என் மலர்
நீங்கள் தேடியது "நெல்"
- நெல் மூட்டைகள் லாரிகள் மற்றும் சரக்கு ரெயில் மூலம் தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கு அரவைக்காக அனுப்பப்பட்டு வருகின்றன.
- சரக்கு ரெயிலில் வேகன்களில் ஏற்றப்பட்டு அரவைக்காக 2000 டன் நெல் மூட்டைகள் ஈரோட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
தஞ்சாவூா்:
தமிழகத்தின் நெற்களஞ்சியமாக விளங்கும் தஞ்சாவூர் மாவட்டத்தில் முப்போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இங்கு விளைவிக்கப்படும் நெல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அரவைக்காக அனுப்பப்பட்டு பொது வினியோகத் திட்டத்தின் கீழ் அரிசி வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நெல் மூட்டைகள் லாரிகள் மற்றும் சரக்கு ரெயில் மூலம் தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கு அரவைக்காக அனுப்பப்பட்டு வருகின்றன. இது தவிர தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரவை ஆலைகளுக்கும் அனுப்பப்படும்.
அதன்படி இன்று தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கொள்முதல் நிலையங்கள் மற்றும் சேமிப்பு கிடங்குகளில் இருந்து 2000 டன் நெல் மூட்டைகள் ஏராளமான லாரிகளில் தஞ்சை ரெயில் நிலையத்துக்கு எடுத்து வரப்பட்டன. பின்னர் சரக்கு ரெயிலில் வேகன்களில் ஏற்றப்பட்டு அரவைக்காக 2000 டன் நெல் மூட்டைகள் ஈரோட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
- தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு அப்போதைய அரசு பொறுப்பேற்றதா?
- ஒரு நடிகரை பார்க்க போய் செத்ததற்கு ரூ.35 லட்சமா?
கோவை விமான நிலையத்தில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக அரசு மதுபாட்டில்களை பாதுகாப்பான இடங்களில் அடுக்கி வைத்துள்ளது.
விவசாயிகள் விளைவிக்கும் நெல்லை தெருவில் கொட்டி வைத்துள்ளனர்.
தமிழக விவசாயிகளின் நெல்லை தெருவில் போட்டுவிட்டு ஆந்திராவில் இருந்து வாங்குகின்றனர்.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு அப்போதைய அரசு பொறுப்பேற்றதா?
ஒரு நடிகரை பார்க்க போய் செத்ததற்கு ரூ.35 லட்சமா?
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- சாதாரண ரக நெல் ஒரு குவிண்டால் ரூ.2,500, சன்ன ரக நெல் ஒரு குவிண்டால் ரூ.5,545-க்கும் கொள்முதல் செய்யப்படும்.
- செப்டம்பர் 1 முதல் அடுத்தாண்டு ஆகஸ்ட் 31-ந்தேதி வரை குவிண்டால் நெல் ரூ.2,500-க்கு கொள்முதல் செய்யப்படும்.
சென்னை:
நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
சாதாரண ரக நெல் ஒரு குவிண்டால் ரூ.2,500, சன்ன ரக நெல் ஒரு குவிண்டால் ரூ.5,545-க்கும் கொள்முதல் செய்யப்படும்.
செப்டம்பர் 1 முதல் அடுத்தாண்டு ஆகஸ்ட் 31-ந்தேதி வரை குவிண்டால் நெல் ரூ.2,500-க்கு கொள்முதல் செய்யப்படும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பருப்புகளுக்கு 450 ரூபாய் உயர்த்தி வழங்க ஒப்புதல்.
- நிலக்கடலைக்கு 480 ரூபாய் உயர்த்தி வழங்க ஒப்புதல்.
நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ. 2,363-ஆக நிர்ணயம் செய்து மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த நிதியாண்டைவிட குவிண்டாலுக்கு 69 ரூபாய் உயர்த்திவழங்க ஒப்புதல் அளித்துள்ளது.
