search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TRAINING WORKSHOP"

    • தூத்துக்குடி தபால் துறை உதவி கண்காணிப்பாளர் வசந்த சிந்துதேவி தகவல் தொழில்நுட்ப துறையில் தொழில் வளர்ச்சியை உருவாக்குதல் என்ற தலைப்பில் பேசினார்.
    • மேலும் ‘கட்டமைக்கப்பட்ட மொழி வினவல்’ மற்றும் ‘பைதான்’ கணினி மொழிக்கான செயல்முறை பயிற்சி அளிக்கப்பட்டது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் கணினி பயன்பாட்டியல் துறை சார்பில், 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான 'தொழில் வளர்ச்சி செறிவூட்டல் திட்டம்' என்ற தலைப்பில் பயிற்சி பட்டறை நடந்தது. கல்லூரி முதல்வர் ஜெயந்தி தலைமை தாங்கினார். கணினி பயன்பாட்டியல் துறைத்தலைவர் (பொறுப்பு) அனிதா வரவேற்று பேசினார். தூத்துக்குடி தபால் துறை உதவி கண்காணிப்பாளர் வசந்த சிந்துதேவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தகவல் தொழில்நுட்ப துறையில் தொழில் வளர்ச்சியை உருவாக்குதல் என்ற தலைப்பில் பேசினார். மேலும் 'கட்டமைக்கப்பட்ட மொழி வினவல்' மற்றும் 'பைதான்' கணினி மொழிக்கான செயல்முறை பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் திருச்செந்தூர் செந்தில்முருகன் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி பிளஸ்-2 மாணவிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர். ஒருங்கிணைப்பாளர் இந்துமதி நன்றி கூறினார்.

    திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் கணித கருத்தரங்கம் நடந்தது. கல்லூரி முதல்வர் ஜெயந்தி தலைமை தாங்கினார். பாரதிதாசன் பல்கலைக்கழக கணித அறிவியல் பள்ளி கவுரவ பேராசிரியர் மருதை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு 'சி.எஸ்.ஐ.ஆர். தேர்வில் சிக்கல் தீர்க்கும் நுட்பம்' என்ற தலைப்பில் பேசினார். ஆதித்தனார் கல்லூரி கணிதத்துறை பசுங்கிளி பாண்டியன், அக்கல்லூரியின் கணிதத்துறை முன்னாள் பேராசிரியர் ராபர்ட் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசினர். இதில் முதுகலை மாணவிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர். மாணவி அஷ்டலட்சுமி நன்றி கூறினார். ஏற்பாடுகளை பேராசிரியர்கள் தங்கம், உஷா பரமேஸ்வரி, வெங்கடேஸ்வரி ஆகியோர் செய்து இருந்தனர்.

    • கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் மாணவிகளின் ஆங்கில மொழியில் பேச்சுத்திறன் வளர்ப்பதற்கான பயிற்சி ப்பட்டறை 3 நாட்கள் நடத்தப்பட்டது.
    • இந்நிகழ்ச்சியில் 200 க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் மாணவிகளின் ஆங்கில மொழியில் பேச்சுத்திறன் வளர்ப்பதற்கான பயிற்சி ப்பட்டறை 3 நாட்கள் நடத்தப்பட்டது. இதயம் நல்லெண்ணெய் குழும நிறுவனர் முத்துவின் 'பன்ச் ப்ராஜக்ட்' என்ற அமை ப்பின் மூலமாக பல்கலை க்கழகத்தின் மாணவிகளு க்காக நடத்தப்பட்டது. பயிற்சிப் பட்டறையை தொடங்கி வைத்த பல்கலை க்கழகத்தின் துணை வேந்தர் கலா, உலக மயமாக்கல் காரணமாக தனியார் நிறுவனங்கள் பெருகி வரும் தற்போதைய சூழலில் ஆங்கில மொழித்திறனை வளர்த்துக் கொள்வது மிக அத்தியாவசியமானது.

