மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்

பசுமலையில், நாளை மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடக்கிறது. கடந்த 24-ந் தேதி முதல் வருகிற 12-ந் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டு பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகின்றன.
மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்
Published on

மதுரை

அனைத்து துறைகளையும் ஒன்றிணைத்து மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவ மற்றும் அலிம்கோ நிறுவனம் மூலமாக உதவி உபகரணங்கள் வழங்குவதற்கான மதிப்பீட்டு முகாம் கடந்த 24-ந் தேதி முதல் வருகிற 12-ந் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டு பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகின்றன. நாளை (12-ந் தேதி) திருப்பரங்குன்றம் அரசு மேல்நிலைப்பள்ளியில் சிறப்பு முகாம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. நிர்வாக காரணங்களுக்காக இந்த முகாம் பசுமலையில் உள்ள திருமலை மன்னர் அரசு கலைக் கல்லூரியில் நடைபெறும் என்று அறிவிக்கப்படுகிறது. இந்த முகாம் காலை 10 மணி முதல் மாலை 4 மணிவரை நடைபெறும். இதில் மாற்றுத்திறன் கொண்ட நபர்கள் அதிக அளவில் கலந்துகொண்டு அரசின் திட்டங்களைப் பெற்று பயனடையலாம். மேற்கண்ட தகவலை மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com