என் மலர்
நீங்கள் தேடியது "அரசாணை"
- ஆளுங்கட்சி தலைவர்கள் மற்றும் தங்களுக்கு விருப்பமானவர்களின் பெயர்களை வைப்பதும்தான் நோக்கம்.
- வழக்கு குறித்து தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தனர்.
மதுரை:
மதுரை மேல அனுப்பானடி பகுதியைச் சேர்ந்த பரமசிவம், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
சமீபத்தில் தமிழகத்தில் உள்ள குடியிருப்பு பகுதிகள், தெருக்கள், சாலைகள் மற்றும் பிற பொது நிறுவனங்களில் உள்ள சாதி பெயர்களை நீக்குவது தொடர்பாக தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக ஏற்கனவே 1978-ம் ஆண்டில் அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது என கூறுகிறார்கள்.
இத்தனை ஆண்டுகளாக தெருக்கள், சாலைகளில் சாதி பெயர்கள் இருப்பதால் பிரச்சனைகள் ஏற்பட்டதாக இதுவரை எந்த புகாரும் அளிக்கப்படவில்லை. வருகிற சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்து தற்போதைய ஆளுங்கட்சி மக்களிடையே பகைமையை ஊக்குவிப்பது, பிளவு படுத்துவதை நோக்கமாக கொண்டு இந்த அரசாணை பிறப்பித்து இருக்கிறது.
இதன் மூலம் ஆளுங்கட்சி தலைவர்கள் மற்றும் தங்களுக்கு விருப்பமானவர்களின் பெயர்களை வைப்பதும்தான் நோக்கம். இந்த அரசாணையை அமல்படுத்துவது தொடர்பாக பொதுமக்களிடம் எந்த கருத்துகளையும் கேட்டு நடவடிக்கை எடுக்கவில்லை. இது சட்டவிரோதம்.
எனவே குடியிருப்பு பகுதி சாலைகள் தெருக்களின் பெயர்களில் உள்ள சாதியை நீக்க வகை செய்யும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் அனிதா, சுமந்து குமரப்பன் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் கார்த்திகேயன், வக்கீல்கள் கார்த்திகேய வெங்கடாஜலபதி சுப்பையா ஆகியோர் ஆஜராகி, நாட்டுக்காக சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு உயிர் தியாகம் செய்தவர்களின் பெயர்களையும், ஆன்மிக தலைவர்களின் பெயர்களையும் நீக்கும் நோக்கத்தில் இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது என தெரிவித்தனர்.
விசாரணை முடிவில் மேற்கண்ட அரசாணையின்படி செயல்படுத்துவது சம்பந்தமாக கள ஆய்வு நடத்தலாம். பெயர்களை நீக்கம் செய்வது உள்ளிட்ட மற்ற நடவடிக்கைகளுக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. இந்த வழக்கு குறித்து தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தனர்.
- சாதாரண ரக நெல் ஒரு குவிண்டால் ரூ.2,500, சன்ன ரக நெல் ஒரு குவிண்டால் ரூ.5,545-க்கும் கொள்முதல் செய்யப்படும்.
- செப்டம்பர் 1 முதல் அடுத்தாண்டு ஆகஸ்ட் 31-ந்தேதி வரை குவிண்டால் நெல் ரூ.2,500-க்கு கொள்முதல் செய்யப்படும்.
சென்னை:
நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
சாதாரண ரக நெல் ஒரு குவிண்டால் ரூ.2,500, சன்ன ரக நெல் ஒரு குவிண்டால் ரூ.5,545-க்கும் கொள்முதல் செய்யப்படும்.
செப்டம்பர் 1 முதல் அடுத்தாண்டு ஆகஸ்ட் 31-ந்தேதி வரை குவிண்டால் நெல் ரூ.2,500-க்கு கொள்முதல் செய்யப்படும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தகுதிகாண் பருவம் உரிய காலத்திற்குள் முடிக்க இயலாமல் அவர்களுடைய பதவி உயர்வு பாதிக்கப்படுவதுடன், பணிமூப்பினை இழக்கும் நிலையும் ஏற்பட்டது.
- மகப்பேறு விடுப்பு காலம், பெண் ஊழியர்கள் தகுதிகாண் பருவத்தில் இருந்தாலும் வழங்கப்படும்.