    இப்பல்கலைக்கழகத்தின் மாணவிகள் அனைத்துத் திறன்களையும் கற்பதற்கு தேவையான வாய்ப்பு களையும் பல்கலைக்கழகம் ஏற்படுத்தி வருகிறது. மாணவிகள் அவற்றை சரியான முறையில் பயன்படுத்தி முன்னேற வேண்டும் . பாரதியார் போன்ற பெரும் தமிழ்ப் புலவர்கள் ஆங்கிலத்திலும் இணையான புலமை பெற்றிருந்ததை சுட்டிக் காட்டி பேசினார். பதிவாளர் ஷீலா மற்றும் தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி கிளாரா தேன்மொழி ஆகியோர் தொடக்க உரை மற்றும் வாழ்த்துரை வழங்கி னர்.

    முன்னதாக கொடைக்கா னல் ரோட்டரி சங்கத் தலை வர் மதன்குமார் கோவி ந்தன் வரவேற்புரை யாற்றி னார். இந்நிகழ்ச்சியை கரூர், விருதுநகர் மற்றும் கொடை க்கானல் ரோட்டரி சங்கங்களின் ஒருங்கிணை ப்பாளர் ஜெயப்பிரகாஷ், விருதுநகர் பீஹைவ் அகாடமி தலைவர் ஷ்யா ம்ராஜ் ஆகியோர் ஏற்பாடு செய்தனர். விமலா, கணிணி த்துறை இணைப்பேராசி ரியர் மற்றும் ஆங்கிலத்துறை உதவிப்பேராசிரியர் விஜயா ஆகியோர் ஒருங்கிணை ப்பாளராக செயலாற்றினர்.

    இந்நிகழ்ச்சியில் 200 க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர். அனைத்து மாணவிகளு க்கும், போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கும் சான்றிதழ்கள், பரிசுகள் வழங்கப்பட்டன.

    • திருமணத்துக்குப் பிறகு குடும்பம், குழந்தைகள் என வாழ்க்கை சுருங்கிவிட்டது.
    • குழந்தைகள் எல்லையற்ற அன்பை பொழிவார்கள்

    திருமணத்துக்குப் பிறகு குடும்பம், குழந்தைகள் என பல பெண்கள் குறுகிய வட்டத்திற்குள்ளேயே தங்களின் வாழ்க்கையை சுருக்கிக்கொள்கிறார்கள். ஒரு காலகட்டத்துக்குப் பிறகு திரும்பி பார்க்கும் போதுதான், தாங்கள் தனிப்பட்ட முறையில் செயல்படுவதற்கும், சமூகத்துக்காக பங்களிப்பதற்குமான தேவைகள் இருப்பதை உணர்கிறார்கள். அவ்வாறு உணர்ந்து திருமணம் ஆகி 10 வருடங்களுக்குப் பிறகு, சிறப்பு குழந்தைகளுக்கான பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார் சாதனா தர்மராஜ், அவருடன் ஒரு சந்திப்பு.

    நான் சிவகாசியில் வசித்து வருகிறேன். கல்லூரிப் படிப்பை முடிந்தவுடன் எனக்கு திருமணம் நடந்தது. அதன் பிறகு குடும்பம், குழந்தைகள் என நாட்கள் அப்படியே நகர்ந்தன. ஒரு கட்டத்தில். நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்? என்று எனக்குள் ஒரு கேள்வி எழுந்தது. சற்று சிந்தித்துப் பார்த்தேன். அப்போதுதான் நமக்கான அடையாளமாக ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றியது.

    எனக்கு குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும். அதனால் கோடைகால பயிற்சி முகாம்கள் நடத்துவது, பள்ளிகளில் ஊக்கமளிக்கும் பயிற்சி பட்டறைகள் நடத்துவது என குழந்தைகள் தொடர்பான பணிகளை செய்து வந்தேன். அந்த சமயத்தில்தான், ஒருநாள் என் நண்பர்களுடன் சேர்ந்து மனநலம் பாதிக்கப்பட்டோர் மற்றும் பார்வையற்றோர் காப்பகத்திற்கு சென்றேன்.

    அங்கு எனது கண்முன்னே ஒரு சிறுவனுக்கு வலிப்பு வந்து, என் மடியில் வந்து விழுந்தான். அந்த சம்பவத்திற்கு பிறகுதான் சிறப்பு குழந்தைகளை பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள ஆரம்பித்தேன். அவர்களுக்கான சிகிச்சைகள் பற்றி எனக்குள் ஏராளமான கேள்விகள் எழுந்தன.

