என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓய்வூதியம்"

    • இல்லையென்றால் அது 2026 முதல் செல்லாதாகிவிடும்.
    • நவம்பர் 30 ஆம் தேதிக்கு முன் உங்கள் டிஜிட்டல் வாழ்க்கைச் சான்றிதழைச் சமர்ப்பிக்கவும்.

    நாடு முழுவதும் வருகிற டிசம்பர் மாதம் 1-ந்தேதியில் இருந்து 7 முக்கியமான சேவைகளில் வர உள்ள மாற்றம் மற்றும் அப்டேட்கள் குறித்து பார்ப்போம்...

    1 ஆதார் அப்டேட் முறைகள்

    செல்போன் மூலம் ஆதார் அட்டைகளில் செய்யப்படும் அப்டேட்கள் இப்போது எளிதாகிவிட்டன. அதில் குழந்தைகள் ஒரு வருடத்திற்கு இலவச பயோமெட்ரின் அப்டேட்களை பெறலாம். மேலும் பெரியவர்களுக்கு அனைத்து வகையான அப்டேட்டுகளுக்கும் கட்டணங்கள் வசூல் செய்யப்படும்.

    2 பான் லிங்கிங் முறை

    உங்கள் பான் கார் 2024-ம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்கு முன் வழங்கப்பட்டிருந்தால், டிசம்பர் 30-ந்தேதிகள் ஆதாருடன் இணைத்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் அது 2026 முதல் செல்லாதாகிவிடும்.

    3 வங்கியில் நாமினி முறை

    வங்கியில் தற்போது நடைமுறையில் இருக்கும் நாமினி முறையில் இனி 4 பேர் வரை நாமினியாக சேர்த்து சமமான பங்கை ஒதுக்கலாம்.

    4 வலைத்தள பாதுகாப்பு முறை

    வங்கிகளின் பெயரில் போலி இணைப்பு மோசடிகளை குறைக்க வங்கிகள் இனி .bank.in டொமைனைப் பயன்படுத்த உள்ளன.

    5 ஜி.எஸ்.டி. எளிமைப்படுத்தல் விதி

    ஜி.எஸ்.டி. வரியில் சிறு வணிகங்கள் விரைவான ஒப்புதலையும், குறைவான ஜி.எஸ்.டி. அடுக்குகளையும் பெறுகின்றன.

    6 ஓய்வூதியதாரர் விதி

    நவம்பர் 30 ஆம் தேதிக்கு முன் உங்கள் டிஜிட்டல் வாழ்க்கைச் சான்றிதழைச் சமர்ப்பிக்கவும்.

    7 NPS-க்கு UPS விதி

    அரசு ஊழியர்கள் UPS-ஐத் தேர்வுசெய்தால் நவம்பர் 31 ஆம் தேதிக்குள் மாற வேண்டும்.

    • மத்திய அறங்காவலர் குழு கூட்டம் வரும் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் நடக்க உள்ளது.
    • மத்திய அறங்காவலர் குழு கூட்டம் வரும் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் நடக்க உள்ளது/Key decision expected in upcoming board meeting

    புதுடெல்லி:

    ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் மிக உயர்ந்த முடிவெடுக்கும் அமைப்பான மத்திய அறங்காவலர் குழுவின் கூட்டம்

    வரும் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் நடைபெற உள்ளது.

    இந்தக் கூட்டத்தில், குறைந்தபட்ச ஓய்வூதியத்தை மாதத்திற்கு ரூ.1,000 லிருந்து ரூ.2,500 ஆக உயர்த்துவது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பணியாளர் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் குறைந்தபட்ச ஓய்வூதியம் தற்போது மாதத்திற்கு ரூ.1,000 ஆக உள்ளது. இந்தத் தொகை 2014-ம் ஆண்டில் நிர்ணயிக்கப்பட்டது. கிட்டத்தட்ட 11 ஆண்டாக இந்தத் தொகை அப்படியே உள்ளது.