மேலும், ராகி (குவிண்டாலுக்கு 596 ரூபாய்), காட்டன் (589 ரூபாய்), பருப்புகள் (450 ரூபாய்) உயர்த்தப்பட்டுள்ளது. நிலக்கடலைக்கு 480 ரூபாயும், சன்பிளவர் விதைக்கு 441 ரூபாய், சோயாபீன்ஸ்க்கு 436 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது.
- நெல் சாகுபடியில் சுமார் 110 நாட்கள் முதல் 150 நாட்களுக்குள் விளைச்சல் தரும்.
- விதை நெல் விற்பனை செய்பவர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து விதை ஆய்வு துணை இயக்குனர் அறிக்கை விடுத்துள்ளார்.
மூலனூர் :
திருப்பூர் மாவட்டம் மூலனூர், கருப்பன் வலசு, தலையூர், எல்லப்பாளையம் பெரமியம், ஆத்துக்கால்புதூர், காளிபாளையம், வீராச்சிமங்கலம், படுகை தாராபுரம் ஆகிய அமராவதி ஆற்றுப் படுகைகளில் உள்ள சுற்று வட்டார பகுதிகளில் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இது முழுக்க முழுக்க அமராவதி அணையின் நீர் பாசனத்தை நம்பியே விவசாயம் செய்யப்படுகிறது. தற்போது இந்த பகுதியில் நடைபெறும் நெல் சாகுபடியில் சுமார் 110 நாட்கள் முதல் 150 நாட்களுக்குள் விளைச்சல் தரும் நெல் ரகங்களான ஏடிடி 45, ஏடிடி37, சாவித்திரி போன்ற நெல் ரகங்கள் பயிரிடப்படுகின்றன.
இதில் குறைந்த நாட்களில் மகசூல் தரும் இதில் ஏ.டி.டி. 45 ரக நெற்பயிர்களை அதிக அளவில் நடப்படுகிறது. இந்த ரக நெல் ஒரு ஏக்கருக்கு 50 முதல் 60 மூட்டைகள் வரை மகசூல் கிடைப்பதால் இந்த ரக நெல் பயிரை இப்பகுதி விவசாயிகள் நடவு செய்ய ஆர்வம் காட்டி வருகிறார்கள். தற்போது இந்த பகுதிகளில் நாற்றங்கால் அமைக்கும் பணி சுமார் 90 சதவீத நடவு பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது.
இதுபற்றி அப்பகுதி விவசாயி ஒருவர் கூறுகையில், வேலைக்கு ஆட்கள் பற்றாக்குறையால் பெரும் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இப்பகுதி மக்கள் அதிக அளவில் திருப்பூர் பனியன் கம்பெனிகளில் மற்றும் நூல் மில்களுக்கு சென்று விடுவதால் நெல் நடவு செய்ய ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. விவசாயம் சார்ந்த வேலை செய்ய யாரும் முன்வருவதில்லை.
இதன் காரணமாக தற்போது தர்மபுரி, சேலம், ஈரோடு போன்ற வெளியூர்களிலிருந்து ஏஜெண்டுகள் மூலம் ஆட்கள் வரவழைக்கப்பட்டு வேலை செய்ய வேண்டிய நிலை உள்ளது. எந்திர நடவு செய்வது இப்பகுதியில் அறிமுகம் இல்லாததாலும் அதன் பயன் இப்பகுதி விவசாயிகள் தெரிவதில்லை. இதே நிலை நீடிக்குமானால் வரும் காலங்களில் விவசாயம் செய்ய இந்தப்பகுதிகளில் ஆட்களே இல்லாத நிலை ஏற்படும் என்பதில் ஐயமில்லை என்று அவர் கூறினார்.
