என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Aditanar College"

    • திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் இளையோர் செஞ்சிலுவை சங்கமும், ஆங்கிலத்துறையும் இணைந்து நடத்திய ஒரு நாள் யோகா பயிற்சி பட்டறை நடைபெற்றது.
    • பேராசிரியர் வேலாயுதம், மாணவர்களுக்கு யோகாசனம் எவ்வாறு பயில்வது மற்றும் எவ்வாறு பயிற்சி செய்வது பற்றி மாணவர்களிடம் கலந்துரையாடினார்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் இளையோர் செஞ்சிலுவை சங்கமும், ஆங்கிலத்துறையும் இணைந்து நடத்திய ஒரு நாள் யோகா பயிற்சி பட்டறை நடைபெற்றது. ஆங்கிலத்துறை தலைவர் சாந்தி வரவேற்றார். கல்லூரி முதல்வர் மகேந்திரன் தலைமை தாங்கினார். ஆங்கிலத்துறை பேராசிரியர் பர்வதவர்த்தினி சிறப்பு விருந்தினரை மாணவர்களுக்கு அறிமுகம் செய்தாா். சிறப்பு விருந்தினர் கணினி துறை தலைவர் பேராசிரியர் வேலாயுதம், மாணவர்களுக்கு யோகாசனம் எவ்வாறு பயில்வது மற்றும் எவ்வாறு பயிற்சி செய்வது பற்றி மாணவர்களிடம் கலந்துரையாடினார். அதனை தொடர்ந்து நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளரும், ஆங்கிலத்துறை பேராசிரியருமான உதயவேல், மற்றொரு சிறப்பு விருந்தினரான விலங்கியல் துறை பேராசிரியர் லிங்கதுரையை அறிமுகம் செய்தார்.

    நிகழ்ச்சியின் மற்றுமொரு சிறப்பு விருந்தினரான டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி பேராசிரியர் கணேஷ், மாணவர்களுக்கு செயல்முறை விளக்கம் அளித்தார். இளையோர் செஞ்சிலுவை சங்க திட்ட அலுவலரும், ஆங்கிலத்துறை பேராசிரியருமான மோதிலால் தினேஷ் நன்றி கூறினார். இயற்பியல் துறை தலைவர் பாலு, முனைவர் சேகர், பொருளியல் துறை பேராசிரியர் மாலைசூடும் பெருமாள், வணிக நிர்வாகவியல் துறை சார்ந்த முனைவர் அந்தோணி சகாய சித்ரா, பேராசிரியர் செல்வகுமார் மற்றும் நிவேதா உள்பட திரளான மாணவர்கள் பயிற்சி பட்டறையில் பங்கு பெற்றனர்.

    • செஞ்சிலுவை சங்கம், நெல்லை டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மற்றும் தூத்துக்குடி மோகன்ஸ் நீரிழிவு மையம் ஆகியவை இணைந்து இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தியது
    • சிவந்தி சமுதாய வானொலி சார்பாக கண் மருத்துவர் மற்றும் ஊட்டச்சத்து நிபுணரிடம் நேர்காணல் செய்தார்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் இளையோர் செஞ்சிலுவை சங்கம், நெல்லை டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மற்றும் தூத்துக்குடி மோகன்ஸ் நீரிழிவு மையம் ஆகியவை இணைந்து இலவச கண் பரிசோதனை மற்றும் நீரிழிவு நோய் கண்டறிதல் முகாமை நடத்தியது.

    கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கி, தொடங்கி வைத்தார். கல்லூரி செயலர் ச.ஜெயக்குமார் முகாமில் பங்கேற்றார். இளையோர் செஞ்சிலுவை சங்க திட்ட அலுவலர் ச.மோதிலால் தினேஷ் ஏற்பாடுகளை செய்திருந்தார். முகாமில் முத்துக்குமார், சிவந்தி சமுதாய வானொலி சார்பாக கண் மருத்துவர் மற்றும் ஊட்டச்சத்து நிபுணரிடம் நேர்காணல் செய்தார்.

    முகாமில் 50 ஆசிரியர்கள் மற்றும் அலுவலக கண்காணிப்பாளர் பெ.பொன்துரை, அலுவலர்கள், மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக ரத்த அழுத்தம், கிட்டப்பார்வை, தூரப்பார்வை பரிசோதனை செய்யப்பட்டது.