    இதுபற்றி மருத்துவர்களிடம் கேட்டபோது `சிவகாசியில் குழந்தைகளுக்கு பயிற்சி அளிப்பதற்கு போதுமான வசதிகள் எதுவும் இல்லை' என்றார்கள். இந்த குழந்தைகளுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று எனக்குள்ளேயே உறுதி எடுத்தேன்.

    அவர்களுக்கு அளிக்க வேண்டிய பயிற்சிகள் அனைத்தையும் நேரடி மற்றும் இணைய வகுப்புகள் மூலமாக கற்றறிந்தேன். தற்போது இந்த துறையில் மகிழ்ச்சியாக பணியாற்றி வருகிறேன்.

    குழந்தைகள் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமான பிரச்சினைகளோடு வருவார்கள். அவர்களுக்கு எழுதுவதில் பேசுவதில் பழகுவதில் என ஒவ்வொன்றிலும் ஏதேனும் ஒரு குறைபாடு இருக்கும் அந்த குறையாடுகளை கூர்மையாக கவனித்து கண்டறிந்து அதற்கு ஏற்றவாறு பயிற்சி அளிக்க வேண்டும். இது சற்றே சவாலான காரியம் தான்.

    ஆனால் பயிற்சிக்குப் பிறகு அந்த குழந்தைகளின் வளச்சியையும், அவர்கள் முகத்தில் தோன்றும் மகிழ்ச்சியையும் பார்க்கும் போது அந்த சால்கள் ஒரு பொருட்டாகவே தோன்றாது. குழந்தைகள் எல்லையற்ற அன்பை பொழிவார்கள் இந்த அன்புதான் என்னை தொடர்த்து புத்துணர்வுடன் இயங்க வைக்கிறது. எனது செயப்பாடுகளுக்காக புதுமைப்பெண் விருது உள்பட பல விருதுகளை பெற்றுள்ளேன்" என்றார்.

    • காளீஸ்வரி கல்லூரியில் கணினி மென்பொருள் பயிற்சி பயிலரங்கு நடந்தது.
    • ஏற்பாடுகளை பேராசிரியர் பாபு பிராங்கிளின் செய்திருந்தார்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின், இளங்கலை வணிகவியல் துறை சார்பில் மைக்ரோசாப்ட் எக்செல் பயன்பாடு குறித்த ஒரு நாள் பயிற்சி பயிலரங்கு நடைபெற்றது. கல்லூரி முதல்வர்பாலமுருகன் தலைமை தாங்கினார்.

    துறைத் தலைவர் குருசாமி வாழ்த்தி பேசினார். நிகழ்ச்சியில் சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி முதுகலை வணிகவியல் ஆராய்ச்சித் துறை பேராசிரியர் யோகேஷ்வரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு எக்செல் பயன்பாடுகள் குறித்து விளக்கினார்.

    2-ம் ஆண்டு மாணவி திவ்யா வரவேற்றார். மாணவி ஐஸ்வர்ய லட்சுமி அறிமுகப்படுத்தி பேசினார். முடிவில் மாணவன் ஜெய் பிரகாஷ் குமார் நன்றி கூறினார். மாணவிகள் மு.ஜெயராசாத்தி மற்றும் வை.ஜமுனாதேவி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினர். இதற்கான ஏற்பாடுகளை பேராசிரியர் பாபு பிராங்கிளின் செய்திருந்தார்.

    • மதுரை மன்னர் கல்லூரியில் ஒரு நாள் பயிற்சி பட்டறை நடந்தது.
    • விழாவில் பல்வேறு கல்லூரி மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இலிருந்து 325 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    மதுரை

    மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி ரோட் ராக்ட் கிளப், தியாகராசர் கல்லூரி ரோட்ராக்ட் கிளப் மற்றும் ரோட்டரி இன்டர் நேஷனல் டிஸ்ட்ரிக்ட் 3000, ரோட்ராக்ட் டிஸ்ட்ரிக்ட் ஆர்கனைசேசன் சார்பில் யுவா மதுரை 4.0 ஒரு நாள் பயிற்சி பட்டறை நிகழ்ச்சி மன்னர் திருமலை கல்லூரி யில் நடைபெற்றது.

