search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "Alumni"

  • காளீஸ்வரி கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடந்தது.
  • இந்த நிகழ்ச்சியில் 700-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

  சிவகாசி

  சிவகாசி கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி செயலர் செல்வராஜன் தலைமை தாங்கினார். ம முன்னாள் மாணவரும், பேராசிரியருமான கவிதா வரவேற்றார்.முதல்வர் பாலமுருகன், துணை முதல்வர் முத்துலட்சுமி, முன்னாள் முதல்வர்கள் கண்மணி, கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பேசினர். முன்னாள் மாணவர் சங்க செயலாளரும், பேராசிரியருமான முத்துகுமார் அறிக்கை வாசித்தார்.

  இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து முன்னாள் மாணவர்களுக்கும் நினைவுப் பரிசுகளை வழங்கப்பட்டது. முடிவில் குலோத்துங்கப் பாண்டியன் நன்றி கூறினார். இந்த நிகழ்ச்சியில் 700-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

  • சுமார் 1000 இஸ்ரேலியர்கள் ஹமாஸ் தாக்குதலில் கொல்லப்பட்டனர்
  • இரு பிரிவினருக்கும் உலகெங்கிலும் பல்வேறு அமைப்புகள் ஆதரவு தருகின்றன

  கடந்த சனிக்கிழமை காலை பாலஸ்தீன பயங்கரவாத அமைப்பான ஹமாஸ், இஸ்ரேல் மீது பெரும் தாக்குதல் நடத்தியது.

  சுமார் 1000 இஸ்ரேலிய உயிர்களை பலி வாங்கிய இந்த தாக்குதலுக்கு எதிராக இஸ்ரேல், ஹமாஸ் மீது பதிலடி தாக்குதலை உடனடியாக துவங்கியது. அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகள் இஸ்ரேலை ஆதரிக்கின்றன. ஈரான், கத்தார் உள்ளிட்ட பல நாடுகள் ஹமாஸ் அமைப்பை ஆதரிக்கின்றன.

  போராடும் இரு பிரிவினருக்கும் உலகெங்கிலும் பல்வேறு அமைப்புகள் ஆதரவு தருகின்றன.

  இந்நிலையில், அமெரிக்காவின் புகழ் பெற்ற ஹார்வர்டு பல்கலைகழகத்தை சேர்ந்த 34 மாணவ அமைப்புகள் பாலஸ்தீனத்திற்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து அறிக்கை வெளியிட்டன. "பல வருடங்களாக இஸ்ரேல் கடைபிடிக்கும் நிறவெறி கொள்கையே தற்போதைய போருக்கு காரணம்" என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

  இந்நிலையில், இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கும் முன்னாள் ஹார்வர்டு மாணவர்களாக இருந்து தற்போது அமெரிக்க அரசியலில் மக்கள் பிரதிநிதிகளாக இருக்கும் பலர், இந்த அறிக்கையில் கையொப்பமிட்டுள்ள பிரதிநிதிகளின் மீது நடவடிக்கை எடுக்குமாறு ஹார்வர்டு பல்கலைக்கழகத்தை வலியுறுத்தியுள்ளனர்.

  ஹார்வர்டு பல்கலைக்கழக தலைமை பொறுப்பில் உள்ள க்ளாடின் கே (Claudine Gay) மற்றும் டீன் பொறுப்பில் உள்ள 15 பேருக்கும் மேற்பட்டவர்கள், நேற்று வெளியிட்ட அறிக்கையில், "ஹமாஸ் தாக்குதலில் ஏற்பட்ட உயிரிழப்புகளை கேட்டு எங்கள் இதயம் நொறுங்குகிறது" என தெரிவித்திருந்தனர். ஆனால், மாணவர் அமைப்பின் குற்றச்சாட்டு குறித்து எந்த வாக்கியமும் அதில் இடம் பெறாதது விமர்சனங்களுக்கு வழி வகுத்துள்ளது.

  • முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டம் நடந்தது.
  • முடிவில் ஒருங்கிணைப்பாளர் ஜான் ரத்தினம் நன்றி கூறினார்.

  தொண்டி

  ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே ஓரியூர் புனித அருளானந்தர் மேல்நிலைப்பள்ளியில் 1983-ம் ஆண்டு 10-ம் வகுப்பு படித்த 68 முன்னாள் மாணவர்கள் சந்திக்கும் நிகழ்ச்சி பள்ளித் தலைமை ஆசிரியரும், முன்னாள் மாணவர் மன்ற இயக்கு நருமான சைமன் தலைமை யில் நடைபெற்றது. இந்த சந்திப்பு நிகழ்ச்சியில் மறைந்த முன்னாள் மாண வர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

  முன்னாள் மாணவர்கள் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.தங்களுடன் படித்த முன்னாள் மாணவருக்கு உதவித் தொகை வழங்கப் பட்டது. அதனைத் தொடர்ந்து 1983-ம் ஆண்டு குழுவின் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். முடிவில் ஒருங்கிணைப்பா ளர் ஜான் ரத்தினம் நன்றி கூறினார்.

  • முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டம் நடந்தது.
  • முடிவில் செயலாளர் அமர்நாத் நன்றி கூறினார். பேராசிரியர் சுகந்தி தொகுத்து வழங்கினார்.

  மதுரை

  சவுராஷ்ட்ரா கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் சந்திப்பு கூட்டம் நடந்தது. கல்லூரி முதல்வர் ரவீந்திரன் தலைமை தாங்கினார். செயலாளர் குமரேஷ் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பேராசிரியர் நாதன் வரவேற்றார்.

  இளநிலை கணினி அறிவியல் துறை தலைவர் பாலகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

  தலைவராக சிவக்குமார், துணைத் தலைவராக அமர்சிங், செயலாளராக அமர்நாத், துணை செயலாளராக ஸ்ரீதரன், பொருளாளராக விஷ்ணுகுமார், செயற்குழு உறுப்பினர்களாக ரவிகுமார், ஹரிஹரசுதன் ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர். புதிய நிர்வாகிகளிடம் நிர்வாகிகள் ஹரிஹரன், அருண்பிரசாத், நாதன் ஆகியோர் ஒப்படைத்தனர். கல்லூரி தலைவர் மோதிலால், செயலாளர் குமரேஷ், பொருளாளர் பாஸ்கர், செயற்குழு உறுப்பினர்கள் பன்சிதார், வெங்க டேஸ்வரன் ஆகியோர் புதிய நிர்வாகிகளை வாழ்த்தி பேசினார்.

  நிகழ்ச்சியில் பேராசி ரியர்கள் விஜயகுமார், சிவகுமார், துரைசாமி, ஜீவப்பிரியா, மகாலட்சுமி, கணேசன், ராம்பிரசாத், கார்த்திக், கிருஷ்ணன், புவனேஸ்வரி, தேவி, பாண்டியராஜன், கணேசன், சிவகுமார், பவித்ரா, 300-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

  முடிவில் செயலாளர் அமர்நாத் நன்றி கூறினார். பேராசிரியர் சுகந்தி தொகுத்து வழங்கினார்.

  • மதுரை ஓ.சி.பி.எம். பள்ளியில் முன்னாள் மாணவிகள் சந்தித்தனர்.
  • தங்களுக்கு கல்வி பயிற்றுவித்த ஆசிரியர்களை சந்தித்தும் வாழ்த்து பெற்றனர்.

  மதுரை

  மதுரை நரிமேடு பகுதியில் உள்ள ஓ.சி.பி.எம். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 1988-ம் ஆண்டு முதல் 1990-ம் ஆண்டு வரை 11, 12-ம் வகுப்பு படித்த முன்னாள் மாணவிகள் 63 பேர் சந்தித்து கொண்டனர். அப்போது அவர்கள் பள்ளி பருவத்தில் நடை பெற்ற நிகழ்வுகளை கூறி ஒருவரை ஒருவர் மகிழ்ச்சியடைந்தனர். தற்போது இதில் சிலர் தொழில் அதிபர்களாகவும், சுய தொழில் செய்பவர்களா கவும் ஆசிரியர்களாகவும் உள்ளனர். மேலும் சிலர் மருத்துவர், வெளிநாட்டில் பணி பொறியாளராகவும் பணி யாற்றி வருகின்றனர். மேலும் தங்களுடைய முகவரி மற்றும் தொலை பேசி எண்களை பரிமாறிக் கொண்டு பள்ளிப் பரு வத்தில் நடந்த நிகழ்வுகளை நினைவுபடுத்தி ஆடல் பாடலுடன் மகிழ்ச்சியு டன் காணப்பட்டனர். தங்களுக்கு கல்வி பயிற்றுவித்த ஆசிரியர்களை சந்தித்தும் வாழ்த்து பெற்றனர்.

  • தமிழ்நாடு ஓய்வூதியா் சங்க அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு அறக்கட்டளைத் தலைவா் என்.ஆா். பாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா்.
  • நீட் தோ்வு, ஐ.ஏ.எஸ்., டி.என்.பி.எஸ்.சி. ஆகிய போட்டி தோ்வுகளுக்கு சிறப்பு பயிற்சிகளை மாணவா்களுக்கு அளிப்பது பற்றி விவாதிக்கப்பட்டது.

