என் மலர்

  நீங்கள் தேடியது "Seed"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சான்று பெற்ற விதை நெல்லை பயன்படுத்தினால் நல்ல தரமான நாற்றுகள் கிடைக்கும்
  • இருப்புபதிவேடு, கொள்முதல் ரசீது ஆகியவற்றையும் விற்பனையாளர்கள் வைத்திருக்க வேண்டும்.

  அரியலூர்,

  சான்று பெற்ற விதை நெல்லை பயன்படுத்தினால் நல்ல தரமான வாளிப்பான நாற்றுகள் கிடைக்கும் என்று திருச்சி விதை ஆய்வு துணை இயக்குநர் கோவிந்தராசு தெரிவித்துள்ளார்.

  இதுகுறித்து அவர் தெரிவித்தது: அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் தற்போது நாற்றுவிடும் பணி நடைபெற்று வருகிறது. விவசாயிகள் தங்களுக்கு தேவையான விதை நெல்லை வாங்கும் போது அரசினால் விதை விற்பனை உரிமம் வழங்கப்பட்ட விதை விற்பனை நிலையங்களில் மட்டுமே வாங்க வேண்டும்.

  விவசாயிகள் சான்று பெற்ற விதைநெல்லை பயன்படுத்தினால் நல்ல தரமான வாளிப்பான நாற்றுக்ள கிடைக்கும் . பயிர் எண்ணிக்கை பராமரிக்கப்படும். பூச்சி நோய் தாக்குதல் குறையும். ஒரே நேரத்தில் அறுவடைக்கு வரும். நல்ல மகசூல் கிடைக்கும். விவசாயிகள் உண்மை நிலை விதைகளை வாங்கும் போது அது நம் பகுதிக்கு, நம் பருவத்திற்கு ஏற்றதா என்று பார்த்து வாங்கவேண்டும். அவசியம் விற்பனையாளரிடம் இருந்து ரசீது கேட்டுப் பெறவேண்டும். ரசீதில் காலாவதிநாள், லாட் நம்பர் ஆகியவை குறிப்பிடப்பட்டிருக்கிறதா என்றுபார்க்க வேண்டும். விற்பனை ரசீதை அறுவடை முடியும் வரைபத்திரமாக வைத்திருக்க வேண்டும்.

  விதைவிற்பனை யாளர்கள் வெளிமாநில நெல் ரகங்களை விற்பனை செய்யும் போது ஊஹழ்ம் ஐஐ பத்திரமாக வைத்திருக்க வேண்டும். அறிவிக்கை செய்யபடாத தனியார் உண்மை நிலை விதைகளை விற்பனை செய்யம் போது பதிவுசான்றிதழ் , முளைப்புதிறன் சான்று பத்திரமாக வைத்திருக்க வேண்டும்.

  இருப்புபதிவேடு, கொள்முதல் ரசீது ஆகியவற்றையும் விற்பனையாளர்கள் வைத்திருக்க வேண்டும். இவைகள் ஆய்வின் போது இல்லாவிட்டால் விதைச் சட்டபடி விதை விற்பனையாளர்கள் மீதுநடவடி க்கைஎடுக்கப்படும்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தோட்டக்கலை மற்றும் மலைபயிர்கள் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
  • 30 ஆயிரம் பனை விதைகளை ஒரே நேரத்தில் விதைப்பு செய்யும் நிகழ்ச்சி

  முத்துப்பேட்டை:

  முத்துப்பேட்டை அடுத்த ஓவரூர் கிராமத்தில் தோட்டக்கலை மற்றும் மலைபயிர்கள் துறை சார்பில் பனை விதை நடும் விழா நடைபெற்றது. விழாவில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் மனோகரன் முன்னிலை வகித்தார்.

  முன்னதாக ஊராட்சி தலைவர் கணேசன் அனைவரையும் வரவேற்றார்.

  இதில் தோட்டக்கலை மற்றும் மலைபயிர்கள் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 30 ஆயிரம் பனை விதைகளை ஒரே நேரத்தில் விதைப்பு செய்யும் நிகழ்ச்சியை மாரிமுத்து எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

  இதில் வட்டார தோட்ட க்கலை உதவி இயக்குனர் இளவரசன் திட்டத்தை பற்றி விளக்கி கூறினார்.

  நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் முருகையன், ஒன்றிய கவுன்சிலர் ராஜா, பாசன கமிட்டி செயலாளர் காளிதாஸ், ஊராட்சி துணை தலைவர் ரமேஷ், வட்டார தோட்டக்கலை அலுவலர் சூர்யா, உதவி தோட்டக்கலை அலுவலர்கள் இளங்கோவன், புலவேந்திரன், கலியமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • வேலாயுதம் பாைளயம் அருகே 10 ஏக்கர் நிலப்பரப்பில் பனை விதை நடவு செய்த தொழிலதிபர்
  • தென்னையைவிட லாபம் கிடைக்கும் என்கிறார்

  வேலாயுதம்பாளையம்,  

  பூலோகத்தின் கற்பகத்தரு என்று போற்றப்படுவது பனைமரம். இம்மரம் சங்க காலத்தில் இருந்து தமிழ ர்களின் வாழ்க்கையோடு இரண்டற கலந்திருந்தது. இதன் வேர் முதல் நுனி வரை அனைத்து பாகங்களு ம் மனிதர்களுக்கு மட்டும ல்லாமல் சிறு உயிரின ங்களுக்கும் வாழ்விடமாக உள்ளது.

  மனித வாழ்வுக்கு தேவையான

  இதன் வேர் பகுதி விறகா கவும், சேவு நிறைந்த தண்டுப் பகுதி வீடு கட்ட சட்டங்களாகவும், அதன் மட்டையிலிருந்து கயிறு தயாரிக்க பயன்படும் நாரும், ஓலை கூரை வேயவும், தடுப்பு கட்டவும், வறட்சி காலத்தில் கால்நடைகளுக்கு தீவனமாகவும் பயன்படு கிறது.

  மேலும் கூடை, விசிறி, பாய், தொப்பி போன்ற பலவித கலை பொருட்கள் தயாரி க்கப்படுகிறது.

  அதேபோல் பனை மரம் மருத்துவ குணம் நிறைந்த பதநீர், கள், உடலுக்கு குளி ர்ச்சி தரக்கூடிய கூடிய நொங்கு, பனம்பழம், பனங்கொட்டை, நார்சத்து மிகுந்த பனங்கிழங்கு ஆகிய வற்றை தருவதுடன் பதநீரில் இருந்து பனைவெல்லம், கற்கண்டு ஆகியவையும் தயாரிக்கிறார்கள்.

  இவ்வாறு பனை மரமா னது மனித வாழ்வுக்கு தேவையானவைகளில் பெரும்பாலானவற்றை தந்தது. இதனால் அவற்றை நம் முன்னோர்கள் அனை த்து இடங்களிலும் நடவு செய்து பாதுகாத்தனர்.

  காலச்சக்கரத்தில் கற்பக தரு பல இடங்களில் காணா மல் போய்விட்டது. இன்று கிராமங்களில் அங்கொ ன்றும் இங்கொன்றுமாக ஒரு சில பனைமரங்களே உள்ளன.

  10 ஏக்கர்

  இந்நிலையில் பனை மரத்தை அழிவில் இருந்து காக்க வேண்டும் என்பத ற்காக அரசும், சில தனியார் தொண்டு நிறுவனங்களும் பனை மரம் வளர்ப்பு குறித்த விழிப்புணர்வை விவசாயிகளிடம் ஏற்படுத்தி வருகின்றன. அதனால் ஒரு சிலர் பனை விதைகளை நடவு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.

  அந்த வகையில் கரூர் மாவட்டம் தோட்டக்குறிச்சி அய்யம்பாளையத்தை சேர்ந்த அன்புநாதன் பனை மரம் நடவு செய்ய முன்வ ந்தார்.

  தொழிலதிபரும் விவசா யியுமான இவருக்கு சேங்க ல்மலை அருகே 10 ஏக்கர் தரிசு நிலம் உள்ளது.

  விலை அதிகரிப்பு

  இதில் மண்மங்கலத்தை சேர்ந்த பனைமர ஆர்வலர் ராமசாமி மற்றும் பசுமை தளவை இயக்க செயலாளர் அரவிந்தன் ஆகியோர் ஒத்துழைப்புடன் 4ஆயிரம் பனை விதைகளை நடவு செய்துள்ளார்.

  இதுகுறித்து அன்புநாதன் கூறும் போது,

  இன்று தென்னையை விட அதிகம் லாபம் தரக்கூ டியது பனைமரம். தென்னை ஏக்கருக்கு 70 மரம்தான் வைக்க முடியும். ஆனால் பனை 400மரம் வைக்கலாம்.