விதை நெல் விற்பனை செய்பவர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து விதை ஆய்வு துணை இயக்குனர் கே.ஜெயராமன் அறிக்கை விடுத்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
விவசாயிகளுக்கு தரமான விதைகள் விற்பனை செய்வதை உறுதிப்படுத்தவும், விதை விற்பனையாளர்களை கண்காணிக்கவும், விதை சட்டத்தை அமல்படுத்தவும், தமிழக அரசின் விதை சான்று மற்றும் அங்ககச் சான்றுத்துறையின் விதை ஆய்வுப்பிரிவு செயல்பட்டு வருகிறது. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டார பகுதிகளில் 138 விதை விற்பனை நிலையங்கள் உள்ளது. அதில் 50-க்கும் மேற்பட்ட நெல் விதை உற்பத்தி நிலையங்கள் உள்ளது. அரசுத்துறைகளான வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, கால்நடைத்துறை, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகம் மற்றும் அரசு சார்புத்துறைகளான வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், வேளாண் கூட்டுறவு விற்பனை மையங்கள், மற்றும் விதை விற்பனை உரிமம் பெற்று விதை விற்பனை செய்யும் தனியார் விற்பனை மையங்கள் ஆகியவற்றின் மூலமாக விவசாயிகளுக்கு தேவையான விதைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
திருப்பூர் மாவட்டத்தில், தாராபுரம் வட்டாரத்தில் தற்போது நெல், மக்காசோளம், பருத்தி மற்றும் பயறு வகைகள் அரசு மற்றும் தனியார் விதை விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு விதை குவியலுக்கும், குவியல் வாரியாக விதை இருப்பு பதிவேட்டில் இருப்பு வைத்து, முளைப்புத்திறன் பரிசோதனை செய்த முடிவு அறிக்கை மற்றும் பதிவுச்சான்றிதழ் கண்டிப்பாக ஒவ்வொரு விதை விற்பனையாளரும் கடையில் வைத்திருக்கவேண்டும். மேலும் விதை விற்பனையாளர் கொள்முதல் செய்த விதைகளை பாதுகாப்பாகவும், முறையாகவும் விதை விற்பனை உரிமம் பெற்ற இடத்தில் வைத்திருக்க வேண்டும்.
மேலும் விதை இருப்பு பதிவேடு, விதை இருப்பு மற்றும் விலை விவரப்பலகை தினந்தோறும் பதிவு செய்ய வேண்டும். கொள்முதல் பட்டியல், விற்பனை பட்டியல் மற்றும் பிற ஆவணங்கள் முறையாக பராமரிக்கப்பட வேண்டும்.
விதைகள் விற்பனை செய்யும் போது விற்பனை பட்டியல் கட்டாயம் விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டும், அதில் பயிர், ரகம், விதைக்குவியல் எண், காலாவதி நாள் குறிப்பிட வேண்டும். விற்பனை பட்டியலில் விவசாயிகளின் கையொப்பம் பெறப்பட வேண்டும். இதனை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.மேற்கண்ட விதிமுறைகளை மீறுவோர் மீது விதைச்சட்டம் 1966 மற்றும் விதை விதிகள் 1968 மற்றும் விதை (கட்டுப்பாடு) ஆணை 1983 ஆகிய சட்டத்தின்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- பின்னர் சுமைதூக்கும் தொழிலாளர்கள் நெல்மூட்டைகளை சரக்கு ரெயிலின் 42 பெட்டிகளில் ஏற்றினர்.
- அதனை தொடர்ந்து நெல் அரவைக்காக சரக்கு ரெயிலில் மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம், மன்னார்குடி, கூத்தாநல்லூர் ஆகிய தாலுகாக்களில் இயங்கி வரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட மற்றும் அசேஷம், ஆதனூர், தெற்குநத்தம், இடையர்நத்தம் ஆகிய ஊர்களில் உள்ள திறந்தவெளி சேமிப்பு மையங்களில் இருப்பு வைக்கப்பட்ட 2 ஆயிரம் டன் நெல் 157 லாரிகளில் நீடாமங்கலம் ெரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.
