search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "differently abled persons"

    • மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் நீல நிறத்திலான அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது.
    • 1,509 மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை அட்டை வழங்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வரும் வேலைவாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு பணிகள் வழங்கப்பட்டு வருவது தேசிய அளவில் ஓர் முன்னோடி முயற்சியாகும். இந்த திட்ட வேலை அட்டை கோரும் 18 வயது நிரம்பிய மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் பிரத்யேகமாக நீல நிறத்திலான அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை மாநில அளவில் 1 லட்சத்து 70 ஆயிரத்து 767 மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை அட்டை வழங்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் 1,509 மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை அட்டை வழங்கப்பட்டுள்ளது.

    மாற்றுத்திறனாளிகளுக்கு குறைகளை தீர்க்கும் விதமாக மாதந்தோறும் 2-வது செவ்வாய்க்கிழமை வட்டார வளர்ச்சி அலுவலர் அளவிலும், இருமாதங்களுக்கு ஒருமுறை 2-வது செவ்வாய்க்கிழமை ஊரக வளர்ச்சி முகமை இணை இயக்குனர் முன்னிலையில் குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட்டு குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டு வருகிறது.

    இதன்தொடர்ச்சியாக நாளை (புதன்கிழமை) முதல் வருகிற 10-ந் தேதி வரை திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி மன்ற அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. இந்த முகாமை பயன்படுத்தி தாங்கள் வசிக்கும் பகுதியை சேர்ந்த ஊராட்சி மன்ற அலுவலகத்தை தொடர்பு கொண்டு நீலநிற வேலை அட்டையை பெறலாம். இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

    • மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட 4 லட்சத்து 39 ஆயிரத்து 315 பேருக்கு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.
    • டிசம்பர் முதல் இதை நடைமுறைப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர ஓய்வூதியத்தை ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தி வழங்க தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதுகுறித்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறி இருப்பதாவது:

    சமூக நலன் மற்றும் சத்துணவு திட்ட துறையால் செயல்படுத்தப்பட்டு வரும் ஓய்வூதிய திட்டங்களின் கீழ் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் மாத ஓய்வூதியத்தை ரூ.500ல் இருந்து ரூ.1000ஆக உயர்த்தி 2011ம் ஆண்டு மே மாதம் முதல் நடைமுறைப்படுத்த ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

    வருவாய் துறை மூலம் ஓய்வூதியம் பெற்று வரும் கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட 4 லட்சத்து 39 ஆயிரத்து 315 பேருக்கு, அவர்கள் தற்போது பெற்று வரும் ஓய்வூதியம் ரூ.1000த்தில் இருந்து ரூ.1,500ஆக வரும் ஜனவரி 1ம் தேதி முதல் உயர்த்தி வழங்கப்படும். இதன்மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.263 கோடியே 56 லட்சம் கூடுதல் செலவாகும்.

    தற்போது தமிழகத்தில் அரசு உதவித்தொகை பெற்று வரும் இந்திரா காந்தி தேசிய மாற்றுத்திறனுடையோர் ஓய்வூதிய திட்டம், மாற்றுத் திறனுடையோர் ஓய்வூதிய திட்டம் மற்றும் இலங்கை அகதிகளுக்கான மாற்றுத்திறனுடையோர் ஓய்வூதியம் பெற்று வரும் கண்பார்வையற்ற மாற்றுத்திறனுடையோர் உள்ளிட்டவர்களுக்கு வழங்கப்படும் வரும் மாத ஓய்வூதியத்தை ரூ.1000த்தில் இருந்து ரூ.1,500ஆக உயர்த்தி வழங்கப்படுகிறது.

    2022 டிசம்பர் முதல் இதை நடைமுறைப் படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஜனவரி, 2023ல் பயனாளிகளுக்கு வழங்குவதற்கு முடிவு செய்து ரூ.65 கோடியே 89 லட்சத்து 72 ஆயிரத்து 500க்கான நிதி ஒதுக்கீடு செய்து அரசு ஆணையிடுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பசுமலையில், நாளை மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடக்கிறது.
    • கடந்த 24-ந் தேதி முதல் வருகிற 12-ந் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டு பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகின்றன.

    மதுரை

    அனைத்து துறைகளையும் ஒன்றிணைத்து மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவ மற்றும் அலிம்கோ நிறுவனம் மூலமாக உதவி உபகரணங்கள் வழங்குவதற்கான மதிப்பீட்டு முகாம் கடந்த 24-ந் தேதி முதல் வருகிற 12-ந் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டு பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகின்றன. நாளை (12-ந் தேதி) திருப்பரங்குன்றம் அரசு மேல்நிலைப்பள்ளியில் சிறப்பு முகாம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. நிர்வாக காரணங்களுக்காக இந்த முகாம் பசுமலையில் உள்ள திருமலை மன்னர் அரசு கலைக் கல்லூரியில் நடைபெறும் என்று அறிவிக்கப்படுகிறது. இந்த முகாம் காலை 10 மணி முதல் மாலை 4 மணிவரை நடைபெறும். இதில் மாற்றுத்திறன் கொண்ட நபர்கள் அதிக அளவில் கலந்துகொண்டு அரசின் திட்டங்களைப் பெற்று பயனடையலாம். மேற்கண்ட தகவலை மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் தெரிவித்துள்ளார்.

    • மதுரை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம் வருகிற 12-ந் தேதி நடக்கிறது.
    • தினமும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது.

    மதுரை

    அனைத்து துறைகளையும் ஒன்றிணைத்து மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவ மற்றும் அலிம்கோ நிறுவனம் மூலமாக உதவி உபகரணங்கள் வழங்குவதற்கான மதிப்பீட்டு முகாம் வருகிற 24-ந் தேதி முதல் அடுத்த மாதம் 12-ந் தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது.

    அதன்படி வருகிற 24-ந் தேதி நரிமேட்டில் உள்ள ஓ.சி.பி.எம்.பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், 25-ந் தேதி பெரியார் பஸ் நிலையம் அருகில் உள்ள மதுரை கல்லூரி மேல்நிலைப்பள்ளியிலும், 26-ந் தேதி பழங்காநத்தம் டி.வி.எஸ்.மெட்ரிகுலேசன் பள்ளியிலும் முகாம் நடக்கிறது. 27-ந் தேதி வாடிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைபள்ளியிலும், 28-ந் தேதி கொட்டாம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைபள்ளியிலும், 29-ந் தேதி ஒத்தக்கடை உலகனேரி அரசு ஆண்கள் மேல்நிலைபள்ளியிலும் முகாம் நடக்கிறது. 30-ந் தேதி திருப்பாலை யாதவா கல்லூரியிலும், அக்டோபர் 1-ந் தேதி பாத்திமா கல்லூரியிலும், 6-ந் தேதி தியாகராஜர் கல்லூரியிலும், 7-ந் தேதி திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைபள்ளியிலும், 8-ந் தேதி மேலூர் அரசு கல்லூரியிலும் முகாம் நடக்கிறது.

    10-ந் தேதி பேரையூர் அரசு மேல்நிலைபள்ளியிலும், 11-ந் தேதி உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளியிலும், 12-ந் தேதி திருப்பரங்குன்றம் அரசு மேல்நிலைபள்ளியிலும் முகாம்கள் நடக்கிறது.

    இதில் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று தங்களுக்கு தேவையான உபகரணங்கள் பெற விண்ணப்பிக்கலாம்.

    மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் தெரிவித்துள்ளார்.

    ×