  ஒரு தேங்காய் ரூ.10 வரை தான் விற்பனை ஆகிறது. ஆனால் நொங்கு ஒரு சுளை ரூ.10வீதம் ஒரு காய் ரூ.30 முதல் 50வரை விற்பனை ஆகிறது.

  அதேபோல் பதநீர், கரு ப்பட்டி ஆகியவற்றின் தேவையும், விலையும் நாளு க்கு நாள் அதிகரித்து வருகி றது.

  மேலும் தென்னை மரத்தி ற்கு தொடர்ந்து நீர் பாய்ச்சு வதுடன் உழவு, குப்பை, உரம் என்று தொடர்ந்து பராமரிப்பு செலவு செய்ய வேண்டும்.

  ஒரு வருடம் கடும் வறட்சி வந்தாலும் பல வருடங்கள் பாதுகாத்த தென்னந்தோப்பு முற்றிலும் அழிந்து விடும். ஆனால் பனை மரம் மானாவாரி பயிர், வறட்சி, வெள்ளம் என்று எந்த சுழலையும் தாங்கி வளரக்கூடியது. பராமரிப்பு செலவு எதுவும் இல்லை. லாப நோக்கில் பார்த்தால் தென்னை மரத்தை விட இன்று பனை மரமே சிற ந்தது. நமது பாரம்ப ரியத்தி ன் அடையாளமான பனை மரம் சுற்றுசூழலை பாதுகா ப்பது டன் நிலத்தடி நீரையும் பாதுகாக்கிறது என்றார்.

  பனை விதை நடவு செய்த விவசாயி அன்புநா தனை இயற்கை ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பாரா ட்டி வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஆண்டுதோறும் இரு பிரிவுகளாக தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
  • கீழ்பவானி பாசன விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர்.

  காங்கயம் :

  முத்தூர், நத்தக்காடையூர் பகுதிகளில் சாக்குகளில் வைத்து விற்பனை செய்யும் விதைகளை விவசாயிகள் வாங்கக்கூடாது என்று ஈரோடு மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குனர் அறிவுறுத்தி உள்ளார். இது குறித்து ஈரோடு மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குனர் பி.சுமதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்ட கீழ்பவானி பாசன விவசாயிகளின் வாழ்வாதாரமாக உள்ள ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து கால்வாய் வழியாக ஆண்டுதோறும் இரு பிரிவுகளாக ஜனவரி, ஆகஸ்டு் மாதங்களில் எண்ணெய் வித்து மற்றும் நஞ்சை சம்பா நெல் பயிர் சாகுபடிக்கு தொடர், முறை தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. கீழ்பவானி பாசன விவசாயிகள் தற்போது கிணறுகள், ஆழ்குழாய் கிணறுகள் ஆகியவற்றின் நீரினை பயன்படுத்தி பயிறு வகைகள், சோளம் வகைகள், காய்கறிகள் சாகுபடி செய்து பயனடைந்து வருகின்றனர்.

  தமிழ்நாடு அரசு, விதை ஆய்வு துறை மூலம் முறையாக அனுமதி பெற்று பல்வேறு விதைகளை விற்பனை செய்து வரும் விதை விற்பனை நிலையங்கள் கீழ்கண்ட விதிமுறைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும். இதன்படி அனைத்து வகையான விதைகளை விற்பனை செய்யும் நிறுவனங்களின் உரிமையாளர்கள் தங்கள் விற்பனை நிலையத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ள விதைகளுக்கு முறையான இருப்பு பதிவேடு பராமரிக்க வேண்டும். விற்பனை நிலையங்கள் கொள்முதல் செய்யப்பட்ட விதைகள் பட்டியல், விற்பனை பட்டியல், முளைப்பு திறன் சான்று, பதிவு சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை முறையாக பராமரிக்க வேண்டும்.