பின்னர் சுமைதூக்கும் தொழிலாளர்கள் நெல்மூட்டைகளை சரக்கு ரெயிலின் 42 பெட்டிகளில் ஏற்றினர். அதனை தொடர்ந்து நெல் அரவைக்காக சரக்கு ரெயிலில் மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
- தீமை செய்யும் பூச்சிகளின் முட்டை அழிக்கப்படுகிறது.
- சீராக சம்பா மற்றும் தூயமல்லி ஆகிய பாரம்பரிய நெல் ரகங்கள் சாகுபடி.
பேராவூரணி
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் கீழ் செயல்படும் அட்மா திட்டத்தில் பேராவூரணி வட்டாரத்தை சார்ந்த விவசாயிகளை பாரம்பரிய நெல் சாகுபடி குறித்த விவசாயிகள் சுற்றுலாவிற்கு மதுக்கூர் வட்டாரம் அத்திவெட்டி கிராமத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
அங்கு பாரம்பரிய நெல் சாகுபடி இயற்கை விவசாயி ராஜா கிருஷ்ணன் பாரம்பரிய நெல் சாகுபடி செய்து வருகிறார்.
இவர் உற்பத்தி செய்யப்படும் பாரம்பரிய நெல் ரகங்களை விதையாகவும், அரிசியாகவும் விற்பனை செய்து வருகிறார்.
நீண்டகால வயதுடைய நெல் ரகங்களை சாகுபடி செய்யும் பொழுது நடவு செய்த 30 நாட்களில் நெல் பயிர் நுனியினை வெட்டி விடுவதால் நெல் பயிர் பக்க கிளைகள் அதிகரிக்கிறது.
இதனால் மகசூல் 25 சதம் அதிகரிக்கிறது.இவ்வாறு நுனியினை வெட்டுவதால் தீமை செய்யும் பூச்சிகளின் முட்டை அழிக்கப்படுகிறது.
பொதுவாக நீண்ட கால நெல் ரகங்கள் பயிரின் உயரம் அதிகரித்து பக்கக் கிளைகள் குறைவாகவும் காணப்படும் இந்த தொழில்நுட்பத்தினை பயன்படுத்துவதால் பயிரின் உயரம் குறைவாகவும் பக்க கிளைகள் எண்ணிக்கை அதிகமாகவும் உள்ளதாக கூறினார்.
அவர் தனது வயலில் மாப்பிள்ளை சம்பா, கருப்பு கவுனி, வாசனை சீரக சம்பா, சொர்ண மயூரி, ஆத்தூர் கிச்சடி சம்பா, கருடன் சம்பா, தங்க சம்பா, சீராக சம்பா மற்றும் தூயமல்லி ஆகிய பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்து வருகிறார்.
இவ்வாறு சாகுபடி செய்து மருத்துவ குணமிக்க பாரம்பரிய நெல் ரகங்களை அழியாமல் பாதுகாத்து தனது வருமானத்திலையும் அதிகப்படுத்தி உள்ளதாகவும் விவசாயிகளிடம் அவரது அனுபவத்தினை பகிர்ந்து கொண்டார்.
பாரம்பரிய நெல் சாகுபடி செய்துள்ள வயலினை விவசாயிகளிடம் நேரடியாக காண்பித்தார்.
பயிற்சியில் வட்டார தொழில்நுட்ப மேலாளர் பொன்.செல்வி பாரம்பரிய நெல் ரகங்களை ஒரு குழுவாக சேர்ந்து இயற்கையான முறையில் சாகுபடி செய்வதால் எளிமையான முறையில் சந்தைப்படுத்த முடியும் எனவும் கூறினார்.
- விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் வழங்கப்பட வில்லை. இருப்பு விலை குறித்து விவரங்கள் கடைகளில் வைக்கப்பட வில்லை
- உரம் இருப்பு மற்றும் விலை தொடர்பான பட்டியல் வைக்காத கடைக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் படும்
நாகர்கோவில் :
நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் விவ சாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் அரவிந்த் தலைமையில் இன்று நடந் தது.
