search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sunflower"

    • 101 விவசாயிகள் 75 ஆயிரத்து 13 கிலோ சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
    • மொத்தம் ரூ.37லட்சத்து 31ஆயிரத்து 403க்கு வணிகம் நடைபெற்றது.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரம்தோறும் செவ்வாயன்று தேங்காய் பருப்பும், வியாழனன்று சூரியகாந்தி விதையும் ஏலம் நடைபெற்று வருகிறது. இந்த ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை. திருப்பூர், ஈரோடு மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தேங்காய் பருப்பு மற்றும் சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வந்து விற்பனை செய்து செல்கிறார்கள்.

    நேற்று வியாழக்கிழமை 101 விவசாயிகள் கலந்து கொண்டு 75 ஆயிரத்து 13 கிலோ சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் முத்தூர், வெள்ளகோவில், காங்கேயம், ஈரோடு பகுதியைச் சேர்ந்த 9 வியாபாரிகள் கலந்து கொண்டு ஒரு கிலோ சூரியகாந்தி விதை அதிகபட்சமாக ரூ.56.80 க்கும், குறைந்தபட்சம் ரூ.46.44க்கும் கொள்முதல் செய்தனர். நேற்று மொத்தம் ரூ.37லட்சத்து 31ஆயிரத்து 403க்கு வணிகம் நடைபெற்றது. இத்தகவலை வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சி. மகுடேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

    • வடுக்கப்பட்டி கிராமத்தில் சூரியகாந்தி சாகுபடி தீவிரம் அடைந்துள்ளது
    • இந்த பகுதியில் 50 ஏக்கர் பரப்பளவில் சூரியகாந்தி சாகுபடி நடந்து வருகிறது.

    கரூர்:

    கிருஷ்ணராயபுரம் அடுத்த வடுக்கப்பட்டி கிராமத்தில் சூரியகாந்தி சாகுபடி நடந்து வருகிறது. சூரியகாந்தி செடிகளுக்கு தேவையான தண்ணீர், கிணற்று நீர் பாசன முறையில் பாய்ச்சப்படுகிறது. தற்போது செடிகள் வளர்ந்து பூக்கள் பூத்து வருகின்றன. மேலும் கோடை மழை பெய்து வருவதால், பூக்களில் விதைகள் பிடித்து வருகிறது. சூரியகாந்தி செடிகள் அறுவடை பணி, சில வாரங்களில் துவங்கவுள்ளது. மேலும் சூரியகாந்தி விதைகள் விலை குறைந்து வருவதால், விவசாயிகளுக்கு ஓரளவு மட்டுமே வருமானம் கிடைத்து வருகிறது. இந்த பகுதியில் 50 ஏக்கர் பரப்பளவில் சூரியகாந்தி சாகுபடி நடந்து வருகிறது.


    • விவசாயிகள் 235 மூட்டைகள் சூரியகாந்தி விதைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.
    • ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ. 8 லட்சம் என்று தெரிவிக்கப்பட்டது.

    மூலனூர்:

    வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 8 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை வியாழக்கிழமை நடைபெற்றது.

    இந்த வார ஏலத்துக்கு திண்டுக்கல், இடையகோட்டை, வெள்ளாளபட்டி, போத்துராவுத்தன்பட்டி, மஞ்சக்காம்பட்டி, கம்பளியம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 10 விவசாயிகள் தங்களுடைய 235 மூட்டைகள் சூரியகாந்தி விதைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். இவற்றின் எடை 11,603 கிலோ.

    முத்தூா், காரமடை, சித்தோடு, பூனாட்சி, காங்கயத்தில் இருந்து 7 வணிகா்கள் வாங்குவதற்காக வந்திருந்தனா். விலை கிலோ ரூ.64.44 முதல் ரூ. 69.99 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ. 66.59. கடந்த வார சராசரி விலை ரூ.70.02. ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ. 8 லட்சம் அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டதாக விற்பனைக் கூடக் கண்காணிப்பாளா் சி.மகுடீஸ்வரன் தெரிவித்தாா்.

    திருப்பூர் மாவட்டம் மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி விற்பனை மறைமுக ஏலம் நடைபெற்றது. இதில் பல கலந்து கொண்டனர். வணிகர்களால் அதிகபட்ச விலையாக குவிண்டால் ஒன்றிற்கு ரூ.9,999 -க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.7,150 -க்கும், சராசரி விலையாக ரூ .8,950 -க்கும் விற்பனையானது.பருத்தியின் மொத்த அளவு 3,039 மூட்டைகள், குவிண்டால் 1023.04. இதன் மதிப்பு ரூ.90 லட்சத்து 97 ஆயிரத்து 133. இந்த மறைமுக ஏலத்தில் 14 வியாபாரிகள் பங்கேற்றனர். இந்த தகவலை திருப்பூர் விற்பனைக்குழு முதுநிலை செயலாளர் ஆர்.பாலசந்திரன் தெரிவித்தார். ஏலத்திற்கான ஏற்பாடுகளை கண்காணிப்பாளர் சிவக்குமார் செய்திருந்தார்.