  விதை விற்பனை நிலையங்கள் முன்பு கட்டாயம் தகவல் பலகை வைத்து அனைத்து விதைகளின் பல்வேறு ரகங்கள், இருப்பு நிலை, விலை பட்டியல் விவரம் ஆகியவற்றை தெளிவாக எழுதி வைக்க வேண்டும். அனைத்து விதைகளுக்கும் சரியான விலை பட்டியல் வழங்க வேண்டும். விவசாயிகள் விதைகளை விதை விற்பனை உரிமம் பெற்ற விற்பனை நிலையங்களில் வாங்கும் போது தவறாமல் அதற்கான விற்பனை பட்டியலை கேட்டு வாங்க வேண்டும். இதில் வாங்கும் விதை குவியலின் காலாவதி எண், விற்பனை செய்த நாள், வாங்குபவர் மற்றும் விற்பனை செய்பவரின் கையொப்பம் போன்ற விவரங்கள் சரியாக உள்ளதா என்று சரி பார்த்து வாங்க வேண்டும். இதுபோன்ற அரசு விதிமுறைகளை இப்பகுதி விதை விற்பனை நிலையஙகள் தவறாமல் கடைபிடிக்க வேண்டும்.

  விதை விற்பனை உரிமம் பெறாத தானிய மண்டிகளில் விவசாயிகள் விதைகளை வாங்க வேண்டாம். சில தானிய மண்டிகளில் திறந்த நிலையில் சாக்குகளில் வைத்து விற்பனை செய்யும் விதைகளை விவசாயிகள் கட்டாயம் வாங்கக்கூடாது. இப்பகுதிகளில் உரிமம் பெறாமல் விதைகள் மற்றும் காய்கறி நாற்றுகள் விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகும். இவ்வாறு உரிமம் இல்லாமல் விதைகள் மற்றும் நாற்றுகள் விற்பனை செய்யும் நிறுவனத்தின் மீது ஈரோடு மாவட்ட விதை ஆய்வு துறை மூலம் விதைகள் சட்டம் 1966-ன் படி கடும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நெல் விதைக்கு பாதுகாப்பான ஈரப்பதம் என்பது 13 சதவீதமாகும்.
  • மதியம் 12 மணி முதல் மாலை 3 மணிவரை, விதையை உலர வைக்க கூடாது.

  உடுமலை :

  நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் மற்றும் உற்பத்தியாளர்கள் விதையை உலர வைப்பதில் தனி கவனம் செலுத்த வேண்டும் என கோவை மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் தெரிவித்தார். இது குறித்து கோவை மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் அறிக்கை வருமாறு:- ஆனைமலை தாலுகாவில் நெல் ரகங்களான கோ 51, ஏடிடீ -37, ஏடிடீ - 39, ஏடிடீ (ஆர்) 45, ஆர்.என்.ஆர்., 15048 போன்றவை விதைக்காக அதிகளவில் பயிரிடப்பட்டது. தற்போது, அறுவடை முடியும் நிலையில் உள்ளது. அறுவடை சமயத்தில் விதைகளின் ஈரப்பதம் அதிக அளவில் இருக்கும். அறுவடை செய்த விதைகளை சரியான முறையில் உலர வைப்பது அவசியம்.

  விதை ஒரு உயிருள்ள இடுபொருளாகும். விதையின் ஈரப்பதத்தை, பாதுகாப்பான ஈரப்பதம் வரும் வரை உலர வைப்பதாகும். நெல் விதைக்கு பாதுகாப்பான ஈரப்பதம் என்பது 13 சதவீதமாகும். விதையை உலர வைப்பது, விதை உயிருடனும், நல்ல வீரியத்துடணும் சேமிக்க உதவும்.இல்லையேல், பூஞ்சாணங்களினாலும், நுண்ணுயிர் தாக்குதலினாலும் விதைகள் பாதிக்கப்பட்டு, முளைப்பு த்திறன் பெருமளவில் பாதிக்கப்படும். அறுவடை முடிந்தவுடன் விதையை உலர வைத்து பாதுகாப்பான ஈரப்பதத்தில் சேமிக்க வேண்டும். ஓரிரு மாதம் கழித்து உலர வைக்கும் போது அறுவடை சூட்டுடன் சேமித்து வைக்கும் போது விதைகள் வெட்டியாகி அடைகளாக மாறியிருக்கும். மேலும் நிறம் மங்கி முளைப்புத்திறனும் குறைந்து விடும்.