மாவட்ட வருவாய் அதிகாரி சிவப்பிரியா மற்றும் அதிகாரிகள் கூட் டத்தில் கலந்து கொண் டனர். கூட்டத்தில் விவசாயிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை கலெக்டர் அரவிந்த் பெற்றுக் கொண்டார்.கூட்டத்தில் விவசாயிகள் புலவர் செல்லப்பா, வின்ஸ்ஆன்றோ உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் விவசாயிகள் கூறுகையில், விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் வழங்கப்பட வில்லை. இருப்பு விலை குறித்து விவரங்கள் கடைகளில் வைக்கப்பட வில்லை. அதிக விலைக்கு உரங்கள் விற்கப்பட்டு வருகிறது. தோட்டக்கலை துறை மூலமாக மானியங்கள் விவசாயிகளுக்கு வழங் கப்படவில்லை. குமரி மாவட்டத்தில் மூன்று போகம் மழை பெய்து வருகிறது. இதனால் நெல்லினுடைய ஈரப்பதம் எப்பொழுதும் அதிகமாக தான் இருக்கும்.
நெல் கொள்முதல் நிலை யங்களில் 22 சதவீதத்திற்கு மேல் ஈரப்பதம் இருந்தால் நெல்லை கொள்முதல் செய்ய மறுப்பு தெரிவிக்கி றார்கள். ஆனால் டெல்டா மாவட்டத்தில் 22 சதவீதத்திற்கும் மேல் ஈரப்பதம் இருக்கும் நெல்களையும் கொள்முதல் செய்ய அரசு அனுமதி அளித்துள்ளது.
எனவே குமரி மாவட் டத்திலும் 22 சதவீ தத்திற்கு மேல் ஈரப்பதம் உள்ள நெல்களை கொள்மு தல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். ராஜாக்க மங்கலம் தென்னை உற்பத்தி நிலையத்தில் உள்ள முறை கேடுகளை கண்டு பிடித்து சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுப்பதுடன் பொதுக்குழு கூட்டத்தை நடத்த அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
இதற்கு பதில் அளித்து அதிகாரிகள் கூறுகையில், குமரி மாவட்டத்தில் 2350 டன் உரம் இருப்பில் உள்ளது. உரம் இருப்பு மற்றும் விலை தொடர்பான பட்டியல் வைக்காத கடைக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் படும். கால்நடை மருத்துவ மனைகளில் முறையாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 1962 என்ற எண்ணில் தொடர்பு கொண்டால் நடமாடும் ஆம்புலன்ஸ் மூலமாக சென்று அந்த கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். நெல் கொள்முதல் நிலையத்தில் 22 சதவீத ஈரப்பதம் உள்ள நெல்களை கொள்முதல் செய்வது தொடர்பாக அரசுக்கு பரிந்துரை செய்யப்படும்.காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும். விலை நிலங்கள் வீட்டு மனைகளாக மாற்றப்ப டுவதை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றனர்.
- விவசாயிகள் அறுவடை செய்த நெல்களை விற்க முடியாமல் காத்து கிடக்கின்றனர்.
- விவ–சாயிகள் பலர் அறுவடை பருவத்தை தாண்டியும் அறுவடை செய்யாமல் உள்ளனர்.
மெலட்டூர்:
தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, ராராமுத்திரகோட்டை அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சம்பா முன்பருவத்தில் நடவு செய்யப்பட்ட நெற்பயிர்கள் அறுவடை செய்யும்பணி தற்போது நடைபெற்று வருகிறது.
ராராமுத்திரகோட்டை அரசு கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை விற்க முடியாமல் கடந்த 7 நாட்களுக்கும் மேலாக அரசு கொள்முதல் நிலையம் முன்பு விவசாயிகள் பலர் தாங்கள் அறுவடைசெய்த நெல்லை கொட்டி வைத்து காத்து கிடக்கின்றனர்.
கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் விவசாயிகள் பலர் அறுவடை பருவத்தை தாண்டியும் அறுவடை செய்யாமல் உள்ளனர்.
- குறைந்த காலத்தில் கூடுதல் வருமானம் ஈட்டிடவும் பயறு வகை சாகுபடி அவசியம்.
- நெல் தரிசுக்கு ஏற்ற பயறு ரகங்கள் 8 டன் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
வேதாரண்யம்:
தலைஞாயிறு வேளாண்மை உதவி இயக்குனர் கருப்பையா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
வேதாரண்யம் பகுதியில் வேளாண் விளை நிலங்களில் மண்வளத்தை அதிகரித்திடவும் குறைந்த காலத்தில் கூடுதல் வருமானம் ஈட்டிடவும் பயறு வகை பயிர்கள் சாகுபடி அவசியமாகும்.
சம்பா நெல் அறுவடைக்கு பிறகு பயறு சாகுபடி செய்ய ஏதுவாக தலைஞாயிறு வட்டாரத்திற்குட்பட்ட தலைஞாயிறு, நீர்முளை, பனங்காடி மற்றும் கொத்தங்குடி ஆகிய வேளாண் விரிவாக்க மையங்களில் நெல் தரிசுக்கு ஏற்ற பயறு ரகங்கள் 8 டன் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
இதனை மானிய விலையில் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட உள்ளது.
எனவே தேவைப்படும் விவசாயிகள் கிலோ ரூ. 118 என்பதில் இருந்து மானிய தொகை ரூ. 48 கழித்து ரூ. 70 விலையில் பயறு விதைகளை பெற்று பயனடையலாம். மேலும், நெல்லுக்கு பின் பயறு வகை பயிர்கள் சாகுபடி செய்து மண்வளத்தை பெருக்கிடலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- காரையூர் பகுதியில் 1000 ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டு அறுவடை பணி நடந்து வருகிறது.
- வசாயிகள் தரப்பில் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் காரையூர் பகுதியில் 1000 ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டுள்ளது.
தற்போது இங்கு அறுவடை பணி நடைபெற்று வருகிறது.அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் என விவசாயிகள் தரப்பில் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
கோரிக்கையை பரிசீலித்த மாவட்ட நிர்வாகம், நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க உத்தரவிட்டது.இந்நிலையில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு நிகழ்ச்சி காரையூர் பகுதியில் நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் கலாராணி உத்திராபதி தலைமை தாங்கினார்.
ஒன்றியக்குழு உறுப்பினர் ஆரூர் மணிவண்ணன் முன்னிலை வகித்து அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்து முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.
இதில் வார்டு உறுப்பினர் கார்த்திக் மற்றும் விவசாயிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
- பிள்ளபாளையத்தில் நெல் அறுவடை பணி நடந்து வருகிறது
- இந்த நெல் வயல்களுக்கு கட்டளை மேட்டு வாய்க்கால் பாசனத்திலிருந்து தண்ணீர் பாய்ச்சப்பட்டது
கரூர்:
பிள்ளபாளையம் கிராமத்தில் நெல் வயல்களில் இயந்திரம் மூலம் நெல் அறுவடை பணி துரிதமாக நடந்து வருகிறது. கிருஷ்ணராயபுரத்தை அடுத்த பிள்ளபாளையம் கிராம பகுதியில் 300 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்துள்ளனர். இந்த நெல் வயல்களுக்கு கட்டளை மேட்டு வாய்க்கால் பாசனத்திலிருந்து தண்ணீர் பாய்ச்சப்பட்டது.
இதன் மூலம் நெல் வயல்களில் நெற்கதிர்கள் வளர்ச்சியடைந்து முதிர்ந்தன. தற்போது இயந்திரம் மூலம் அறுவடை பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.