    • பனை ஓலையை பயன்படுத்தி பல்வேறு பொருட்களை உருவாக்குவது எப்படி? என்பது பற்றிய ஒரு நாள் பயிற்சி பட்டறையை நடந்தது
    • பல்வேறு பொருட்களை செய்தனர்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் மத்திய மனிதவள மேம்பாடு மையத்தின் கீழ் இயங்கி வரும் இன்ஸ்டியூசன் இன்னோவேசன் கவுன்சில் மற்றும் கல்லூரியின் தொழில் முனைவோர் அலகு இணைந்து பனை ஓலையை பயன்படுத்தி பல்வேறு பொருட்களை உருவாக்குவது எப்படி? என்பது பற்றிய ஒரு நாள் பயிற்சி பட்டறையை நடத்தியது.

    இதன் தொடக்க விழா கல்லூரியின் உள் அரங்கத்தில் நடைபெற்றது. முனைவர் மாலைசூடும் பெருமாள் இறைவணக்கம் பாடினார். இன்னோவேசன் கவுன்சில் அமைப்பாளர் முனைவர் நித்யானந்த ஜோதி வரவேற்றார். கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கி, இன்னோவேசன் கவுன்சில் பணிகளை பாராட்டினார்.

    கல்லூரி செயலர் முனைவர் ஜெயக்குமார், பயிற்சி பட்டறையின் நோக்கங்களை விளக்கி பேசினார். மல்லிகை பனை பொருள் அங்காடியின் நிறுவனர் மற்றும் பயிற்சியாளர் கிரேஷ் ஜூலியட் டயானா கலந்துகொண்டு மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார். மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு பல்வேறு பொருட்களை செய்தனர். பயிற்சி பட்டறையின் முடிவில், இன்னோவேசன் கவுன்சில் செயல் ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீேதவி நன்றி கூறினார்.


    • கல்லூரி மாணவர்களுக்கு ரத்த வகை மற்றும் ரத்ததானம் முகாம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது
    • திருச்செந்தூர் தலைமை மருத்துவமனை ரத்ததானம் பிரிவு மருத்துவ தலைமை டாக்டர் சசிகலா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் இயங்கி வரும் இளையோர் செஞ்சிலுவை சங்கம் அணிகள் 1, 2 மற்றும் நாட்டு நலப்பணித்திட்டம் அணி எண் 231 (சுயநிதி பிரிவு) இணைந்து கல்லூரி மாணவர்களுக்கு ரத்த வகை மற்றும் ரத்ததானம் முகாம் திருச்செந்தூர் தலைமை மருத்துவமனை குழுவின் மூலம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கினார். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பேராசிரியர் ஜெயராமன் வரவேற்றார். கல்லூரி செயலாளர் ஜெயக்குமார் வாழ்த்துரை வழங்கினார். திருச்செந்தூர் தலைமை மருத்துவமனை ரத்ததானம் பிரிவு மருத்துவ தலைமை டாக்டர் சசிகலா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அவரது மேற்பார்வையில் சுமார் 10 மருத்துவ பணியாளர்கள் பங்கேற்றனர். கல்லூரி மாணவர்கள் 62 பேர் ரத்ததானம் வழங்கினா். சுமார் 150-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகளுக்கு ரத்தவகை கண்டறியப்பட்டது. மேலும் கல்லூரி பேராசிரியர்கள், அலுவலர்கள் கலந்துகொண்டு தங்களின் ரத்த வகையை கண்டறிந்தனர். நிகழ்ச்சி முடிவில் இளையோர் செஞ்சிலுவை சங்கத்திட்ட அலுவலர் மோதிலால் தினேஷ் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் கணிப்பொறி தலைவர் வேலாயுதம் மற்றும் சிவந்தி வானொலி தொழில்நுட்ப கலைஞர் கண்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை இளையோர் செஞ்சிலுவை சங்க சுயநிதிப்பிரிவு திட்ட அதிகாரி பேராசிரியர் பார்வதி தேவி மற்றும் மாணவ செயலர்கள் சொரிமுத்து, சுப்பிரமணியன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    • மாணவர்கள் கலந்து கொண்டு கழிவு பொருட்களை வைத்து கலை நயத்துடன் பலவித உபயோகமுள்ள பொருட்கள் செய்தனர்.
    • விதவிதமான சத்தான பானங்கள் மற்றும் பலகாரங்கள் செய்தும் அசத்தினர்