    இதன் தொடக்க விழா வில் மதுரை டவுன் டவுன் பிரசிடெண்ட் ஜெயகிரன் ஜெயின் சிறப்புரையாற்றி னார். கல்லூரி முதல்வர் முனைவர் அ.ராமசுப் பையா தலைமை தாங்கி னார். கல்லூரி சுயநிதிப்பி ரிவு இயக்குனர் ச.பிரபு வாழ்த்துரை வழங்கினார். கல்லூரியின் செயலாளர் மு.விஜயராகவன் ரோட் ராக்ட் குறித்த ஆலோசனைகளை வழங்கினார்.

    மன்னர் கல்லூரியின் ரோட்ரா கிளப் தலைவர் சூரிய பிரகாஷ். விழா ஏற் பாட்டினை செய்திருந்தார். தியாகராசர் கல்லூரி ரோட்ராக்ட் செயலா ளர் சேஷ கோபாலன் விருந்தி–னர்களை அறிமுகம் செய் தார் மேலும். மன்னர் கல்லூரியின் ரோட்ராக்ட் கிளப் ஒருங்கிணைப்பாளர் முனைவர் நா.ரஞ்சித்குமார், தியாகராசர் கல்லூரி ஒருங் கிணைப்பாளர் முனைவர் சிவக்குமார் ஆகியோர் நன்றி கூறினா். விழாவில் பல்வேறு கல்லூரி மற்றும் பல்வேறு மாவட்டங்களி–லிருந்து 325 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    • மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் பயிற்சி பட்டறை நடந்தது.
    • விழா ஏற்பாட்டினை கல்லூரி நிர்வாகம் செய்திருந்தது.

    மதுரை

    மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் தமிழ்நாடு அரசும் , ஐ.சி.டி. அகாடமியும் இணைந்து இ-சேவை பயிற்சி 11 நாட்களுக்கு நடத்தப் பட்டது. இதில் தினமும் 60 நபர்கள் வீதம் 11 நாட்களுக்கு 660 நபர்களுக்கு பயிற்சி பெற்றனர்.

    இந்நிகழ்வினை கல்லூரி யின் செயலாளர் விஜயராக வன் தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் ராம சுப்பையா தலைமை தாங்கி னார். சுயநிதி பிரிவு இயக்குநர் பிரபு வாழ்த்துரை வழங்க ஐ.சி.டி. அகாடமியின் அமைப்பாளர் நிரஞ்சனி ஆலோசனை வழங்கினர்.

    இ-சேவை மையத்தின் விளக்க பயிற்சியை அளித்த தோடு தொழில் முனைவோர் திறனை மேம்படுத்த வாடிக்கையாளர்களின் தேவையை முத்ரா லோன் திட்டம் போன்றவற்றிக்கான பயிற்சியை கல்லூரியின் கணினி அறிவியல் துறை பேராசிரியர் ராஜேஸ்வரி விளக்கம் அளித்தார். விழா ஏற்பாட்டினை கல்லூரி நிர்வாகம் செய்திருந்தது.

    • நிகழ்ச்சியில் கல்லூரிக்குழு உறுப்பினர் எஸ்.கே.டி.பி. காமராஜ் தலைமை உரையாற்றினார்.
    • கல்லூரியின் கணினி அறிவியல் துறை தலைவர் பெல்லா அன்ன ஜோதி கணினியின் தோற்றம் முதல் கணினியில் தமிழ் பயன்பாடு வரை காணொலி காட்சி மூலம் மாணவர்களிடையே பேசினார்.