  அவிநாசி:

  அவிநாசி அரசு உயா்நிலைப்பள்ளி முன்னாள் மாணவா் கல்வி அறக்கட்டளை செயற்குழு கூட்டம் நடைபெற்றது.தமிழ்நாடு ஓய்வூதியா் சங்க அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு அறக்கட்டளைத் தலைவா் என்.ஆா். பாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் சண்முகசுந்தரம், செயலாளா் நடராசன், பொருளாளா் கணேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.செயற்குழு உறுப்பினா்கள் டி.எம்.அருணாசலம், சுப்பிரமணியன் ஆகியோா் சிறப்புரையாற்றினர்.

  இதில் நீட் தோ்வு, ஐ.ஏ.எஸ்., டி.என்.பி.எஸ்.சி. ஆகிய போட்டி தோ்வுகளுக்கு சிறப்பு பயிற்சிகளை மாணவா்களுக்கு அளிப்பது, அவிநாசி அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10, 12-ம் வகுப்பு பொதுத்தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று முதல் மூன்று இடங்களை பிடித்தவா்களுக்கு அக்டோபா் 3 -ந்தேதி ஊக்கத்தொகை , பரிசுகள் வழங்குவது, அவிநாசி அரசு உயா்நிலைப்பள்ளியில் 1978-ம் ஆண்டு வரை பணியாற்றிய ஆசிரியா்கள், 80 வயது நிறைந்த அறக்கட்டளை உறுப்பினா்கள், ஆண்டுதோறும் கல்வி ஊக்கத்தொகை வழங்குவோா் ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் நவம்பா் 5-ந் தேதி முப்பெரும் விழா நடத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  • அரசு உதவி பெறும் சி.எஸ்.ஐ. நடுநிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர் சந்திப்பு தலைமை ஆசிரியை சுகந்தி தலைமையில் நடை பெற்றது.
  • முன்னாள் மாணவ, மாணவியர் தங்கள் ஆசிரியர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

  குமாரபாளையம்:

  குமாரபாளையம் நகராட்சி அலுவலகம் அருகே அரசு உதவி பெறும் சி.எஸ்.ஐ. நடுநிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர் சந்திப்பு தலைமை ஆசிரியை சுகந்தி தலைமையில் நடை பெற்றது. முன்னாள் மாணவ, மாணவியர் தங்கள் ஆசிரியர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர். ஒவ்வொரு வரும் தாங்கள் படித்த தரு ணத்தில் நடந்த சம்பவங்கள் குறித்தும், தாங்கள் தற்போது பணியாற்றி வரும் நிறு வனங்கள் குறித்தும் பகிர்ந்து கொண்டனர்.பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன.

  வசதி இல்லாத மாணவ, மாண வியர்களுக்கு உதவு தல், பள்ளிக்கு தேவையான அத்தியாவசியமான உபக ரணங்கள் வாங்கி தருவது, ஒவ்வொரு ஆண்டும் சங்க கூட்டம் பள்ளி வளாகத்தில் நடத்தப்பட்டு, புதிய மாணவ, மாண வியர்களுக்கு அரசு பள்ளியின் சிறப்பம்சம் குறித்து எடுத்துரைத்தல், அரசு தேர்வுக்கு தேவையான உதவிகளை புதிய மாணவ, மாணவியர்களுக்கு செய்தல் என்பனஉள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  நிர்வாகி லெவி பங்கேற்று, முன்னாள் மாணவர்களால் நன்கொடையாக வழங்கப் பட்ட குடிநீர் சுத்திகரிப்பு சாதனத்தை ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். ஆசிரியைகள் ஹெலன் பிரசெல்லா, ஜாய்ஸ் அருள்செல்வி, மெர்சிபா குளோரி, ஸ்டெல்லா, சித்ரா, ஜமுனா, ராணி உள்பட பலர் பங்கேற்றனர்.

  • தென்காசி மேலப்புலியூரில் உள்ள வீரமாமுனிவர் ஆர்.சி. மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடைபெற்றது.
  • இதனையடுத்து 1983-ல் பள்ளி படிப்பினை முடித்தவர்கள் சார்பாக 7 கணினிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

  தென்காசி:

  தென்காசி மேலப்புலியூரில் உள்ள வீரமாமுனிவர் ஆர்.சி. மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்போது பள்ளி நிர்வாகம் சார்பில் கணினி ஆய்வகத்திற்கு, ஓரு கணினி வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

  இதனையடுத்து 1983-ல் பள்ளி படிப்பினை முடித்தவர்கள் சார்பாக 7 கணினிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.அப்போது 1988 முதல் 1996 வரை படித்த மாணவர்கள் சார்பாக 2 கணினிகள் தருவதாக ஒப்புக்கொண்டனர். இதனை அடுத்து முன்னாள் மாணவர் சங்கத்தின் பெண் ஆலோசகரும், குற்றாலம் ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரி விரிவுரையாளருமான டாக்டர் காமினி என்ற முத்து கிருஷ்ணம்மாள் மற்றும் முன்னாள் மாணவர் லட்சுமணன் இருவரின் ஒருங்கிணைப்பில் 2 கணினிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

  பள்ளியின் தாளாளர் போஸ்கோ குணசீலன் வர வேற்றார். முன்னாள் ஆசிரியர் ஆர்.செலஸ்டின் மேரிமற்றும் வீரமாமுனிவர் ஆர் சி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் செசிலி அபிஷேக ரத்னா ஆகியோர் தலைமை தாங்கினார். பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் பெண் ஆலோசகர் ரசூல் பீவி வாழ்த்துரை வழங்கினார்.