    • விவசாயிகள் சூரியகாந்தி சாகுபடியை படிப்படியாக குறைத்தனர்.
    • கிளி, மயில் உள்ளிட்ட பறவைகள் சூரியகாந்திக்கு அதிக சேதம் விளைவிக்கின்றன.

    திருப்பூர்:

    வெங்காயம், தக்காளி, கத்தரி உள்ளிட்ட காய்கறி பயிர்களுக்கு கடந்த ஓராண்டுக்கு மேலாக விவசாயிகளுக்கு, கட்டுப்படியான விலை கிடைக்கவில்லை.காய்கறி பயிர் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு தொடர் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. விவசாயிகள் பாதுகாப்பான மாற்று பயிர் சாகுபடிக்கு மாற துவங்கியுள்ளனர்.முன்பு திருப்பூர் மாவட்டத்தில் கணிசமான பரப்பளவில் சூரியகாந்தி சாகுபடி செய்யப்பட்டு வந்தது.

    காலநிலை மாற்றம், விலை வீழ்ச்சி போன்ற பிரச்னைகள்தலை தூக்கியதால் விவசாயிகள் சூரியகாந்தி சாகுபடியை படிப்படியாக குறைத்தனர்.வெள்ளகோவில், மூலனூர் பகுதியில் மட்டும் சிறிய பரப்பில் சூரியகாந்தி சாகுபடி செய்யப்பட்டு வந்தது. தற்போது சூரியகாந்தி ஒரு கிலோ 60 ரூபாய்க்கு விலை போகிறது. நல்ல விலை கிடைப்பதால் விவசாயிகள் சூரியகாந்தியின் பக்கம் கவனம் செலுத்த துவக்கியுள்ளனர். விவசாயிகள் கூறுகையில், காலநிலை மாற்றத்தால் பருவம் தவறிப் பெய்யும் மழையால் மகரந்த சேர்க்கை ஏற்படாமல் விளைச்சல் கிடைப்பதில்லை. சூரியகாந்திக்கு கார்த்திகை மற்றும் வைகாசி பட்டம் சிறந்தது.அறுவடை நேரத்தில் நல்ல வெயில் கிடைக்க வேண்டும். உயிர்வேலி அழிப்பு, காடழிப்பு போன்றவற்றால் பறவைகளுக்கு உணவு தட்டுப்பாடு நிலவுகிறது.

    கிளி, மயில் உள்ளிட்ட பறவைகள் சூரியகாந்திக்கு அதிக சேதம் விளைவிக்கின்றன. சாகுபடி அதிகரிக்கும் போது சேதம் குறையும். பருவநிலை மாற்றம் சூரியகாந்தி சாகுபடியை தீர்மானிக்கிறது. இதற்கு அரசு தான் தீர்வு காண வேண்டும் என்றனர்.

    • 1லட்சத்து 10 ஆயிரத்து 542 கிலோ சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
    • 187 விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரம்தோறும் செவ்வாயன்று தேங்காய் பருப்பு வியாழனன்று சூரியகாந்தி விதை ஏலம் நடைபெறும்.இந்த ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை. திருப்பூர், ஈரோடு மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தேங்காய் பருப்பு மற்றும் சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.

    நேற்று வியாழக்கிழமை 187 விவசாயிகள் கலந்து கொண்டு 1லட்சத்து 10 ஆயிரத்து 542 கிலோ சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் முத்தூர், வெள்ளகோவில், காங்கேயம், ஈரோடு பகுதியைச் சேர்ந்த 13 வியாபாரிகள் கலந்து கொண்டு ஒரு கிலோ சூரியகாந்தி விதை அதிகபட்சமாக ரூ.71.99க்கும், குறைந்தபட்சம் ரூ.58.69க்கும் கொள்முதல் செய்தனர், நேற்று மொத்தம் ரூ.74லட்சத்து 97ஆயிரத்து 597க்கு வணிகம் நடைபெற்றது.