    வள்ளியூர்:

    தெற்கு கள்ளிகுளத்தில் உள்ள நெல்லை தட்சணமாற நாடார் சங்கம் கல்லூரியின் தமிழ்த்துறை சுயநிதிப்பிரிவு மற்றும் அகத்தரமதிப்பீட்டு குழு சார்பில் இணையமும் இன் தமிழும் என்ற பொருண்மையில் ஒரு நாள் பயிற்சி பட்டறை நடைபெற்றது. நிகழ்ச்சியில் கல்லூரிக்குழு உறுப்பினர் எஸ்.கே.டி.பி. காமராஜ் தலைமை உரையாற்றி னார். கல்லூரி முதல்வர் து.ராஜன் முதல்வர் உரையும், அகத்தர மதிப்பீட்டுகுழுவின் ஒருங்கிணைப்பாளர் புஷ்பராஜ் நோக்க உரையும் வழங்கினர். கல்லூரி ஆட்சிக்குழு உறுப்பினர் பண்ணை கே.செல்வகுமார், தமிழ்த்துறை தலைவர் த.நிர்மலா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தமிழ்த்துறை சுயநிதிப்பிரிவின் தலைவர் சு.கிரிஜா வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக கல்லூரியின் கணினி அறிவியல் துறை தலைவர் பெல்லா அன்ன ஜோதி கணினியின் தோற்றம் முதல் கணினியில் தமிழ் பயன்பாடு வரை காணொலி காட்சி மூலம் மாணவர்களிடையே பேசினார்.

    கருத்தரங்கில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் செ.சோனா கிறிஸ்டி நன்றி கூறினார். ஏற்பாடுகளை தமிழ்த்துறை பேராசிரியர்கள் செய்திருந்தனர். கருத்தரங்கில் பேராசிரியர்கள் மற்றும் ஏராளமான மாணவர்களும் கலந்து கொண்டனர்.

    • திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் ‘மேம்படுத்தப்பட்ட கணினி மென்பொருள் மூலம் புள்ளியியல் பயன்பாடு’ என்ற தலைப்பில் பயிற்சி பட்டறை 2 நாட்கள் நடந்தது.
    • செந்திகுமார நாடார் கல்லூரி பொருளியல் துறை இணை பேராசிரியர் விஜயகுமார் , பொருளியலில் ஆய்வு தரவுகளை பகுத்தாய்வு செய்வது என்பதை நடைமுறை தரவுகள் மூலம் விளக்கி கூறினார்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் முதுகலை பொருளியல் மற்றும் ஆராய்ச்சித்துறை சார்பில், முதுகலை பொருளியல் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு 'மேம்படுத்தப்பட்ட கணினி மென்பொருள் மூலம் புள்ளியியல் பயன்பாடு' என்ற தலைப்பில் பயிற்சி பட்டறை 2 நாட்கள் நடந்தது. கல்லூரி முதல்வர் மகேந்திரன் தலைமை தாங்கினார். பொருளியல் துறைத்தலைவர் மாலைசூடும் பெருமாள் வரவேற்று பேசினார். கல்லூரி செயலாளர் ஜெயக்குமார் வாழ்த்தி பேசினார்.

    விருதுநகர் செந்திகுமார நாடார் கல்லூரி பொருளியல் துறை இணை பேராசிரியர் விஜயகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பொருளியல் மாணவர்கள் புள்ளியியல் முறைகளை கணினி மென்பொருள் மூலம் எவ்வாறு கையாள்வது?, பொருளியலில் ஆய்வு தரவுகளை பகுத்தாய்வு செய்வது என்பதை நடைமுறை தரவுகள் மூலம் விளக்கி கூறினார். இதில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. பொருளியல் மன்ற துணைத்தலைவர் கணேசன் நன்றி கூறினார்.

    • ராமநாதபுரத்தில் பயிற்சி பாசறை கூட்டம் நடந்தது.
    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை தி.மு.க. நிர்வாகிகள் வரவேற்றனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று ராமநாதபுரத்துக்கு வந்தார். மாவட்ட எல்லை மற்றும் முக்கிய பகுதிகளில் தி.மு.க.வினர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    இதில் அமைச்சர்கள் ராஜகண்ணப்பன்,பெரியகருப்பன், அனிதா ராதாகிருஷ்ணன், மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் சுப. தங்கவேலன், ராமநாதபுரம் மாவட்ட பொருளாளர் முருகேசன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. முருகவேல், ராமநாதபுரம் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சத்தியேந்திரன், நரிப்பையூர் ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் சிவா, சாயல்குடி தி.மு.க. ஒன்றிய செயலாளர் குலாம் முகைதீன், நீர்பாசன சங்க தலைவர் ராஜாராம், ஒன்றிய அவைத்தலைவர் சார்லஸ், பொருளாளர் பாலகிருஷ்ணன், துணை செயலாளர் ஜலீல், துணை செயலாளர்கள் பழனிச்சாமி, முனியசாமி, மாவட்ட பிரதிநிதி அமீர் ஹம்சா, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயபாலன், ஒன்றிய துணை செயலாளர் பொன்னுத்தாய்-பாண்டி,