    தொழிற்சங்கங்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் பல்வேறு சங்கங்கள் நீண்ட காலமாக ஓய்வூதியத் தொகையை உயர்த்தக் கோரி வலியுறுத்தி வருகின்றன. எனவே இந்தக் கூட்டத்தில் ரூ.2,500 ஆக அதிகரிப்பது குறித்து பரிசீலிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

    நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான ஓய்வூதியதாரர்களுக்கு நிவாரணம் அளிக்கும் இந்த முடிவு எடுக்கப்படலாம் என்பதால், இந்தக் கூட்டம் அனைவரது கவனத்தையும் கவர்ந்துள்ளது.

    • முன்னாள் குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர் எங்கிருக்கிறார்? என எதிர்க்கட்சிகள் கேள்வி
    • ஜகதீப் தன்கர், மாதம் ரூ.42,000 எம்எல்ஏ ஓய்வூதியம் பெற விண்ணப்பித்துள்ளார்.

    ஜூலை 21ம் தேதி, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளன்று எதிர்பாராத விதமாக பதவியை தன்கர் ராஜினாமா செய்தார்.

    உடல்நலக் காரணங்களுக்காக தான் ராஜினாமா செய்ததாக அவர் கூறினார். இருப்பினும், எதிர்க்கட்சித் தலைவர்கள் அவர் ராஜினாமா செய்ய கட்டாயப்படுத்தப்பட்டதாக குற்றம் சாட்டினர்.

    இதனையடுத்து, முன்னாள் குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர் எங்கிருக்கிறார்? ஜெகதீப் தன்கரின் உடல்நிலை எப்படி உள்ளது? என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.

    இந்நிலையில், முன்னாள் துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர், மாதம் ரூ.42,000 எம்எல்ஏ ஓய்வூதியத்தை பெற ராஜஸ்தான் சட்டப்பேரவை செயலரிடம் விண்ணப்பித்துள்ளார்.

    சட்டப்பேரவை செயலகம் இதற்கான செயல்முறையைத் தொடங்கியுள்ளதாகவும், துணை ஜனாதிபதி பதவியை அவர் ராஜினாமா செய்த தேதியிலிருந்து ஓய்வூதியம் பொருந்தும் என்று சட்டப்பேரவை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    1993 -1998 வரை காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த ஜகதீப் தன்கரின் ஓய்வூதியம் 2019-ல் மேற்கு வங்க ஆளுநராக நியமிக்கப்பட்டபோது நிறுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

    • என்டிஏவில் ஐக்கியமாயுள்ள ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார் தனது முதல்வர் சிம்மாசனத்தை தக்க வைப்பதில் தீவிரமாக உள்ளார்.
    • 1 கோடியே 9 லட்சத்து 69 ஆயிரத்து 255 பேர் பலனடைவார்கள்

    பீகாரில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் வர உள்ள நிலையில் ஆளும் என்டிஏ கூட்டணி மற்றும் ஆர்ஜேடி - காங்கிரசின் இந்தியா கூட்டணி இடையே கடும் போட்டி நிலவுகிறது.

    பல முறை கூட்டணி தாவலுக்கு பின் இறுதியில் பாஜகவின் என்டிஏவில் ஐக்கியமாயுள்ள ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார் தனது முதல்வர் சிம்மாசனத்தை தக்க வைக்க வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளார்.

    அந்த வகையில் மாநிலத்தில் முதியோர் ஓய்வூதியம், மாற்றுத்திறனாளிகள் மற்றும் விதவைகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகை ஆகியவற்றை ரூ.400 இல் இருந்து ரூ.1,100 ஆக முதல்வர் நிதிஷ் குமார் அதிகரித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

    இந்த ரூ.700 அதிகரிப்பு என்பது மாநிலத்தில்  1 கோடியே 9 லட்சத்து 69 ஆயிரத்து 255 பேர் பலனடைவார்கள் என்று நிதிஷ் குமார் தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.

    இந்த ஓய்வூதிய உயர்வு ஜூலை மாதம் முதல் அமலுக்கு வரும் என்றும் மாதத்தில் 10 ஆம் தேதியில் அவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்றும் நிதிஷ் குமார் விளக்கியுள்ளார்.

    • உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஓய்வு பெற்றால் ஆண்டுக்கு ரூ.15 லட்சம் ஓய்வூதியம் தர வேண்டும்.
    • உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஓய்வு பெற்றால் ஆண்டுக்கு ரூ.13.6 லட்சம் ஓய்வூதியம் தர வேண்டும்.

    உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு பாகுபாடின்றி ஒரே மாதிரியான ஓய்வூதியம் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    ஓய்வூதியம் வழங்குவதில் வேறுபாடு என தொடரப்பட்ட வழக்கை தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வு விசாரித்தது.

    அப்போது, மாவட்ட நீதிபதியாக இருந்தோ அல்லது வழக்கறிஞர்களாக இருந்தோ உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியமர்த்தப்பட்டாலும், ஓய்வுபெற்ற அனைத்து உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கும் ஒரு பதவி ஒரு ஓய்வூதியம் என்ற கொள்கை பொருந்தும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது

    ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வூதியம் குறித்து உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள்:-

    * உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஓய்வு பெற்றால் ஆண்டுக்கு ரூ.15 லட்சம் ஓய்வூதியம் தர வேண்டும்.

    உயர்நீதிமன்ற நீதிபதிகள், கூடுதல் நீதிபதிகள் ஓய்வு பெற்றால் ஆண்டுக்கு ரூ.13.6 லட்சம் ஓய்வூதியம் தர வேண்டும்.

    * உயர் நீதிமன்ற நீதிபதி பதவியில் இருக்கும்போதே இறந்தால், அவர் நிரந்தரமாகப் பணியாற்றினாலும் அல்லது கூடுதல் பொறுப்பில் இருந்தாலும், அவரது மனைவி அல்லது சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு மத்திய அரசு குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

    • சென்னை பத்திரிகையாளர் மன்றம் சார்பில் நடத்தப்பட்ட கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது.
    • துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு பத்திரிகை மன்ற நிர்வாகிகள் TELESCOPE-ஐ நினைவுப் பரிசாக வழங்கினர்.

    சென்னை பத்திரிகையாளர் மன்றம் சார்பில் நடத்தப்பட்ட கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழாவில் பங்கேற்ற துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு பத்திரிகை மன்ற நிர்வாகிகள் TELESCOPE-ஐ நினைவுப் பரிசாக வழங்கினர்.

    பின்னர், விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார்.

    அப்போது அவர், " பத்திரிகையோடு தொடர்பு கொண்டவன் என்ற உரிமையில் எனக்கிது பெருமை.

    சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் உட்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    பத்திரிகையாளர் ஓய்வூதியம் ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.12 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது" என்றார். 

    • 1954-ன் மூலம் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    • எம்.பி.க்களின் தினசரி கொடுப்பனவு ரூ.2000 இல் இருந்து ரூ.2500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

    பாராளுமன்றத்தின் தற்போதைய பட்ஜெட் கூட்டத்தொடருக்கு மத்தியில், மத்திய அரசு எம்.பி.க்களின் சம்பளம் மற்றும் படிகளை உயர்த்தியுள்ளது.

    இதனுடன், முன்னாள் எம்.பி.க்களின் ஓய்வூதியமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம், கொடுப்பனவுகள் (ALLOWANCE) மற்றும் ஓய்வூதியச் சட்டம், 1954-ன் மூலம் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    பாராளுமன்ற விவகார அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிக்கையின்படி எம்.பி.க்களின் சம்பளம் ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.1 லட்சத்து 24 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், எம்.பி.க்களின் தினசரி கொடுப்பனவு ரூ.2000 இல் இருந்து ரூ.2500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

    மேலும் முன்னாள் எம்.பி.க்களின் ஓய்வூதியம் ரூ.25 ஆயிரத்திலிருந்து ரூ.31 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய ஒவ்வொரு வருடத்திற்கும் கூடுதல் ஓய்வூதியம் ரூ.2,000 லிருந்து ரூ.2,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் இந்த மாற்றங்கள் அமலுக்கு வருகின்றன.

