என் மலர்
நீங்கள் தேடியது "consultation meeting"
- பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாதாந்திர குறுவள மைய அளவிலான கலந்தாலோசனை கூட்டம், ஜெயங்கொண்டம் ஆண்கள் மாதிரி மேல்நிலைப்பள்ளியில் பாட வாரியாக நடைபெற்றது.
- அடுத்த மாதத்திற்கான பாடத்திட்டம் குறித்த கலந்தாலோசனை பாடவாரியாக நடத்தப்பட்டது.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஒன்றியத்தில், 6-ம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பாடம் எடுக்கக்கூடிய பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாதாந்திர குறுவள மைய அளவிலான கலந்தாலோசனை கூட்டம், ஜெயங்கொண்டம் ஆண்கள் மாதிரி மேல்நிலைப்பள்ளியில் பாட வாரியாக நடைபெற்றது.
பயிற்சியினை வட்டார வள மைய மேற்பார்வையாளர்(பொறுப்பு) கண்ணதாசன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். மாவட்ட கல்வி அலுவலர் ஜெயா, வட்டார கல்வி அலுவலர் ராசாத்தி ஆகியோர் பயிற்சியை பார்வையிட்டு ஆசிரியர்களுக்கு கருத்துகளை வழங்கினர். 286 பட்டதாரி ஆசிரியர்களும், ஆசிரியர் பயிற்றுனர்களும் கலந்து கொண்டனர்.
அடுத்த மாதத்திற்கான பாடத்திட்டம் குறித்த கலந்தாலோசனை பாடவாரியாக நடத்தப்பட்டது.
பள்ளியின் தலைமை ஆசிரியர் ராஜ்குமார், வட்டார பயிற்சி ஒருங்கிணைப்பாளர் அந்தோணி லூர்து சேவியர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்
- சங்கரன்கோவில் -தென்காசி சாலை இணைப்பு குறித்து விவசாயிகளிடம் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது.
- விவசாயிகளிடம் இருந்து பெறப்படும் விவசாய நிலத்திற்கு 3 மடங்கு விலை நிர்ணயம் செய்து தர வேண்டும்.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சங்கரன் கோவில் சாலையில் உள்ள புதிய பஸ் நிலையத்தில் இருந்து புதியாதிகுளம் வழியாக தென்காசி சாலையுடன் இணைப்பு சாலை அமைப்பது குறித்து 2 கி.மீ தூரத்திற்கு நிலத்தை கையகப்படுத்துதல் சம்பந்தமாக விவசாயி களிடம் கருத்து கேட்பு கூட்டம் ராஜபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்தது.
வட்டாட்சியர் சீனிவாசன் தலைமையில் நடந்த கூட்டத்தில் திருச்சி மாவட்ட சிறப்பு வருவாய் அலுவலர் ஜானகி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு விவசாயிகளிடம் கருத்துகளை கேட்டறிந்தார்.
தமிழக விவசாயிகள் சங்க விருதுநகர் மாவட்ட தலைவர் ராமச்சந்திர ராஜா, முன்னோடி விவசாயி தர்மலிங்க ராஜா உள்பட 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கருத்துக்களை தெரிவித்தனர். விவசாயிகளிடம் இருந்து பெறப்படும் விவசாய நிலத்திற்கு 3 மடங்கு விலை நிர்ணயம் செய்து தர வேண்டும்.
ஏற்கனவே ஆய்வு செய்த தீர்ப்பை நிறுத்தி வைத்து மறு ஆய்வு செய்ய வேண்டும். கையகப்படுத்திய நிலம் தவிர இதர பாசன விவசாயிகளுக்கு பாசனம் மற்றும் இதர வழிமுறைகள் குறித்து விவசாயிகள் விளக்கி கூறினர்.
இதில் திருநெல்வேலி நிலம் கையகப்படுத்துதல் குறித்த உதவி பொறியாளர் பொன் முரளி, விருதுநகர் சிறப்பு தாசில்தார் நிலம் கையகப்படுத்துதல் மாரீஸ்வரன் உள்பட அதிகாரிகள், விவசாயிகள் பங்கேற்றனர்.
- ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆலோசனை
- கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தகவல்
ராணிப்பேட்டை:
மாநிலக் கல்விக் கொள்கை தொடர்பான பல்வேறு காரணி கள் குறித்து ராணிப்பேட்டை மாவட்ட அளவிலான கருத்துக் கேட்புக் கூட்டம் ராணிப்பேட்டை அரசு மேல்நிலைப் பள் ளியில் இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணி முதல் 11 மணி வரை நடக்கிறது.
ராணிப்பேட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் உஷா தலைமை தாங்குகிறார். கூட்டத்தில் கல்வியாளர்கள், தன்னார்வலர்கள், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டு தங்களின் கருத்துக்கள் மற்றும் ஆலோச னைகளை வழங்கலாம்.
மேலும் மாநிலக் கல்வி கொள்ளை தொடர்பான தங்களின் கருத்துகளை எழுத்து பூர்வமாகமுழுமையான முகவரி மற்றும் செல்போன் எண்ணுடன் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ராணிப்பேட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளரிடம் ஒப்படைக்கலாம்.
இந்த தகவலை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
- வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது
- மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
வேலூர்:
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மாநில கல்வி கொள்கை உயர்மட்ட குழு மண்டல அளவிலான கருத்து கேட்பு கூட்டம் இன்று நடந்தது.
கூட்டத்திற்கு டெல்லி முன்னாள் தலைமை நீதிபதி முருகேசன் தலைமை தாங்கினார். கலெக்டர் குமாரவேல் பாண்டியன், மாநில திட்டக்குழு உறுப்பினர் பேராசிரியர் சீனிவாசன், சென்னை யூனிசெப் நிறுவனத்தின் முன்னாள் கல்வி ஆலோசகர் அருணா ரத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் பேசியதாவது:-மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பாடத்திட்டம் அமைப்பது தொடர்பாக கருத்து கேட்கப்பட்டு வருகிறது.
இந்தியாவில் முன் மாதிரியாக தமிழகத்தில் கல்விக்கான தனி குழு அமைத்துள்ளனர். வேறு எங்கும் அமைக்கப்பட வில்லை.
மாநிலம் முழுவதும் பெற்றோர்கள் ஆசிரியர்கள் மாணவர்களிடம் கருத்து கேட்கப்பட்டு அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு இதுவரை 6 மண்டலங்களில் கருத்து கேட்கப்பட்டுள்ளது. 7-வது வேலூரில் இந்த கூட்டம் நடைபெற்றுள்ளது. நாளை சென்னையில் இந்த கூட்டம் நடைபெற உள்ளது. மற்ற இடங்களில் கூட்டத்தின் போதே மாணவர்கள் முன் வரிசையில் அமர வைக்கப்பட்டிருந்தனர். ஆனால் இந்த கூட்டத்தில் பின்னால் அமர வைக்கப்பட்டுள்ளனர். இந்த கூட்டத்தின் நோக்கமே மாணவர்களின் கருத்துக்களை பெறுவது தான். எனவே மாணவர்கள் முன்னால் வரிசையில் அமர்ந்து தங்கள் கருத்துக்களை தெரிவிக்க வேண்டும்.
கருத்துக்களை தெரிவிக்கும் போது மாணவர்கள் அச்சம், தயக்கமின்றி பேசலாம்.தங்க.ள் கருத்துக்களை தாராளமாக தெரிவிக்கலாம் அதுதான் கூட்டத்தின் முக்கிய எதிர்பார்ப்பாகும்.
இவர் அவர் பேசினார். கூட்டத்தில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த தன்னார்வலர்கள் கல்வியா ளர்கள் மாணவர்கள் அவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
- சுற்றுலாத்துறையின் சார்பில், மாவட்ட அளவிலான துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் சுற்றுலா தொழில் முனைவோர்களுடனான ஆலோசனைக்கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.
- சுற்றுலா தொழில் முனை வோர்களாக உருவாக்கிட துறை சார்ந்த அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து பணியாற்றிட வேண்டும் என தெரிவித்தார்.
தேனி:
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், சுற்றுலாத்துறையின் சார்பில், மாவட்ட அளவிலான துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் சுற்றுலா தொழில் முனைவோர்களுடனான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமையில் நடைபெற்றது.
