் இறங்கிவிட்டாராம்.
முன்னணி நடிகை ஒருவர் அவ்வப்போது ஒரு சில படங்களில் நடித்து வந்தாராம். திடீரென பிரபல இயக்குனர் தன் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இந்த நடிகை தான் சரியாக இருப்பார் என்று அவரை புக் செய்தாராம். மிக பிரமாண்டமாக வெளியான இப்படத்தில் நடிகையின் கதாபாத்திரம் பெரிதும் பேசப்படவே பல இயக்குனர்கள் பார்வை நடிகையின் மீது திரும்பியதாம்.
இப்போது பல படங்களில் பிசியாக நடித்து வரும் நடிகையை பெரிய ஹீரோ ஒருவரின் படத்தில் ஹீரோயினாக நடிக்க புக் செய்தார்களாம். ஒப்பந்தம் செய்தது செய்தபடியே இருக்கிறது என்று நடிகையை ஷூட்டிங்கிற்கு வருமாறு இயக்குனர் அழைத்தால் இதோவரேன், அதோவரேன் என்று அலைக்கழித்து வருகிறாராம். இதனால் கடுப்பான இயக்குனர் இந்த நடிகையை வேண்டாம் நம்மோட அந்த நடிகையை புக் செய்யுங்கள் என்று மற்றொரு நடிகையை தட்டி தூக்கிவிட்டாராம்.