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் கவின் கலை மன்றம் மற்றும் நாட்டுப்புறக் கலை மன்றம் மற்றும் நாட்டு நலப்பணித் திட்டம் அணி எண் 44, 48 ஆகியவை இணைந்து கழிவுகளில் இருந்து கலை மற்றும் நெருப்பில்லா சமையல் போட்டிகள் நடந்தது. இப்போட்டியில் 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு கழிவு பொருட்களை வைத்து கலை நயத்துடன் பலவித உபயோகமுள்ள பொருட்கள் செய்தனர். மேலும் நெருப்பை உபயோகிக்காமல் விதவிதமான சத்தான பானங்கள் மற்றும் பலகாரங்கள் செய்தும் அசத்தினர். சிறப்பாக செய்த இளங்கலை மற்றும் முதுகலை மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இப்போட்டிகளை கல்லூரி செயலாளர் ஜெயக்குமார், முதல்வர் மகேந்திரன் ஆகியோர் பார்வையிட்டனர். நடுவர்களாக விலங்கியல் துறை தலைவர் சுந்தரவடிவேலு, கணிணிப்பொறியியல் துறை தலைவர் வேலாயுதம், ஆங்கிலத்துறை தலைவர் சாந்தி, கணிதவியல் துறை தலைவர் பசுங்கிளி பாண்டியன், நூலக கண்காணிப்பாளர் முத்துகிருஷ்ணன், பொருளியல் துறை பேராசிரியர் முத்துக்குமார், வணிக நிர்வாகவியல் துறை தலைவர் அந்தோணி சகாய சித்ரா, விலங்கியல் துறை பேராசிரியை வசுமதி, ஆரோக்கிய மேரி பெர்ணான்டோ மற்றும் ஆங்கிலத்துறை பேராசிரியை ஷோலா பெர்ணான்டோ உள்பட பலர் கலந்து கொண்டனர். போட்டிகளுக்கான ஏற்பாடுகளை கவின் கலை மன்றம், நாட்டு நலப்பணித் திட்டம் அணி 48-ன் திட்ட அலுவலர் கவிதா, நாட்டுப்புறக் கலை மன்றம், நாட்டு நலப்பணித் திட்டம் அணி 44-ன் திட்ட அலுவலர் சத்தியலெட்சுமி மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் செய்திருந்தனர்

    • நோனி மூலிகைத் தோட்டம் அமைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக நோனி மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
    • மாணவர்கள் 30-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டனர்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் தோட்டக்கலை க்ளப் சார்பில் நோனி மூலிகைத் தோட்டம் அமைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக நோனி மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

    விழாவில் தோட்டக்கலை இயக்குநர் பாலகிருஷ்ணன், நோனி தாவரத்தின் முக்கியத்துவம் பற்றி விளக்க உரையாற்றி வரவேற்புரை வழங்கினார். பேராசிரியர் ஆரோக்கிய மேர் பர்னாந்து தோட்டக்கலை துறையின் அறிக்கையை வாசித்தார். கல்லூரி முதல்வர் டாக்டர் து.சி.மகேந்திரன் மரக்கன்று நடுதலை தொடங்கி வைத்து தலைமை உரையாற்றினார். கல்லூரி செயலர் ஜெயக்குமார் வாழ்த்துரை வழங்கினார். கல்லூரியின் துறைத்தலைவர்கள் பேராசிரியர்கள் ரமேஷ், சுந்தரவடிவேல் மற்றும் கதிரேசன் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டனர்.

    மேலும் பேராசிரியர்கள் முத்துக்குமார், வசுமதி, கவிதா மற்றும் மாணவர்கள் 30-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டனர். தோட்டக்கலை பிரிவின் மற்றொரு நிகழ்வாக இளையோர் செஞ்சிலுவை சங்க மாணவர்கள் 100-க்கும் மேற்பட்ட பனை விதைகளை விதைப்பு செய்தனர். கல்லூரியில் உள்ள தோட்டத்தில் பனை விதை விதைப்பு விழா நடைபெற்றது.

    விழாவில் இளையோர் செஞ்சிலுவை சங்க இயக்குநர் பேராசிரியர் மோதிலால் தினேஷ் வரவேற்புரை ஆற்றினார். கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் பனை விதை விதைப்பை தொடங்கி வைத்தார்.