சென்னை:
தமிழக அரசின் தலைமை செயலாளர் முருகானந்தம் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:-
திருமணமான அரசு பெண் பணியாளர்களுக்கு ஓராண்டு காலம் சம்பளத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்கப்பட்டு வருகிறது. தற்போதுள்ள விதிகளின்படி மகப்பேறு விடுப்பு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவது இல்லை. இதன்காரணமாக அரசு பணிகளில் பணியாற்றும் மகளிர் மகப்பேறு விடுப்பு எடுத்தால், தகுதிகாண் பருவம் உரிய காலத்திற்குள் முடிக்க இயலாமல் அவர்களுடைய பதவி உயர்வு பாதிக்கப்படுவதுடன், பணிமூப்பினை இழக்கும் நிலையும் ஏற்பட்டது.
இதை கருத்தில் கொண்டு மகப்பேறு விடுப்பு காலம், பெண் ஊழியர்கள் தகுதிகாண் பருவத்தில் இருந்தாலும் வழங்கப்படும் என சட்டசபையில் 110-வது விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, மகப்பேறு விடுப்பு காலம், பெண் ஊழியர்கள் தகுதிகாண் பருவத்தில் இருந்தாலும் வழங்கப்படும்.
சிறப்பு, தற்காலிக விதிகளில் வரையறுக்கப்பட்டுள்ள தகுதிகாண் பருவ பணிக்காலம் 28.4.2025 அன்று முடிவு பெறாதவர்களுக்கு இந்த சலுகை பொருந்தும். 28.4.2025-க்கு முன்பு முடிவுற்றவர்களுக்கு இந்த சலுகை பொருந்தாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பொதுமக்களிடம் இருந்து தமிழில் வரும் கடிதங்களுக்கு தமிழிலேயே பதில் அளிக்க வேண்டும்.
- அரசுப் பணியாளர்கள் அனைத்து பதிவுகளிலும் தமிழில் மட்டுமே கையொப்பமிட வேண்டும்.
சென்னை:
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் மும்மொழிக்கொள்கை பின்பற்றினால் தான் நிதி வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. இது தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் இருமொழிக் கொள்கையை பின்பற்றப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
அதனை தொடர்ந்து, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் கடைகளின் பெயர் மற்றும் அறிவிப்புகள் தமிழிலேயே இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
இந்த நிலையில், தமிழக அரசு சார்பில் வெளிடப்படும் அரசாணைகள், சுற்றறிக்கைகள் தமிழில் மட்டுமே இருக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.
துறைத்தலைமை அலுவலகங்களில் இருந்து அரசு, பிற அலுவலங்களுக்கு அனுப்பப்படும் கருத்துரைகள் தமிழிலேயே இருக்க வேண்டும். பொதுமக்களிடம் இருந்து தமிழில் வரும் கடிதங்களுக்கு தமிழிலேயே பதில் அளிக்க வேண்டும். அரசுப் பணியாளர்கள் அனைத்து பதிவுகளிலும் தமிழில் மட்டுமே கையொப்பமிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மேலும் 4 துணை ஆட்சியர்கள் பதவி உயர்வு குறித்தும் அரசாணை வெளியிட்டுள்ளார்.
- சேலம் ஆவின் நிறுவனத்தின் பொது மேலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி:
தமிழக அரசு தலைமைச் செயலாளர் இறையன்பு அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பணிபுரிந்து வந்த 16 மாவட்ட வருவாய் அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்படுவதாகவும் மேலும் 4 துணை ஆட்சியர்கள் பதவி உயர்வு குறித்தும் அரசாணை வெளியிட்டுள்ளார். அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்ட வருவாய் அலுவலராக பணிபுரிந்து வந்த விஜய்பாபு சேலம் ஆவின் நிறுவனத்தின் பொது மேலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதேபோல் சேலம் ஆவின் பொது மேலாளராக பணிபுரிந்து வந்த சத்தியநாராயணன் கள்ளக்குறிச்சி மாவட்ட வருவாய் அலுவலராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என அரசா ணையில் கூறப்ப ட்டுள்ளது.