    பரமக்குடி நகர்மன்ற தலைவர் சேது கருணாநிதி, துணைத்தலைவர் குணா, நயினார் கோவில் ஊராட்சி ஒன்றிய தலைவர் வினிதா குப்புசாமி, துணை தலைவர் ஜெயபாலன், போகலூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் சத்யா குணசேகரன், துணை தலைவர் பூமிநாதன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் காளீஸ்வரி, தேன்மொழி, ராமசாமி, முருகேஸ்வரி, கதிரவன், காளிதாஸ்,

    பரமக்குடி ஊராட்சி ஒன்றிய தலைவர் சிந்தாமணி முத்தையா, துணை தலைவர் ராஜேந்திரன், உறுப்பினர்கள் சங்கமுத்து, கலைச்செல்வி, காந்திமதி, மங்களேஸ்வரி, சுப்பிரமணியன், சித்ரா , சேதுராமன், அமராவதி, சிவகுமார், தேவி, நதியா, திருவாடானை ஊராட்சி ஒன்றிய தலைவர் முகமது முக்தார், துணை தலைவர் செல்வி பாண்டி, ஒன்றிய குழு உறுப்பினர்கள் மேகலா விஸ்வநாதன், கார்த்திகேயன் ராஜா, சிவா, ஜமால் மைதீன், அருணாசலம், காளியம்மாள், சசிகுமார், சாந்தி செங்கை ராஜன், ஜெயசீலா கண்ணன், முகமது ரிஸ்வான், மதி வாணன், சிவசங்கீதா ராஜாராம், லூர்து மேரி பிரசாத், சாந்தா கணேசன், விஜயகதிரவன், ராவுத்தம்மாள் ராஜதுரை, சுமதி முத்துராக்கு, ஸ்ரீதரன், சாயல்குடி மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெயபாலன்,

    கடலாடி வடக்கு ஒன்றிய செயலாளர் ஆப்பனூர் ஆறுமுகம், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் அம்பிகா நாகராஜ், ராமநாத புரம் நகர்மன்ற உறுப்பினர் மாவட்ட அமைப்பாளர் முகமது ஜகாங்கீர், தொண்டி பேரூர் நிர்வாகி நவ்பல் ஆதம், கமுதி தெற்கு ஒன்றிய செயலாளர் மனோகரன், கடலாடி ஒன்றிய செய லாளர் மாய கிருஷ்ணன், கமுதி ஒன்றிய குழுத் தலைவர் தமிழ்செல்வி போஸ், துணை தலைவர் சித்ரா தேவி அய்யனார், ஒன்றிய உறுப்பினர்கள் ஈஸ்வரி மாரிமுத்து, கற்பூர சுந்தர பாண்டியன், பூங் கொடி, கனகஅரசி, பாலு, மகாலட்சுமி, பூபதி ராஜா, சங்கம்மாள், அன்பரசு, உதயனன், கணேசன், கவிதா, பழனியம்மாள், உதயகுமார், முத்துபாண்டி அம்மாள், முத்துலட்சுமி, காளீஸ்வரி, கமுதி தேர்வு நிலை பேரூராட்சி தலைவர் அப்துல் வகாப் சகாராணி, ஏர்வாடி ஊராட்சி மன்ற தலைவர் செய்யது அப்பாஸ், துணை தலைவர் உடையார்,