    விவசாயிகள் சூரியகாந்தி விதைகளை புதன்கிழமை காலை 6 மணி முதல் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கொண்டு வரலாம் என வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சி. மகுடேஸ்வரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

    • 25 விவசாயிகள் கலந்து கொண்டு 10 ஆயிரத்து 260 கிலோ சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
    • விவசாயிகள் சூரியகாந்தி விதைகளை புதன்கிழமை காலை 6 மணி முதல் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கொண்டு வரலாம்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரம்தோறும் செவ்வாய், வியாழன் ஆகிய இரு தினங்களில் தேங்காய் பருப்பும், சூரியகாந்தி விதையும் ஏலம் நடைபெற்று வருகிறது.

    நேற்று ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு 25 விவசாயிகள் கலந்து கொண்டு 10 ஆயிரத்து 260 கிலோ சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் முத்தூர், வெள்ளகோவில், காங்கேயம், ஈரோடு பகுதியைச் சேர்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டு ஒரு கிலோ சூரியகாந்தி விதை அதிகபட்சமாக ரூ.72.09க்கும், குறைந்தபட்சம் ரூ.55.16க்கும் கொள்முதல் செய்தனர். நேற்று மொத்தம் ரூ.6லட்சத்து 55ஆயிரத்து22 க்கு வணிகம் நடைபெற்றது.

    விவசாயிகள் சூரியகாந்தி விதைகளை புதன்கிழமை காலை 6 மணி முதல் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கொண்டு வரலாம் என வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சி. மகுடேஸ்வரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

    • ரூ. 10 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை நடைபெற்றது.
    • 290 மூட்டைகள் சூரியகாந்தி விதைகளை விற்பனை செய்ய கொண்டு வந்திருந்தனா்.

    வெள்ளக்கோவில் :

    வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 10 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த வார ஏலத்துக்கு களத்தூா், தொடாவூா், எரியோடு, பட்டுத்துறை, டி. கூடலூா் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 22 விவசாயிகள் தங்களுடைய 290 மூட்டைகள் சூரியகாந்தி விதைகளை விற்பனை செய்ய கொண்டு வந்திருந்தனா். இவற்றின் எடை 14,124 கிலோ. ஈரோடு, முத்தூா், காங்கயத்தில் இருந்து 3 வணிகா்கள் விதைகளை வாங்குவதற்காக வந்திருந்தனா். விலை கிலோ ரூ.62.75 முதல் ரூ. 77.19 வரை விற்பனையானது. சராசரி விலை கிலோ ரூ. 73.89. கடந்த வார சராசரி விலை ரூ. 70.79. ஒட்டு மொத்த விற்பனைத் தொகை ரூ. 10.06 லட்சம் அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டதாக விற்பனைக் கூடக் கண்காணிப்பாளா் சி.மகுடீஸ்வரன் தெரிவித்தாா்.

    • இரு பட்டங்களில் மானாவாரியில் சாகுபடி செய்யலாம்.
    • மழைக்காலத்தில் அறுவடை மேற்கொள்வது மற்றும் பூக்களைக் காய வைப்பது கடினமான பணியாகும்.

    உடுமலை,

    உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில் தென்னை, மக்காச்சோளம் மற்றும் காய்கறி பயிர்கள் சாகுபடி செய்வதில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். எண்ணெய் வித்துப் பயிர்களான நிலக்கடலை, எள், சூரியகாந்தி ஆகியற்றை சாகுபடி செய்வதில் விவசாயிகளின் ஆர்வம் குறைந்து வருகிறது.கூலி ஆட்கள் பற்றாக்குறை, போதிய விலையின்மை போன்றவை இதற்கு காரணமாகக் கூறப்படுகிறது. இந்தநிலையில் உடுமலை பகுதியில் ஒருசில இடங்களில் சூரியகாந்தி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    சூரியகாந்தி சாகுபடியை பொறுத்தவரை ஆடிப் பட்டம், கார்த்திகை பட்டம் ஆகிய இரு பட்டங்களில் மானாவாரியில் சாகுபடி செய்யலாம். இதுதவிர இறவை பாசனத்தில் மார்கழி பட்டம் மற்றும் சித்திரை பட்டங்களில் சாகுபடி மேற்கொள்ளலாம். அந்தவகையில் ஆண்டுக்கு 4 பட்டங்களில் சூரியகாந்தி சாகுபடி மேற்கொள்ள முடியும். அதேநேரத்தில் பட்டத்துக்கு தகுந்தாற் போல விதைகளை தேர்வு செய்வது அவசியமாகும். தற்போது வீரிய ஒட்டு ரகங்கள் பல அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால் அவை நோய் எதிர்ப்புத் திறன் கொண்டதாகவும், அதிக மகசூல் தரக்கூடியவையாகவும் உள்ளன. ஆனாலும் விதைப்புக்கு முன் விதை நேர்த்தி செய்வது நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கவும், முளைப்புத் திறனை மேம்படுத்தவும் உதவும்.