- பீடி தொழிலாளர் சம்மேளனம் கோரிக்கை
- கலெக்டருக்கு மனு
திருப்பத்தூர்:
மாநில காங்கிரஸ் பீடி தொழி லாளர்கள் நல சம்மேளனத் தின் மாநில பொதுச்செயலா ளர் ஆர்.முனிராஜ் தமிழக முதல் - அமச்சர். மற்றும் மாவட்ட கலெக்டருக்கு மனு அனுப்பி உள்ளார்.
அதில் வேலூர், திருப்பத்தூர் ஒருங் கிணைந்த மாவட்டத்தில் 10 லட்சம் பீடி தொழிலாளர்கள் உள்ளார்கள். அவர்களுக்கு நீண்டநாளுக்கு பிறகு 10.5.2022 அன்று நடந்த முத்தரப்பு பேச்சு வார்த்தையில் தொழிலாளர் நலத்துறை செயலாளர் ஆர்.கிரிலோஷ் குமார், முதன்மை செயலாளர் அதுல் ஆனந்த், தொழிலாளர் நலத் துறை இணை ஆணையர் உ.லட்சுமிகாந்தன் முன்னி லையிலும், கூடுதல் தொழிலாளர் ஆணையர் ராமசந்திரன், தொழிலாளர் துறை ஆணை யாளர்அப்துல் காதர், உதவி ஆணையாளர் இந்துமதி, வேலூர், திருநெல்வேலி மாவட்ட பீடி உற்பத்தியாளர் சங்கம், ஐ.என்.டி.யு.சி. பீடி தொழிலாளர் நல சங்கம் சார்பில் தமிழ்நாடு பீடி தொழிலாளர்கள் சம்மேளத்தின் மாநில தலைவர் சி.சுப்பிரமணி, மாநில பொதுச் செயலாளர் முனீராஜி ஆகியோரும் கலந்து கொண்டு கையொப் இடப்பட்டது.
பம் இன்றைய தேதி வரையில் இந்த ஒப்பந்த அரசாணை வெளிவரவில்லை. ஆகையால் முன் தேதியிட்டு உடனடியாக தொழிலாளர்கள் நலன் கருதி அரசாணையை வெளியிட வேண்டும் என்று கூறி உள்ளார்.
- நீலகிரி வரையாடு இனம் அழிந்து வரும் உயிரினம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
- மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் 3,122 வரையாடுகள் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.
அரசு கூடுதல் தலைமை செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
நீலகிரி வரையாடு மேற்கு தொடர்ச்சி மலைகளுக்கே உரிய சிறப்பினங்களில் ஒன்றாகும். இந்த வரையாடு பற்றிய குறிப்புகள் சிலப்பதிகாரம் மற்றும் சீவகசிந்தாமணியில் காணப்படுகின்றன. மேலும் பதினெண்கீழ்க்கணக்கு, திரிகூடராசப்ப கவிராயர் எழுதிய திருக்குற்றால குறவஞ்சி பாடலிலும் வரையாடு பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.
நீலகிரி வரையாடு இனம் அழிந்து வரும் உயிரினம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. வன உயிரின பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இந்த ஆடு வகைகளை பட்டியலிடப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. உலகளாவிய இயற்கை பாதுகாப்பு நிதிய அறிக்கையின்படி 3,122 வரையாடுகள் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.
மிக பரந்த அளவில் வாழ்ந்து வந்த இந்த வரையாடு இனம், எண்ணிக்கை குறைந்து, அழிவுக்கு ஆளாகுதல், அந்நிய களைச்செடிகளின் ஆக்கிரமிப்பு, காட்டுத் தீ, சுற்றுச்சூழல் உள்ளிட்டவை காரணமாக தற்போது தமிழ்நாடு மற்றும் கேரளாவிற்குள் சில வாழ்விட பகுதிகளில் மட்டுமே வாழ்ந்து வருகின்றன.
தமிழ்நாட்டின் மாநில விலங்கான நீலகிரி வரையாடு இனத்தை பாதுகாக்கவும் அதன் வாழ்விடங்களை மேம்படுத்தவும் இந்தியாவிலேயே முதன்முறையாக நீலகிரி வரையாடு திட்டத்தை அமைத்து தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது. இத்திட்டம் 2022 முதல் 2027 வரை ஐந்து ஆண்டுகளில் ரூ.25.14 கோடி செலவில் செயல்படுத்தப்படும்.