  விதையை உலர வைக்கும் போது சில முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்வது அவசியம். ஈரமான சுகாதாரமற்ற களத்தில் விதையை உலர வைக்க கூடாது. களத்தில் ஒரே வயலில் இருந்து பெறப்பட்ட ஒரே பயிர், ஒரே ரகத்தைத்தான் ஒரே நேரத்தில் கையாள வேண்டும்.அதாவது மதியம் 12 மணி முதல் மாலை 3 மணிவரை, விதையை உலர வைக்க கூடாது. உச்சி வெயிலில் புற ஊதாக்கதிர்களின் தாக்கம் அதிகமாக இருக்கும். அது விதைகளின் முளைப்பு த்திறனை பாதிக்கும். விதையை அதிகமாகவும் உலர வைக்க கூடாது.ஏனெனில் அதிகமாக உலரும்போது விதை மண்ணில் வெடிப்பு ஏற்பட்டு கருச்சிதைவு ஏற்பட்டு முளைப்புத்திறன் பாதிக்கும்.

  உளுந்து, பாசிப்பயிறு போன்ற பயறு வகை பயிர்களின் விதையை 9 சதவீத ஈரப்பதத்திற்கும், சோளம், கம்பு போன்ற பயிர்களின் விதையை 12 சதவீத ஈரப்பதத்திற்கும் உலர வைக்க வேண்டும்.எனவே விவசாயிகள் மற்றும் உற்பத்தியாளர்கள் விதையை உலர வைப்பதில் தனி அக்கறை செலுத்த வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ரூ.1.59 கோடி மதிப்பிலான விதை கடலை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
  • அதிகாரிகள் ஆய்விற்குப்பின் நடவடிக்கை

  புதுக்கோட்டை:

  புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்போது பெய்து வரும் மழையைப் பயன்படுத்தி கடலை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகி ன்றனர்.

  இதையடுத்து, ஆலங்குடியில் விதைக்கடலை வியாபாரம் களைகட்டி உள்ளது. அதே வேளையில், தரமில்லாத விதைக் கடலை விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து, விதை ஆய்வு துணை ஆய்வாளர் விநாயகமூர்த்தி தலைமையிலான அலுவலர்கள் நேற்று ஆலங்குடியில் விதைக்கடலை விற்பனை செய்யும் கடைக ளுக்குச் சென்று ஆய்வு செய்தனர்.

  அப்போது, ஆந்திரா, குஜராத் போன்ற வெளி மாநிலங்களில் இருந் து கொண்டு வந்து, சான்று அட்டைகள் இல்லாத, தரமில்லாத கடலை களை விதைக் கடலையாக விற்பனை செய்வது தெரியவந்தது.

  இதையடுத்து, விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ரூ.1.59 கோடி மதி ப்புள்ள 156 டன் கடலைகளை விற்பனை செய்ய தடை விதித்தும், சா ன்று பெற்று விற்பனை செய்யுமாறும் விற்பனையாளர்களுக்கு அலு வலர்கள் அறிவுறுத்தினர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நெல் சாகுபடியில் சுமார் 110 நாட்கள் முதல் 150 நாட்களுக்குள் விளைச்சல் தரும்.
  • விதை நெல் விற்பனை செய்பவர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து விதை ஆய்வு துணை இயக்குனர் அறிக்கை விடுத்துள்ளார்.

  மூலனூர் :

  திருப்பூர் மாவட்டம் மூலனூர், கருப்பன் வலசு, தலையூர், எல்லப்பாளையம் பெரமியம், ஆத்துக்கால்புதூர், காளிபாளையம், வீராச்சிமங்கலம், படுகை தாராபுரம் ஆகிய அமராவதி ஆற்றுப் படுகைகளில் உள்ள சுற்று வட்டார பகுதிகளில் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இது முழுக்க முழுக்க அமராவதி அணையின் நீர் பாசனத்தை நம்பியே விவசாயம் செய்யப்படுகிறது. தற்போது இந்த பகுதியில் நடைபெறும் நெல் சாகுபடியில் சுமார் 110 நாட்கள் முதல் 150 நாட்களுக்குள் விளைச்சல் தரும் நெல் ரகங்களான ஏடிடி 45, ஏடிடி37, சாவித்திரி போன்ற நெல் ரகங்கள் பயிரிடப்படுகின்றன.

  இதில் குறைந்த நாட்களில் மகசூல் தரும் இதில் ஏ.டி.டி. 45 ரக நெற்பயிர்களை அதிக அளவில் நடப்படுகிறது. இந்த ரக நெல் ஒரு ஏக்கருக்கு 50 முதல் 60 மூட்டைகள் வரை மகசூல் கிடைப்பதால் இந்த ரக நெல் பயிரை இப்பகுதி விவசாயிகள் நடவு செய்ய ஆர்வம் காட்டி வருகிறார்கள். தற்போது இந்த பகுதிகளில் நாற்றங்கால் அமைக்கும் பணி சுமார் 90 சதவீத நடவு பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது.

