என் மலர்

  நீங்கள் தேடியது "Retired judge"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருப்பதி அருகே ஓய்வு பெற்ற நீதிபதியும் அவரது மனைவியும் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #JudgeSuicide
  திருப்பதி:

  திருப்பதியை அடுத்த  திருச்சானூரில் வசித்து வந்த ஓய்வு பெற்ற நீதிபதி சுதாகர் (வயது 62), நேற்று காலை ரேணிகுண்டா அருகே ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்தார். அவரது உடலை திருப்பதி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிய போலீசார், தற்கொலை குறித்து விசாரித்து வந்தனர். தற்கொலை செய்த இடத்தில் இருந்து நீதிபதி சுதாகர் எழுதிய கடிதம் கிடைத்துள்ளது. இதுபற்றிய முழு விவரங்களையும் போலீசார் வெளியிடவில்லை. ஆனால், உடல்நலக் குறைவு காரணமாக அவர் தற்கொலை முடிவை எடுத்திருப்பதாக தெரிவித்தனர்.

  இதற்கிடையே, சுதாகர் மரணம் குறித்து தகவல் அறிந்த அவரது மனைவி வரலட்சுமி (வயது 58) கடும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தார். கணவரின் உடலை வாங்குவதற்கு வீட்டில் உள்ளவர்கள் சென்றபோது, கணவர் தற்கொலை செய்த அதே இடத்திற்கு நேற்று இரவு சென்ற வரலட்சுமி, ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்தார்.

  இருவரின் தற்கொலை குறித்தும் ரேணிகுண்டா ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  கணவரும் மனைவியும் அடுத்தடுத்து ஒரே இடத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. #JudgeSuicide
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.ஜே.வசீப்தர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது. #ThoothukudiSterlite
  புதுடெல்லி:

  தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் மாசுபடுவதாகவும், அதனால் பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டி வந்தனர். இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி கடந்த மே மாதம் 22‍-ந்தேதி பொதுமக்கள் நடத்திய போராட்டத்தில் கலவரம் வெடித்தது.  அப்போது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் பலியானார்கள். இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இதைத்தொடர்ந்து மே 28-ந்தேதி ஸ்டெர்லைட் ஆலை மூடி சீல் வைக்கப்பட்டது.

  ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை எதிர்த்து, ஆலையை நடத்தி வந்த வேதாந்தா நிறுவனம், தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தது. அந்த மனுவில், ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதில் உள்நோக்கம் உள்ளதாகவும், ஆலை உற்பத்தியால் மாசு உண்டாவதாகவும் கூறப்படும் வாதத்தை ஆராய, குழு அமைக்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டது.

  வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனுவை, தள்ளுபடி செய்ய வேண்டும் என தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு வாதிட்டது. ஆனால் தமிழக அரசின் வாதத்தை தேசிய பசுமை தீர்ப்பாயம் நிராகரித்ததோடு, ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என்ற வேதாந்தாவின் மனுவை விசாரணைக்கு ஏற்றது. இந்த விசாரணை தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவர் நீதிபதி ஏ.கே.கோயல் தலைமையில் நடந்தது.

  வழக்கை விசாரித்த பசுமை தீர்ப்பாய நீதிபதி, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும். அந்த குழுவில் மாசு கட்டுப்பாடு வாரியம் மற்றும் சுற்றுச்சூழல் நிபுணர்கள் இடம்பெற வேண்டும். மேலும் இந்த குழு, ஆறு வாரங்களுக்குள் தங்கள் ஆய்வு பணிகளை முடித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

  இதைத்தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.ஜே.வசீப்தர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது. அவருடன் மேலும் அந்த குழுவில் மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் மற்றும் மத்திய வனத்துறையை சேர்ந்த‌ 2 பேரும் இடம்பெற்றுள்ளார்கள்.

  இந்த குழு ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்பட்டுள்ள மாசு குறித்து ஆய்வு செய்யும். அதை தொடர்ந்து 6 வாரத்தில் குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கும். ஓய்வுபெற்ற நீதிபதி வசீப்தர் ஏற்கனவே பஞ்சாப், அரியானா மாநிலங்களில் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. #ThoothukudiSterlite

  ×