  அதனைத்தொடர்ந்து அமெரிக்கா தனியார் நிறுவ னத்தின் முதுநிலை மேலாளர்.முன்னாள் மாணவர் எஸ்.செய்யது சுலைமான் மாணவர்களுக்கு உரையாற்றினார்.

  தஸ்லிம் சமீமா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். முன்னாள் மாணவர்கள் ராஜாத்தி, சுதர்சன், சரவணன், பாதுஷா, ராம்குமார், ராஜ்குமார், சங்கர மூர்த்தி, முத்து , சீதாராமன் ஆகியோர் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.

  • கடையநல்லூரில் அரசு உதவி பெறும் ஹிதாயத்துல் இஸ்லாம் மேல்நிலைப் பள்ளியில் 96-ம் ஆண்டு 8-ம் வகுப்பு வரை படித்த முன்னாள் மாணவர்கள் சங்க கூட்டம் நடைபெற்றது.
  • இதில் 25-க்கும் மேற்பட்ட ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு பரிசு, கேடயம் வழங்கப்பட்டது.

  கடையநல்லூர்:

  கடையநல்லூரில் அரசு உதவி பெறும் ஹிதாயத்துல் இஸ்லாம் மேல்நிலைப் பள்ளியில் 96-ம் ஆண்டு 8-ம் வகுப்பு வரை படித்த முன்னாள் மாணவர்கள் சங்க கூட்டம் நடைபெற்றது. பள்ளி நிர்வாகி செய்யது முகைதீன் தலைமை தாங்கினார். முன்னாள் மாணவர்கள் செய்யது மசூது சாகிப், சித்திக், சாகுல்கமீது, சகீர், அப்துல் மஜீத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காமில் வரவேற்றார். பேச்சியப்பன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

  பள்ளியின் வளர்ச்சியில் முன்னாள் மாணவர்களின் பங்களிப்பு குறித்து வரலாற்று ஆசிரியர் இப்ராஹிம், டாக்டர் சஞ்சீவி, நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அமீன், முன்னாள் ஆசிரியர் முகைதீன், அக்பர் அலி, முன்னாள் மாணவர் ஜமால் ஆகியோர் பேசினர். இதில் சுமார் 60 முன்னாள் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். 25-க்கும் மேற்பட்ட ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு பரிசு, கேடயம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை முன்னாள் மாணவர்கள் செய்திருந்தனர். நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் பைசல், உபைதுல்லா, சாகுல், மணிகண்டன் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். முடிவில் இஸ்மாயில் நன்றி கூறினார்.

  • முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டம் நடந்தது.
  • ஏற்பாடுகளை துணை முதல்வர் சுரேஷ் மற்றும் விரிவுரையாளர் செய்திருந்தனர்.

  ராஜபாளையம்

  ராஜபாளையம் என்.ஏ.மஞ்சம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் 1985-ம் ஆண்டு படித்த முன்னாள் மாணவ-மாணவிகள் சந்திப்பு கூட்டம் நடந்தது. தாளாளர் கிருஷ்ணமூர்த்தி ராஜா தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் பிச்சையாபிள்ளை வரவேற்றார். கல்லூரி இயக்குநர் விஸ்வநாதன் முன்னிலை வகித்தார்.

  என்.ஏ. அன்னப்பராஜா நினைவு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ரமேஷ் வாழ்த்துரை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. முன்னாள் மாணவர் சங்க அமைப்பின் தலைவராக ஜெயசுதா, செயலாளராக மணிகண்டன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். தொடர்ந்து முன்னாள் மாணவர்கள் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இந்த கூட்டத்தில் என்.ஏ.ராமச்சந்திர ராஜா குருகுலத் தாளாளர் மஞ்சுளா கிருஷ்ணமூர்த்தி ராஜா, அறக்கட்டளை உறுப்பினர் என்.கே.ராம்விஷ்ணுராஜா, என்.கே.ராம்வெங்கட்ராஜா மற்றும் ராஜஸ்ரீ, ராகஜோதி ஆகியோர் கலந்துகொண்டனர். முடிவில் முன்னாள் மாணவர் சங்கத் தொடர்பு அலுவலர் பூங்கொடி நன்றி கூறினார். ஏற்பாடுகளை துணை முதல்வர் சுரேஷ் மற்றும் விரிவுரையாளர் செய்திருந்தனர்.