    தோட்டக்கலை பிரிவின் இயக்குநர் பாலகிருஷ்ணன், பேராசிரியர்கள், லோக்கிருபாகர், மணிகண்ட ராஜா, ராஜ்பினோ ஆகியோர் செய்திருந்தனர்.

    கல்லூரியின் அலுவலக கண்காணிப்பாளர் பெ.பொன்துரை மற்றும் அலுவலர்கள் ஜெயராஜ், பாலமுருகன், ஸ்ரீதர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    முடிவில் பேராசிரியர்கள் லிங்கதுரை நன்றியுரை வழங்கினார். விழாவிற்கான ஏற்பாடுகளை தோட்டக்கலை பிரிவு மற்றும் இளையோர் செஞ்சிலுவை சங்க மாணவர்கள் செய்திருந்தனர்.

    • திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் கடந்த 1977-1980-ம் ஆண்டு வணிக நிர்வாகவியல் துறையில் பயின்ற முன்னாள் மாணவர்கள் 42 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சந்திக்கும் நிகழ்ச்சி நடந்தது
    • முன்னாள் மாணவர்கள் தங்களுக்கு பயிற்றுவித்த பேராசிரி யர்களை கவுரவித்தனர். தங்களது பசுமையான நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் கடந்த 1977-1980-ம் ஆண்டு வணிக நிர்வாகவியல் துறையில் பயின்ற முன்னாள் மாணவர்கள் 42 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சந்திக்கும் நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி முதல்வர் மகேந்திரன் தலைமை தாங்கினார்.

    வணிக நிர்வாகவியல் துறை தலைவர் அந்தோணி சகாய சித்ரா வரவேற்று பேசினார். கல்லூரி செயலாளர் ஜெயக்குமார், வணிக நிர்வாகவியல் துறை முன்னாள் தலைவர் செல்வராஜ் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

    முன்னாள் பேராசிரி யர்கள் ஆழ்வார், ஜெயக் குமார் பொன் ராஜ் ஆகியோர் இணைய வழியில் பேசினர். முன்னாள் மாணவர்கள் தங்களுக்கு பயிற்றுவித்த பேராசிரி யர்களை கவுரவித்தனர். தங்களது பசுமையான நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். முன்னாள் மாணவர் நிக்கல்சன் நன்றி கூறினார். ஏற்பாடுகளை முன்னாள் மாணவரும், ஐ.எம்.எப். நிறுவன அதிகாரியுமான சாமுவேல் மதுரம் செய்து இருந்தார்.

    முன்னதாக கல்லூரி வளாகத்தில் உள்ள 'தமிழர் தந்தை' சி.பா.ஆதித்தனார் சிலைக்கும், பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்தில் உள்ள சிலைக்கும் முன்னாள் மாணவர்கள் மாலை அணிவித்து மரியாைத செலுத்தினர்.

    • திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பொங்கல் விழா மகளிர் நல அமைப்பு மற்றும் மாணவர்கள் சார்பில் கொண்டாடப்பட்டது.
    • மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள் பொங்கல் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பொங்கல் விழா மகளிர் நல அமைப்பு மற்றும் மாணவர்கள் சார்பில் கொண்டாடப்பட்டது. விழாவுக்கு கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன், கல்லூரி செயலாளர் ச.ஜெயக்குமார் ஆகியோர் தலைமை தாங்கினர். முதுகலை பிரிவு மாணவிகள் கல்லூரி வளாகத்திலுள்ள சித்தி விநாயகர் கோவில் முன்பு வண்ண கோலமிட்டு பொங்கலிட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை மகளிர் நல அமைப்பு இயக்குனர் நித்தியானந்த ஜோதி, பேராசிரியைகள் சாந்தி, வசுமதி, முருகேஸ்வரி, கோகிலா ஆகியோர் செய்திருந்தனர். பொங்கல் பொங்கி வந்தபோது, பொங்கலோ பொங்கல் என்று கோஷமிட்டு மாணவிகள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பிறகு விநாயகருக்கு பொங்கல் படைக்கப்பட்டு, அனைவருக்கும் பரிமாறப்பட்டது.