    செஞ்சடை நாதபுரம் ஊராட்சி மன்ற தலைவர் லிங்கராஜ், தில்லையேந்தல் ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணமூர்த்தி, துணை தலைவர் மக்சூப்பானு, உறுப்பினர்கள் மாரியம்மாள், முருகேசன், சுமதி, முத்துக்கருப்பன், ராதா, நஸ்ரின் பானு, மகேஸ்வரி, மணிமாறன், ராமநாதபுரம் நகர்மன்ற தலைவர் கார்மேகம், துணை தலைவர் பிரவீன் தங்கம், உறுப்பினர்கள் முனீஸ்வரி, ஜோதி மணி, மங்கை யர்க்கரசி, தனபாண்டி யம்மாள், ராஜாராம் பாண்டியன், கயல்விழி, செல்வராணி, நாகராஜன், காளிதாஸ், ராணி, கமலக்கண்ணன், வீரசேகர், விஜய லட்சுமி, காதர் பிச்சை, ஜெயராமன், ஜோதி புஷ்பம், மணி கண்டன், சபிக்கா பானு, குமார், ராமசுப்பிரமணியன், கனகவல்லி, இந்துமதி முத்துலட்சுமி, ரமேஷ், செல்வி, லட்சுமி, இந்திரா மேரி, ராமநாதன், காயத்ரி, முகமது ஜகாங்கீர், மெகர் பானு, பஞ்சவர்ணம் ஆகியோர் வரவேற்றனர்.

    • ஐ.ஓ.டி. தொழில்நுட்பங்களின் பயன்பாடு என்ற தலைப்பில் லட்சுமிநாராயணன் பயிற்சி வழங்கினார்.
    • பயிற்சி பட்டறையில் பல்வேறு பொறியியல் கல்லூரிகளில் இருந்து மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் ஐ.இ.இ.இ. மாணவர்கள் பிரிவு எண்-61401 மற்றும் மின்னணுவியல் தொடர்பியல் துறை சார்பில், ஐ.இ.இ.இ. மெட்ராஸ் பிரிவு நிதியுதவியுடன் 'மருத்துவ சேவையில் ஐ.ஓ.டி. தொழில்நுட்பங்களின் பயன்பாடு என்ற தலைப்பில் தேசிய அளவிலான பயிற்சி பட்டறை கடந்த 2 நாட்கள் நடந்தது. கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் மஞ்சித் வரவேற்று பேசினார்.

    டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவரும், பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரி இணை பேராசிரியருமான லட்சுமிநாராயணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஐ.ஓ.டி. தொழில்நுட்பங்களின் பயன்பாடு என்ற தலைப்பில் பயிற்சி வழங்கினார். துறைத்தலைவர் பெனோ வாழ்த்தி பேசினார்.

    இதில் பல்வேறு பொறியியல் கல்லூரிகளில் இருந்து மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். ஏற்பாடுகளை துறை பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் செய்து இருந்தனர்.

    • மாணவர்களுக்கு கேமராவின் வகைகள், செயல்பாடு மற்றும் நுட்பங்கள் சார்ந்த பயிற்சியை பாலமுருகன் வழங்கினார்.
    • திருச்செந்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் மாணவர்களுக்கு வாழ்க்கையில் எவ்வாறு வெற்றி அடைவது என்பது பற்றி விளக்கினார்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்தர உறுதிப்பிரிவு மற்றும் போட்டோகிராபி கிளப் சார்பில் "புகைப்பட கலையின் நுணுக்கங்கள்" என்ற தலைப்பில் ஒருநாள் பயிற்சி பட்டறை நடைபெற்றது. கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கினார். கல்லூரி செயலர் ஜெயக்குமார் வாழ்த்தி பேசினார். போட்டோகிராபி கிளப் இயக்குனர் பாலகிருஷ்ணன் வரவேற்றார். அகதர மதிப்பீட்டுக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஜிம் ரீவ்ஸ் சைலண்ட் நைட் வாழ்த்தி பேசினார்.