தமிழக அரசு சுற்றுலாத்துறையின் மூலம் தமிழகத்திலுள்ள சுற்றுலாத்தளங்களை மேம்படுத்திடும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதனடிப்படையில், உணவுடன் கூடிய தங்கும் விடுதி மற்றும் வீட்டில் தங்கும் விடுதி, சுற்றுலா ஆப்ரேட்டர், பூங்கா ஆப்ரேட்டர், சாகச சுற்றுலா ஆப்ரேட்டர் போன்ற சுற்றுலா தொழில் முனைவோர்களுக்கு தமிழ்நாடு சுற்றுலாத்துறை வழங்கப்பட்டுள்ள வழிக்காட்டு நெறிமுறை களின்படி இணையதளத்தில் பதிவு செய்திட அறிவுறுத்தியுள்ளது.
பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டதும் சுற்றுலா தொழில் முனைவோர்களுக்கு பதிவு சான்றிதழ் இணையதளத்தின் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேலும், இதுதொடர்பான விபரங்களுக்கு மாவட்ட சுற்றுலா அலுவலரை தொடர்பு கொண்டு விபரங்களை பெற்றுக் கொள்ளலாம். கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள சுற்றுலா தொழில் முனைவோர்கள் புதிதாக சுற்றுலா தொழில் முனை வோர்களை கண்டறிந்து அவர்களை சுற்றுலா தொழில் முனை வோர்களாக உருவாக்கிட துறை சார்ந்த அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து பணியாற்றிட வேண்டும் என தெரிவித்தார்.
- நிலவரி திட்ட கணக்கினை கணிப்பொறியில் பதிவு செய்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணிகளுக்கான ஆய்வுக்கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது.
- வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், நிலஅளவையர்கள் கலந்துகொண்டனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டாட்சியர் அலுவலக கூட்டரங்கில் நத்தம் நிலவரி திட்ட கணக்கினை கணிப்பொறியில் பதிவு செய்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணிகளுக்கான ஆய்வுக்கூட்டம் மாவட்ட கலெக்டர் விசாகன் தலைமையில், மாவட்ட வருவாய் அலுவலர் லதா முன்னிலையில் நடைபெற்றது. இதில் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், நிலஅளவையர்கள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பேசியதாவது:-
திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் நத்தம் நிலவரி திட்ட கணக்கினை கணிப்பொறியில் பதிவு செய்யும் பணிகளும், இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணிகளும் விரைந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும். நீங்கள் மேற்கொள்ளும் பதிவுகளை முழுமையாக சரியாக செய்து, முடிக்க வேண்டும். இப்பணியின்போது, பெயர், முதலெழுத்து மற்றும் பகுதி, சர்வே எண் என பல்வகை தவறுகளை தனித்தனியாக பிரித்து, அவைகளை சரி செய்திட வேண்டும்.
கிராம நிர்வாக அலுவலர்களாக பணியாற்றும் நீங்கள் சமூகத்திற்கான அர்ப்பணிப்புடன் பணியாற்றிட வேண்டும். உங்களால்தான் அடித்தட்டு மக்களின் வாழ்க்கையில் மாற்றம் கொண்டுவர முடியும். பட்டா வழங்குதல், பல்வேறு சான்றிதழ்கள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளையும் விரைந்து செய்து கொடுக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம் உங்களுக்குத் தேவையான உதவிகளை செய்ய தயாராக உள்ளது. அனைவரும் ஒருங்கிணைந்து இப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பேசினார்.
- விளையாட்டு நிகழ்ச்சி, முதியோர் இல்லத்தில் உணவு வழங்குதல் போன்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- 30 வார்டுகளில் இருந்து இளைஞர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டர்.