    • நல வாரியத்தில் வழங்கப்படும் ஓய்வூதியத்தை ரூ.6000 மாக உயர்த்தி வழங்க வேண்டும்.
    • தமிழக அரசு உடல் உழைப்பு நல வாரியத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட ஏ.ஐ.டி.யூ.சி. உடல் உழைப்பு தொழிலாளர் சங்கத்தின் 22-வது பேரவை கூட்டம் இன்று தஞ்சையில் நடைபெற்றது.

    முருகேசன், பானுமதி, கார்த்திக் ஆகியோர் தலமை தாங்கினர். பட்டு கைத்தறி சங்க மாநில தலைவர்மணி மூர்த்தி பேரவை கொடியினை ஏற்றி வைத்தார்.

    அஞ்சலி தீர்மானத்தை சங்கத் துணைத் தலைவர்பரிமளா வாசித்தார். சங்க துணை செயலாளர்சேவையா வரவேற்று பேசினார். ஏ .ஐ. டி. யூ .சி மாநில செயலாளர் சந்திரகுமார் பேரவையை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

    வேலை அறிக்கையை மாவட்ட செயலாளர் கோவி ந்தராஜன் முன்வைத்தார். மாவட்ட பொருளாளர்சுதா வரவு செலவு அறிக்கை சமர்ப்பித்தார்.பின்னர் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.

    ஏஐடியூசி மாவட்ட செயலாளர்தில்லைவனம் பேரவையினை நிறைவு செய்து பேசினார்.

    இந்த பேரவையில் நல வாரியத்தில் வழங்கப்படும் ஓய்வூதியத்தை ரூபாய் 6000 மாக உயர்த்தி வழங்கப்பட வேண்டும், தமிழ்நாடு அரசு உடல் உழைப்பு நல வாரியத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதில் வங்கி ஊழியர் சங்க மாவட்ட பொதுச் செயலாளர்அன்பழகன், போக்குவரத்து சம்மேளன மாநில துணைத்தலைவர் துரை. மதிவாணன், சுமை தூக்கும் சங்கத்தின் மாநில தலைவர் சாமிக்க ண்ணு, தெருவியாபாரிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் முத்துக்கு மரன், ஆட்டோ சங்க மாவட்ட செயலாளர்செந்தில்நாதன், டாஸ்மாக் சங்க மாவட்ட செயலாளர்கோடீஸ்வரன், தலைவர்இளஞ்செழியன், நுகர்பொருள் வாணிப கழக தொழிலாளர் சங்க மாவட்ட பொருளாளர்தியாகராஜன், கட்டுமான சங்க மாவட்ட துணை செயலாளர்செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • தொழிலாளர்களுக்கு எதிரான சட்டங்களை ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும்.
    • 60 வயது நிரம்பிய அனைவருக்கும் மாதம் ரூ. 6 ஆயிரம் ஓய்வூதியம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டத்தில் செயல்பட்டு வருகின்ற ஏ.ஐ.டி.யூ.சி தொழிற்–சங்கத்தின் தஞ்சை மாவட்ட 13- வது மாநாடு தஞ்சாவூர் கீழராஜ வீதியில் உள்ள மாவட்ட அலுவலகம் சிங்காரவேலர் நினைவரங்கத்தில் இன்று காலை நடைபெற்றது. மாநாட்டின் தலைமை குழுவாக மாவட்ட தலைவர் சேவையா, துணைத் தலை–வர்கள் சாமிக்கண்ணு, பரிமளா ஆகியோர் தலைமை வகித்தனர்.

    அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் மாவட்ட பொதுச் செயலாளர் அன்பழகன் 13-வது மாவட்ட மாநாட்டு கொடியினை ஏற்றி வைத்தார். அஞ்சலி தீர்மானத்தை மாவட்ட துணை தலைவர் முத்துக்குமரன் வாசித்தார். மாநாட்டில் மாவட்ட துணைச் செயலாளர் துரை.மதிவாணன் வரவேற்று பேசினார். ஏ. ஐ. டி.யூ.சி தேசிய செயலாளர் வகிதா நிஜாம் மாநாட்டினை தொடக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

    வேலை அறிக்கையை மாவட்ட செயலாளர் தில்லைவனம் முன் வைத்தார். மாவட்ட பொரு–ளாளர் கோவிந்தராஜன் வரவு செலவு அறிக்கை சமர்ப்பித்தார்.