  இதுபற்றி அப்பகுதி விவசாயி ஒருவர் கூறுகையில், வேலைக்கு ஆட்கள் பற்றாக்குறையால் பெரும் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இப்பகுதி மக்கள் அதிக அளவில் திருப்பூர் பனியன் கம்பெனிகளில் மற்றும் நூல் மில்களுக்கு சென்று விடுவதால் நெல் நடவு செய்ய ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. விவசாயம் சார்ந்த வேலை செய்ய யாரும் முன்வருவதில்லை.

  இதன் காரணமாக தற்போது தர்மபுரி, சேலம், ஈரோடு போன்ற வெளியூர்களிலிருந்து ஏஜெண்டுகள் மூலம் ஆட்கள் வரவழைக்கப்பட்டு வேலை செய்ய வேண்டிய நிலை உள்ளது. எந்திர நடவு செய்வது இப்பகுதியில் அறிமுகம் இல்லாததாலும் அதன் பயன் இப்பகுதி விவசாயிகள் தெரிவதில்லை. இதே நிலை நீடிக்குமானால் வரும் காலங்களில் விவசாயம் செய்ய இந்தப்பகுதிகளில் ஆட்களே இல்லாத நிலை ஏற்படும் என்பதில் ஐயமில்லை என்று அவர் கூறினார்.

  விதை நெல் விற்பனை செய்பவர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து விதை ஆய்வு துணை இயக்குனர் கே.ஜெயராமன் அறிக்கை விடுத்துள்ளார்.

  அதில் அவர் கூறியிருப்பதாவது:-

  விவசாயிகளுக்கு தரமான விதைகள் விற்பனை செய்வதை உறுதிப்படுத்தவும், விதை விற்பனையாளர்களை கண்காணிக்கவும், விதை சட்டத்தை அமல்படுத்தவும், தமிழக அரசின் விதை சான்று மற்றும் அங்ககச் சான்றுத்துறையின் விதை ஆய்வுப்பிரிவு செயல்பட்டு வருகிறது. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டார பகுதிகளில் 138 விதை விற்பனை நிலையங்கள் உள்ளது. அதில் 50-க்கும் மேற்பட்ட நெல் விதை உற்பத்தி நிலையங்கள் உள்ளது. அரசுத்துறைகளான வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, கால்நடைத்துறை, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகம் மற்றும் அரசு சார்புத்துறைகளான வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், வேளாண் கூட்டுறவு விற்பனை மையங்கள், மற்றும் விதை விற்பனை உரிமம் பெற்று விதை விற்பனை செய்யும் தனியார் விற்பனை மையங்கள் ஆகியவற்றின் மூலமாக விவசாயிகளுக்கு தேவையான விதைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

  திருப்பூர் மாவட்டத்தில், தாராபுரம் வட்டாரத்தில் தற்போது நெல், மக்காசோளம், பருத்தி மற்றும் பயறு வகைகள் அரசு மற்றும் தனியார் விதை விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு விதை குவியலுக்கும், குவியல் வாரியாக விதை இருப்பு பதிவேட்டில் இருப்பு வைத்து, முளைப்புத்திறன் பரிசோதனை செய்த முடிவு அறிக்கை மற்றும் பதிவுச்சான்றிதழ் கண்டிப்பாக ஒவ்வொரு விதை விற்பனையாளரும் கடையில் வைத்திருக்கவேண்டும். மேலும் விதை விற்பனையாளர் கொள்முதல் செய்த விதைகளை பாதுகாப்பாகவும், முறையாகவும் விதை விற்பனை உரிமம் பெற்ற இடத்தில் வைத்திருக்க வேண்டும்.

  மேலும் விதை இருப்பு பதிவேடு, விதை இருப்பு மற்றும் விலை விவரப்பலகை தினந்தோறும் பதிவு செய்ய வேண்டும். கொள்முதல் பட்டியல், விற்பனை பட்டியல் மற்றும் பிற ஆவணங்கள் முறையாக பராமரிக்கப்பட வேண்டும்.