    மேலும் ஒருங்கிணைந்த ஊட்டச் சத்து மேலாண்மையில் உயிர் உரமாக தழை, மணி, சாம்பல் சத்துக்களை தேவையான அளவில் வழங்குகிறோம். சூரியகாந்தி பூக்களை பொறுத்தவரை மகரந்த சேர்க்கை மிக முக்கிய இடம் பிடிக்கிறது. நன்றாக மணிகள் பிடிப்பதற்கு மகரந்த சேர்க்கை உதவுகிறது.தற்போது தேனீக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதால் நாமே செயற்கையாக மகரந்த சேர்க்கை செய்யலாம்.அதற்கு பூக்கொண்டைகளை ஒன்றோடொன்று லேசாக தேய்த்து விடுவது நல்ல பலன் தரும். சூரியகாந்தியைப் பொறுத்தவரை 80 முதல் 90 நாட்களில் அறுவடைக்குத் தயாராகி விடும். ஆனால் மணிகள் முற்றும் தருணத்தில் கிளிகளிடமிருந்து பாதுகாப்பது மிகப்பெரிய சவாலாக உள்ளது.

    கிளிகளுக்கு மிகவும் பிடித்த உணவாக சூரியகாந்தி விதைகள் உள்ளது. எனவே காலை மற்றும் மாலை வேளைகளில் கூட்டம் கூட்டமாக கிளிகள் படையெடுக்கும்.அவற்றை தட்டுகள் மற்றும் தகரங்களில் தட்டி ஓசையெழுப்பி விரட்டுவோம்.மேலும் தற்போது அறுவடைக்குப் போதிய ஆட்கள் கிடைக்காததால் எந்திரங்கள் மூலமே அறுவடை மேற்கொள்ள வேண்டியதுள்ளது.ஒரு ஏக்கருக்கு 750 கிலோ முதல் 900 கிலோ வரை மகசூல் கிடைக்கும்.தற்போது செய்துள்ள சாகுபடி இன்னும் 20 நாட்களில் அறுவடைக்குத் தயாராகி விடும்.

    மழைக்காலத்தில் அறுவடை மேற்கொள்வது மற்றும் பூக்களைக் காய வைப்பது கடினமான பணியாகும்.சித்திரைப் பட்டத்தைத் தவற விட்டு சற்று தாமதமாக விதைப்பு செய்ததால் மழையால் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    ஏனென்றால் பூக்கள் நன்கு உலர்ந்த பிறகு விதைகளைப் பிரித்தெடுத்து அவற்றை நன்கு உலர்த்தி, சுத்தம் செய்து அதன்பிறகே விற்பனைக்குத் தயார் செய்ய முடியும்.ஈரப்பதம் அதிகமாக இருந்தால் விதைகளில் பூஞ்சாணம் உற்பத்தியாகி இழப்பை ஏற்படுத்தி விடும் என்றனர்.

    • 22 விவசாயிகள் கலந்து கொண்டு 9 ஆயிரத்து 472கிலோ சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
    • மொத்தம் ரூ.6லட்சத்து 71ஆயிரத்து 181 க்கு வணிகம் நடைபெற்றது.

    வெள்ளகோவில்,

    வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரம்தோறும் செவ்வாயன்று தேங்காய் பருப்பு வியாழனன்று சூரியகாந்தி விதை ஏலம் நடைபெறும். இந்த ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை. திருப்பூர், ஈரோடு மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தேங்காய் பருப்பு மற்றும் சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.

    நேற்று வியாழக்கிழமை 22 விவசாயிகள் கலந்து கொண்டு 9 ஆயிரத்து 472கிலோ சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் முத்தூர், வெள்ளகோவில், காங்கேயம், ஈரோடு பகுதியைச் சேர்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டு ஒரு கிலோ சூரியகாந்தி விதை அதிகபட்சமாக ரூ.75.49க்கும், குறைந்தபட்சம் ரூ.63.49க்கும் கொள்முதல் செய்தனர். நேற்று மொத்தம் ரூ.6லட்சத்து 71ஆயிரத்து 181 க்கு வணிகம் நடைபெற்றது.

    விவசாயிகள் சூரியகாந்தி விதைகளை புதன்கிழமை காலை 6 மணி முதல் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கொண்டு வரலாம் என வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சி. மகுடேஸ்வரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

    ×