    மாநாட்டினை வாழ்த்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெற்கு மாவட்ட செயலாளர் முத்துஉத்திராபதி, வடக்கு மாவட்ட செயலாளர் மு.அ.பாரதி, விவசாய சங்க மாவட்ட செயலாளர் பாலசுந்தரம், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பக்கிரிசாமி, இந்திய தேசிய மாதர் சம்மேளன மாவட்ட செயலாளர் விஜயலட்சுமி, அரசு பணியாளர் சங்க மாநில துணைத்தலைவர் திருநாவுக்கரசு உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினார்கள்.

    பின்னர் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. மாவட்ட துணைச் செயலாளர் செந்தில்நாதன், தீர்மானங்களை வாசித்தார். மாநில செயலாளர் சந்திர–குமார் மாநாட்டினை நிறைவு செய்து உரை–யாற்றினார். மாவட்ட துணைச் செயலாளர் மணி மூர்த்தி நன்றி கூறினார்.

    மாநாட்டில், ஒன்றிய அரசு தொழிற்சங்க சட்டங்கள் சுருக்கி திருத்தியதை திரும்ப பெற வேண்டும், விவசாயிகள் பாதுகாக்கப்பட வேண்டும், உடன–டியாக பட்டு கைத்தறிவுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும், போக்குவரத்து, மின்வாரியம், நுகர்பொருள், ஆவின் உள்ளிட்ட மத்திய ,மாநில பொதுத்துறைகளை தனியாருக்கு தாரை வார்ப்பதையும், தனியார்மய நடவடிக்கைகளையும் கைவிட வேண்டும், சிறு குறு தொழில்களை மேம்–படுத்தவும், பாதுகாக்கவும் திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும்.

    மின் கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு, வீட்டு வரி, குடிநீர் வரி உயர்வுகளை திரும்பப் பெற வேண்டும், கட்டுமானம், உடலுழைப்பு, கைத்தறி, ஆட்டோ உள்ளிட்ட நல வாரியங்களை பாதுகாப்பதுடன் நல–வாரியங்களில் பதிவு செய்து 60 வயது நிரம்பிய அனைவருக்கும் மாதம் ரூ. 6 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும், தஞ்சாவூரை மையமாக கொண்டு சட்ட கல்லூரியை உருவாக்க வேண்டும்

    பாரதிதாசன் பல்கலைக்–கழகத்தில் உள்ள உறுப்பு கல்லூரிகளை பிரித்து தஞ்சையை மையமாகக் கொண்டு தனிப் பல்கலைக்கழகம் உருவாக்க வேண்டும், தெரு வியாபாரிகளை கணக்கில் எடுத்து அடையாள அட்டை வழங்க வேண்டும், திலகர் திடல் அம்மா மாலை நேர காய்கறி மார்க்கெட் கடைகளுக்கு மின் வசதி, குடிநீர் வசதி, கழிவறை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும், தஞ்சாவூரில் நவீன கட்டமைப்புடன் ஒருங்கிணைந்த விளையாட்டு மைதானம் அமைத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    இந்த மாநாட்டில் ஏராளமானார் கலந்து கொண்டனர்.

    • அரசு ஊழியர்களுக்கு நாடு முழுவதும் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும்.
    • இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாட்டை நீக்கி சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும்.

    திருவாரூர்:

    தமிழ்நாடு தொடக்கப்ப ள்ளி ஆசிரியர் கூட்ட ணியின் பொதுச் செயலாளர் ரெங்கராஜன் திருவாரூரில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது;-

    அகில இந்திய ஆசிரியர் கூட்டணியின் முடிவின்படி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு நாடு முழுவதும் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும்.