    தொடர்ந்து மாணவ, மாணவியர், பேராசிரியர்கள் பொங்கல் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். விழாவில் துறைதலைவர்கள் ரமேஷ், பசுங்கிளி பாண்டியன், பாலு, வேலாயுதம், கவிதா, சிவக்குமார், சிங்காரவேலு, சிரில் அருண், சுந்தரவடிவேல், பாலகிருஷ்ணன் மற்றும் போராசிரியைகள், பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் திரளாக கலந்து கொண்டனர். அனைத்து இளநிலை பிரிவு மாணவ, மாணவியரும் பொங்கலிட்டு மகிழ்ந்தனர். அலுவலர்கள் சார்பிலும் பொங்கலிட்டு, விளையாட்டு போட்டிகளும் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டது. இவ்விழாவில் அலுவலக கண்காணிப்பாளர் பெ.பொன்துரை மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் தேசிய வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
    • கல்லூரி வேதியியல் துறை சார்பில் ‘மேம்படுத்தப்பட்ட வேதியியல் பொருட்களும் அதன் பயன்பாடுகளும்’ என்ற தலைப்பில் பன்னாட்டு கருத்தரங்கம் நடைபெற்றது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் தேசிய வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு கல்லூரி செயலர் ச.ஜெயக்குமார் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் உறுதிமொழியை படித்தார். அலுவலக கண்காணிப்பாளர் பெ.பொன்துரை, கல்லூரி அலுவலர்கள், மாணவர்கள் திரளாக கலந்துகொண்டு தேசிய வாக்காளர் தின உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

    இதேபோன்று கல்லூரியில் உள்ள அனைத்து வகுப்பறைகளிலும் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகளும் உறுதிெமாழி எடுத்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அணியின் திட்ட அலுவலர்கள் பே.மருதையா பாண்டியன், இ.அபுல்கலாம் ஆசாத் ஆகியோர் செய்திருந்தனர்.

    மேலும், கல்லூரி வேதியியல் துறை சார்பில் 'மேம்படுத்தப்பட்ட வேதியியல் பொருட்களும் அதன் பயன்பாடுகளும்' என்ற தலைப்பில் பன்னாட்டு கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கினார். கல்லூரி செயலாளர் ச.ஜெயக்குமார் வாழ்த்துரை வழங்கினார். இதில் தென்கொரியாவின் போஸ்டேக் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் எஸ்.வீரபாண்டியன், மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் எம்.ராஜன் ஆகியோர் கலந்து கொண்டு, நம் அன்றாட வாழ்விலும், ஆய்வகங்களிலும் மேம்படுத்தப்பட்ட வேதிப் பொருட்களின் பயன்பாடு குறித்து விளக்கி பேசினர்.

    கல்லூரி வேதியியல் துறை தலைவர் செ.கவிதா கருத்தரங்க ஒருங்கிணைப்பாளராகவும், பேராசிரியர்கள் ஜெஸிந்த் மிஸ்பா, தீபாராணி, அபுல்கலாம் ஆஷாத், கோடிஸ்பதி, ராம்தாஸ் ஆகியோரும் கருத்தரங்கை நடத்தினர்.

    இக்கருத்தரங்கில் பல்வேறு கல்லூரிகள், பல்கலைக்கழகங்களை சேர்ந்த பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், ஆய்வு மாணவர்கள் கட்டுரைகளை சமர்ப்பித்தனர். இதில் கல்லூரி பல்வேறு துறை பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    • திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பெண்களுக்கான புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • புற்றுநோய் தொடர்பாக மாணவிகள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் யோகா மற்றும் உள்தர மதிப்பீட்டு பிரிவின் சார்பில் பெண்களுக்கான புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கினார். உள்தர மதிப்பீட்டு பிரிவு ஒருங்கிணைப்பாளர் ஜிம்ரீவ்ஸ் சைலன்ட் நைட் வரவேற்று பேசினார். கல்லூரி செயலாளர் ச.ஜெயக்குமார் வாழ்த்துரை வழங்கினார்.

    தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி புற்றுநோய் மருத்துவத்துறை பேராசிரியர் காந்திமதி பத்மநாபன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, புற்றுநோய்க்கான காரணங்கள், அறிகுறிகள், சிகிச்சை முறைகள் மற்றும் புற்றுநோயை தவிர்ப்பது எப்படி? என்பது குறித்து விளக்கி பேசினார். புற்றுநோய் தொடர்பாக மாணவிகள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.