    நிகழ்ச்சியில் தூத்துக்குடி பிக்ஸ்டாக்ல்க் போட்டோகிராபி கிளப்பின் தலைவர் பாலமுருகன் கலந்துகொண்டு மாணவர்களுக்கு கேமராவின் வகைகள், செயல்பாடு மற்றும் நுட்பங்கள் சார்ந்த பயிற்சியை வழங்கினார். நிகழ்ச்சியில் கல்லூரி நூலகர் முத்துகிருஷ்ணன், பேராசிரியர்கள் லிங்கத்துரை, லோக்கிருபாகர், மணிகண்ட ராஜா மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த மாணவர்கள், போட்டோகிராபி கிளப் மாணவ உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். பயிற்சி பட்டறையின் முடிவில் போட்டோகிராபி கிளப் மாணவ செயலாளர் புரோசேகர் நன்றி கூறினார்.ஆதித்தனார் கல்லூரியில் முதல்வர் து.சி.மகேந்திரன் ஆலோசனையின் பெற்றது. கல்லூரி முதல்வர் (பொறுப்பு) முத்துக்கிருஷ்ணன் தலைமை தாங்கினார். கல்லூரி செயலர் ஜெயக்குமார் வாழ்த்தி பேசினார். உள்தர உறுதிப்பிரிவின் ஒருங்கிணைப்பாளர் ஜிம் ரீவ்ஸ் சைலண்ட் நைட் வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் ஈரோட்டை சேர்ந்த உளவியல் மருத்துவர் அசோக், மாணவ-மாணவிகளுக்கு தனித்தனியே "இன்றைய சூழலில் கல்லூரி மாணவிகள் எதிர்கொள்ளும் பாலியல் மற்றும் உளவியல் பிரச்சினைகள்" குறித்தும், அவற்றை மேற்கொண்டு சிறப்புற வாழும் வழிமுறைகள் பற்றியும் எடுத்துரைத்தார். திருச்செந்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் மாணவர்களுக்கு வாழ்க்கையில் எவ்வாறு வெற்றி அடைவது என்பது பற்றி தன் அனுபவங்கள் மூலம் விளக்கினார். முடிவில் 2-ம் ஆண்டு முதுகலை ஆங்கில மாணவி லிபியா நாராயணி நன்றி கூறினார்.

    • கல்லூரி முதல்வர் ராஜன் புதிய கல்வி கொள்கையின் அவசியம் பற்றி எடுத்துரைத்தார்.
    • சுபத்ரா செல்லத்துரை கலந்து கொண்டு பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.

    வள்ளியூர்:

    தெற்கு கள்ளிகுளம் நெல்லை தட்சணமாற நாடார் சங்க கல்லூரியின் வணிகவியல் துறை சுயநிதிப்பிரிவு சார்பில், எம்பிராயடரிங் தையல் மற்றும் தட்டச்சு பயிற்சி பட்டறை நடைபெற்றது. பேராசிரியர் மரிய கிறிஸ்டின் நிர்மலா வரவேற்று பேசினார். முதல்வர் ராஜன், தலைமை தாங்கி புதிய கல்வி கொள்கையின் அவசியம் பற்றி எடுத்துரைத்தார். உள்தர உறுதி குழு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் புஷ்பராஜ் பயிற்சியின் அவசியம் பற்றி வாழ்த்தி பேசினார். துறைத்தலைவர் மனோகர் சிறப்பு விருந்தினர்களை அறிமுகம் செய்து மாணவர் திறன் மேம்பாட்டின் அவசியத்தை விளக்கினார்.

    சிறப்பு விருந்தினர்களாக பெண்கள் அதிகாரம் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு சங்க நிறுவன தலைவர் சுபத்ரா செல்லத்துரை கலந்து கொண்டு பெண்களின் பெருமைகளையும், பயிற்சியின் முக்கியத்துவம் பற்றியும் பேசினார். தென்காசி, சஞ்சய் அகாடமி நிறுவனர் செண்பகவல்லி பயிற்சியின் நோக்கம் பற்றி பேசி குழு மூலமாக மாணவர்களுக்கு திறம்பட பயிற்சி அளிக்கப்பட்டது. மாணவர் திறன் மேம்பாடு திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பேராசிரியர் சுஜா பிரேமரஜினி, லதா, மனோகர் ஆகியோர் பரிசுகளை வழங்கினர். பேராசிரியர் செல்வராணி நன்றி கூறினார்.

    ×