ஊட்டி,
தி.மு.க இளைஞர் அணி செயலாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி_ஸ்டாலின் 45-வது பிறந்தநாளை முன்னிட்டு குன்னூர் நகர அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் மற்றும் நகர இளைஞரணி அமைப்பாளர் பத்மநாபன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
நகர செயலாளர் ராமசாமி, மாநில சிறுபான்மை துனை செயலாளர் அன்வர்கான், தலைமை பேச்சாளர் ஜாகீர் உசேன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் 30 வார்டுகளில் இருந்து இளைஞர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டர். இந்நிகழ்ச்சியில் அனைத்து வாடுகளிலும் கொடி ஏற்றுதல், ரத்ததான முகாம், விளையாட்டு நிகழ்ச்சி, முதியோர் இல்லத்தில் உணவு வழங்குதல் போன்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நகர இளைஞரணி துணை அமைப்பாளர்கள் சையது மன்சூர், சாதிக் பாட்சா, பிரவீன் மற்றும் இளைஞர் அணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி முடிவில் இளைஞர் அணி துணை அமைப்பாளர் செலின் ராஜா நன்றியுரை கூறினார்.
- குவாரி அமைப்பது தொடா்பாக கருத்துகேட்பு கூட்டம் சில மாதங்களுக்கு முன்பாக நடைபெறவிருந்த நிலையில், நிா்வாகக் காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டது.
- ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் டிசம்பா் 16ந் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் :
மடத்துக்குளம் அருகே உள்ள மைவாடி கிராமத்தில் கல்குவாரி அமைப்பது தொடா்பாக கருத்துகேட்பு கூட்டம் டிசம்பா் 16 -ந் தேதி நடைபெறுகிறது.
இதுகுறித்து திருப்பூா் மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
திருப்பூா் மாவட்டம் மடத்துக்குளம் வட்டம் மைவாடி கிராமத்தில் சாதாரண கற்கள் மற்றும் குவாரி அமைப்பது தொடா்பாக பொதுமக்கள் கருத்துகேட்பு கூட்டம் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக நடைபெறவிருந்த நிலையில், நிா்வாகக் காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், குவாரி அமைப்பது தொடா்பாக பொதுமக்கள் கருத்துகேட்பு கூட்டம் மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் டிசம்பா் 16ந் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தென்காசி மாவட்ட கலெக்டர் கூட்டரங்கில் அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகள் உடன் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.
- சிறப்பு முகாம் அமைத்து புதிய வாக்காளர்களை சேர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்
தென்காசி:
தென்காசி மாவட்ட கலெக்டர் கூட்டரங்கில் வாக்காளர் பட்டியல் கூடுதல் ஆணையர் (நிலம்)மேற்பார்வையாளர் ஜெயந்தி தலைமையில் மாவட்ட கலெக்டர் ஆகாஷ் முன்னிலையில் அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகள் உடன் ஆலோசனை மற்றும் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.இதில் வாக்காளர் பட்டியல் மேற்பார்வை யாளர் ஜெயந்தி கூறிய தாவது:-
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி2023 ஜனவரி 1 -ந் தேதியினை தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு சிறப்பு சுருக்க திருத்தம் 2023-க்கான பணிகள் நடைபெற்று வருகிறது. அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகள் உடன் கருத்து கேட்கப்பட்டது. மேலும் அனைத்து துறை அலுவலர்களுக்கும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியினை விரைந்து முடிக்கவும் அனைத்து கல்லூரிகளிலும் சிறப்பு முகாம் அமைத்து புதிய வாக்காளர்களையும் சேர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக கடைய நல்லூர், தென்காசி சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் சேர்த்தல், திருத்தம், நீக்கம் மற்றும் ஆதார் இணைப்பு பணிகள் குறித்து பார்வை யிடப்பட்டது.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்,வாக்காளர் பதிவு அலுவலர்களான கோட்டாட்சியர், தென்காசி மற்றும் சங்கரன்கோவில் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களான வருவாய் தாசில்தார் மற்றும் நகராட்சி கமிஷனர்கள், தனி தாசில்தார் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இவ்வாறு அவர் கூறினார்.
- உதயநிதி ஸ்டாலினுக்கு வரவேற்பு அளிப்பது குறித்து தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை நடந்தது.
- மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கேட்டுகடையில் தி.மு.க. ஒன்றியம் மற்றும் பேரூர் நிர்வாகிகள் இந்த கூட்டம் நடைபெற்றது.
அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கேட்டுகடையில் தி.மு.க. ஒன்றியம் மற்றும் பேரூர் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஒன்றிய செயலாளர்கள் தன்ராஜ், பரந்தாமன் ஆகியோர் தலைமை தாங்கினர். பொதுக்குழு உறுப்பினர் முத்தையன், ஒன்றிய அவை தலைவர் நடராஜன், பேரூர் செயலாளர்கள் ரகுபதி, மனோகரவேல் பாண்டியன், பேரூராட்சி சேர்மன் ரேணுகாஈஸ்வரி கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி துணை சேர்மன் சுவாமிநாதன் வரவேற்று பேசினார்.
இந்த கூட்டத்தில் மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நலத்திட்ட உதவிகள் வழங்க மதுரை வருவதையொட்டி அவருக்கு அலங்காநல்லூர் ஒன்றியம் மற்றும் பேரூர் தி.மு.க. சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் ஒன்றிய சேர்மன் பஞ்சு, துணை சேர்மன் சங்கீதா மணிமாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் இளைஞரணி சந்தனகருப்பு, மாணவரணி பிரதாப் ஆகியோர் நன்றி கூறினர்.
- எஸ்.எஸ்.என். திருமண மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு சிலை அமைப்பு குழுத் தலைவர் எம்.எஸ்.காமராஜ். ஜான்ரவி தலைமை தாங்கினார்.
- கூட்டத்தில் புதிய சிலையை வடிவமைப்பது குறித்தும், அதற்கு நிதி திரட்டுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
ஆலங்குளம்:
ஆலங்குளம் காமராஜர் சிலை பராமரிப்புக்குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஆலங்குளம் எஸ்.எஸ்.என். திருமண மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு சிலை அமைப்பு குழுத் தலைவர் எம்.எஸ்.காமராஜ். ஜான்ரவி தலைமை தாங்கினார். நிர்வாகிகள் அலெக்ஸ், பர்வீன், செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் நெல்லை எம்.பி. ராமசுப்பு, தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன், தென்காசி பழனிநாடார் எம்.எல்.ஏ. ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
கூட்டத்தில் புதிய சிலையை வடிவமைப்பது குறித்தும், அதற்கு நிதி திரட்டுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. சிலை அமைக்கும் பணிக்கு முதல் தவணையாக சிவபத்மநாதன் ரூ. 1 லட்சத்து ஆயிரத்தை நிர்வாகிகளிடம் அளித்தார். நிகழ்ச்சியில் ஆலங்குளம் அனைத்துக் கட்சி, அமைப்புகள், சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு 8-ந் தேதி தென்காசி வருகை தர உள்ளார்.
- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தென்காசி மாவட்டத்தின் மீது தனிக்கவனம் செலுத்தி வருவதாக அமைச்சர் கூறினார்.
தென்காசி:
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக வருகிற 8-ந் தேதி தென்காசி மாவட்டத்திற்கு வருகிறார்.
ஆய்வு கூட்டம்
இதை முன்னிட்டு அனைத்துத்துறை அலுவலர்கள் உடனான முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச் சந்திரன் தலைமையில் தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச் சந்திரன் பேசியதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தென்காசி மாவட்டத்திற்கு முதன்முறையாக அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு 8-ந் தேதி வருகை தர உள்ளார். நிகழ்ச்சியில் பல்வேறு அரசுத்துறைகள் சார்பில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளார்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தென்காசி மாவட்டத்தின் மீது தனிக்கவனம் செலுத்தி இம்மாவட்டத்தில் நடை பெறும் அனைத்து நிகழ்வு களையும் உன்னிப்பாக கவனித்து வருகிறார். இவ் விழா சிறப்பாக நடைபெறும் வகையில், அனைத்துத் துறை அலுவலர்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணிகளில் தனிக்கவனம் செலுத்தி, ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்
கூட்டத்தில், மாவட்ட கலெக்டர் ஆகாஷ், தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் சிவபத்மநாதன், ராஜா எம்.எல்.ஏ., தனுஷ் குமார் எம்.பி., மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயனுலாப்தீன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை (திட்ட இயக்குநர்) மைக்கேல் ஆண்டனி பெர்னாண்டோ, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முத்துமாதவன், அனைத்துத்துறை முதல் நிலை அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.