  விதைகள் விற்பனை செய்யும் போது விற்பனை பட்டியல் கட்டாயம் விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டும், அதில் பயிர், ரகம், விதைக்குவியல் எண், காலாவதி நாள் குறிப்பிட வேண்டும். விற்பனை பட்டியலில் விவசாயிகளின் கையொப்பம் பெறப்பட வேண்டும். இதனை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.மேற்கண்ட விதிமுறைகளை மீறுவோர் மீது விதைச்சட்டம் 1966 மற்றும் விதை விதிகள் 1968 மற்றும் விதை (கட்டுப்பாடு) ஆணை 1983 ஆகிய சட்டத்தின்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

  இவ்வாறு அவர் தெரிவித்தார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • விதை, உரம் உள்ளிட்ட இடு பொருட்கள் குடிமங்கலம் வேளாண் விரிவாக்க மையத்தில் மானிய விலையில் வழங்கப்படுகிறது.
  • நுண்ணுாட்ட சத்துக்கள் மற்றும் பயிர் பாதுகாப்பு மருந்துகள் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது.

  குடிமங்கலம் :

  குடிமங்கலம் பகுதிகளில் பருவ மழை துவங்கியுள்ள நிலையில் விவசாயிகள் உழவுப்பணியை துவக்கியுள்ளனர்.பயிர் சாகுபடிக்கு தேவையான, விதை, உரம் உள்ளிட்ட இடு பொருட்கள் குடிமங்கலம் வேளாண் விரிவாக்க மையத்தில் மானிய விலையில் வழங்கப்படுகிறது.

  இது குறித்து குடிமங்கலம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் வசந்தா கூறியதாவது:-

  உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்கம், தமிழக முதல்வரின் மானாவாரி மேம்பாட்டு இயக்கம் மற்றும்விதை கிராமத்திட்டத்தின் வாயிலாக வேளாண் இடுபொருட்களான, விதைகள், நுண்ணுயிர் உரங்கள், நுண்ணுாட்ட சத்துக்கள் மற்றும் பயிர் பாதுகாப்பு மருந்துகள் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது.

  குடிமங்கலம் வட்டாரத்திலுள்ள வேளாண் விரிவாக்க மைய கிடங்குகளில், மக்காச்சோளம் கோ.எச்.எம்.,8, சோளம், கோ-32, கம்பு, கோ-10, உளுந்து, வம்பன் 8,9, பாசிபயறு, கோ-8, கொண்டைக்கடலை என்.பி.ஜி., -119, 47, நிலக்கடலை - தரணி ரக விதைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இவை விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படுகிறது.

  மேலும் நுண்ணுயிர் உரங்களான, அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியம், திட வடிவத்திலும், திரவ நிலையிலும் இருப்புள்ளது.நுண்Èட்ட உரங்களான தானிய வகை, பயறு வகை,பருத்தி வகைநுண்ணுாட்டங்களும் தேவையான அளவு இருப்பு உள்ளது.தேவைப்படும் விவசாயிகள், சிட்டா, ஆதார் அட்டை நகலுடன் வந்து, மானிய விலையில், விதை,உரங்களை பெற்றுபயனடையலாம்.

  மேலும் தென்னை மரத்திற்குநுண்Èட்டச்சத்து பற்றாக்குறையால் குரும்பை உதிர்வதை தடுக்க நுண்Èட்ட உரம் இடுவதற்கு சரியான தருணமாகும்.ஒரு தென்னை மரத்திற்கு, 6 மாதத்திற்கு ஒரு முறை அரைக்கிலோ இட வேண்டும். குடிமங்கலம் வட்டார வேளாண் விரிவாக்க மையங்களில், விவசாயிகளுக்கு தேவையான தென்னை நுண்ணுாட்ட உரமும், போதிய அளவு இருப்பு உள்ளது. இதனையும்,தென்னை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

  இவ்வாறு குடிமங்கலம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் தெரிவித்தார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • 60க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் மானாவாரி பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர்.
  • அரசு வழங்கிய பவர் டில்லர் பழுதடைந்து உழவு செய்தல் உள்ளிட்ட பணிகள் பாதித்தது.

  உடுமலை :

  ஆனைமலை புலிகள் காப்பகம் உடுமலை வனச்சரகத்துக்குட்பட்டது ஈசல்திட்டு மலைவாழ் கிராமம். ஜல்லிபட்டி ஊராட்சி லிங்கம்மாவூர் சமவெளிப்பகுதியிலிருந்து 1,208 மீட்டர் உயரத்திலுள்ள மலையில் இந்த கிராமம் அமைந்துள்ளது.2மலைத்தொடர்களின் இடைவெளியில் அமைந்துள்ள இந்த கிராமத்தையொட்டி 400 ஏக்கருக்கும் அதிகமான பரப்பில் அக்கிராம மக்கள் பாரம்பரியமாக விவசாயம் செய்து வருகின்றனர்.குறிப்பாக 60க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கம்பு, ராகி, மொச்சை ஆகிய மானாவாரி பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர்.