    இந்த நிகழ்ச்சியின்போது யோகா மன்றத்தின் சார்பில் நடைபெற்ற சூரிய நமஸ்காரம் வீடியோ போட்டியில் வெற்றிபெற்ற விலங்கியல்துறை உதவி பேராசிரியர் லிங்கதுரை, முதுநிலை வேதி யியல் அறிவியல் பிரிவு மாணவர் பாலாஜி ஆகியோருக்கு பரிசு வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியை யோகா மன்றத்துணை ஒருங்கிணைப்பாளர் ஆரோக்கியமேரி பெர்னாந்தஸ் தொகுத்து வழங்கினார். யோகாமன்ற ஒருங்கிணைப்பாளர் தே.வசுமதி நன்றி கூறினார். நிகழ்ச்சியில் அனைத்து பெண்துறை தலைவர்கள், பேராசிரியர்கள், முதுநிலை மாணவிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • நாகர்கோவில் ஹோலி கிராஸ் கல்லூரியில் மாநில அளவிலான பொருளியல் மாணவர்களுக்கான வினாடி- வினா போட்டி நடைபெற்றது.
    • கடந்த ஆண்டும் இதே போட்டியில் ஆதித்தனார் கல்லூரி மாணவர்கள் 2-ம் பரிசு பெற்றது குறிப்பிடத்தக்கது.

    திருச்செந்தூர்:

    நாகர்கோவில் ஹோலி கிராஸ் கல்லூரியில் மாநில அளவிலான பொருளியல் மாணவர்களுக்கான வினாடி- வினா போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் தமிழ்நாட்டில் உள்ள பல்–வேறு கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். இதில் திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியின் 3-ம் ஆண்டு மாணவர்கள் பா.செல்வம் மற்றும் ச.ஞான அபினாஷ் ஆகியோர் கலந்துகொண்டு முதல் பரிசையும், சுழற்கோப்பையையும் தட்டிச் சென்றனர்.

    வெற்றி பெற்ற மாணவர்களை கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன், செயலர் ச.ஜெயக்குமார், பொருளியல் துறை தலைவர் ரமேஷ், வினாடி- வினா போட்டியின் அமைப்பாளர் முத்துக்குமார், வகுப்பு ஆலோசகர் கணேசன் மற்றும் பொருளியல் துறை பேராசிரியர்கள் ஆகியோர் மாணவர்களை பாராட்டினர்.

    மேலும் கடந்த ஆண்டும் இதே போட்டியில் ஆதித்தனார் கல்லூரி மாணவர்கள் 2-ம் பரிசு பெற்றது குறிப்பிடத்தக்கது.

    • திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் இலவச பொது மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது.
    • முகாமில் முழு உடல் பரிசோதனைகளை நெல்லை ஷிபா மருத்துவமனை டாக்டர் அருள் செல்வன் தலைமையிலான மருத்துவ குழுவினரால் மேற்கொள்ளப்பட்டது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் உள்ள மதிப்பீடு பிரிவு மற்றும் ஆரோக்கிய மன்றம் சார்பில் இலவச பொது மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது. முகாமிற்கு கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கி, தொடங்கி வைத்தார். முகாமை உள்தர மதிப்பீட்டு பிரிவு ஒருங்கிணைப்பாளர் த.ஜிம்ரீவ்ஸ் சைலன்ட் நைட் மற்றும் ஆேராக்கிய மன்றம் இயக்குனர் செ.கவிதா வழி நடத்தினார்.

    முகாமில் முழு உடல் பரிசோதனை, ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, இ.சி.ஜி., கண் மற்றும் பல் மருத்துவ பரிசோ தனைகளை நெல்லை ஷிபா மருத்துவ மனை டாக்டர் அருள் செல்வன் தலைமை யிலான மருத்துவ குழுவினரால் மேற் கொள்ளப் பட்டது. முகாம் தொடக்க நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் வேலாயுதம், பசுங்கிளி பாண்டியன், அபுல்கலாம் ஆசாத், லெனின், ஷோலா பெர்னாண்டோ, கணேசன், அலுவலக கண்காணி ப்பாளர் பெ.பொன்துரை மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    முகாமில் பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், அலுவலர்கள் உடல் பரிசோதனை செய்து கொண்டனர். முகாம் ஏற்பாடுகளை ஆரோக்கிய மன்ற செயல் உறுப்பினர் பே.தீபாராணி, மன்ற மாண வச்செயலர் கு.சந்தோஷ் ஆகியோர் செய்திருந்தனர்.

    ×