    கல்வி நலன் மாணவர் நலன் ஆசிரியர் நலன் இவைகளுக்கு எதிரான மத்திய அரசின் தேசியக் கல்விக் கொள்கையினை கைவிட்டு, அந்தந்த மாநில கல்விக் கொள்கைகளின் படி கற்பித்தல் பணியை தொடர அனுமதிக்க வேண்டும்.

    ஒப்பந்த அடிப்படையில் ஆசிரியர்கள் நியமனம் செய்வதை கைவிட்டு காலமுறை ஊதியத்தில் ஆசிரியர்கள் நியமனம் செய்திட வேண்டும்.

    ஊதியக்குழு அறிக்கைகளை நாடு முழுவதும் ஒரே மாதிரியாக அமல்ப டுத்த வேண்டும்.

    இதற்கு ரிய நிதியினையும் மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கிட வேண்டும். இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாட்டை நீக்கி சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும்.

    இவைகள் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகில் இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

    இந்தப் போராட்டத்தில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

    மத்திய அரசு கல்வியினை மாநில அரசு பட்டியலில் சேர்க்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

    இதனை தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி வரவேற்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.

    • கோவில் பூசாரிகளுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    • மாவட்ட தலைவர் ராமமூர்த்தி நன்றி கூறினார்.

    சாயல்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி சமத்துவபுரம் பகுதியில் கோவில் பூசாரிகள் நல சங்க மாவட்ட மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. தென் மண்டல தலைவர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார்.

    மாநில ஆலோசனை குழு உறுப்பினர் முருகேசன், மாவட்ட செயலாளர் பஞ்சவர்ணம் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் ராமமூர்த்தி வரவேற்றார். கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    ராமநாதபுரம் மாவ ட்டத்தில் அதிக அளவில் ஓய்வு பெற்ற பூசாரிகள் இருப்பதால் தமிழக அரசிடம் ஓய்வூதியம் கேட்டு விண்ணப்பம் செய்து உள்ளனர். தகுதியான பூசாரிகள் விண்ணப்பத்தை தேர்வு செய்து ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பூசாரிகள் நல வாரியத்திற்கு அலுவல்சாரா உறுப்பினர்களை தமிழக அரசு விரைந்து நியமனம் செய்ய வேண்டும். இந்து சமய அறநிலைத்துறை மூலம் பூசாரிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவே ற்றப்பட்டன.

    பொறுப்பாளர்கள் ராமநாதபுரம் மாவட்டத் துணைத் தலைவர் பொன் முனியசாமி, கடலாடி ஒன்றிய செயலாளர் லோகநாதன், மாவட்ட துணை செயலாளர் அய்யனகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். மாவட்ட தலைவர் ராமமூர்த்தி நன்றி கூறினார்.

    • 21 மாத நிலுவைத் தொகையை உடனடியாக வழங்கிட வேண்டும்.
    • சாலைப் பணியாளா்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணி காலமாக அறிவிக்க வேண்டும்.

    திருப்பூர்:

    தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் பல்லடம் வட்டக் கிளையின் 15 -வது பேரவைக் கூட்டம் பல்லடத்தில் நடைபெற்றது.இக்கூட்டத்துக்கு வட்ட கிளைத் தலைவா் பாண்டியம்மாள் தலைமை வகித்தாா்.

    கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்களின் விவரம் வருமாறு:- 21 மாத நிலுவைத் தொகையை உடனடியாக வழங்கிட வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். முடக்கப்பட்ட சரண்டா் விடுப்பு அகவிலைப்படி ஊதியத்துடன் நிலுவை தொகையையும் வழங்க வேண்டும்.சாலைப் பணியாளா்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணி காலமாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

    மாவட்ட செயலாளா் பாலசுப்பிரமணியம், வட்ட கிளைச் செயலாளா் ஆறுச்சாமி, பொருளாளா் ஜெயகுமாரி, மாவட்ட சத்துணவு ஊழியா் சங்கத்தலைவா் ராணி, மாவட்டச் செயலாளா் முருகேசன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

    ×