  பிற சாகுபடி மேற்கொள்ளும் போது, சமவெளிப்பகுதிக்கு விளைபொருட்களை கொண்டு வர வழித்தடம் இல்லை. எனவே அப்பகுதியினருக்கு மொச்சை சாகுபடி மட்டுமே வாழ்வாதாரமாக உள்ளது.இந்நிலையில் கடந்த, 2009ல் அப்பகுதியினரின் விவசாய சாகுபடி பணிகளுக்காக அரசு வழங்கிய பவர் டில்லர் பழுதடைந்து உழவு செய்தல் உள்ளிட்ட பணிகள் பாதித்தது.

  தொடர் கோரிக்கை அடிப்படையில் சமீபத்தில் ஈசல்திட்டு மலைவாழ் கிராமத்துக்கு 2 பவர் டில்லர் எந்திரங்களை அரசு ஒதுக்கீடு செய்தது.அங்குள்ள வேளாண் உற்பத்தியாளர்கள் குழு வாயிலாக எந்திரத்தை பயன்படுத்தி சமீபத்திய மழைக்குப்பிறகு, சாகுபடிக்கு விளைநிலத்தை தயார் செய்துள்ளனர். ஆனால் விதைப்புக்கு தேவையான மொச்சை விதை கிடைக்காமல் பணிகள் முடங்கியுள்ளது.

  குறித்த நேரத்தில் விதைப்பு செய்யாவிட்டால், போதிய விளைச்சல் கிடைக்காது என்பதால் கவலையடைந்துள்ளனர். இது குறித்து ஈசல் திட்டு கிராமத்தை சேர்ந்த தங்கராஜ் கூறியதாவது:- பல்வேறு காரணங்களால் கடந்த 2 ஆண்டுகளாக, எவ்வித சாகுபடியும் மேற்கொள்ளவில்லை. தற்போது பவர் டில்லர் எந்திரம் வழங்கியுள்ளதால் சாகுபடி பணிகளை தீவிரப்படுத்தினோம். ஆனால் மொச்சை விதை கிடைக்கவில்லை.எனவே வேளாண்துறை வாயிலாக விதை வழங்கினால்,நூற்றுக்கணக்கான ஏக்கரில் இச்சாகுபடி மேற்கொள்ள முடியும். எங்களுக்கு வாழ்வாதாரமும் கிடைக்கும்.அதே போல் சாகுபடியில், பூச்சி, நோய்த்தாக்குதலை கட்டுப்படுத்த மருந்து தெளிப்பதற்கான ஸ்பிரேயரும் மானியத்தில் வழங்க வேண்டும். இதனால் சாகுபடியில் போதிய விளைச்சல் கிடைக்கும். இது குறித்து திருப்பூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து உதவ வேண்டும் என்றார். 

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பி.ஏ.பி., பாசனத்துக்கு காய்கறி சாகுபடி செய்ய விவசாயிகள் தயாராகி வருகின்றனர்.
  • கத்தரி மற்றும் மிளகாய் நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு, நடவுக்கு தயார் நிலையில் உள்ளது.

  உடுமலை :

  கத்தரி,மிளகாய் நாற்று தேவைப்படும் உடுமலை வட்டார விவசாயிகள் தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து உடுமலை தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் மோகனரம்யா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

  பி.ஏ.பி., பாசனத்துக்கு காய்கறி சாகுபடி செய்ய விவசாயிகள் தயாராகி வருகின்றனர்.சங்கரமாநல்லூர் அரசு தோட்டக்கலை பண்ணையில், விவசாயிகளுக்கு தேவையான கத்தரி மற்றும் மிளகாய் நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு, நடவுக்கு தயார் நிலையில் உள்ளது.மேலும் விபரங்களுக்கு, உதவி தோட்டக்கலை அலுவலர்கள், சிங்காரவேல் 95247-27052, சித்தேஸ்வரன் 88836-10449, காயத்ரி 63790-62232, ராஜ்மோகன் 95854-24502 என்ற செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print