பழைய மாணவர் சங்க ஆண்டு விழா

திசையன்விளையை அடுத்த இடையக்குடி கால்டுவெல் நூற்றாண்டு நினைவு மேல்நிலைப்பள்ளி பழைய மாணவர் சங்கத்தின் 99-வது ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சாமுவேல்ராஜசிங் அருள் பரிசு வழங்கினார்.
பழைய மாணவர் சங்க ஆண்டு விழா நடந்த போது எடுத்தபடம்.
பழைய மாணவர் சங்க ஆண்டு விழா நடந்த போது எடுத்தபடம்.
Published on

திசையன்விளை:

திசையன்விளையை அடுத்த இடையக்குடி கால்டுவெல் நூற்றாண்டு நினைவு மேல்நிலைப்பள்ளி பழைய மாணவர் சங்கத்தின் 99-வது ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. விளையாட்டு போட்டிகளை பழைய மாணவர் பாலஸ்ராஜன் தொடங்கிவைத்தார். தொடர்ந்து நடைபெற்ற ஆண்டு விழாவிற்கு ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் ஜெயக்குமாரி ஜெபக்குமார் தலைமை தாங்கினார். பள்ளி தாளாளர் ஜேகர் முன்னிலை வகித்தார். சேகரகுரு பர்னபாஸ் ஜெபம் செய்தார்.

திசையன்விளை கிராம நிர்வாக அலுவலர் அயூப் கான், ராமகிருஷ்ணா தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் சுயம்பு சிவமதி ஆகியோர் விழாவில் கலந்து கொண்டு பேசினர். விழா மலரை வில்சன் ஆனந்தராஜ் வெளியிட்டார். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சாமுவேல்ராஜசிங் அருள் பரிசு வழங்கினார். சங்க பொதுச்செயலாளர் சாமுவேல் ஆண்டறிக்கை வாசித்தார். சங்க பொருளாளர் ஜெபதாமஸ் வரவு,செலவு அறிக்கை வாசித்தார். முன்னதாக தலைமை ஆசிரியர் சாத்ராக்ஞானதாசன் வரவேற்று பேசினார். விழாவில் திரளான முன்னாள் மாணவர்கள் கலந்துகொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com