பல்வேறு உத்திகள் மூலம் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தின் மூலம் நீலகிரி வரையாடுகள் இனம் அழிவிலிருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இந்த திட்டத்தின் மூலம் வரையாடுகளின் உண்மையான வாழ்விடங்கள் மீட்கப்பட்டு அவை வாழ ஏதுவான சூழலை உருவாக்கி அவற்றின் எண்ணிக்கை பெருக நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட 4 லட்சத்து 39 ஆயிரத்து 315 பேருக்கு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.
- டிசம்பர் முதல் இதை நடைமுறைப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர ஓய்வூதியத்தை ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தி வழங்க தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதுகுறித்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறி இருப்பதாவது:
சமூக நலன் மற்றும் சத்துணவு திட்ட துறையால் செயல்படுத்தப்பட்டு வரும் ஓய்வூதிய திட்டங்களின் கீழ் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் மாத ஓய்வூதியத்தை ரூ.500ல் இருந்து ரூ.1000ஆக உயர்த்தி 2011ம் ஆண்டு மே மாதம் முதல் நடைமுறைப்படுத்த ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
வருவாய் துறை மூலம் ஓய்வூதியம் பெற்று வரும் கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட 4 லட்சத்து 39 ஆயிரத்து 315 பேருக்கு, அவர்கள் தற்போது பெற்று வரும் ஓய்வூதியம் ரூ.1000த்தில் இருந்து ரூ.1,500ஆக வரும் ஜனவரி 1ம் தேதி முதல் உயர்த்தி வழங்கப்படும். இதன்மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.263 கோடியே 56 லட்சம் கூடுதல் செலவாகும்.
தற்போது தமிழகத்தில் அரசு உதவித்தொகை பெற்று வரும் இந்திரா காந்தி தேசிய மாற்றுத்திறனுடையோர் ஓய்வூதிய திட்டம், மாற்றுத் திறனுடையோர் ஓய்வூதிய திட்டம் மற்றும் இலங்கை அகதிகளுக்கான மாற்றுத்திறனுடையோர் ஓய்வூதியம் பெற்று வரும் கண்பார்வையற்ற மாற்றுத்திறனுடையோர் உள்ளிட்டவர்களுக்கு வழங்கப்படும் வரும் மாத ஓய்வூதியத்தை ரூ.1000த்தில் இருந்து ரூ.1,500ஆக உயர்த்தி வழங்கப்படுகிறது.
2022 டிசம்பர் முதல் இதை நடைமுறைப் படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஜனவரி, 2023ல் பயனாளிகளுக்கு வழங்குவதற்கு முடிவு செய்து ரூ.65 கோடியே 89 லட்சத்து 72 ஆயிரத்து 500க்கான நிதி ஒதுக்கீடு செய்து அரசு ஆணையிடுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இந்தியாவில் பேட்டரி மூலம் இயக்கப்படும் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களுக்கு 50 சதவீத வரி சலுகை
- பேட்டரியால் இயக்கப்படும் அனைத்து வாகனங்களுக்கும் 100 சதவீதம் வரி விலக்கு அளித்து உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு மின்சார வாகன கொள்கை 2019க்கு இணங்க பேட்டரி வாகனங்களுக்கு 100 சதவீத வரி விலக்கு அளிக்க தமிழ்நாடு போக்குவரத்து ஆணையரகம் கேட்டு கொண்டது.
01.01.2023 முதல் 31.12.2025ம் ஆண்டு வரை பேட்டரியால் இயக்கப்படும் அனைத்து வாகனங்களுக்கும் 100 சதவீதம் வரி விலக்கு அளித்து உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் பேட்டரி மூலம் இயக்கப்படும் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களுக்கு 50 சதவீத வரி சலுகை வழங்க அரசாணை ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்தது.
- தேர்வு நிலை அரசாணையை நிறைவேற்ற வேண்டும்.
- ஊதிய மாற்ற அரசாணை நிறைவேற்ற வேண்டும்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் நல்லமுத்து தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட செயலாளர் தியாகராஜன் மாவட்ட செயலாளர் ஜெயராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொன்.ராஜேந்திரன் வரவேற்றார்.
ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகம் ஒப்புக்கொண்ட ஊராட்சி செயலாளர் பணி விதிகள், சிறப்பு நிலை, தேர்வு நிலை அரசாணையை நிறைவேற்ற வேண்டும்,
கணினி உதவியாளர் பணி வரன்முறை மற்றும் ஊதிய மாற்ற அரசாணை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் அரசு ஊழியர் சங்க முன்னாள் மாவட்ட துணை தலைவர் நடராஜன், சத்துணவு ஊழியர் சங்க மாநில தலைவர் கலா, மாவட்ட துணை தலைவர் லதா, சௌந்தரபாண்டியன் ஆகியோர் கண்டன உரையாற்றினார். முடிவில் மாநில பொருப்பாளர் மாரி.தெட்சிணாமூர்த்தி நன்றி கூறினார்.
- மாதாந்திர உதவித்தொகை ரூ.4 ஆயிரம் அவா்களது வாழ்நாள் முழுவதும் வழங்கப்பட்டு வருகிறது.
- உதவித் தொகை வழங்குவதற்கான அரசாணையை கலெக்டர் எஸ்.வினீத் வழங்கினாா்.
திருப்பூர் :
தமிழக அரசின் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் அகவை முதிா்ந்த தமிழறிஞா்களுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் தோ்வு செய்யப்படும் தமிழறிஞா்களுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ.3,500, மருத்துவப்படி ரூ.500 என மொத்தம் ரூ.4 ஆயிரம் அவா்களது வாழ்நாள் முழுவதும் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி திருப்பூா் மாவட்டத்தில் 2021-22 ம் ஆண்டில் தோ்வு செய்யப்பட்டுள்ள உடுமலையைச் சோ்ந்த ஞா.நெல்சன், இடுவம்பாளையத்தை சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி ஆகியோருக்கு உதவித் தொகை வழங்குவதற்கான அரசாணையை கலெக்டர் எஸ்.வினீத் வழங்கினாா்.முன்னதாக இருவருக்கும் பொன்னாடை அணிவித்து மாவட்ட கலெக்டர் கவுரவித்தார். இந்நிகழ்ச்சியில், திருப்பூா் மாவட்ட தமிழ் வளா்ச்சித் துறை இணை இயக்குநா் இளங்கோ உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
- எப்போது உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும் என்பது குறித்து ஏதும் குறிப்பிடப்படவில்லை.
- அரசாணை ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை:
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் தங்களுடைய உயிர்வாழ் சான்றிதழை அவர்கள் எந்த மாதத்தில் ஓய்வு பெற்றார்களோ அந்த மாதத்தில் வழங்க வேண்டுமென்றும், ஒரு மாதம் சலுகைக் காலம் வழங்கப்படும் என்றும் 31.5.2023 அன்று அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.
இது விடுதலைப் போராட்ட ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின்கீழ் பயன்பெறுபவர்களுக்கும் பொருந்தும் என்றும், இதனை உரிய காலத்தில் மேற்கொள்ளவில்லை என்றால், ஓய்வூதியம் நிறுத்தப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த அரசாணையில் ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டியவர்கள் சிறப்பு நேர்வாக ஜூலை மாதத்தில் சமர்ப்பிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அதே சமயத்தில், முந்தைய ஆண்டுகளில் ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் ஓய்வு பெற்றவர்கள் எப்போது உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும் என்பது குறித்து ஏதும் குறிப்பிடப்படவில்லை. இந்த அரசாணை ஒரு தெளிவற்றதாக இருக்கிறது. இந்த அரசாணை ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் நலனைக் கருத்தில் கொண்டு, உயிர்வாழ் சான்றிதழ் தொடர்பான 31-5-2023 நாளிட்ட நிதித் துறை அரசாணை எண். 165-ஐ உடனடியாக ரத்து செய்ய வேண்டுமென்றும், இதுகுறித்து ஓய்வூதியதாரர்கள் சங்கத்தின் கருத்தினைக் கேட்டு அதன் அடிப்படையில் செயல்பட வேண்டும் என்றும் முதலமைச்சரை கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






